KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/பிடிவாதம்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

பிடிவாதம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

* பிடிவாதம் பக்கவாதத்தைவிட மோசமானது.

* பக்கவாதம் உடலை மாத்திரம்தான் முடமாக்கும். பிடிவாதம் உடல், மனம் என்ற இரண்டையும் முடமாக்கும்.

* மனிதருக்குள் ஒளிந்துகொண்டு, அவ்வப்போது வெளியில் வந்து மற்றவர்களையும் அந்த மனிதரையும் நாசம் செய்யும் அரக்கன்தான் பிடிவாதம்.

“நான் யார் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.”

“என்னை விடப் பெரிய ஆளா அவன்?”

“என்னுடைய கவுரவத்திற்காக, கொள்கைக்காக எதை வேண்டுமானாலும் இழப்பேன்” என்ற மனநிலையில் சிலர் தங்களுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை இழப்பது இயல்பாகிவிட்டது. இது வருந்தத்தக்க ஒரு விஷயம்.

இது போன்ற பிடிவாதத்தில் வாழ்ந்து வந்த ஒருவரின் கதை...

குப்பன் என்றொரு முரடன். ஒரு கிராமத்தில் ரவுடியிசம் செய்து தாதா போன்று வாழ்ந்து வந்தான். அந்தக் கிராமத்தில் அவன் வைப்பதுதான் சட்டம்.

குப்பனுக்குத் திடீரென்று ஒரு கிறுக்குத்தனமான ஆசை வந்தது. "இனிமேல் இந்தக் கிராமத்தில் என்னைத் தவிர யாரும் தலையில் முடியோடு இருக்கக்கூடாது. எல்லோரும் மொட்டை அடிங்கடா" என்று கட்டளையிட்டான்.

அவனிடம் எதற்காக வம்பு என்று எல்லோரும் மொட்டையடித்தனர். குப்பன் எல்லோரும் மொட்டையோடு ஊரில் திரிவதைப் பார்த்து, "ஹைய்யா! நான் ஒருவன்தான் இந்த ஊரிலேயே தலைமுடியோடு அழகாக இருக்கிறேன்" என்று பெருமிதம் அடைந்தான்.

பரமசிவம் என்ற இசைக் கலைஞன் புதிதாக அந்தக் கிராமத்திற்கு வந்து குடியேறினார். பரமசிவத்திற்குத் தலைமுடி வளர்ந்து கழுத்து வரை தொங்கிக் கொண்டிருந்தது. குப்பனைப் பற்றிப் பரமசிவத்திற்கு எதுவும் தெரியாது.

அழகான தலைமுடியோடு ஒருவர் ஊருக்குள் இருப்பதைக் கேள்விப்பட்ட குப்பன், கோபம் தாளாமல் பரமசிவத்தைத் தேடி ஓடி வந்தான்.

குப்பன், "நீதான் பரமசிவமா? என்ன தைரியம் இருந்தால் எனக்கு முன் நீ தலைமுடியோடு இருப்பாய்?" என்றான்.

பரமசிவம், "தலையில் முடி வளர்வதற்குக் கொஞ்சம் எண்ணெய் தடவினால் போதும். தைரியத்திற்கும், தலைமுடிக்கும் என்னப்பா சம்பந்தம்? ஏன் இப்படிக் குழப்புகிறாய்?" என்றான்.

குப்பன், "இந்த ஊரில் நான் வைப்பதுதான் சட்டம். என்னையே நீ எதிர்த்துப் பேசுகிறாயா? வா, நீயா - நானா என்று பார்த்துவிடுவோம்!" என்று கூறி இரண்டு வாள்களை எடுத்து வந்தான். (ஒன்றை பரமசிவத்திடம் எறிந்து சண்டைக்கு அழைத்தான்.)

'இதென்ன வம்பா போச்சு, தலையில் முடி வைத்ததற்காகவா, வாள் சண்டையிடுவது? சரி ஆனது ஆச்சு... ஒரு கை பார்த்துவிடுவோம்,' என்று நினைத்த

பரமசிவம், குப்பனிடம், "சண்டையைத் துவங்கும்முன் ஒரு சிறு வேண்டுகோள். நான் என்னுடைய வீடு வரை சென்றுவிட்டு வந்து விடுகிறேன். வந்தபின் சண்டையைத் துவங்கலாம்" என்றார்.

குப்பன் குழப்பத்தோடு, "எதற்காக இப்போது
வீடு வரை செல்ல வேண்டும் என்கிறாய்?"
என்றான்.

பரமஹம்ச நித்யானந்தர்

பிடிவாதம்
உங்கள் மனதை
பிடித்துக்கொண்ட
வாதம்.

பரமசிவம், "இல்லையப்பா. நாம் சண்டையிடுவதில் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம், தோற்கலாம். நான் தோற்று விட்டால் என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்து விடும். அதனால், முதலில் என் குழந்தைகளையும் மனைவியையும் வெட்டிவிட்டு வருகிறேன். அப்போது என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லை.

உனக்கும் இப்படித் தோன்றினால்,
நீயும் போய் இதே காரியத்தைச் செய்துவிட்டு
வா. அப்போதுதான் நாம் இருவரும் முழு
மனதோடு போரிடமுடியும்" என்றார்.

இருவரும் வீடு நோக்கிச் சென்றார்கள். குப்பன் சீக்கிரமாய் வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் சீவி விட்டுத் திரும்பினான். பரமசிவம் கால் மணி நேரமாகியும் வரவில்லை.

அரை மணி நேரம் கழித்துப் பளபள வென்று மொட்டையடித்த தலையில் எண்ணெய் பூசிக்கொண்டு பரமசிவம் திரும்பினார்.

குப்பனுக்கு ஒன்றுமே புரியவில்லை. "என்னய்யா, சண்டைக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு மொட்டையடித்துக்கொண்டு வந்து நிற்கிறாய்?" என்றான்.

பரமசிவம் நிதானமான குரலில், "வாளோடு வீட்டிற்குச் சென்றேன். தலையில் இருக்கும் முடியை மழிப்பது பத்து நிமிட வேலை. இந்தச் சிறிய விஷயத்திற்காகவா வீட்டிலிருப்பவர்களை வெட்டுவது என்று நினைத்து, நீ கொடுத்த வாளைக் கொண்டே தலைமுடியை மழித்து விட்டேன்." என்றார்.

குப்பனோ திகைத்து நின்றான். என்ன செய்வது என்று புரியவில்லை. "ஒரு சிறு விஷயத்திற்காக எவ்வளவு பெரிய விஷயத்தை இழந்தோம்" என்று நினைத்தான்.

பரமசிவத்தைப் போல எல்லா மனிதர்களும் நிமிடத்திற்கு நிமிடம் மாறக் கூடியவர்களே. யாரும் ஒரே மாதிரி இருக்கப்போவதில்லை.

"நான் யார்? நான் எவ்வளவு பெரிய ஆள்? என் கவுரவம், என் கொள்கை" என்று வறட்டுப் பிடிவாதம் பிடித்துக்கொண்டு வாழ்க்கை நடத்தினால்...

உங்கள் பிடிவாதம் மட்டுமே உங்களுக்கு மிச்சம் !

இந்தப் பிடிவாதத்தால் பல இழப்புகளை நிச்சயம் சந்திக்க நேரிடும் !

பிடிவாதம் என்பது உங்கள் மனதைப் பிடித்துக்கொண்ட வாதம். பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லாத பிடிவாதத்தை விட்டுவிட்டு, ஆயிரக்கணக்கான இழப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்!

இவறட்டுப் பிடிவாதம் பிடித்துக்கொண்டு வாழ்க்கை நடத்தினால்...
ழ- உங்கள் பிடிவாதம் மட்டுமே உங்களுக்கு மிச்சம் !
ப்- இந்தப் பிடிவாதத்தால் பல இழப்புகளை நிச்சயம் சந்திக்க நேரிடும் !
பு