KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/இறுக்கம்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

இறுக்கம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

* அறிவு தரும் செருக்கு!
ப்பதவி தரும் போதை!
பணம் தரும் மிதப்பு!
புகழ் தரும் மயக்கம்!

இவைதான் ஒரு மனிதருள் இறுக்கத்தை அழைத்து வரும் புரோக்கர்கள்.

* இறுக்கத்தோடு குடித்தனம் நடத்துவதால் ஒருவருக்குக் கிடைக்கும் பலாபலன்கள்.

  • சிரிக்கக் கஷ்டப்படும் முகம்!
  • வெளியில் பகிர முடியாத சோகம்!
  • எதையும் முழுமையாக அனுபவிக்க முடியாத குணம்!
  • அறிவு ஞானமாக வேண்டும். பதவி சேவையாக வேண்டும். பணம் பகிரப்பட வேண்டும். புகழ் ஜீரணிக்கப்பட வேண்டும்.

இப்படி ஒருவர் வாழும் பட்சத்தில், இவை ஒரு மனிதருள் இனிமையை அழைத்து வரும் தேவைகளாக மாறிவிடும். இறுக்கத்தை அழைத்து வரும் புரோக்கராக இருக்க வாய்ப்பே இல்லை.

இறுக்கத்தால் இறுகிப்போன முகத் தசைகளுக்கும் உதடுகளுக்கும் குதூகலமான சிரிப்பும் வாழ்வும் பூரிப்பைத் தரும்.

பாபரைப் பற்றி நிறைய
படித்திருக்கிறேன். நீங்களும்
படித்திருப்பீர்கள். அவர் வாழ்க்கையில்
நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியைச்
சொல்கிறேன்.

ஒரு சமயம் அறிவாளி ஒருவருக்குப்
பேரரசர் பாபரைச் சந்திக்க வேண்டும் என்கிற
ஆசை வந்தது. பாபரைச் சந்திக்க அனுமதியும்
வாங்கிவிட்டார்.

குறிப்பிட்ட நாளில் அரண்மனைக்குப்
போனார். அரண்மனையில் சாதாரண
மனிதர்களோடு சரிசமமாக உட்கார்ந்து
கும்மாளமாகப் பேசிக்கொண்டிருந்தார்
பாபர்.

இதைக் கண்ட அறிவாளிக்கு ஆச்சரியம்.
பெரிய பதவியில் இருக்கும் மனிதர்கள்
சிரிப்பதே இல்லை.

எவ்வளவு பெரிய தமாஷ் நடந்தாலும்
லேசாகப் புன்னகைப்பதோடு சரி. ஆனால்,
பாபர் மாதிரி இவ்வளவு பெரிய அரசர்,
தன்னிடம் கைகட்டி ஊழியம் செய்யும்
வேலைக்காரர்களுடன் சிரித்துப் பேசுவதைக்
கண்டு, அந்த அறிவாளியால் ஜீரணிக்க
முடியவில்லை.

"அரசே! நீங்கள் அறிவாளி என்று கேள்விப் பட்டிருக்கிறேன். புத்திசாலி என்றும் எனக்குத் தெரியும். அதனால்தான் உங்களைச் சந்திக்க விரும்பினேன். நீங்கள் அரண்மனையில் அறிஞர்கள், அறிவுஜீவிகள், புலவர்கள், தத்துவமேதைகளுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து ரசிக்கலாம் என்றுதான் வந்தேன்.

ஆனால், இங்கு வந்து பார்த்தால் உங்கள் நடத்தையில் எந்தப் புத்திசாலித்தனமும் இல்லை. இதை என்னால் சகிக்க முடியவில்லை. நான் போகிறேன்." என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென்று வெளியேறிப் போனார்.

"கொஞ்சம் இருங்கள். நான் சொல்வதைக் கேட்டுவிட்டு அப்புறம் வெளியே போக வேண்டுமா, இல்லையா என்பதை முடிவுசெய்து கொள்ளுங்கள்" என்றார் பாபர்.

ஒரு வினாடி திகைத்து நின்ற அறிவாளியிடம் பேச ஆரம்பித்தார் பாபர்...

"அதோ! அந்த மூலையில் ஒரு வில்லை வைத்திருக்கிறேன், பாருங்கள். வில்லின் இரண்டு முனைகளையும் நாணால் இறுகக் கட்டாமல் விட்டிருப்பதையும் பாருங்கள்.

நான் ஏன் இப்படிச் செய்தேன் என்று நினைக்கிறீர்களா? வில்லின் முனைகளை நாணால் கட்டியிருந்தால் அது எப்போதும் இறுக்கமாக இருக்கும். எப்போதும் இறுக்கமாகவே இருந்தால் சில நாட்களில் வில் கண்டிப்பாக உடைந்து விடும்.

வில் என்றால் எப்போதும் வளைந்து கொடுக்க வேண்டும். அந்தத் தன்மையில் இருந்தால்தான் காற்றைப் போல எகிறிக் குதித்து அம்பு செல்லும். அப்போதுதான் வெற்றியும் கிடைக்கும்.

நானும் வளைந்து கொடுக்கும் வில்லைப் போல்தான் இருக்க விரும்புகிறேன். எப்போதும் இறுக்கமாக இருந்தால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும். எனவேதான் இப்படி மென்மையாக, கேளிக்கையாக, சந்தோஷமாக இருக்கிறேன். என் வெற்றிக்குக் காரணம் அதுதான்" என்றார் பாபர்.

| இ | வில்லின் முனைகளை நாணால் கட்டியிருந்தால் அது எப்போதும் | று | இறுக்கமாக இருக்கும். எப்போதும் இறுக்கமாகவே இருந்தால் சில

| க் | நாட்களில் வில் கண்டிப்பாக உடைந்துவிடும்! | | க | | | ம் | |

பாபரின் பேச்சைக் கேட்ட அறிவாளி வாயடைத்துப் போனார்.

நாண் பொருத்தப்படாத வில்லைப்போல, நீங்கள் இலகுவாக, இறுக்கமில்லாமல் இருக்க வேண்டும். இறுக்கமாக இருக்கும்போது நமது உடலிலும் மனதிலும் பலவிதமான மாறுதல்கள் ஏற்படுகின்றன. உடலில் சதைகள் படித்துக்கொள்வது இறுக்கத்துக்கு ஓர் அடையாளம். உடம்பில் ஆங்காங்கே வலியெடுப்பது இன்னொரு அடையாளம்.

இறுக்கமாக இருப்பவர்களுக்கு அடிக்கடி நெஞ்சுவலி வரும். தலைவலிகூட வரும். இந்த மாதிரியான புகார்களோடு என்னிடம் வருகிறவர்களுக்கு, நான் செய்யும் சிகிச்சை, சிரிக்க வைப்பதுதான். அவர்களுடைய கவலைகளை மறந்து, சிரிக்க வைத்துவிடுவேன். சில நிமிஷங்களில், "என் நெஞ்சுவலி பறந்துபோச்சே!" என்று சொல்வார்கள்.

இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்வதற்கு நிறைய வழிகள் உண்டு. குழந்தைகளுடன் (பக்கத்து வீட்டுக் குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை) கொஞ்ச நேரம் கொஞ்சி விளையாடுங்கள். இறுக்கம் சிதைந்து போய்விடும். உங்கள் வீட்டில் உள்ள தாவரங்களைத் தடவிக் கொடுங்கள். இலகுவாக மாறுங்கள். இறுக்கம் உடைந்துவிடும்.

உங்கள் வீட்டில் உள்ள மீன்தொட்டியில் துள்ளி விளையாடும் மீன்களின் அழகைப் பாருங்கள். இறுக்கம் உடைபடும். சின்ன ஜோக்காக இருந்தாலும் பரவாயில்லை. வாய்விட்டுச் சிரியுங்கள். இறுக்கம் அறுந்து விடும்.

ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். தலைகீழாக நின்று தவம் புரிந்தாலும் மனிதர்கள் காக்கை மாதிரி பறக்க முடியாது. தவளை மாதிரித் தண்ணீரிலேயே கிடக்க முடியாது. மனிதரால் எல்லாமே நடத்திக்காட்ட முடியும் என்று நினைப்பது மடத்தனம். எது எப்படி நடக்க வேண்டுமோ, அது அப்படியேதான் நடக்கும்.

இதைப் புரிந்துகொண்டு விட்டீர்களென்றால் போதும். இறுக்கம் தளர்ந்துவிடும்.

'நான் நினைத்தபடி நடக்கவில்லையே! நான் நினைத்தபடி, எதிர்பார்த்தபடி நல்ல மனிதர்கள் கிடைக்கவில்லையே!' என்ற எரிச்சல் பல நாட்களாக மனதில் படிந்து, படிந்து ஏற்பட்ட பிசுபிசுப்புத்தன்மைதான் இறுக்கம்.

பலநாள் எரிச்சலும் பலவித ஏமாற்றங்களும் ஒன்றாகச்சேர்ந்துதான் மன இறுக்கமாக மாறுகிறது.

மன இறுக்கத்திலிருந்து வெளியே வர மிக எளிய வழி - நாம் நினைத்தபடி மற்றவர்களும் சூழ்நிலைகளும் மாற வேண்டும் என்ற மாய நினைவைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒவ்வொரு நிமிடமும் சந்தோஷமாக இருக்க முயற்சிப்பது ஒன்றுதான் வழி.

வாழ்க்கையில் இயல்போடு கலந்து, இயல்பாகச் செயல்படுங்கள். இறுக்கம் கரைய ஆரம்பித்துவிடும்!