ஆன்மாவின் போர்வை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
★ நீங்கள் நினைக்கிறபடி... நீங்கள் உடல் அல்ல.
நீங்கள் மனமும் அல்ல. பின் நீங்கள் யார்?
இந்தக் கேள்வி தரும் ஆராய்ச்சி உணர்வோடு கட்டுரையைத் தொடருங்கள்.
★ 1. உச்சந்தலை
- புருவமத்தி
- தொண்டைக்குழி
- மார்புமத்தி
- நாபிக்குமேல்
- நாபிக்குகீழ்
- முதுகெலும்புநுனி
இந்த ஏழுமே ஆத்மாவை அடைய உதவும் நுழைவாயில்கள்.
★ இந்த ஏழு இடங்களைச் சம்பந்தப்படுத்திதான் எல்லா தியான முறைகளும் வேதங்களும் சடங்காச்சாரியங்களும் உருவாக்கப்படுகின்றன. இந்த இடங்கள், சக்கரங்கள் அல்லது சக்திமையங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
★ இந்த சக்தி மையங்களில்தான் உடல்,
மனம்,
உயிர்
ஆகிய மூன்றும் ஒன்றிலிருந்து ஒன்று
பிரிக்க முடியாதபடி கலந்திருக்கின்றன.

★ பார்க்க முடிந்த ஆத்மா, ‘உடல்’ பார்க்க முடியாத உடல், ‘ஆத்மா’.
காரணம் உடலும் ஆத்மாவும்
தனித்தனியானவை அல்ல. மனம் என்ற
இடைச்செருகலே உடலை, ஆத்மாவை
பிரித்துக்காட்டுகிறது.
ஆத்மாவைப் போர்த்தி இருக்கும்
மனம் விலக உடலும் ஆத்மாவும்
சங்கமித்துக் கொள்ளும்.
ஏரிக்கரைக்குச் சென்ற நான்கு
பேரின் வாக்குவாதம் முற்றி
சண்டையானது.
முதல் நபர்...
ஹிந்தி கலந்த தமிழில்
சொன்னார்: “வாருங்கள்! ஏரிக்குள்
இருக்கும் பானியைக் குடித்துத்
தாகம் தீர்க்கலாம்”.
இரண்டாம் நபர்... செந்தமிழில் சொன்னார்: “தாகத்தைத் தீர்க்க தண்ணீரால் மட்டும்தானே முடியும். அங்கிருக்கும் பானி, தோணியெல்லாம் எப்படித் தாகம் தீர்க்கும்?”.
மூன்றாம் நபரான ஆங்கிலேயர்...
ஆங்கிலம் கலந்த தமிழில் சொன்னார்: “உளறாதீர்கள். 1920ல் இந்த ஏரியைத் தோண்டியதே என் தாத்தா வாட்சன் பிரபுதான்.
அவர் இந்த ஏரி முழுவதுமிருக்கும் வாட்டர் (Water) ஏழு கிராமத்தின் தாகம் தீர்க்கும் என்று சொல்லியிருக்கிறார். எனவே வாட்டர் மட்டும்தான் தாகம் தீர்க்கும்” என்றார்.
நான்காம் நபர்....
பெங்காலி கலந்த தமிழில் சொன்னார், “என்ன மடத்தனம்! மூவருமே பொய் பேசுகிறீர்கள்.
கடந்த பத்து வருடமாக என் அப்பாதான் இந்த ஏரியை காண்ட்ராக்ட் எடுத்திருக்கிறார். அவர் சொன்னார், ‘இந்த ஏரியில் இருக்கும் ‘ஜல்’ தான் நம்மைக் கோடைக்காலத்தில் காக்கிறது. தாகம் தணிக்கிறது’ என்று எனவே ஜல்தான் தாகம் தீர்க்கும்!’’
வாக்குவாதம், “பாணிதான்... தண்ணீர்தான்... வாட்டர் தான்... ஜல்தான்...” என மீண்டும் பேசப் பேச, பேச்சு சண்டையானது. யாரும் ஏரிக்குச் செல்லவில்லை.
வாக்குவாதமில்லாமல் ஏரிக்குச் சென்றிருந்தால், நான்கு பேருக்கும் உண்மை புரிந்திருக்கும். நான்கு பேரும் பேசுவது ஒரே உண்மையைப் பற்றியே என்பது புரிந்திருக்கும்.
| கு றி க் கோ ள் | மனதின் வேலை வாய்ப்புகளைப் பறிப்பதே தியானத்தின் குறிக்கோள்! |
- ஒரே கடவுளின் வார்த்தைகளால் தொகுக்கப்பட்ட வெவ்வேறு மதப்புத்தகங்கள், மூதாதையரின் சடங்காச்சாரியங்கள் மற்றும் மதவிதிகளைப் பிடித்துக்கொண்டுதான் மனிதமனம் வாழ்கிறது.
விகல்பத்தைத் தூண்டுகிறது. கலகத்தை வரவேற்கிறது.
- வார்த்தைக் கலகங்களைத் தாண்டி, மதம் என்னும் ஏரிக்குள் குதியுங்கள். உண்மை விளங்கும்
- வேதம் விவாதத்திற்கல்ல! அது தெய்வ அனுபவத்திற்கு!
ஆத்மா ஆத்மன், ஆன்மா, ஆத்துமா என்று பல பெயர்களில் எல்லா மதங்களாலும் ஆத்மா ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
ஆத்மா புருவமத்தியில்தான் இருக்கிறது...
ஆன்மா தொண்டைக் குழியில்தான் இருக்கிறது...
ஆத்துமா மார்புக்கூடு மத்தியில்தான் இருக்கிறது...
- என்று பலர் பலவாறு சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
வேதகாலத்து ரிஷிகளின் கூற்றுப்படி, என்னுடைய சுய அனுபூதிப்படி புருவமத்தி, தொண்டைக்குழி, மார்புக்கூடு மத்தி இவை அனைத்தும் ஆத்துமாவின் நுழைவாயில்கள் தாம். இது போன்று மொத்தம் ஏழு நுழைவாயில்கள் நம் உடலில் இருக்கிறது.
அழிவில்லாத ஆனந்த ஆத்ம அனுபூதியை ஒருவர் பெற்றுவிட்டால் உலகமே ஆனந்தமயமாகிவிடும். காரணம், தன்னுள் இருக்கும் ஆனந்தக் கடலுக்குள் அம்மனிதர் நுழைந்து விடுவதுதான்.
ஒரு ஆத்ம அனுபூதி அடைந்த ஞானியிடம்தான் தைரியத்தின் முழுப்பரிமாணத்தைக் காணமுடியும். தைரியம் மட்டுமல்ல, எல்லா உணர்வுகளின் முழுப்பரிமாணத்தையும் ஞானிகளிடம்தான் காண முடியும்.
| அ | இயற்கை எல்லாவற்றிற்கும் அனுமதி தருகிறது. |
| னு | வாழ்வதற்கும் நோவதற்கும் ஏன் சாவதற்கும்கூட! |
| ம | ☞ நீங்கள் அனுமதிப்பது எது? |
| தி |
ருத்ரவேந்தன் புதிதாக எந்த ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டாலும் உடனடியாக அதை அறிந்து கொள்ளத் துடிப்பார்.
நகமுக ரிஷி, ருத்ரவேந்தனின் ஊர் பக்கத்தில் வந்து தங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டார். அவரிடம் ஆன்மீகம் பற்றி விவாதிக்க ஆசைப்பட்டார் வேந்தன்.
தனது காவலாளிகள் மூலமாக ஓலை வழியாகச் செய்தி அனுப்பினார். அந்தச் செய்தி, “நீங்கள் என்னை வந்து பார்க்கவும். உங்களோடு ஆன்மீகம் பற்றி விவாதிப்பதில் நான் பெருமகிழ்ச்சி கொள்வேன்” என்று எழுதப்பட்டு இருந்தது.
நகமுக ரிஷி, “உன்னை வந்து
பார்ப்பதற்கு எனக்கு நேரமில்லை.
முட்டாள்தனமான விவாதத்தை நான்
விரும்புவதும் இல்லை” என்று பதில் கூறி
அனுப்பினார்.
“என் ஆணையை இவ்வளவு தைரியமாக உதாசீனப்படுத்தினால், அந்த ரிஷி ஏதோ பெரிய ஆளாகத்தான் இருப்பார்” என்று கூறிவிட்டு சகல மரியாதையோடு, பொன் பொருள் கொடுத்து அழைத்து வர தன் மந்திரியாரை ருத்ரன் அனுப்பி வைத்தார்.
நகமுக ரிஷி, “இந்தக் குப்பைகளை எடுத்துச் செல்லுங்கள்.
என்னைப் பார்க்க வேண்டிய அவசியமிருந்தால் அந்தச் சோம்பேறியை இங்கே வந்து பார்க்கச் சொல்லுங்கள். நீங்கள் போகலாம்” என்றார்.

மீண்டும் உதாசீனப்படுத்தப்பட்டதால் ருத்ரன் வெகுண்டான். கோபம் பொங்க, “உடனே அவர் இங்கு வர வேண்டும்! வராவிட்டால் அவருக்கு மரணதண்டனையென போய்ச் சொல்” என்று கூறி தன் தளபதியை அனுப்பி வைத்தான் ருத்ரன்.
நகமுக ரிஷி, "நான் ஏற்கெனவே செத்துவிட்டேன். என்னை அந்த முட்டாளால் கொல்ல முடியாது” என்று பதில் கூறி தளபதியை அனுப்ப வைத்தார்.

கடவுள் உங்களைத்
தேடிக்
கொண்டிருக்கிறார்.
நீங்கள் கடவுளை தேடிக்
கொண்டிருக்கிறீர்கள்.
விந்தையல்ல உண்மை.
நகப்முகரிஷியின் இந்தப் பதிலால் ருத்ரன்
உலுக்கப்பட்டான். என்ன இருந்தாலும்
வேந்தனாயிற்றே! ''அப்படியா...'' என்று
சீற்றத்தோடு எழுந்த ருத்ரன் உருவிய வாளோடு
நகமுக ரிஷியைத் தேடி
படைபரிவாரங்களோடு புறப்பட்டு
அரண்மனை வாசலையடைந்தான்.
வாசல்வரை வந்தவன் அதிர்ந்தான்.
அரண்மனை வாசலில் நகமுக ரிஷி!
நகமுக ரிஷி, “வெட்டு என்னை! நீ என்னை வெட்டுவதை நீயும் பார்ப்பாய்... நானும் பார்ப்பேன்... வெட்டப்பட்ட என் உடல் சரிவதை நீயும் ரசிப்பாய், நானும் ரசிப்பேன்.... வெட்டு!'' என்று கணீர் குரலில் ரிஷி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ருத்ரன் மனதில் இடிபோல இறங்கியது.
தனக்கு இதுவரை தெரியாத, ஆனால் இதற்கு
மேல் தான் தெரிந்துகொள்ள வேண்டிய ஏதோ
ஒன்றைத்தான் இவ்வளவு ஆணித்தரமாக ரிஷி
கூறுகிறார் என்று ருத்ரனுக்குப் புரிந்த
வினாடியே சாந்தமானார். கையில் இருந்த,
உருவிய வாள் உறுதியிழந்து கீழே விழுந்தது.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் நகமுக ரிஷியின் ஆத்ம உபதேசங்களைப் பெற்று ஆன்மீகவாதியாக மாறி நல்லாட்சி புரிந்தார் ருத்ரன்.
ஒவ்வொரு மனிதரும் அவர் ஞானம் அடையும் பொழுது இறக்கிறார். ‘நான்’ என்ற அகங்காரம் முழுமையாகச் செத்துவிடுகிறது.
“நான் - என் குலம்.
என் கோத்திரம்.
நான் கஷ்டப்படுகிறேன்.
நான் நல்லாயிருக்கணும்.
என்னை அவன் அவமானப்படுத்திவிட்டான்.
நான் சாதிக்கணும்”
- என்ற எல்லா விஷயங்கள் தொடர்பானவைகளைத்தான், மனிதர்கள் 'தான்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையான ‘நான்’ என்பது ஆத்மா. ‘நான்’ என்பது அந்த ஆத்மாவின் மீது போற்றப்பட்டிருக்கும் போர்வை - அகங்காரம்.
மனிதன் சராசரி மனிதனாக இருக்கும் வரை, ‘தான்’ தான் ஆத்மா என்ற உண்மையை உணர முடியாது.
இதுவரை எதுவெல்லாம் நான் என்று நினைத்துக்கொண்டிருந்தானோ அதற்கு மொத்த மூலகாரணமான அகங்காரம் அழிவதும் இந்த உலகில் ஒரு மனிதர் இறப்பதும் சமம். இது இரண்டும் ஒன்றே.
ஞானமடையும் போது அகங்காரம் சாகிறது. மனிதர் இறக்கும் போது உடல் சாகிறது.
உடலில் உயிர் இருக்கும் போதே அகங்காரம் மடிந்துவிட்டால் நிஜமான ‘தான்’ யார் என்பது ஆத்ம அனுபூதியாக ஒருவருக்குள் மலரும்.
பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து எல்லாவற்றிக்கும் காரணமான அந்த ஆத்மாவின் வெளிப்பாடாக மனிதர் மாறிவிடுவார். அப்போதுதான் மனிதர் ஞானியாக மாறும் ஆனந்த நிகழ்வு நிகழ்கிறது.
| பு | ஜென் ஞானி யோக்கா ஒரு முறை சொன்னார். |
|---|---|
| ன் | தன் உயிரை உருவும் வாளைப் பார்த்துக் கூட ஞானி |
| ன | புன்னகைப்பார்... மரணத்தறுவாயிலும், வாழத்தெரிந்தால்! |
| கை |
பிரபஞ்சத்திற்கே காரணமான ஒன்றைக் கண்டுகொண்டு, அதுவாகவே மாறிவிட்ட ஞானிக்கு முக்காலமும் ஒன்றே.
ஒரு ஞானிக்கு இந்த உடல் வெறும் சட்டை போன்றது. ஞானியின் உடல் அழியலாம். ஆனால் ஞானிக்கு அழிவில்லை. அதை உணர்ந்த காரணத்தால்தான் நகமுக ரிஷியால் அவ்வளவு தைரியமாகவும் தெளிவாகவும் நடந்துகொள்ள முடிந்தது.
ஆத்மா அழிவில்லாதது. ஆத்மாவை வெட்ட முடியாது, எரிக்க முடியாது.
ஆத்மா நிலையானது, ஆனந்தமானது. இவ்வளவு வல்லமையும் புனிதமும் பெற்ற ஆத்மா உள்ளே இருக்க, சின்னச் சின்ன விஷயங்களுக்காக மனிதர்கள் பல பிறவிகளை விலையாகக் கொடுப்பது அகங்காரத்தின் விளையாட்டு.
இந்த விளையாட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் முற்றுப்புள்ளி வைக்கலாம். இல்லை, எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடலாம். இரண்டிற்கும் இயற்கை சக்தி அனுமதி தருகிறது.
அகங்காரத்தோடு அல்லல் பட்டுச் சாவதா? இல்லை ஆத்மாவோடு ஆனந்தமாக வாழ்வதா? - தனிமனிதன், தானே யோசித்து எடுக்க வேண்டிய முடிவு.
அர்த்தமுள்ள சம்பவம்
கபீரின் ஞானகவி வரிகள்...
‘கேள் நண்பா! கேள்! எனது நேசத்திற்குரிய குரு என் உள்ளே வாழ்கிறார்’
- கபீர்
இது கபீருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் உண்மையானதே!
மனிதன் இன்னும் வாழ
ஆரம்பிக்கக்கூட இல்லை...
இது ஒரு பார்சல். இது பெங்களூரிலிருந்து திருவண்ணாமலைக்குச் செல்கிறது. இந்த விலாசத்திற்குச் செல்கிறது
- என்கிற விளக்கங்கள், பார்சல் அல்ல. அது அதன் மேல் ஒட்டப்பட்ட லேபிள் மட்டுமே.
நீங்கள் ஒரு ஆண்.
இன்னாருடைய மகன் நீங்கள்.
இவர்களுடைய தந்தை நீங்கள்.
நீங்கள் ஒரு டாக்டர், இன்ஜினியர்...
என்ற எல்லா விளக்கங்களும் நீங்கள் அல்ல.
> நீங்கள்
> நீங்களேயல்ல.
> அப்படியென்றால்
> நீங்கள் யார்...?
மேற்கண்ட எல்லா விளக்கங்களிலும் இடம்பெற்றிருக்கும் அந்த ‘நீங்கள் யார்?’
உங்களைப் பற்றிய எல்லா விளக்கங்களும் வர்ணனைகளும் உங்களைச் சுற்றியிருக்கும் போர்வை மட்டுமே.
போர்வை நீங்களல்ல.
ஆனால், இன்றைய எல்லா குழப்பங்களுக்கும் காரணம் இந்தப் போர்வையே. ‘நான் போர்வை மட்டுமே’ என்ற உண்மையைத் தாண்டி அந்த மனப்போர்வையே தன்னை மனிதன் என நம்ப ஆரம்பித்து விட்டது. புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தாலும் இது உண்மையே.
உங்களைப் பற்றிய சில விளக்கங்கள்தான்.
உங்களுக்குத் தெரிந்த இன்றைய நீங்கள்.
ஆனால், விசித்திரமென்னவென்றால்,
இந்த விளக்கங்களை நீங்கள் தாண்டிச் செல்லாதவரை, நீங்கள் நீங்களேயல்ல.
நீங்களேயல்லாத வேறொன்று உங்களில் வாழ்ந்துகொண்டிருப்பதுதான் வினோதம். அதனால்தான் 'மனிதன் இன்னும் வாழ ஆரம்பிக்கக்கூட இல்லை' எனச் சொல்கிறேன்.
நிஜம் இப்படியிருப்பதால்தான் உங்களைச் சுற்றியிருக்கும் போர்வையை அழிக்க முடிவதில்லை.
போர்வையை அவமானப்படுத்தினால் நீங்கள் அவமானப்படுவதாக உணர்வீர்கள்.
உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லாதிருப்பதற்கும் இதுதான் காரணம்.
மாற்ற முயற்சித்தாலும் அது மிகக் கடினம் போல் தெரிவதற்கும் காரணம் இதுவே.
போர்வையைக் களைவது என்பது. நீங்கள் செயல்பட ஆரம்பித்த உடனேயே சாத்தியமாகக்கூடியதுதான். இக்கருத்துகளை ஆழத் தியானியுங்கள்.
> உங்களை நீங்கள்
> மாற்ற முயற்சிப்பது
> கடினமெனத்
> தெரியும்.
> எளிமை.
> இக்கருத்தை ஆழத்
> தியானியுங்கள்...
> வாழ ஆரம்பிப்பீர்கள்.
நீங்கள் புதுமனிதராக மாற வாழ முடிவெடுத்தவுடன் உங்களுக்கு வழிகாட்டும் ஒளிகாட்டிகளாய் இவை உதவும்.