எங்கே நிம்மதி?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
★ நிஜப்பற்று நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரும். மனப்பற்று நிம்மதியையும் சந்தோஷத்தையும் திருடும்.
★ மனிதர்களை உறவு என்ற பெயரில் உடைமையாக்க முயற்சிப்பது - மனப்பற்று.
★ மனிதர்களை உறவு என்ற வாய்ப்பால் உயர்த்தித் தன் உயிர்போலப் பாவிப்பது - நிஜப்பற்று.
★ மனப்பற்று, நிஜப்பற்று என்ற இரண்டையும் தாண்டியது பற்றற்ற நிலை. பற்றற்ற நிலையில்தான் தன்னுள்ளும் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் உள்ளும் தெய்வம் இருப்பதைப் பார்க்க முடியும். உண்மையான நிம்மதி அடைய முடியும்!
“என்ன சார் வாழ்க்கை இது... நிம்மதியே இல்லாம...” என்று வாழ்க்கையையும் தங்களையும் நொந்துகொள்கிறவர்கள் நம்மிடையே ஏராளம்.
“எல்லாம் என் தலையெழுத்து, விதி” என்று விரக்தியின் உச்சத்தில் பேசுகிறவர்கள், ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்வதில்லை. அது உங்கள் நிம்மதியின்மைக்கு நூறு சதவிகிதம் நீங்கள்தான் பொறுப்பாளி.
கோடிக்கணக்கில் பணத்தைச் சம்பாதித்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறவர்களும் உண்டு. மூன்று வேளை சாப்பாட்டிற்கே திண்டாட்டம் போடுகிறவர்கள், சாகிறவரை எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருப்பவர்களும் உண்டு!
வாழ்க்கை என்பது பல எதிர்பாராத திருப்பங்களோடும் வாய்ப்புகளோடும் எல்லோருக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறது. விழிப்புணர்வு இல்லாமல் சோம்பேறியாக வாழ நினைப்பவர்கள் மட்டுமே, வாய்ப்புகளைத் தவறவிட்டு, நிம்மதியை இழந்து தவிக்கிறார்கள்.
வாழ்க்கையில் முதன்முறையாக நாம்
எப்போது நிம்மதியை இழக்க
ஆரம்பிக்கிறோம்? பாதுகாப்பைத் (Security)
தேட ஆரம்பிக்கிறபோதுதான். அதிகப் பணம்,
அதிகச்சொத்து, அதிகப் புகழ் இருந்தால்
பாதுகாப்பு உணர்வோடு இருக்கலாம் என்ற
எதிர்பார்ப்பால் நம்முடைய வாழ்க்கைச்
சக்கரம் முடுக்கிவிடப்படுகிறது.
எதையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டால் பாதுகாப்பு உணர்வு அதிகரிக்கும் என்ற விதை அடிமனதில் தோன்றிவிடுகிறது. பாதுகாப்பின்மையை (Insecurity) எதிர்த்தே வாழப் பழகியதன் பக்கவிளைவாக, மனிதர்களைத் தொற்றிக்கொண்ட குணம்தான் பற்றுதல். இது 'எனது', 'என்னுடையது' என்ற பிரயோஜனமில்லாத உணர்வுதான் அது.
நிஜப்பற்று, பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. ஆனால், பலரின் மனப்பற்றுதான் பல கஷ்டங்களையும் இன்னல்களையும் உண்டாக்குகிறது.

நம் மதி
குறைந்தால்
நிச்சயம்
நிம்மதி குறையும்.
நம் மதியை
அதிகமாக்கினால்
நிம்மதியை
நிச்சயம்
அடையலாம்!
நிஜப்பற்று - நிதர்சனத்தை, உண்மையை அடிப்படையாகக் கொண்டது - மனப்பற்று - உங்கள் மனதை அடிப்படையாகக் கொண்டது.
நிஜப்பற்று : உண்மையான ஈடுபாட்டோடு உங்களுடைய பொருள்களை, சொந்தங்களை, நண்பர்களை முழுமையாகப் புரிந்துகொண்டு, அவர்களோடு இனிமையான அன்பும் உறவும் கொண்டிருப்பது. இப்படி முழுமையாக வாழ்வதுதான் நிஜப்பற்று.
மனப்பற்று : பெருமைக்காக, புகழுக்காக ஆடம்பரமாக உங்களுடைய பொருள்களை விரயம் செய்வது பொறுமையின்மையால், வெறுப்பால், சலிப்பால், கர்வத்தால் உங்களுடைய சொந்தங்களையும் நண்பர்களையும் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் கடமைக்காக வாழ்வதுதான் மனப்பற்று. இது மனநிம்மதியைக் குலைத்துவிடும்.
சாதாரணமான விஷயமாகத் தோன்றும் இந்தப் பற்று எந்த அளவுக்கு நிம்மதியைக் குலைக்கும் என்பதற்கு ஒரு சிறிய கதையைச் சொல்கிறேன்.
வெளியூர் சென்று ஊர் திரும்பிக் கொண்டிருந்த வயதானவர், தூரத்திலிருந்து தன் வீட்டைப் பார்த்துப் பதறி அழ ஆரம்பித்துவிட்டார். அவருடைய வீடு பற்றி எரிந்து கொண்டிருந்தது.
முதல் மகன் அருகில் வந்து, “அப்பா, அழாதீர்கள். இந்த வீட்டை இரண்டு நாட்களுக்கு முன்பாக நல்ல விலைக்கு விற்றுவிட்டேன்” என்றார். வயதானவர் “அப்படியா, ரொம்ப சந்தோஷம்” என்று கண்களைத் துடைத்துக் கொண்டு ஆறுதல் அடைந்தார்.
இரண்டாவது மகன் அருகில் வந்து, “அப்பா, இந்த வீட்டை இன்னும் சட்டப்பூர்வமாக விற்கவில்லை. இருபதாயிரம் ரூபாய் அட்வான்ஸ் மாத்திரமே வாங்கியிருக்கிறோம்” என்று சொல்ல, “அப்படியா...” என்று மீண்டும் கண்கலங்கி அழ ஆரம்பத்து விட்டார் வயதானவர்.
மூன்றாம் மகன் அருகில் வந்து, “அப்பா அழாதீங்க. வீட்டை வாங்கியவர் ரொம்ப நேர்மையானவர். இப்பத்தான் போன் செய்தார். அவர் கொடுத்த வாக்கை இதுவரை தவறியதே இல்லையாம். எனவே இந்த வீட்டை பேசிய விலைக்கே
ப
ற்
று
> மனப்பற்று, நிஜப்பற்று என்ற இரண்டையும் தாண்டியது பற்றற்ற > நிலை. பற்றற்ற நிலையில்தான் தன்னுள்ளும் தன்னைச் > சுற்றியிருப்பவர்களின் உள்ளும் தெய்வம் இருப்பதைப் பார்க்க > முடியும். உண்மையான நிம்மதி அடைய முடியும்! வாங்கிக்கொள்வதாகக் கூறினார்” என்றார். மீண்டும் வயதானவருக்குச் சந்தோஷம்..
- இந்தக் கதையை நன்றாகக் கவனித்துப் படியுங்கள். மற்றொருவர் வாங்கி விட்டதால், இனி அது தன் வீடு அல்ல என்கிற பற்றற்ற உணர்வு எவ்வளவு ஆறுதலையும் நிம்மதியையும் தந்தது! வீடு வாங்கியவர் இருபதாயிரம் ரூபாய்தான் கொடுத்திருக்கிறார். எனவே இது என் வீடுதான் என்கிற பற்று உணர்வு பிறந்த போது, எவ்வளவு கலக்கம் உண்டானது!
கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை, வயதானவருக்கு நஷ்டம் ஏதும் ஏற்படவில்லையென்றாலும் இரண்டு முறை அந்த வீடு தனதல்ல என்கிற தகவல் வந்தபோது அது எவ்வளவு ஆறுதலையும் நிம்மதியையும் ஏற்படுத்தியது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?
நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உங்கள் நிம்மதியைக் குலைப்பது உங்கள் பற்றுதல்தான். எந்த அளவுக்குப் பாதுகாப்பு உணர்வை விரும்புகிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் சொத்துக்களையும் சொந்தங்களையும் அதிகப்படுத்த ஆரம்பிப்பீர்கள்.
இந்த உலகில் எல்லாமே மாறும். மாறிக்கொண்டே இருக்கும். எதுவும் எப்போதும் நிரந்தரம் இல்லை. யாரும் யாருக்கும் முழு உடைமையும் அல்ல. எல்லோரும் தனித்துவம் கொண்டவர்கள். எந்த நிமிடமும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே நிதர்சனமான உண்மை. இதைப் புரிந்து கொண்டால் போதும். யாரும் எந்தச் சூழ்நிலையும் உங்கள் நிம்மதியைக் குலைக்க முடியாது.
மனப்பற்றை நிஜப்பற்றாக மாற்றுங்கள். நிம்மதியை நோக்கிக் காலடி எடுத்து வையுங்கள். நிம்மதி அடையுங்கள்!