உங்கள் கண்ணோட்டமும் வாழ்க்கையின் ஓட்டமும்...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நம் பெங்களூர் பிடதி ஆஸ்ரமத்திற்குக் குதூகலமான குடும்பம் ஒன்று அன்று வந்திருக்கிறது.
அக்குடும்பத்தின் சுட்டிச் சிறுவன் சிறுதவறொன்றைச் செய்து விட்டான். கொஞ்சம் கோபப்பட்ட பாட்டி, "அறிவிருக்கா?" என்றார். சிறுவனின் தந்தையும், "புத்தி கொஞ்சமாவது இருக்கா?" என்றார் அச்சிறுவனிடம்.
திட்டுவாங்கிய சிறுவன் அடங்கி ஒடுங்குவதற்குப் பதில், அவர்கள் இருவரையும் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தான். ஏன் அப்படிச் சிரித்தான் எனக் கேட்டதற்கு, "எங்க வீட்டுல சமையலுக்கு ஏதாவது பத்தாம போகும் போதுதான், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் 'அது இருக்கா, இது கொஞ்சமாவது இருக்கா' என்று என் அம்மா கேட்பதைப் பார்த்திருக்கிறேன்.
இன்று என்னிடம் 'அறிவு இருக்கா?' என்று இவர்கள் கேட்கிறார்கள். பாவம், அவர்களிடம் அறிவுபோதுமான அளவு இல்லைபோல் தெரிகிறது!" எனச் சொல்லி மீண்டும் சிரிக்க ஆரம்பித்து விட்டான்!
- குதூகலமானவருக்குக் குதூகலம் என்பது வாழ்க்கைத் திடலில் முழுவதும் கொட்டிக்கிடப்பது தெளிவாய் தெரியும்.
★ உங்களுக்கு
யார் சொன்னது
வாழ்வு துக்ககரமானதென்று.
யார் சொல்ல முடியும்
வாழ்வு ஆனந்தமயமானதென்று.
இரண்டையுமே உங்களுக்கு நீங்கள்தான்
சொல்ல வேண்டும்.
★ உங்களை அழிப்பது, உங்களைக் காப்பது
இரண்டையுமே உங்களுக்கு நீங்கள்
செய்வதைவிட வேறு யாரும் அதிகமாகச்
செய்துவிடமுடியாது.
★ 'நான் இப்படிப்பட்டவன்' 'எனக்குப் பிடித்தது... பிடிக்காதது...' 'என்னைப் பொறுத்தவரையில்' இதுபோன்ற கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் உங்களுக்குத் தெளிவாய்த் தரும் மனத்தின் ஒரு அம்சத்திற்குப் பெயர்தான் பர்ஸனாலிட்டி[Personality].
★ கண்கள் வழியாய் எதையும் நீங்கள் பார்ப்பதில்லை. உங்களின் பர்ஸனாலிட்டி வழியாகத்தான் எல்லாவற்றையும் பார்க்கிறீர்கள். புரிந்து கொள்கிறீர்கள்.
அதனால்தான் ஒருவர் கருத்து போல் இன்னொருவர் கருத்து இருப்பதில்லை. காரணம் - பர்ஸனாலிட்டி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானது.
ஒரு சின்னக் கதை...
வெனிஸ் நகரத்தின் வாயிலில் ஒரு மரத்தடியில் வயதான மனிதர் அமர்ந்திருந்தார். அவர் ஒரு ஞானி.
ஒரு வழிப்போக்கன் அவரிடம் வந்து, "ஐயா, இந்த நகரில் உள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள்?" என்று கேட்டார்.
வயதானவர், "நீ எங்கிருந்து வருகிறாய்? உன் ஊர் மக்கள் எப்படிப்பட்டவர்கள்?" என்று கேட்டார்.

மற்றவரின் நடத்தையிலிருக்கும் அசுத்தங்களைப் பற்றி பேசத் துடிப்பதுதான் மிக அசுத்தமான நடத்தை. அவரை அவரும் உங்களை நீங்களும் காப்பாற்றுங்கள். மாற்றிச்செய்தால் இருவருக்குமே அது ஆபத்தானதே!
"நான் குயின் நகரில் இருந்து வருகிறேன்.
அங்கே இருப்பவர்கள் சுத்த மோசம்.
ஒருவருக்குக்கூட அன்பாகப் பழகத்
தெரியாது. அவர்களுக்கு அடுத்தவர்களைப்
புரிந்துகொள்ளும் குணம் கொஞ்சம்கூடக்
கிடையாது" என்றார்.
வயதானவர், "நல்ல வேளை. என்னிடம்
கேட்டாய். இங்கே இருப்பவர்களும் சுத்த
மோசமானவர்கள்தான். உன்னை யாரும்
நிச்சயம் புரிந்துகொள்ளமாட்டார்கள்.
உடனே இங்கிருந்து தப்பித்துப் போய் விடு"
என்றார்.
சற்று நேரம் கழித்து மற்றொரு வழிப்போக்கர்
அவரிடம் வந்து, "ஐயா, இந்த நகரில் உள்ள
மக்கள் எப்படிப்பட்டவர்கள்?" என்று
கேட்டார்.
வயதானவர், "நீ எங்கிருந்து வருகிறாய்? உன்
ஊர் மக்கள் எப்படிப்பட்டவர்கள்?" என்று
கேட்டார். வழிப்போக்கன், "ஐயா, நான்
குயின் நகரில் இருந்து வருகிறேன்.
அவர்கள் மிக அருமையான மக்கள், அன்பானவர்கள்.
அவர்கள் புரிந்துகொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் தன்மை கொண்டவர்கள்" என்றார். வயதானவர், "அருமை! இங்கே இருப்பவர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். இவர்களும் அருமையான மக்கள்தான். சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறீர்” என்றார்.
நாம் எப்படி இருக்கிறோமோ, அதே கண்ணோட்டத்தில்தான் மற்றவர்களைப் பார்க்கிறோம் என்பதற்கு இந்தக் கதை ஒரு சிறந்த உதாரணம்.
முதல் வழிப்போக்கன் அவருடைய ஊர் மக்கள் மோசமானவர்கள் என்று தவறாக நம்பிக்கொண்டிருக்கிறார்.
அடிப்படையில், அருமையான குணம் கொண்ட மக்கள் மற்றவர்களையும் அருமையானவர்களாகவே கருதுவார்கள். அதனால்தான் அதே ஊரில் இருந்து வரும் மற்றொருவருக்கு அதே ஊர் மக்கள் அருமையானவர்களாகத் தெரிகிறார்கள்.
‘அருமையானவர்கள்’ மற்றவர்களிடம் இருக்கும் அருமையான குணங்களைத் தேடிக் கண்டுபிடித்து சந்தோஷமடைகிறார்கள். நல்ல நட்புறவோடு இருக்கிறார்கள்.
‘மோசமானவர்கள்’ மற்றவர்களிடம் இருக்கும் மோசமான குணங்களைத் தேடிக் கண்டுபிடித்து நொந்துபோகிறார்கள். நல்ல உறவுகளையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நிறம் உண்டு. பார்க்கும் பொருள் எல்லாம் பச்சையாகத் தெரிகிறது என்றால், பிரச்சனை பொருளிடமா? பார்ப்பவர்களிடமா? பிரச்சனை பார்ப்பவரிடம்.
அவர் அணிந்திருக்கும் பச்சைக் கண்ணாடிதான் பிரச்சனை. இந்த பச்சைக் கண்ணாடிதான் உங்கள் பர்ஸனாலிட்டி
உங்களின் பர்ஸனாலிட்டி எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் மற்றவர்களையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
| க ண் ணா டி | இது உங்களின் அந்தரங்கம். மற்றவர்களைப் பற்றி நீங்கள் சொல்லும்- சொல்ல விரும்பும் குறைகள், கேடுகள் உங்களின் அந்தரங்கக் குணத்தைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடிகள். ● நீங்கள் எந்த தரம் என எளிதில் கண்டுபிடியுங்கள். |
பார்க்கும் பொருட்கள் எல்லாம் பச்சையாகத் தெரிந்தால்,- அணிந்திருக்கும் மூக்குக்கண்ணாடிதான் பச்சையாக இருக்க முடியும். பொருட்கள் அல்ல!
அதேபோல் உலகத்தில் உள்ள பலரும் ஏதோவொரு வகையில் தவறானவர்களாக, சரியில்லாதவர்களாக உங்களுக்குத் தெரிந்தால், உங்களுடைய பர்ஸனாலிட்டியில்தான் பிரச்சனை. மற்றவர்களிடமல்ல.
பர்ஸனாலிட்டி சரியாகிவிட்டால், மற்றவர்களை அவரவர் குணங்களின்படி தவறாக எடைபோடாமல் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.
‘இது நல்லது, இது கெட்டது, இது தவறு, இதுசரி.’
என்பது ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் வேறுபடும்.
இளைஞர்களுக்கு ‘இதுசரி, இது சந்தோஷம்’ என்று தோன்றும் பல விஷயங்கள், முதியவர்கள் பலருக்குத் தவறாகவும் தேவையில்லாத விஷயமாகவும் தோன்றும்.
ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பார்க்கும் போது நல்லவர்கள்தான்.
* மற்றவர்களின் நல்ல குணங்கள் பளிச் என்று தெரியாமல், மற்றவரின் கெட்ட குணங்கள் முதலில் ஒருவருக்குத் தெரிகிறது என்றால், பார்க்கும் பார்வையில்தான் தவறு இருக்கும்.
* நீங்கள் நல்லவர், அருமையானவர் என்ற உணர்வு உங்களுக்குத் தெளிவாக இருந்தால், மற்றவர்களின் நல்ல குணங்கள்தான் எடுத்த எடுப்பில் பளிச் என்று தெரியும்
* மற்றவரிடம் கண்டுபிடிக்கும் தவறுகளில் 90% க்கும் மேல் நம்மிடம் இருக்கும் தவறுகள்தான்.
ஒரு சிறு காகிதத்தை எடுத்து மற்றவர்களிடம் நீங்கள் கண்டுபிடிக்கும்
| It is myself... I find intolerable | |
|---|---|
| க | - Leo Tolstoy |
| ண் | லியோ டால்ஸ்டாயின் கூற்று ஒரு நிஜக் கண்ணோட்டம். |
| ணோ | முதல் முதலாய் தன்னுள் பார்ப்பவரால் நம்பமுடியாது. |
| ட் | ‘என்னுள்ளா? என்னுள்ளா! |
| ட | இவ்வளவு குப்பைகள்’ என்றே வியக்க வைக்கும். |
| ம். | ☞ உங்களைத் தோண்டிப் பாருங்கள். புரியும்! |
தவறுகளை எழுதுங்கள். தயாராகும் பட்டியலை நன்கு கவனித்துப் பாருங்கள். மேலே சொன்ன உண்மை புரியும்!
(நம்முடைய பல குறைகள் மனதிற்குள் மிக ஆழமாகச் சென்று விட்டன. அதனால், சிலருக்கு இதை ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கலாம்.
ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் உங்கள் குறைகளைத்தான் மற்றவர்களிடம் காண்கிறீர்கள் என்பது உண்மை).
பட்டியலிலிருந்து கண்டுபிடித்த
தவறுகளைத் திருத்திக்கொண்டால் போதும்!
உங்கள் பர்ஸனாலிட்டி மிகவும்
தெளிவாகிவிடும்! அதன் பின்தான்
மற்றவர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்ற
உண்மையும் தெரிய வரும்.
அதன் பின்னே கொஞ்சம் கொஞ்சமாக
மற்றவர்கள் எவ்வளவு நல்லவர்கள், நாம்
எவ்வளவு தவறாக அவர்களைப் புரிந்து
கொண்டிருக்கிறோம் என்று புரிய
ஆரம்பிக்கும்.
இயேசுநாதர் இதற்கு ஓர் அருமையான வாசகம் கூறி உள்ளார்.
"முதலில் உன் கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்துப்போடு. பின் உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுத்துப்போடு" என்றார். (உத்திரம் என்பது மிகப் பெரிய குறுக்கு மரத்தைக் குறிக்கும்).
இந்த வாசகத்தில் அவர் உத்திரம் என்று குறிப்பிட்டு இருப்பது மிகைப் படுத்தப்பட்ட ஒரு விஷயம் அல்ல. அது சாட்ஷாத் உண்மை.

'அவன் முட்டாள்
என நீ சொல்வாய்
என அவன் சொல்வான்... '
- ஜென் கூற்று.
- மற்றவர்கள் கஷ்டப்படுவதாய் நீங்கள் கஷ்டப்படுவதாய் மற்றவர்கள் நினைக்கிறார்கள். வித்தையல்ல உண்மை. ☞ யார் உங்களுக்கு நிஜம் சொல்வது? பெரும்பாலானோர் அவர்களிடம் மிகப் பெரும் குறைகளையும், தவறுகளையும் உணர்ச்சிக் கட்டுப்பாடின்மையையும் பொய்மையையும் வைத்துக்கொண்டு அடுத்தவர்களைக் கைகாட்டியே வாழ்க்கையைக் கடத்துகிறார்கள்.
‘எனக்கு மட்டும் நல்ல தாய், தந்தை அமைந்திருந்தால்... இல்லை, நல்ல மனைவி அமைந்திருந்தால்... நல்ல பிள்ளைகள் பிறந்திருந்தால்... நல்ல நண்பர்கள் கிடைத்திருந்தால்... நல்ல வேலை, முதலாளி கிடைத்திருந்தால்...’

உங்களைப் பற்றிய
உங்களின் ஆழ்மன
அபிப்பிராயங்களைத்தான்
மற்றவரைப் பற்றிய
‘உங்களின் அபிப்பிராயமாக’
காலத்திற்கும் இடத்திற்கும்
நபருக்கும் தகுந்தாற்போல்
மாறி மாறிக் கூறிக்
கொண்டேயிருப்பீர்கள்.
இது மனதின் விளையாட்டு.’
- மகா ரகசியம்
என்று அடுத்தவர்கள் மீது பழியைப்
போட்டு நமது குறைகளை அப்படியே
வைத்துக்கொண்டிருக்கிறோம்.
உங்கள் குறைகள், உங்கள் மனதில்
இருக்கும் கட்டிகள். உங்கள் குறையை
ஒப்புக்கொள்வது மனதில் இருக்கும்
கட்டியை அறுவை சிகிச்சை செய்வதற்குச்
சமம்.
குறைகளை ஒப்புக்கொள்வது
கொஞ்சம் கடினம்தான். அறுவை சிகிச்சை
வலிக்கத்தான் செய்யும், ஆனால் வேறு வழி
இல்லை.
உங்களின் பதவி, அந்தஸ்து, பெயர்,
புகழ், அதிகாரம் போன்றவற்றால் தங்கக்
கவசங்களைச் செய்து (கட்டி வெளியே
தெரியாமல் ) உங்கள் குறைகள் வெளியே
தெரியாமல் பார்த்துக்கொள்ளலாம்.
இதனால் என்ன பயன்? கட்டி இன்னும்
கொஞ்சம் சீழ் படிக்கும். உங்கள் குறைகள்
இன்னும் கொஞ்சம் மோசமாகும்.
உங்களின் மனநிலையைப் பொறுத்துதான் உங்கள் உடல்
ஆரோக்கியம் அமையும். மனதின் குறைகள் நாளுக்கு நாள் சீழ் கோர்த்துக் கொண்டே சென்றால், உடலும் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டேதான் இருக்கும்.
இதுதான்வயதாக, வயதாக மனிதர்களுக்கு நோய்கள் அதிகமாவதற்குக் காரணம். உங்களின் இன்றைய உடல்நிலை எப்படி இருந்தாலும் சரி, உங்களிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும் சரி - கவலைப்பட வேண்டாம். உங்களுடைய துக்கத்திற்கும் திருப்தியின்மைக்கும் உடல் கஷ்டத்திற்கும் வியாதிகளுக்கும் உங்களுடைய பர்ஸனாலிட்டிதான் பெரும்பான்மையான காரணகர்த்தா என்று புரிந்துகொண்டால் போதும்.
இதுவே உங்களுக்கு மிகப் பெரிய சுதந்திர
உணர்வையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும்.
உங்களுக்குள் சுதந்திரமும் சந்தோஷமும்
ஏற்படும் போது நிறைவடைந்தவராய்
உணர்வீர்கள்.
உங்களுக்குள் நிறைகள் அதிகமாகும்
போது, மற்றவர்களிடம் இருக்கும்
நிறைகளும் நல்ல அம்சங்களும்தான் முதலில்
தெரிய ஆரம்பிக்கும். உங்களைச் சுற்றி
நல்லவர்களும் அருமையானவர்களும்
நிறைந்திருப்பது புரியவரும்.
மனக்கண்ணோட்டம் சீராகும் போது -
வாழ்க்கையின் ஓட்டமும் சீராகும்! நிம்மதி,
சந்தோஷம் பெருகும்!
ஓணானால் ஒரே
நேரத்தில் இரண்டு
காட்சிகளை இரண்டு
கண்களாலும் காண
முடியும். மனிதனால் அது
முடியாது.
ஒரு மனிதனைக்
கொஞ்சம்
நல்லவனாகவும்
கொஞ்சம்
கெட்டவனாகவும்
ஒருபோதும் பார்க்க
முடியாது!
அப்படிப் பார்த்தாலும்
அது உண்மையாக
முடியாது.
| ஏ | தன்னைப் பார்க்க ஆரம்பித்துவிட்டவருக்கு அடுத்தவரைப் பார்க்க ஏது நேரம்? | | து | | | நே | இது நிகழ அது நிகழும். | | ர | அது... | | ம் | மனிதர்கள் அருமையானவர்களாய் தெரிவார்கள்! |
பாசமும் பகையும் உங்களின் ஜோடனைகளைப் பொறுத்து அமையும் 'நிஜமெனப்படும்' பொய்கள்!
ஒரு முழுநாவலின் இரு பக்கங்கள் மட்டும் உங்களின் கைக்குப் படிக்கக் கிடைக்கிறது.

அந்த இரு பக்கங்களைக் கொண்டு முழுநாவலின் கதையையே நீங்கள் சொல்ல நினைத்தால் அது எப்படியிருக்கும். அது கதையாகவா இருக்கும்?
நிஜ நாவலுக்கும் நீங்கள் ஜோடித்த கதைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இருக்காது. இருக்கவும் முடியாது.
உங்களுக்கு உங்களைப் பற்றி முழுமையாகத் தெரியுமா? சிந்தியுங்கள்... உங்களைப் போன்றவர்கள்தானே மற்றவர்களும். அவர்களுக்கே அவர்களைப் பற்றி தெரியாதபோது... “அவர் இப்படிப்பட்டவர்... இவர் மோசமானவர்... அவர் நல்லவர்...” என நீங்கள் சொல்லும் எல்லா அபிப்பிராயங்களும் நிஜமான அந்த மனிதரின் குணம் பற்றிய இரண்டு பக்க அளவு உண்மையாகக்கூட இருக்க முடியாது.
ஒரு மனிதரால் இன்னொரு மனிதரைப் பற்றி வர்ணனை செய்ய முடியாது. மீறி நீங்கள் செய்யும் நல்ல, கெட்ட என்ற இரண்டு வர்ணனைகளுமே பொய்யானவையே. அழகாய், தத்ரூபமாய் தெரியும் ஜோடனைகளே!
உங்களின் பாசமும் பகையும் இந்த ஜோடனைகளை அடிப்படையாகக் கொண்டவையே. உங்களின் மனக்கண்ணோட்டத்தின்படியே மற்றவர்களை ஜோடிக்கிறீர்கள்.
விளைவு: எதிரியை நண்பர்கள் என நம்பலாம். நண்பர்களை எதிரிகள் என நம்பலாம். காரணம், உங்களுக்குத்தான் நிஜமனிதரைப் பற்றி தெரியவே தெரியாதே! எவ்வளவு காலம் ஜோடனைகளோடு வாழ்வீர்கள்?. நீங்கள் உண்மையாய் வாழ, வளர விரும்பினால்...
நல்ல, கெட்ட இரண்டு ஜோடனைகளையும் தூக்கியெறியுங்கள். நிஜ ஆண், நிஜ பெண்ணைச் சந்திக்கும் தைரியசாலியாகுங்கள். எல்லா வர்ணனைகளையும் கலையுங்கள். வாழ்வின் வர்ணஜாலங்கள் தெரிய ஆரம்பிக்கும்!
வர்ணனைகள் மாய மனம் விடும் ஏவுகணைகள்.
எதிரியும்
நண்பரும்
மாயத் தோற்றங்கள்!