குழப்பத்தை வரவேற்போம்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
★ குழப்பத்தை நீங்கள் வெறுக்கத் தேவையில்லை. நீங்கள் வளருகிறீர்கள் என்பதற்கான அறிகுறிதான் அது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
★ குழம்புவதில் தவறில்லை. குழம்பிக்கொண்டே இருப்பதுதான் தவறு.
★ நீங்கள் குழம்புவது நியாயம். அடுத்தவர்களைக் குழப்புவது அநியாயம்.
★ இன்றைய குழப்பம் நாளைய தெளிவு.
★ எது சரி, எது தவறு என்ற தெளிவை ஏற்படுத்தும் மனதின் செயல்முறைதான் குழப்பம்.
மேற்சொன்ன வரிகளை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து, மனதில் தக்க வைத்துக்கொண்டாலே குழப்பத்தைப் பாதி தூரம் ஓட்டிவிடலாம்.
சிலர் எப்போது பார்த்தாலும் குழம்பிப் போய் நிற்பார்கள். என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் மலைத்துப் போய் நிற்பார்கள். "குழப்பம்தான் என் முதல் எதிரி. என் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாக இருப்பது இந்தக் குழப்பம்தான்" என்று புலம்பித் தீர்ப்பார்கள்.
பிரச்சனை குழப்பத்தில் இல்லை. குழப்பத்தை நீங்கள் அணுகும் முறையில்தான் இருக்கிறது. குழப்பம் உங்களுக்குத் தொல்லை கொடுக்க வந்த தீயசக்தி. அதனால் அதைக் கண்டு ஓடிவிடுவதுதான் அறிவு என்று நீங்கள் நினைப்பதுதான் பிரச்சனை.
இப்போது சிறிய கதை சொல்கிறேன். சரோ ஷான் என்ற மன்னருக்கு இரவில் ஏற்பட்ட குழப்பத்தால் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அரசவையைக் கூட்டித் தன் குழப்பத்தைத் தெரிவித்தார்.
கனவில் தான் மிகப் பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருந்ததாகவும் அந்த இக்கட்டான நேரத்தில் முதல் மந்திரியோ, அரசவை ஆலோசகரோ, தளபதிகளோ அருகில் இல்லை என்றும் கூறினார் மன்னர்.
"இப்படி எனக்கு ஆலோசனை கூற யாருமே இல்லாதபோது, நான் என்ன செய்வது? இதற்கு உடனே பதில் தெரிந்தாக வேண்டும்" என்று ஆணை பிறப்பித்து விட்டார்.
இப்படி ஒரு குழப்பமான காரியத்திற்கு விடை கேட்டதால், அனைவரும் குழப்பத்தின் உச்சிக்கே சென்று விட்டனர். "இதற்குப் பதில் கூறவே முடியாது" என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்த போது ஒரு முதியவர் எழுந்து, "நான் பதில் கண்டுபிடித்து விட்டேன்" என்றார்.
தொடர்ந்து, "மன்னா, ஒரு சிறு நிபந்தனை. இதற்குப் பதில் ஒரே வரிதான். ஆனால் அதை நீங்கள் இப்போது படிக்கக்கூடாது. ஏதாவது இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் போது மட்டுமே அதைப் படிக்க வேண்டும்" என்றார்.
மன்னரும் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டார். மன்னரைத் தவிர்த்து மற்றவர்கள் அந்தப் பதிலைப் படித்துவிட்டு "ஆஹா, என்ன ஒரு அற்புதமான பதில்" என்று பாராட்டினார்கள்.
மன்னரின் சந்தேகத்தைப் போக்கும் பதிலை, ஒரு வைர மோதிரத்தில் பதித்து, அதை அரசரின் விரல்களுக்கு அணிவித்தார் முதியவர்.
சில மாதங்களுக்குப் பிறகு பக்கத்து நாட்டோடு போர் மூண்டது. போரில் படுதோல்வி ஏற்பட்டது. மன்னர் மட்டும் தப்பித்துக் குதிரை மீது ஏறி ஓட, ஓட எதிரிகளும் துரத்திக்கொண்டே வந்தனர். மன்னரின் குதிரை கடைசியில் ஒரு மலை உச்சி மீது போய் நின்றது. "அடுத்து என்ன செய்வது? எனக்கு ஆலோசனை சொல்லக்கூடிய அமைச்சர்களோ, மந்திரிகளோ இங்கு இல்லையே!" என்று மன்னர் வருந்தியபோது, வைரமோதிரத்தில் எழுதப்பட்ட வரிகள் ஞாபகத்துக்கு வந்தன.
உடனே மோதிரத்தைத் திறந்து 'என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று' பார்த்தார்.

குழப்பமே
குழம்புமளவுக்குக்
குழப்பத்தைக்
குழப்புவது,
குழப்பத்தைக்
குழப்பமில்லாமல்
எதிர்கொள்ளும்போது
தான் சாத்தியம்!
'THIS TOO WILL PASS AWAY!'
"இந்த நிலையும் நிச்சயம்
மாறிவிடும்" என்று அதில்
எழுதப்பட்டிருந்தது. மன்னருக்கு
ஆறுதலைத் தந்தது அந்த வாசகம். சிறிது
நேரத்தில் எதிரிகள் வேறு வழியில் விலகிக்
சென்றுவிட்டார்கள். மன்னரும் தப்பித்தார்.
தப்பித்த மன்னர், சில மாதங்களுக்குப்
பிறகு எதிரி நாட்டின் மீது படையெடுத்து
வெற்றி கண்டார். வெற்றிக் களிப்பில்
இருந்தபோது மீண்டும் மோதிரத்தைத் திறந்து
பார்த்தார்.
'THIS TOO WILL PASS AWAY!'
'இந்த நிலையும் நிச்சயம் மாறிவிடும்.'
வெற்றி பெற்றுவிட்டதால் கர்வம் கொள்ள
வேண்டாம் என்று எச்சரிப்பது போல்
இருந்தது அது.
நிச்சயம் இந்த நிலைமை மாறிவிடும்
என்ற உண்மை தெரிந்து இருந்தால் போதும்,
எந்தக் குழப்பத்தையும் எளிதாக அணுகலாம்.
குழப்பம் தலையைப் பிடித்து உலுக்குகிற நிலையில் தயவுசெய்து எந்த முடிவையும் எடுக்காதீர்கள். பத்து நிமிடம் தளர்வான நிலையில் அமர்ந்து கொண்டு, மூச்சை நன்றாக, ஆழமாக இழுத்துவிட்டு, மனம் கொஞ்சம் அமைதி அடைந்தபின் தெளிவான, உற்சாகமான சூழ்நிலையில்
குழப்பத்தை எதிர்கொண்டு முடிவெடுங்கள். நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும். குழப்பம் ஓடிவிடும்.
குழப்பத்தை முழுமையாக வரவேற்றுக் கொள்ளுங்கள். குழப்பத்தின் உச்சிக்குச் சென்றாலும் பயப்படாதீர்கள். குழப்பத்தைத் தாண்டிய அடுத்த நிமிடம் தெளிவு கிடைத்துவிடும். இது சூட்சுமமான உண்மை. தெளிவு பெற்ற ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை.
தெளிவு என்ற குழந்தை நம்முள் பிறக்க நாம் படும்பாடுதான் குழப்பம். குழப்பத்திற்குப் பயந்து குழப்பத்தைக் கலைக்க நீங்கள் முயற்சி செய்வதால் எவ்வளவு முறை தெளிவைப் பிறக்கவிடாமல் கருவிலேயே கலைத்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்!
மன்னரைப் போல் நிச்சயம், "இந்த நிலையும் மாறிவிடும்" என்பது போன்ற "Readymade statement" மூலமாகக் குழப்பத்தை அணுகுவது முதல் வகை.
அதையும் தாண்டிய ஒன்றுதான் குழப்பத்தை வரவேற்பது. குழப்பத்தோடு போராடித் தெளிவுக்கு வருவது இது இரண்டாவது வகை.
இரண்டாவது வகை முதல் வகையைவிடச் சிறந்தது. ஆனால் கடினமானது. பெரிய விஷயங்கள் எதுவும் சும்மா கிடைக்காது.
எனவே,
குழப்பத்திற்காகப் பயப்படாதீர்கள் !
குழப்பத்திற்காக வருத்தப்படாதீர்கள் !
குழப்பத்திற்காக நன்றி சொல்லுங்கள். வரவேற்புங்கள் !
| தெ ளி வு | தெளிவு என்ற குழந்தை நம்முள் பிறக்க நாம் படும்பாடுதான் குழப்பம். குழப்பத்திற்குப் பயந்து குழப்பத்தைக் கலைக்க நீங்கள் முயற்சி செய்வதால் எவ்வளவு முறை தெளிவைப் பிறக்கவிடாமல் கருவிலேயே கலைத்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்! |
|---|