KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/மனசே! மனசே! குழப்பம் என்ன?Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

மனசே! மனசே! குழப்பம் என்ன?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

★ "யார் நீ?" என்ற கேள்விக்குப் பெரும்பான்மையான மக்கள் கூறும் பதில்கள், படிப்பறிவில்லாதவர் - “உடல்தான் நான்” என்று நினைக்கிறார். படித்தவர் - “மனம்தான் நான்” என்று நினைக்கிறார். பண்டிதர் - “ஆத்துமாதான் நான்” என்று நினைக்கிறார்.

★ இந்த மூன்று நினைவுகளும் மனதின் மாயங்களே. வெறும் கருத்துக்களே. உண்மையான நீங்கள் யார் என்று சுய அனுபவம் கிடைக்காத வரை புரிந்து கொள்ள முடியாது.

★ வாழ்வே மாயம் 'வாழ்வே மாயம்' - பிரச்சனைகளால் தத்தளிக்கும் சராசரி மனிதர் கூறினால் அது பொய். வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாததற்குக் கூறும் சப்பைக்கட்டு.

'வாழ்வே மாயம்' - பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியசாலி கூறினால், அது உண்மை. வாழ்க்கையின் வலிகளை அனுபவித்து, வாழ்வைப் புரிந்துகொள்வதால் பிறந்த தெளிவான கருத்து!

‘வாழ்வே மாயம்’ - பிரச்சனைகளால் பாதிக்கப்படாத நிலையை அடைந்த ஞானி கூறினால், அது ‘சத்தியம்’. வாழ்க்கையின் இன்ப, துன்பத்தை முழுமையாக அனுபவித்து அனுபூதி அடைந்ததின் வெளிப்பாடு.

★ ‘வாழ்வே மாயம் -’ என்று ஒரு ஞானி கூறியதை, ஒரு சராசரி மனிதர் 100% தவறாகப் புரிந்துகொள்வார். அவரது தத்தளிக்கும் வாழ்க்கையை நியாயப்படுத்திக்கொள்ள ஒரு கருத்தாகப் பயன்படுத்திக்கொள்வார். அவ்வளவே. இதுவே சத்தியத்தை மாற்றிப் புரிந்துகொண்டு சத்தியத்தைப் பொய்யாக்குவது. இதுதான் மாயைகளிலேயே மிகப்பெரிய மாயை!

Nithyananda smiling

மனமே மாயை!

மனதின் மாயை

பேயை விட

விசித்திரமானது!

சிலர் வருத்தத்தோடு உட்கார்ந்து இருப்பார்கள். "என்ன விஷயம்?" என்று கேட்டால், "மனசே சரியில்லைங்க..." என்று சொல்வார்கள். இன்னும் சிலர், "மனம் ஒரு குரங்கு. அதைக் கண்டபடி தாவவிடக்கூடாது. கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்" என்று சொல்வார்கள்.

மனம், மனம் என்று பல இடங்களிலும் சொல்கிறோமே, அது என்ன? மனிதர்கள் மனிதராகவே வாழ்வதற்காக, இறைவனால் பரிசாக அளிக்கப்பட்ட ஒரு கட்டுப்பாட்டு அமைப்பே மனம். மனிதன் என்ற எஜமானன் ஆனந்தமாக வாழ, தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்துகொள்ள, உதவும் ஒரு வேலையாள்தான் மனம்.

மனிதருடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்த மனம், மனிதரைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக மாறிவிட்டதுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம்.

எஜமானன் அசந்த நேரத்தில், வேலைக்காரன் எஜமானன் போலச் செயல்பட்டால் அந்தச் சூழ்நிலை எப்படியிருக்கும்?

பக்குவப்படாத வேலைக்காரன், எஜமானாக மாறுவது, குரங்கைப் பிடித்துச் சிம்மாசனத்தில் உட்காரவைத்தது போல் இருக்கும். அதனால்தான் ஞானிகள் எல்லோரும் மனதைக் குரங்கோடு ஒப்பிட்டுக் “குரங்குமனம்” என்று அழைக்கிறார்கள். சிம்மாசனத்திலிருந்து குரங்கு அகற்றப்படாத வரை, பிரச்சனைகள், கஷ்டங்கள் தொடரத்தான் செய்யும்.

மனம் பல பிரச்சனைகளை, பல போலிகளை உருவாக்கிக் காண்பிக்கும் தன்மை கொண்டது. அவற்றில் ஒன்றுதான் மாயை!

மாயை என்பது இல்லாத ஒன்றை இருப்பதுபோல் காண்பிப்பது. இல்லாத ஒன்றை இருப்பது போல நினைத்து, அதனால் அதிகம் பயப்படுவது, அல்லது அதிகம் ஆசைப்படுவது, இரண்டுமே மாயையின் வெளிப்பாடுகள்.

மாயையை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளச் சிறிய கதை ஒன்று...

இரண்டு சன்யாசிகள் திபெத் நோக்கிப் பயணப்பட்டிருந்தார்கள். போகும் வழியில் பிச்சையெடுத்து பசியாற்றிக்கொண்டே தொடர்ந்து சென்றார்கள். பணக்கார சிவபக்தர் ஒருவர் இல்லத்தில் இருவருமே விருந்து முடித்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்ததிலிருந்து, வயதான சன்யாசி கொஞ்சம் பதற்றத்தோடு இருந்தார்.

வயதான சன்யாசி நடக்கும் போது அடிக்கடி பின்னால் திரும்பிப் பார்த்தபடியே நடந்து சென்றார். என்றுமில்லாமல் இன்று சன்யாசி முகத்தில் ஒரு சிறிய கலவரம். நடையில் ஒரு பரபரப்பு. குரலில் சிறு நடுக்கம். அடிக்கடி தோளில் மாட்டிய பையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார்.

உடன் வந்த இளம் சன்யாசி, ‘ஏன் இவர் இப்படிக் கலவரமாக இருக்கிறார்?’ என்று யோசித்தபடி நடந்து வந்தார்.

மா யைமாயை என்பது இல்லாத ஒன்றை இருப்பதுபோல் காண்பிப்பது. இல்லாத ஒன்றை இருப்பது போல நினைத்து, அதனால் அதிகம் பயப்படுவது, அல்லது அதிகம் ஆசைப்படுவது, இரண்டுமே மாயையின் வெளிப்பாடுகள்!

பின்பு ஒரு கிணற்றடியில் இருவரும் தண்ணீர் குடித்துக் கொஞ்சம் ஓய்வெடுத்தார்கள். கொஞ்ச நேரத்தில் வயதான சன்யாசி கண் அயர்ந்து தூங்கி விட்டார். அவரது தூக்கத்தைக் கலைக்காமல் அவருடைய பையை இளம் சன்யாசி எடுத்து விட்டார்.

பையைத் திறந்து பார்த்தார், ஒரு தங்கக்கிரீடம் இருந்தது (தங்கக்கிரீடம், சிவபக்தர் பரிசாகக் கொடுத்தது). வயதான சன்யாசியின் பரபரப்பிற்கும், படபடப்பிற்கும் என்ன காரணம் என்பது இளம் சன்யாசிக்குத் தெளிவாகத் தெரிந்தது.

இளம் சன்யாசி, பையிலிருந்து கிரீடத்தை எடுத்துத் தூர எறிந்துவிட்டுக் கிட்டத்தட்ட கிரீடத்தின் வடிவத்தையொத்த மரத்துண்டை எடுத்து பையில் போட்டு, அதையே வயதான சன்யாசியின் மடியிலேயே வைத்துவிட்டார்.

சிறிது நேரம் கழித்து எழுந்த இருவரும், மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். வயதான சன்யாசி மீண்டும் அதே படபடப்போடு நடந்து வந்தார். பையை அடிக்கடி தொட்டுப் பார்த்துக்கொண்டே வந்தார்.

இளம் சன்யாசி, "சாமி, ஏன் பதற்றமாக இருக்கிறீர்கள்... ஏதாவது பிரச்சனையா?" என்று அப்பாவி போலக் கேட்டார்.

வயதான சன்யாசி, "இல்ல சாமி. அந்தச் சிவபக்தர் ஒரு தங்கக் கிரீடத்தைக் கொடுத்து காசியில் ஏதாவது ஒரு கோயிலில் தானம் செய்யச் சொன்னார். வழியில் திருடர்கள், கொள்ளையர் யார் வேண்டுமானாலும் வரலாம்! அதனால்தான் ஒரே பதற்றமாக இருக்கிறது" என்றார்.

இளம் சன்யாசி, "இந்தப் பைக்குள் இருக்கும் ஒரு சிறிய கிரீடமா உங்கள் சுதந்திரத்தைப் பாதித்துப் பதற்றத்தை ஏற்படுத்தியது?" என்று அப்பாவி போல் கேட்டார். வயதான சன்யாசி, "ஆமாம், ஆமாம்" என்றார்.

"பைக்குள் இருக்கும் அந்தக் கிரீடம்தான் உங்களை இவ்வளவு பயமுறுத்தியது என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?" என்று கேட்டார் இளம் சன்யாசி.

ச'வாழ்வே மாயம்' - பிரச்சனைகளால் பாதிக்கப்படாத
த்நிலையை அடைந்த ஞானி கூறினால் அது சத்தியம்.
திவாழ்க்கையின் இன்ப, துன்பத்தை முழுமையாக அனுபவித்து
யஅனுபூதி அடைந்ததின் வெளிப்பாடு.
ம்

“ஆம்” என்றார் வயதான சன்யாசி.

“அப்படியா. சரி. உங்கள் பையைத் திறந்து பாருங்கள்” என்றார் இளம் சன்யாசி.

பையைத் திறந்து பார்த்த சன்யாசி அதிர்ச்சிக்கு உள்ளானார். ஒரு சிறிய மரத்துண்டைத் தவிர்த்து அதில் வேறெதுவும் இல்லை. கிட்டத்தட்ட ஆடிப் போய்விட்டார்.

இளம் சன்யாசி, “கிணற்றடியில்
நான்தான் கிரீடத்தை எடுத்தெறிந்துவிட்டு,
இந்த மரத்துண்டை வைத்தேன். இப்போது
புரிகிறதா மனதின் மாயை எந்த அளவுக்கு
ஒருவரை ஆட்டிவைக்கும் என்று”
-உண்மையை உணர வைத்தார்.

மரத்துண்டை கிரீடம் என்று நினைத்து இவ்வளவு தூரம் தேவையில்லாமல் பயந்து கொண்டேயிருந்ததை நினைக்க நினைக்க வயதான சன்யாசிக்குச் சிரிப்பு வந்தது. அதிர்ச்சியைத் தாண்டி வாய்விட்டுச் சிரித்து விட்டார்.

தங்கக்கிரீடத்தைப் போல பதவி,
பணம், பொருள் என்ற மாயைகளை,
பொக்கிஷம் போல கருதிக்கொண்டு
அவற்றைக் காப்பாற்றுவதிலேயே மனம்
முழுமூச்சாக இறங்கிவிடுகிறது.

நிஜத்தில் இந்தப் பதவி, பணம்,
பொருள் எல்லாம் தங்கக்கிரீடங்கள்
அல்ல... வெறும் மரத்துண்டுகளே! நீர்க்
குமிழிபோல, சில காலம் மட்டுமே
உங்களிடம் இருக்கக்கூடியவை!

இந்த உண்மையைப் புரிந்துகொண்டு
செயல்பட்டால், மனதை நீங்கள்
கட்டுப்படுத்துவீர்கள். மனம் உங்களைக்
கட்டுப்படுத்தாது!

Swami Nithyananda

தங்கக் கிரீடத்தைப் போல,
பதவி, பணம், பொருள்
என்ற மாயைகளை,
பொக்கிஷம் போல
கருதிக்கொண்டு
அவற்றைக்
காப்பாற்றுவதிலேயே
மனம் முழு மூச்சாக
இறங்கிவிடுகிறது.