KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/தெரியாதுSign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

தெரியாது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சியாட்டில் தியானக் கருத்தரங்கில், ஒரு அமெரிக்க தம்பதியினர் தங்கள் மகனை என்னிடம் அழைத்து வந்தார்கள்.

தம்பதியினர், "இவன் எங்களின் சொல்பேச்சைக் கேட்பதில்லை. அதையும் தாண்டி உறவினர்கள் ஏதாவது அறிவுரை சொன்னால், அவர்களைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்துவிட்டு, எங்களிடம் கண்சிமிட்டுகிறான்.

என்ன நினைக்கிறான், என்ன செய்கிறான் இவன் என்பது எங்களுக்கே புரியவில்லை. இதற்கு என்ன தீர்வு?" எனக் கேட்டார்கள்.

அந்தச் சிறுவனிடம் தனியாகக் கேட்டபோது, அவன் சொன்ன பதில் ஆச்சரியத்தைத் தந்தது. "ஏன், சொல்பேச்சு கேட்க வேண்டும்.... என் தாயும் தந்தையும் நிம்மதியாக ஆனந்தமாக இல்லை. எப்போதாவது உபதேசம் செய்யும் உறவினர்களும் இவர்களைப் போலவே படாத பாடுபடுபவர்கள்தான்.

ஆனந்தமாக வாழத்தெரியாத இவர்கள் சொல்லும் உபதேசங்களைக் கேட்டு நடந்தால், நானும் இவர்களைப் போலவே எதிர்காலத்தில் துக்கப்பட வேண்டியிருக்கும்தானே! அப்பப்பா! எனக்கு வேண்டாம் இந்த வம்பு. இவர்களைவிட நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். அதை கெடுத்துக்கொள்ள வேண்டுமா?" என்றான்.

  • நமக்குத் தெரிந்த வாழ்வின் ஒரு சிறுபகுதிதான் மேலுள்ளது. அந்தத் தம்பதியரைப் போலவே, உங்களுக்குத் தெரிந்த வாழ்வின் தெரியாத பகுதிகள் ஏராளம் இருக்கலாம். ஆராய்ச்சி நோக்கோட கட்டுரையைத் தொடருங்கள்....
woman reading a book

தெரியாது
என்பது தெளிவாய்த்
தெரிந்தவுடனேயே,
இதுவரை
தெரியாததெல்லாம்
தெரிய ஆரம்பிக்கும்!
புரியாததெல்லாம்
புரிய ஆரம்பிக்கும்!
இது சூட்சுமமான
உண்மை!

★ நமக்குத்....
தெரிந்தவைகளுக்கு அப்பால்....
தெரியாதவைகளுக்கு அருகில்.....
நமக்குத் தெரிந்தும் புரியாத
ஆனந்தம் நிறைந்திருக்கிறது.

★ 'எனக்குத் தெரியும்....'
என்ற இந்த எண்ணம் எந்தச்
செயலில், என்று உதிக்கிறதோ,
அன்றே அச்செயலின் வளர்ச்சி
குன்ற ஆரம்பித்துவிடும்

★ 'எனக்கு எல்லாம் தெரியும்...'
என்ற இந்த எண்ணம் பிறந்து
விட்ட அடுத்த நொடியே,
அச்செயலின்வளர்ச்சி நின்றுவிடும்.
காரணம், உங்களுக்குத்தான்

எல்லாம் தெரிந்துவிட்டதே!
முதிர்ச்சிக்குப் பதிலாக மனிதன்
தளர்ச்சியடைய ஆரம்பித்துவிடுவான்

★ 'எனக்குத் தெரியாது....' என்ற இந்தத் தெளிவு உதித்த நொடியிலிருந்தே, மனிதரின் வளர்ச்சியில் புது வேகம் பற்றிக் கொள்ளும். ஒரு மலர் போல் மனிதர்கள் தானாக மலர்வார்கள்.

ஒரு விறுவிறுப்பான சம்பவத்தோடு துவங்குகிறேன்.

சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த தத்துவாச்சாரியாரைப் பார்க்கக் கர்வம் பிடித்த பண்டிதர் ஒருவர் வந்திருந்தார்.

பண்டிதரின் பார்வை, பாவனையில் இருந்து, "இவர்களுக்கு என்ன தெரியும்? பாவம்! இவர்களின் அறியாமையை வைத்து இந்த தத்துவாச்சாரியார் ஜம்பம் செய்து கொண்டிருக்கிறார்" என்று நினைத்துக்கொண்டு பண்டிதர் வருவதை நொடியில் புரிந்துகொண்டார் தத்துவாச்சாரியார்.

தெரியுமா?
கஷ்டம்,
கவலைகூட....
நீ விடுத்த
அழைப்பே!

"என்ன தெரியும் உங்களுக்கு? நாலு ஆன்மீகக் கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லாம் தெரிந்தது போல இந்த மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறீரே! சாஸ்திரம் பற்றி உமக்கு என்ன தெரியும்?" என்று கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டே கோபமாய் பண்டிதர் வாயைத் திறக்க,

தத்துவாச்சாரியார், "எங்கிருந்து உனக்கு இவ்வளவு கோபம் கிளம்பி வருகிறது?" என்று கேட்க, வேறொரு தளத்திலிருந்து அம்பை போலப் புறப்பட்டு வந்த இந்தக் கேள்வியில் பண்டிதர் குழம்பிவிட்டார்.

தத்துவாச்சாரியாரின் சாதாரண கேள்விக்கே தனக்குப் பதில் தெரியாததை நினைத்து பண்டிதர் உடைந்துவிட்டார்.

வெகுநேரம் யோசித்து, "தெரியாது" என்று சொல்லி முடிக்க,

இ ர க சி ய ம்.நீங்கள் தெரிந்துகொண்டவையே - தெரியாத இறைவனையும், புரியாத ஆனந்தத்தையும் தடுக்கின்றன. - ஆதி சூட்சுமமான இரகசியம்.

தத்துவாச்சாரியார், "உன்னால் ஏன் எல்லா நேரமும் சந்தோஷமாய் இருக்க முடியவில்லை?" என்று கேட்டார்.

பண்டிதரின் பாண்டித்யத்தை மீறி, தத்துவாச்சாரியாரின் கேள்வி தனக்குள் எங்கோ "சுருக்" என்று குத்துவது போல பண்டிதர் உணர்ந்தார். தான் நிற்கும் போதே நிலம் நழுவுவது போல பண்டிதருக்குத் தோன்றியது.

மெல்ல இயல்புநிலைக்கு வந்து, "தெரியாது" என்ற முடிக்க, தத்துவாச்சாரியார், "உன்னை உன் மனைவி கூட முழுமையாய் புரிந்து கொள்ளவில்லையே ஏன்? உலகத்திலுள்ள எல்லோருமே முட்டாளா? இல்லை நீ ஒரே ஒருவன்தான் புத்திசாலியா?" என்று கேட்டார்.

பலர் முன்னிலையில் பண்டிதரின்
பர்ஸ்னாலிdisplayNameயை தத்துவாச்சாரியார்
பிடித்து உலுக்கியதில், பண்டிதருக்குச்
சித்தம் கலங்கியது போல் தோன்றியது.

"என்ன தெரியும் இவருக்கு என்று
வந்தால், இவர் கேட்கும் ஒரு கேள்விக்குக்
கூட "தெரியாது என்ற பதிலைத் தாண்டி,
என்னால் எந்தவொரு பதிலும் கொடுக்க
முடியவில்லையே!" என்று நினைத்த
மாத்திரத்தில் பண்டிதர் கூனிக்குறுகிப்
போனார்.

இருந்தும் பதில் கூறியே ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதால், சப்தம் குறைந்த தொனியில், "தெரியாது" என்று சொல்லி முடிக்க, தத்துவாச்சாரியார், "வரும் போது திடகாத்திரமான காளை போல் கம்பீரமாய் வந்த நீ, ஏன் இப்படிச் சாகப்போகிற ஆடு மாதிரி நிற்கிறாய்? எதனால் இப்படி மாறிப்போனாய்?"

பண்டிதரைப் படபடப்பு தொற்றிக்கொண்டது. கால்கள் நடுங்க ஆரம்பித்தன.

  • வெற்றி என்பது 99% தோல்வி... - ஹோண்டா தொழிலதிபர்
  • தோல்வி என்பது 99% வெற்றி... - ஜென் கூற்று
  • வெளியுலகில்... பல தோல்விகளுக்குப்பின் வெற்றி. உள்ளுலகில்... பல வெற்றிகளுக்குப்பின் தோல்வி, அதாவது - அகங்காரச் சாவு! - ஹஸிட் கூற்று
  • 99% தெரிந்துக்கொண்ட பின்தான்... தனக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்ற முடிவுக்கே ஒருவர் வரமுடியும். தெரியாது என்ற 1% சேரும்போது 'தெரிதல்' முழுபக்குவம் பெறுகிறது. ☞ இது வெற்றியா, தோல்வியா? சிந்தியுங்கள்!

குரல் தழுதழுக்க, “சாமி, எனக்கு எதுவுமே தெரியாது. உண்மையா சொல்றேன். எனக்கு எதுவுமே தெரியாது!” என்று தத்துவாச்சாரியார் காலில் விழுந்து பண்டிதர் அழ ஆரம்பித்தார்.

தத்துவாச்சாரியார் கருணை கலந்த சிரிப்போடு, பண்டிதரை எழுப்பி ஆரத்தழுவி விட்டு, “இப்போது பாருங்கள், இங்கு உட்கார்ந்திருப்பவர்கள் அறியாமையில் இருப்பவர்களா?”

Nithyananda

தெரியாதவரை துரத்துங்கள் படகில் ஆற்றைக் கடக்கையில் இன்னொரு வெற்றுப் படகு இப்படகை மோதினால்... படகு சவாரி செய்பவருக்குக் கோபம் வர வாய்ப்பில்லை.

அதே அது வெற்றுப்படகாக
இல்லாமல், அதில் ஒருவர்
இருந்துவிட்டால், “படகைப்
பார்த்து ஓட்டத் தெரியாதா!”
என்றே கூச்சலிடுவார்.
கோபப்படுவார்.
-சுவாநந்தஸு

பண்டிதர், “சாமீ, மன்னித்து
விடுங்கள்! பாண்டித்யம் என்ற ஒரே ஒரு
துறையில் சில விஷயங்களை மட்டும்தான்
தெரிந்துகொண்டேன் என்ற தெளிவில்லாத
காரணத்தால், எல்லாம் தெரியும் என்ற
கர்வம் இவ்வளவு நாள் என்னைப் பேய்
போன்று பற்றிக்கொண்டு, உண்மையைத்
தெரிந்துகொள்ள விடாமல் செய்துவிட்டது”
என்று சொல்லி முடிக்க,

தத்துவாச்சாரியார், “எந்த
உண்மையை?” என்று கேட்க, பண்டிதர்,
“எனக்குத் ‘தெரியாது’ என்ற உண்மையை,
இப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன்.

இங்கே இருப்பவர்களும் இந்த
உண்மையை எனக்கு முன்பே தெரிந்து
கொண்டவர்கள்தான் என்பதை இப்போது
புரிந்துகொண்டேன்.

சாமி, இப்பொழுதுதான் என் பெரிய சந்தேகத்திற்குப் பதில் கிடைத்திருக்கிறது” என்று கூறினார்.

தத்துவாச்சாரியார், “என்ன சந்தேகம்?” என்று மீண்டும் கேட்டார்.

“உலகில் தெரியாது என்று தெரிந்து கொண்ட முட்டாள்களை விட, தெரியும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் மூடர்கள்தான் அதிகம். நான் மூடத்தனத்திலிருந்து வெளி வந்துவிட்டேன்”. மேலும் உங்களைப்போன்ற வாழும் ஞானிகளைச் சுற்றி குறைவான மனிதர் இருப்பது ஏனென்று புரிகிறது. அது தெரியும், இது தெரியும் எனச் சொல்லும் மூடர்களின் எண்ணிக்கை உலகத்தில் அதிகம். அதனால்தான் உண்மையைத் தெரிந்துகொள்ளும் கூட்டம் குறைவாக உள்ளது" என சிரித்துக்கொண்டே சொல்லி முடித்தார்.

இந்த கட்டுரையைப் படித்த வாசகர்களுக்கு ஒரு சுவையான போட்டி...

நமக்கு என்ன தெரியும் என்று நாமும் ஒரு அலசு அலசி விடுவோம். பதில் தெரிந்தால் கட்டத்தில் டிக் செய்யவும். பதில் தெரிந்தவர், உண்மையிலேயே எல்லாம் தெரிந்தவர்.

★ தூங்கும் போது உங்கள் உள்ளுக்குள் எங்கே இருக்கிறீர்கள்? எப்படி இருக்கிறீர்கள்.?

★ மனம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்
என்று சொல்வோம். மனம் இருப்பது நமக்குத்
தெளிவாய் தெரியும். அது எங்கே,
எப்படி இருக்கிறது?

★ பிறப்பதற்குமுன் எங்கே இருந்தீர்கள்?

★ நம்மையெல்லாம் ஆட்டுவிக்கும் இறைவன் அல்லது இயற்கை சக்தி எங்கே?

★ ஏன் இந்தப் பிரபஞ்சம் உருவானது?

பண்டிதரைக் கேட்ட எல்லா கேள்விகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சில புத்தகங்களில் படித்த தத்துவக் கருத்துக்களை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு 'எனக்கு அது தெரியும், இது தெரியும்' என்ற முடிவுக்கு வந்து விட வேண்டாம்.

அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம், மொழி, கலை. வியாபாரம், அரசியல் என்ற எல்லாமே வாழ்வின் சிறு சிறு பகுதிகளே. அந்தத் துறையின் உச்சிவரை ஒருவர் தெரிந்துகொண்டால்கூட, அது முழு வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டதாகாது.

அப்படியே வாழ்வைப் பற்றி நீங்கள் ஏதாவது தெரிந்து வைத்திருந்தாலும்...

நீங்களே உணர்வுப்பூர்வமாக உணர்ந்து பார்க்காத வரை, நீங்கள் தெரிந்துகொண்ட மற்றவர்களின் ஜீரணமாகாத (அனுபவமாகாத) கருத்துக்களுக்கும் ஜீரணமாகாத உணர்வுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

கடைசியாக ஒரே ஒரு சத்யத்தைக் கூறி இந்தக் கட்டுரைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

நமக்குத் தெரியாது என்ற விஷயம் தெரியாத வரை, 'நமக்குத் தெரியாது' என்ற ஒரு விஷயம் நமக்குத் தெரியவே தெரியாது.

நமக்குத் தெரியாது என்ற ஒரு விஷயம் தெரிந்தால், குறைந்தது 'நமக்குத் தெரியாது' என்ற ஒரே ஒரு விஷயமாவது நமக்குத் தெரிய வரும்.

தெரிந்துகொள்ள ஆரம்பியுங்கள்...

அர்த்தமுள்ள சம்பவம்...

ஐன்ஸ்டீன் விஞ்ஞானத்தின் உச்சி தொட்டபோது சொன்ன வார்த்தைகள் “இதற்குமேல் எனக்குத் தெரியாது...”

அடுத்து சொன்னார்: “இங்கு விஞ்ஞானம் முடிவடைந்து, மெய்ஞானம் ஆரம்பமாகிறது...”

மேலும் சொன்னார், “மெய்ஞானம் சேர்க்கப்படாத விஞ்ஞானம் முடம். Science without spirituality is lame...”

  • 'தெரியாது' என்ற இலக்கை அடையத்தான் 'தெரிந்துகொண்டே இருக்கிறீர்கள்'.

தெரிந்துகொள்ளுதல் பூரணமாகட்டும்!

‘தெரியாது என்ற இலக்கை அடைந்ததும் எல்லாம் தெரிய ஆரம்பிக்கும் என்ற கருத்தைத் தர்க்கரீதியாக ஒருவரால் புரிந்து கொள்ள முடிந்துவிட்டால்....

அவர் ‘தெரியாது’ என்ற இலக்கைத் தொட்டுவிட்டார் என்றர்த்தம் இல்லாவிட்டால் அவரும் நடுவில் எங்கோ ஓரிடத்தில் தொக்கி நிற்பவரே.’

மேலுள்ள கருத்தை எளிதில் புரிந்துகொள்ள உதவும் ஒரு தாவோ தத்துவம், மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கிறது.

* தனக்குத் தெரியும் என்பதே தெரியாதவர் - முதல் வகை. இவர் தூங்குபவர் - இவரை எழுப்புங்கள்! * தனக்குத் தெரியாது என்பதே தெரியாதவர் - இரண்டாம் வகை. இவர் முட்டாள் - இவரைத் திருத்துங்கள்! * தனக்குத் தெரியாது என்பதைத் தெரிந்தவர் - மூன்றாம் வகை. இவர் குழந்தை. இவர் சீடன் - இவருக்குப் போதியுங்கள்! * தனக்குத் தெரியும் என்பதை தெரிந்தவர் - நான்காவது வகை. இவர்0 ஞானி. உண்மையான ராஜன் - இவரைப் பின்தொடர்! இந்த நான்கு படிகளில் இரண்டாவது படியைத் தாண்டத்தான் மனிதர்கள் பெருங் கஷ்டப்படுகிறார்கள்.

> கயிறு
> தொங்குகிறது.
>
> அதைப் பிடித்து...
> மேலேறலாமா?
> தூக்குப்போட்டுக்
> கொள்ளலாமா?
>
> முடிவுசெய்யுங்கள்.
>
> துக்கக் குழியிலிருந்து
> மீட்க, உன் வாழ்வு
> காத்துக்கொண்டிருக்கிறது!

மூன்றாவது படியைத் தொட்டவர்... தன் வாழ்வை வாழ முடிவெடுத்துவிட்டவர், எல்லா மாயைகளையும் தாண்டி மன்னனாக மாற ஆரம்பித்துவிட்டவர், இவரின் நிலையை அடைவது ஆனந்தத்தின் நேர்வழிச்சாலை.

தெரிந்துகொள்ள ஆரம்பியுங்கள். “தெரிந்துகொள்ளுதல்” பூரணமாக, தொட வேண்டிய எல்லாப் படிக்கட்டுகளையும் தொட்டுத் தாண்டுங்கள்! “தெரியாது” என்ற வார்த்தையின் எல்லாக் கோணங்களிலிருந்தும் ஒரே ஒரு முறை ஆராய்ந்து பாருங்கள். புரிந்துகொள்ள ஆரம்பியுங்கள்....