KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/எது நியாயம்? எது அநியாயம்?Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

எது நியாயம்? எது அநியாயம்?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பார்ப்பதற்கு, இரவு வானத்து நட்சத்திரங்கள் போலத் தெரியும் பல பொத்தல்கள் நிறைந்த அந்த இத்துப்போன குடை வழியே, வரும் ஒளிக்கதிர்களைப் பார்த்த சிறுவன் டாம், தாத்தாவிடம் கேட்டான்:

“இந்தக் குடையை நான் பிடிக்கிறேன். நம் வீட்டுக்கூரையைச் சுவர்கள் பிடித்துக்கொண்டிருக்கிறது. சாயங்காலமானதும் எல்லா இடமும் இருட்டாகுமளவுக்கு பெரிய குடையைப் பிடிப்பது யார்?” எனக் கேட்டதற்கு, “இறைவன்” என்று பதில் சொல்லித் தப்பித்த தாத்தா அடுத்த கேள்வியில் மாட்டிக்கொண்டார்.

“தாத்தா, அவர் என்ன ரொம்பக் கஞ்சமா?” என்றான்.

“........”.

சிறுவனின் கேள்வி புரியாததால் பதில் சொல்லாமல் திகைத்த டாமின் தாத்தா, “ஏன் அப்படிக் கேட்கிறாய்?” என்று கேட்டதற்கு, “தாத்தா! உன்னைப் போலவே இத்துப்போன குடைதான் அவரும் வைத்திருக்கிறார்” என்றான்.

★ நிஜம் வேறு. டாம் புரிந்துகொண்டது வேறு. அவனுக்கு அவன் பேச்சு நியாயம்.

இல்லாத இறைவனை, இருப்ப தாய் நினைத்து, அவர் கஞ்சம் என சிறுவன் தீர்ப்பிட்டது - சிறுபிள்ளைத்தனம்.

portrait

மற்றவர்களை
நோகடிப்பவர்கள்
நரகத்திற்குப் போக
மாட்டார்கள்.
ஏனென்றால்...
ஏற்கெனவே
நரகத்தில்தான்
அவர்கள்
இருக்கிறார்கள்.
அதனால்தான்
அப்படி நடந்து
கொள்கிறார்கள்!

மற்றவரிடம் இல்லாத தவறுகளை,
இருப்பதாய் குறைசொல்லி, அதை
நியாயம் என வாதிடும்
சிறுபிள்ளைத்தனம் எல்லா மனிதரிடமும்
இருக்கிறது. இதை ஏற்றுக்கொண்டால்,
திருத்திக் கொண்டால், தப்பித்தீர்கள்!

★ பற்றுதல் கண்ணை மறைக்கும்.
நல்லவர்களைக் கெட்டவர்களாகக்
காட்டும். ஏன்,
கேடு செய்பவர்களைக்கூட
நல்லவர்களாகக் காட்டும்.

★ நியாயம் அநியாயம் பற்றிய,
நியாயமற்ற மனஅமைப்பு
பெற்றிருந்தால்...

நியாயமான உலக வாழ்வில்
அனுபவிக்க வேண்டிய
சந்தோஷங்களை அநியாயமாக
இழந்துவிடுவீர்கள்.
யோசித்துக் கொள்ளுங்கள்.

★ தனக்கொரு சட்டம். ஊருக்கொரு சட்டம் என்று வாழ்ந்தால்... கண்றாவியை கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டி இருக்கும். கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டியதை கண்றாவி என்று ஒதுக்கி, இழக்க நேரிடும்.

★ அவர் நம்ம ஆளுப்பா... கண்டுக்காதீங்க...

★ ஏதோ அவசரத்துல அப்படிப் பேசிட்டாரு.... ★ என் பிள்ளை ஆண்பிள்ளை அப்படித்தான்... ★ ரொம்பச் செல்லமா வளர்த்துட்டேன்... நல்லா பாத்துக்கோங்க மாப்ளே... ★ அப்படிப் பேசினாலும் மனசுல எதையும் வெச்சுக்கமாட்டார்...

  • என்று ஏதாவது சாக்குச் சொல்லி, நம்மை நெருங்கியவர்கள் தவறு செய்தால் அதைநியாயப்படுத்துவதும் மற்றவர்கள் அதே தவறை செய்துவிட்டால்...

★ என்ன திமிர்!
★ வாய் ரொம்ப நீளம்!
★ இங்கிதமே தெரியாத ஆள்!
★ என்ன பிள்ளை வளர்த்திருக்காங்க!
★ மனசாட்சியே இல்லாதவன் அவன்!

  • என்று குமுறி, மற்றவர்கள் செய்த சிறிய தவறைக்கூட 'அநியாயம்! மோசம்!' என்று பெரிது படுத்துவதும் சமூக வழக்கில் சாதாரணமாகிப் போன ஒன்று.

நியாயம், அநியாயம் என்பது மனிதநேயத்தின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கப்பட வேண்டிய விஷயம்.

ஆனால் வழக்கில் நியாயம், அநியாயம் பற்றி நிலவும் கருத்துக்கள் வேடிக்கையானது. இது பற்றுதலை அடிப்படையாகக் கொண்டது...

அதாவது...

★ நியாயம் - தனக்குச் சாதகமாக நடக்கும் எல்லாமே நியாயமான விஷயங்கள்தான்.

நீ'நியாயம், அநியாயம்' பற்றிய
யாஅநியாயமான ஆழ்மனக் கருத்துக்களே
யநியாயமானவரையும்
ம்அநியாயமானவராக மாற்றிவிடுகின்றன.

★ அநியாயம் - தனக்கு சாதகமாக நடக்காத எல்லாமே அநியாயமான விஷயங்கள்தான்.

'மருமக ஒடச்சா பொன்சட்டி, மாமியார் ஒடச்சா மண்சட்டி!' - இந்தப் பழமொழி நியாயம், அநியாயம் பற்றிய கருத்து தலைகீழாக மாறிய பின்தான் சமுதாயத்தில் நுழைந்திருக்கிறது.

இப்படி தனக்கொரு சட்டம், ஊருக்கொரு சட்டம் என்று வாழ்பவர்களால் வாழ்க்கையை அனுபவித்து வாழவே முடியாது.

இதுபோன்ற சூழ்நிலைகளில் பாசம் கண்ணை மறைத்து விட்டது என்றுகூறித் தப்பக்கலாம்.

உண்மையில் பாசம் கண்ணை மறைப்பதில்லை. பற்றுதல்தான் கண்ணை மறைக்கிறது.

அது கண்ணை மாத்திரம் மறைப்பதில்லை. சந்தோஷத்தையும் சேர்த்து மறைத்துவிடுகிறது.

பற்றுதல் நமக்கு ஏற்படுத்தும் பாதகத்தை விளக்க தியான்துஷிர் அடிக்கடி சொற்பொழிவில் மகிழ்ச்சியோடு பயன்படுத்தும் உரையாடல் ஒன்று.

தியான்துஷிர் தன்னை அடிக்கடி பார்க்க வரும் பெண்மணியிடம் ஒரு நாள், “உங்க மகள் எப்படியிருக்கா? நல்லாயிருக்காளா?” என்று கேட்க, அந்தப் பெண்மணி, “அவ ரொம்பக் கொடுத்து வச்சவ சாமி. அதிர்ஷ்டக்காரி. அவளுக்குக் கிடைத்த கணவன் மிக மிக அருமையானவர். இராஜாத்தி மாதிரி அவள் கணவன் அவளைத் தாங்குகிறார் சாமி.

என் மகளுக்கென ஒரு தனி கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார். நிறைய நகைகள், வைரக் கடிகாரம், அத்தோடு வேலை செய்ய நிறைய ஆட்கள்...

இதையெல்லாம்விட என் பெண்ணைப் படுக்கையில் இருந்து எழுப்பி, காபி

கமனத்தினா லெண்ணித் தானே
ணவந்தவிவ்வுலகை மாகு...
க்- கைவல்ய நவநீதம்

| கு | உங்கள் மனம், உங்களின் உலகை உங்களின் நியாய அநியாய கணக்குப்படி உருவாக்குகிறது. உலகம் மாற, உங்களின் கணக்கு மாறினால் போதும். | | கொடுத்து, குளிக்கச் சொல்லி, சில நேரம் அவரே காலை உணவை ஊட்டி விட்டுத்தான் வேலைக்குச் செல்வார். ரொம்ப பாசமான மனிதர் அவர்!

சில நேரம் மதியம் வரைகூட என் மகள் தூங்கிவிடுவாள். அவள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து, மகாராணி மாதிரி பார்த்துக்கொள்கிறார். அவர் மிக நியாயமான மனிதர் சாமி. இப்படியொரு கணவன் கிடைக்க புண்ணியம் செஞ்சிருக்கணும்" என்று மகிழ்ச்சியாகக் கூறினார்.

"அதுசரி, உங்க மகன் எப்படியிருக்கான்?"

"அந்தக் கொடுமையை எப்படிச்
சொல்றது! என் பையன் போன ஜென்மத்துல
என்ன பாவம் பண்ணினானோ தெரியல சாமி.
முழுச் சோம்பேறியைப் போய் கல்யாணம்
பண்ணிட்டு வந்திருக்கான்.

அவளுக்கு மனசுல பெரிய மகாராணின்னு நினைப்பு! அவ காலையில லேட்டாதான் எழுந்திரிப்பாளாம். என் பையன் பாவம் காலையில அவளை எழுப்பி காபி கொடுத்துட்டு, குளிக்கச் சொல்லி, பின் காலை டிபனும் ஊட்டிட்டுத்தான் அலுவலகத்திற்க்குப் போவானாம்!

சில நேரம் அந்தச் சோம்பேறி மதியம்
வரை தூங்குவாளாம். போதாத குறைக்கு
அவளுக்கு நான்கு வேலைக்காரங்க. தனி கார்
வேற . என் பையன் வேலைக்காரன் மாதிரி
இருக்கான் சாமி.

அவ கொஞ்சம் உடம்பு வளைந்து
வேலை செஞ்சா என்ன குறைஞ்சா
போயிடுவா? இதில் அவளுக்கு: புதுசு புதுசா
நகைகள், வைரக் கடிகாரம் வேறு!

Nithyananda

☞ நீங்கள்
நியாயமானவரா?
அநியாயமானவரா?
பதில்
உடனே சொல்லாதீர்கள்.
உடனிருப்பவர்களுடன்
நன்றாய்
கலந்தாலோசியுங்கள்.
உங்களுக்கே தெரியாத
உங்களைப் பற்றி
தெரிந்துகொள்வீர்கள்.
செய்து பாருங்கள்.

என் மகன் அதிர்ஷ்டமில்லாவன். அவனுக்கு வாய்ச்ச பெண் ஒரு அநியாயக்காரி சாமி” என்று புலம்பித் தீர்த்தாளாம் அந்தப் பெண்மணி.

பலர் இந்தப் பெண்மணி அளவுக்கு இல்லை என்றாலும் தனக்கொரு நியாயம், ஊருக்கொரு நியாயம் என்ற குணம் எல்லோரிடமும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

இதுபோன்ற குணங்களால்தான், ஒரு சமயம் கண்ணில் ஒற்றிக்கொள்வதே, மறுசமயம் கண்றாவியாகத் தெரியும். இந்த வினோத நிலைக்குக் காரணம் பற்றுதான்.

பற்று இருக்கும் அளவைப் பொறுத்து உலகமும் மனிதர்களும் பிளவுபட்டுத் தெரிவார்கள். வாழ்க்கையை முழுமையாக அதன் எல்லா பரிமாணங்களிலும் வாழ முடியாத தவிப்பு ஏற்படும்.

நியாயம், அநியாயம் பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை ஆராய்ந்து பாருங்கள். அநியாயமாக நியாயம், அநியாயம் பற்றி வைத்திருக்கும் நியாயமில்லாத கொள்கைகளை தூக்கி எறியுங்கள். உங்கள் கண்களை மறைத்துக் கொண்டிருந்தது அகன்றுவிடும்.

அர்த்தமுள்ள சம்பவம்...

பிரச்சனைகளோடு வருபவர்களுக்கு ரமணர் சொல்லும் தீர்வுகளை நியாயமானதென ஒப்புக்கொள்ள முடியாதவர் கேட்டார்:

“பலரின் பிரச்சனைகளுக்கு தீர்வாகத் திருவண்ணாமலை மலையை நீங்கள் சுற்றச் சொல்வது, ஒரு தீர்வா! இதனால் என்ன பயன்?”

“நீ ஓய்வாயிருந்தால் மனம் ஓடும். நீ ஓடினால் மனம் ஓய்வடையும். விழிப்போடு மலை சுற்றும்போது, வேதனைகளின் வேரான மனம் ஓயும். மனம் சரியாக எல்லாம் சரியாகும். என்னவோய்... புரிந்ததா?” ரமணர்.

• ‘நியாயம்கூட அநியாயமானதாக மனிதனுக்குதெரியும்’ இது புரிந்தாலே பெரும் புண்ணியம்!

மற்றவரைத் தவிக்கவிடுவதில்

சுகம் காணக்கூடாது!

தியான

உளிகள் | ★ சிறிய தவறை பெரிய அளவில் தட்டிக்கேட்பவர்கள், பெரிய நல்ல செயலை சிறிதளவுகூடப் புகழ முயற்சிப்பதில்லை. ★ சிறு பிழைகளைப் பெரிதுபடுத்துகின்றனர். பிழைகளின்றி திருத்தமாக அதே செயலைச் செய்யும் போது கண்டுகொள்வதில்லை. |

★ குறைகளைக் காரணங்காட்டி திட்டும்போது, ஒருவருக்குள் உருவாக்கப்படும் குற்ற உணர்ச்சிகள் அவரைத் திருத்திக்கொள்வதற்குத் தூண்டும்.

மிகவும் கடினப்பட்டு அவற்றைத் திருத்திக்கொண்டவரின் மனம், தான் எடுத்துக்கொண்ட முயற்சிக்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்து நிற்கும்.

ஆனால், குறைகளைக் காட்டத் தயாராக இருந்தவர், நிறைகளைக் கண்டும் காணாதது போல் செல்வர்.

இது திருந்த முயன்று, அதன் தொடர் விளைவாய்... திருந்திக் கொண்டிருப்பவரை மனமொடிந்து போகச் செய்யும். திருந்த ஆரம்பித்தவர் ஏமாற்றத்தை உணர்வார்.

★ ‘திருந்தாத வரை, திருந்தாதவரைத் திட்டு.

திருந்தியபின், திருந்தியவரைக் கொட்டு’

என்றரீதியில் செயல்படும் மனிதரோடு வாழ்வது என்பது நரக வாழ்க்கைக்குச் சமம். என்ன செய்தாலும் ஒருவித நொந்துபோன உணர்வை அருகிலிருப்பவருக்குத் தருவது நிறுத்தப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அநியாயமான செயல்களை பலர் உங்களுக்குச் செய்தார்கள். செய்கிறார்கள், என்பது மறுக்க முடியாத உண்மைதான். அதேபோல நீங்கள் பலருக்கு இதே மாதிரி செய்யவில்லை என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது?

உங்களைப் பாதித்தவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆனால். உங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது!

தொடர்ந்து மற்றவர்களைத் தவிப்பிலேயே வாழவிடுவது, தவிக்கும் மனதின் செயல். மற்றவர்களைத் தவிக்கவிடும் செயலை நிறுத்தத்திற்குக் கொண்டுவருவதும், உங்களின் மனத் தவிப்பை நிறுத்தத்திற்குக் கொண்டுவரும்.

உங்களின் தவிப்பிற்கும் தீர்வு நீங்கள்தான்.

தவிப்பு வரும் காலங்களிலெல்லாம் மனதின்
தவிக்கும் தன்மை எட்டிப்
பார்க்கிறது.

தவிப்பு வந்ததும் கலங்காதீர்.

தவிப்பு வந்ததும் முழுமையாக ஆக்கிரமிக்கட்டும்.

‘தவிப்பின் உச்சி சென்றால்...

அது மறைந்து போகும்’ என்பது தியான விதி.

திருந்தும் முன்
திட்டு! திருந்திய பின்
கொட்டு!

தவிப்பு
தவிர்ப்பது
தவம்!

இனி தவிக்கப் போகும் காலங்களையெல்லாம் தியான காலமாக்குங்கள். மற்றவர்களைத் தவிப்பில் தள்ளத் தூண்டும் மனஎழுச்சி வரும் காலங்களிலெல்லாம் விழித்துக்கொள்ளுங்கள்.

அந்தத் தவிப்பை விழிப்போடு ஆக்கிரமித்து வெளியே வாருங்கள்.

அநியாயங்கள் மறைந்து, நியாயமான மனிதராய் மலர்வீர்கள்!