KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/உலகம் உங்களைப் பொறுத்தது!Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

உலகம் உங்களைப் பொறுத்தது!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

★ உங்கள் மனதைப் பொறுத்து எண்ணங்கள் அமையும்!

★ உங்கள் எண்ணங்களைப் பொறுத்து வாழ்க்கை அமையும்!

★ உங்கள் வாழ்க்கையைப் பொறுத்து வெற்றி அமையும்!

★ உங்கள் வெற்றியைப் பொறுத்து ஆரோக்கியம் அமையும்!

★ உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்து மனம் அமையும்!

புரிகிறதா... இது ஒரு சக்கரம்!

மனம் - இப்படித்தான் செயல்படும். மக்கள் எப்போதும் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகவே செயல்படுகிறார்கள். நாம் மரியாதை கொடுத்தால், மரியாதை கிடைக்கும். சீண்டினால், சீண்டப்படுவோம். அன்பு செலுத்தினால், அன்பு கிடைக்கும். எப்போதும் எரிச்சலும் கோபமுமாக இருந்தால் உலகமே தவறு செய்வதாகவும் ஒவ்வொருவரும் திட்டம் போட்டு எரிச்சல்ப்படுத்துவதாகவும் தோன்றும்.

இதை விளக்க, ஒரு சிறுகதை...

portrait

ஒருவருடைய
உலகத்திற்கும்
மற்றவருடைய
உலகத்திற்கும்
சம்பந்தமே இல்லை.
அவரவர்
கருத்து கண்ணோட்டம்,
மனம் பொருத்து
உலகம்
மாறி, மாறித் தெரியும்

தெருவிலேயே சுற்றிக்கொண்டிருந்த நாய் ஒன்று தவறி அரண்மனைக்குள் நுழைந்துவிட்டது. அரசன் ஆயிரம் கண்ணாடிகளைக் கொண்ட ஒரு விருந்து மாளிகையைக் கட்டியிருந்தான். தனது தெருவிற்குள் எந்த ஒரு நாய் வந்தாலும், ‘உர்ர்.... உர்ர்.... லொள்,.... லொள்...’ என்று எரிச்சலும் கோபமுமாய்ச் செயல்படும் குணம் கொண்டது அந்த நாய். விருந்து மாளிகைக்குள் நுழைந்த அடுத்த நிமிடம், நாய்க்கு அதிர்ச்சியும் ஏகப்பட்ட கோபமும் எழுந்தது. ஏனென்றால், எங்கு பார்த்தாலும் நாய்கள். கிட்டத்தட்ட ஆயிரம் நாய்கள் கண்ணாடியில் தெரிந்தன.

எப்போதும் போல் நாய் கோபமும் எரிச்சலுமாய் ‘உர்ர்... உர்ர்...’ என்றது. ஆயிரம் நாய்களும் வெவ்வேறு கோணத்தில் ‘உர்ர்....உர்ர்...’ என்றன. நாய் கொஞ்சம் பயந்துவிட்டது.. இருந்தும், கோபம் தாளாமல் 'லொள்... லொள்...' என்று குரைக்க ஆரம்பித்தது. எல்லா நாய்களும் குரைக்க ஆரம்பித்தன. நாய் குரைப்பதை நிறுத்தினால், எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்தின! நாய் குரைத்தால், எல்லா நாய்களும் குரைத்தன. இரவு முழுக்கத் தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்த நாய், தனது சக்தியெல்லாம் இழந்து கடைசியில் இறந்து போனது.

நாய்க்குத் தான் மட்டும்தான் உண்மை, கண்ணாடிகளில் தெரியும் மற்ற எல்லா நாய்களும் தன்னுடைய பிம்பம்தான் என்ற விஷயம் தெரியாது. புரிந்துகொள்வதும் கொஞ்சம் கடினம். நாய், தான் குரைப்பதை நிறுத்திய வினாடி, எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்தியதைக் கொஞ்சம் கவனித்திருந்தால் உண்மை புரிந்திருக்கும்; மாயம் என்றால் என்ன என்பது தெரிந்திருக்கும்.

பூமி எப்போதுமே சொர்க்கமாகத்தான் இருக்கிறது. எல்லா மனிதர்களும் அடிப்படையில் அருமையானவர்களாகத்தான் இருக்கிறார்கள். நீங்கள் கோபப்பட்டால் உலகமே தவறு செய்வது போல் உணருகிறீர்கள். எப்போதுமே எரிச்சலும் சலிப்புமாக இருந்தால், உலகமே சுவாரஸ்யமற்றது போல் உணருகிறீர்கள்.

நீங்கள் வெற்றி அடையும்போது சந்தோஷமாக, திருப்தியாக இருக்கும் போது "ஆஹா... என்ன அருமையான உலகம்! என்ன அருமையான உறவுகள்! மனிதர்கள்!" என்று ஆனந்தப்படுகிறீர்கள்.

உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். மனம் நாயைப் போன்று எப்போதும் குரைத்துக்கொண்டேதான் இருக்கும். கண்ணை மூடினாலும்+ கண்ணைத்

ஆ ர ம் பிஉண்மையில் எல்லோரும் இயல்பானவர்கள், அருமையானவர்கள். நீங்கள் உலகத்தை அணுகும் விதத்தைப் பொறுத்து உலகம் மாறுபடும். உலகம் அருமையானது.. உணர ஆரம்பியுங்கள். உண்மை புரியும்!

திறந்தாலும் உங்கள் கோபம், வெறுப்பு, சலிப்பு, பொறாமை... போன்ற குணங்கள் அப்படியேதான் இருக்கும். எந்த மாற்றமும் நடக்காது!

மேலும் உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் நீங்கள் கண்டுபிடிக்கும் தவறுகள், உங்கள் தவறுகளே. (நாய் பல கண்ணாடிகளிலும் பலவிதமாகப் பார்த்தது அதன் வடிவத்தைத்தான்).

என்ன மனிதர்கள்... கொஞ்சம்கூடப் புரிந்துகொள்ளும் தன்மையே இல்லாமல் இருக்கிறார்கள்... மடையர்கள்... அறிவுகெட்டவர்கள் என்று நீங்கள் பாடும் வசைகள் எல்லாம், உங்கள் மனதின் குரல். உங்களின் உண்மையான குரல் அல்ல. மற்றவர்களை, “ஆஹா, எவ்வளவு நல்லவர்கள்! எவ்வளவு பாசமாக இருக்கிறார்கள்! இப்படி அல்லவா இருக்க வேண்டும்!” என்று நீங்கள் நினைப்பதும் உங்கள் மனதின் செயலே.

மக்களையும் உலகத்தையும் அதிகப்படியாகத் தவறாக நினைப்பது மாயத்தோற்றம்.

உண்மையில் எல்லோரும் இயல்பானவர்கள், அருமையானவர்கள். நீங்கள் உலகத்தை அணுகும் விதத்தைப் பொறுத்து உலகம் மாறுபடும். உலகம் அருமையானது.. உணர ஆரம்பியுங்கள். உண்மை புரியும்!

A spiritual teacher/guru seated under a tree with disciples listening

வாழ்வின்

விசித்திரங்கள்