KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/தெளிவுSign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

தெளிவு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

* நலிவடைந்த மனதைப் பெற்றவரால் வாழ்வின் எதிர்பாராத, திடீர் திருப்பங்களில் புகுந்து வெளிவருவது கடினம். நலிவடைந்த மனதுதான் தெளிவற்ற தெளிவு.

* வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளில் புகுந்து வெளிவர ஒவ்வொருவருக்கும் தெளிவு என்பது மிக அத்தியாவசியமான தேவைகளில் ஒன்று.

* தெளிவு மலிவானதல்ல, ஒரு சில புத்தகங்களைப் படித்த உடன் கிடைப்பதற்கு. பல தனிமனித அனுபவங்களின் தொகுப்புதான் தெளிவை உண்டுபண்ணும்.

எறும்பொன்று சுவரிலிருந்து தவறி பலூன் மீது விழுந்துவிட்டது. அந்த எறும்புக்குச் சுவரும் பலூனும் பரந்து விரிந்த ஒரு தட்டையான பரப்பு, அவ்வளவுவே! அந்த எறும்பிடம் சென்று, "எறும்பே! எறும்பே! நீ நின்று கொண்டிருப்பது நீ நம்பும் அளவுக்குக் கண்ணுக்கெட்டாத ஒரு பெரிய பரப்பு அல்ல. அது ஒரு சாதாரண பலூன்” என்று ‘எறும்புமொழி’ யிலேயே விளக்க முயன்றாலும் எறும்பால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. காரணம் - அதன் சிறிய உடலமைப்புதான்.

இதேபோன்று மனிதர்கள், தான் பார்த்த பூமி என்பது கண்ணுக்கெட்டாத ஒரு பெரிய நிலப்பரப்பு என்று உறுதியாக நம்பினார்கள். சிறிது ஆன்மீக உணர்வு கொண்ட கலீலியோ அவரது விரிந்த பார்வையாலும் உள்ளுணர்வாலும் பூமி உருண்டை என்று உறுதிப்படக் கூறினார்.

அன்று மக்களும் அரசாங்கமும் கலீலியோவை நம்பவில்லை. அவர் பொய் சொல்வதாக நினைத்து அவமானப்படுத்தியதோடு, துன்புறுத்தவும் செய்தார்கள்.

இதற்குக் காரணம் என்ன?

எறும்பைப் பொறுத்தவரை அதன் கண்களுக்குப் பலூன் பூதாகாரமான ஒரு பெரிய விஷயம்தான். அதேபோல் மனிதருக்குப் பூமி. பூமியைவிட பலகோடி மடங்கு சிறியவர்கள் மனிதர்கள். அவர்களால் பூமி உருண்டை என்பதை எப்படிப் பார்க்க முடியும்?

எறும்பு, ஒரு நாய்க்குட்டி அளவுக்காவது பெரிதாக இருந்தால் பலூன் தன்னைப் போன்ற ஒரு சாதாரண விஷயம் என்பது நாய்க்குட்டிக்குப் புரியும்.

விஞ்ஞானம் தெரியாத வரை, விஞ்ஞானம் புரியாத வரை, எந்த ஒரு மனிதராலும் பூமி ஓர் உருண்டை என்று சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல மெய்ஞானம் தெரியாத வரை, மெய்ஞானம் புரியாத வரை எந்த ஒரு மனிதராலும் வாழ்க்கை முழுக்க முழுக்க ஆனந்தமயமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. துன்பத்தின் பிடியிலிருந்து தெளிவடைய முடியாது.

புத்திசாலித்தனம் எறும்பளவு, கடுகளவு இருப்பதால்தான் வாழ்க்கையில் நாம் தொடர்ந்து கஷ்டங்களையும் துக்கங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். எறும்பளவு இருக்கும் புத்திசாலித்தனம் பெரிதாகப் பெரிதாக பல உண்மைகள் தெளிவாகப் புரிய ஆரம்பிக்கும்.

★ கஷ்டப்படுவதால் எந்த ஒரு கஷ்டத்திலிருந்தும் மீளமுடியாது. கஷ்டத்திற்குத் தீர்வு கஷ்டப்படுவதல்ல.

★ துக்கப்படுவதால் எந்த ஒரு துக்கத்திலிருந்தும் மீளமுடியாது. துக்கத்திற்குத் தீர்வு துக்கப்படுவதல்ல.

portrait of a young spiritual teacher

தெளிவற்ற
நிலையிலிருந்து
தெளிவது
சுலபம்.
தெளிவற்ற
தெளிவிலிருந்து
தெளிவது
கடினம்!

தெளிவு என்பது கஷ்டத்திலும் துக்கத்திலும் தொடர்ந்து உழலாமல் ‘உண்மை என்ன? நிதர்சனம் என்ன?’ என்பதைப் புரிந்து கொள்வது. வாழ்க்கையின் இயல்பான போக்கில் இவை எல்லாம் மிக மிகச் சாதாரண விஷயங்கள் என்பதைத் தெளிவாக உணர்ந்துகொள்ளும் புத்திசாலித்தனமே தெளிவு.

தெளிவு கிடைத்தால் போதும். எல்லாக் கஷ்டங்களுக்கும் கணநேரத்தில் முடிவு கண்டுபிடித்து வெளிவந்துவிடலாம். ஒருவேளை முடிவு கிடைக்கவில்லை என்றாலும் ‘கஷ்டங்கள் சரியாகும் போது சரியாகட்டும். இந்த நிமிடத்தில் நாம் என்ன செய்ய வேண்டு’ என்று தெளிவாக யோசித்து, வெகு சீக்கிரத்தில் மனத் தடுமாற்றத்திலிருந்து வெளிவந்து விடலாம்.

தெளிவு இல்லாமல், ஒரு பிரச்சனையில் இருந்து வெளியே வந்து விடலாம் என்று நினைப்பது, பார்வையற்ற ஒருவர் ஊன்றுகோல் இல்லாமல், வழுக்கும் சகதி நிறைந்த சாலையில் அழகாக நடக்க முயற்சிப்பது போன்றது. தெள்ளத் தெளிவாக வாழ உதவும் தெளிவைப் பெறாமல், வாழ்க்கையைத் தெளிவாக நடத்த நாம் முயற்சிக்கும் போது, தொடர்ந்து கஷ்டங்களும் ஏமாற்றங்களுமே பதிலாகக் கிடைக்கின்றன.

தெளிவாக இருப்பதாக நாம் எல்லோரும் நம்பினாலும் நிஜத்தில் தெளிவு என்பது சிறுவயதிலிருந்து பல ஏமாற்றங்களால் கலப்படமாகித் தெளிவற்ற தெளிவாகத்தான் இருக்கிறது.

ஒரு சிறிய கதை....

வாழ்க்கை மீது முழுமையாக வெறுப்படைந்த ஜானி, தற்கொலை ஒன்றே முடிவு என்று மருந்துக்கடையில் சென்று விஷம் வாங்கிச் சாப்பிட்டு விட்டுப் படுத்துவிட்டார்.

"இதோ, இன்னும் ஐந்து நிமிடத்தில் செத்துவிடுவோம் - பத்து நிமிடத்தில் செத்துவிடுவோம்" என்று விடிய விடிய எதிர்பார்த்துக் காத்துக்கொண்டே இருந்ததுதான் மிச்சம்.

காலையில் எழுந்து வெகு கோபத்தோடு மருந்துக்கடைக்குச் சென்று, "சார்... என்ன விஷம் கொடுத்தீங்க? ஒண்ணுமே நடக்கலியே!" என்றார் ஜானி.

மருந்துக்கடைக்காரர் கொஞ்சம்கூடக் கலக்கம் அடையாமல் வெகு இயல்பாக, "எங்க சார், இப்பெல்லாம் கலப்படம் இல்லாத விஷம் கிடைக்குது" என்றார்.

| க ல ப் ப ட ம் | தெளிவாக இருப்பதாக நாம் எல்லோரும் நம்பினாலும் நிஜத்தில் தெளிவு என்பது சிறுவயதிலிருந்து பல ஏமாற்றங்களால் கலப்படமாகித் தெளிவற்ற தெளிவாகத்தான் இருக்கிறது. |

இந்த நிகழ்ச்சி சிரிப்பைத் தந்தாலும் ஆழமான சிந்தனைக்குரியது. நம்முடைய தெளிவும் கலப்படம் நிறைந்ததாகிவிட்டது. தெளிவில்லாதவர் தெளிவாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு திரிவது சகஜமாகிப் போய் விட்டது. இது சற்றே வருத்தத்திற்குரியது.

எப்படித் தெளிவற்றத் தெளிவை, தெளிவான தெளிவாக மாற்றுவது?

எறும்பளவில் இருக்கும் புத்திசாலித்தனத்தை அதிகப்படுத்தும் தியானத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து உங்கள் வாழ்க்கையின் சுவைக்கு உப்பிடுங்கள்.

எப்படி? எறும்பு, நாய்க்குட்டி அளவு பெரிதானால்தான் பலூன் தன்னைப் போல ஒரு சாதாரண விஷயம் என்பது தெளிவாகத் தெரியுமோ; அதுபோல் புத்திசாலித்தனம் பெருகப் பெருக கஷ்டங்களும் ஏமாற்றங்களும் வாழ்க்கைப் பாதையில் இருக்கும் சாதாரண கற்கள் என்பது புரியும்.

இதழ் இதழாக தெளிவு உங்களுக்குள் மலர ஆரம்பிக்கும்.!

Swami Vivekananda sitting on rocks with a bare tree in the background