KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/இன்பமெனத் தெரியும் துன்பம்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

இன்பமெனத் தெரியும் துன்பம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

விவேகானந்தரிடம் குருபக்தி பற்றி வில்லங்கமாக ஒருவர் கேட்டார்.

"ஏன் சீடர்கள் இவ்வளவு அடங்கி இருக்கிறார்கள். இதென்ன புதுவிதமான அடிமைத்தனம்?"

கொஞ்சமும் தாமதிக்காத விவேகானந்தர், "இல்லாவிட்டால், உன் புலன்களுக்கு அடிமையாயிரு. (Otherwise be a slave for your sense)" எனச் சொன்னார்.

* புலன்களுக்குள் சிக்கிக்கொண்டார்கள் மனிதர்கள்.

தியானம்,

ஞானம்,

பக்தி போன்றவை மனிதரைச் சிக்கலிலிருந்து விடுவிக்கும் அருமையான வழிமுறைகள்.

★ திகட்டாத, குறையாத, ஆனந்தத்தைத் தராத எல்லாமே சிற்றின்பங்கள்தான்.

★ ஆனந்தத்தை அளிப்பது பேரின்பம்.

ஆனந்தத்தை அழிப்பது சிற்றின்பம்.

★ மனம், சிற்றின்பங்களைத்தான் பெரிதும் விரும்பும். காரணம், ஒரே ஒரு முறை பேரின்பத்தை ருசித்தால் போதும், மனம் அழிந்துவிடும்.

★ தன் தற்காப்புக்காக மனமானது மனிதரைச் சிற்றின்பங்களைக் காட்டிதான் 'அனுபவி!அனுபவி' என்று தூண்டும்.

★ ஆகவே, அனுபவிக்க நினைப்பதையெல்லாம் அனுபவி. அப்புறமாவது அவை திருப்தியையும் ஆனந்தத்தையும் தராது எனப் புரிந்துகொள்.

இரு நண்பர்கள் மூன்றாம் நபரைப் பார்த்து இப்படிப் பேசிக் கொண்டார்களாம்...

நண்பர் 1 : பொங்கல் பம்பர் பரிசாக பத்து இலட்சம் பரிசு விழுந்தது... இவருக்குத்தானே?!

நண்பர் 2 : ஆமாம்... ஏன் கேட்கிறாய்?

நண்பர் 1 : ஏன் இப்படிக் கப்பல் கவிழ்ந்த மாதிரி உட்கார்ந்திருக்கிறார்? குஷியாக இருக்க வேண்டாமா...!

நண்பர் 2 : அட, உனக்கு விஷயமே தெரியாதா?. அவர் வாங்கிய ஒரு கோடி ரூபாய் லாட்டரி சீட்டில் ஒத்த ரூபாய்கூட விழவில்லையாம்.

  • பெரிய பெரிய எதிர்பார்ப்புகளுக்காக, சின்னச் சின்ன சந்தோஷ மலர்களைச் சூட்டி வரும் வாழ்வென்னும் அழகு குழந்தையைத் தண்டிக்காதீர்கள்.

எதிர்பார்ப்புகளைத் தாண்டி ஆழ அனுபவித்து வாழ்பவர்... சின்னச் சின்ன நிகழ்வுகளிலேயே பேரின்பத்தில் மூழ்கிப் போவார். அப்படி வாழத் தெரியாதவருக்குப் பெரிய பெரிய நிகழ்வுகள்கூட, சிற்றின்பம் வரைதான் கூட்டிச் செல்லும்.

Nithyananda

“துன்பம்கூட
உன் ‘சுய’ தேர்வே!
உன் விருப்பம்
இல்லாமல் ‘ஆனந்தம்’
கூட உன் உள்ளே வர
முடியாது.
எனவே ‘நீயே’
தேர்வு செய்”.
- தாவோ
‘நீ’ என்பது அகங்காரம்.
அது, சிறுசிறு
இன்பங்களையே விரும்பி
ஈர்க்க, துன்பம் வருகிறது
உபபொருளாய்!

இன்பம் என்பது
வெளிப்பொருட்களைச் சார்ந்ததல்ல. அது
உள்ளுணர்வு சம்பந்தப்பட்டது, ஆனால்,
மனிதர்கள் வெளிப் பொருட்கள்
சம்பந்தப்பட்டதாகத்தான் இன்பத்தைப்
பற்றிப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
இவைதான் சிற்றின்பங்கள்.

‘சிற்றின்பங்கள் சரியா?, தவறா?’ என்ற
சந்தேகத்திற்கு இதுவரை எந்த ஒரு ஞானியும்
தீர்மானமாகத் ‘தவறு’ என்றும் சொன்னதில்லை.
‘சரி’ என்றும் சொன்னதில்லை.

மாறாக, அவை தேவையில்லை.
அவற்றைத் தாண்டிவிடலாம் என்றே
சொல்கிறார்கள்.

ரத்தினத்தை வைத்துக்கொண்டு,
கூழாங்கற்களுக்காகத் தேடி அலைவதேன்!
கஷ்டப்பட்டுச் சேர்த்த கூழாங்கற்களை
மூட்டை மூட்டையாகச் சுமந்தும், பயன்
முதுகுவலி மட்டும்தானே - என்ற
உண்மையை உணர்த்தவே ஞானியர்
முயற்சிக்கிறார்கள்.

சிற்றின்பங்களினால் நமக்குக்
கிடைக்கும் சுகங்கள்கூட உண்மைச் சுகம்
இல்லை.

நமக்குள்ளே தோன்றும் இது போன்ற சுகங்களுக்கு வெளியே இருக்கும் ஒரு பொருளோ, ஒரு மனிதரோ, நிச்சயம் காரணம் இல்லை. வெளிப்பொருளால் உள்ளே சுகத்தை உருவாக்குவது சாத்தியமே இல்லை.

சிற்றின்பங்களை எளிதாகப் புரிந்துகொள்ள மகாஞானி சொன்ன ஒரு அருமையான கதை,

நாயொன்று பசி தாளாமல் அலைந்து. “எது கிடைத்தாலும் போதும் - என் பசி தீர வேண்டும். அவ்வளவே” என்ற ஒரு நோக்கம் தவிர, வேறெதுவும் அந்த நாய்க்குத் தெரியவில்லை.

பசியில் திரிந்த நாய்க்கு வழியில் பரிசு கிடைத்தது போன்ற சந்தோஷம்.

ஒரு மெலிந்த, காய்ந்த போன எலும்புத்துண்டு தூரத்தில் அதன் கண்ணுக்குத் தெரிந்தது.

பசியோடு துள்ளலும் சேர்ந்துகொள்ள, இரண்டே தாவலில் எலும்பைக் கவ்வியது நாய்.

பசி கண்ணையும் உணர்வையும் சேர்த்து மறைக்க, காய்ந்த எலும்பை அசுரகதியில் நாய் கடிக்கத் தொடங்கியது.

எலும்பைத் தின்னும் போராட்டத்தில் குறியாய் இருந்த நாய்க்கு காய்ந்த எலும்பு தன் கன்னங்களை உள்ளே தொடர்ந்து குத்திப் புண்படுத்துவதும் வலியும் தெரியவே இல்லை.

சிறிது நேரத்திற்கெல்லாம் எலும்பு குத்திக் குத்தி புண் பெரிதாகி நாயின் உள் கன்னத்திலிருந்து இரத்தம் வடிய ஆரம்பித்தது.

அப்பாவி நாய்! எலும்பிலிருந்துதான் இரத்தம் வருகிறது என்று நம்ப ஆரம்பித்த உடனே அதற்கு குஷி தாளவில்லை. மேலும் மேலும் எலும்பை எவ்வளவு கடிக்க முடியுமோ அவ்வளவு கடித்தது.

'கடிக்கக் கடிக்க இரத்தம்!’ ஆனால் நாய்க்கு அந்த நிமிடம் ‘கடிக்கக் கடிக்க’ சுகம் என்று தான் இருந்தது. பசியும் அந்த நேரத்திற்குத் தீர்ந்தது போல்தான் தோன்றியது!

சிஅனுபவித்ததையே
ற்மீண்டும் மீண்டும் அனுபவிக்கும் உத்வேகத்தை ஊட்டுவது...
றிசிறு அளவில் மட்டுமே அனுபவிக்கப்பட்ட இன்பங்கள்.
ன்
பஎனவே அவை சிற்றின்பங்கள்!
ம்

சிறிது நேரம் கழித்து நாயின் கன்னத்திலிருந்து புது வலியும் எரிச்சலும் தெரிய ஆரம்பித்தது.

அப்போது அந்த நாய் "இதென்ன புதுத் தொல்லை?" என்றுதானே யோசித்திருக்கும்.

நாய்க்கு "சுவை சுகத்தை" கொடுத்தது அதன் இரத்தமே. ஆனால், வலியைக் கொடுத்தது...?

கடைசி வரை எலும்பால் நாய்க்கு என்ன பலன் - சில நிமிடங்கள் எலும்பைக் கடித்தது தவிர!

சிற்றின்பங்களின் ஆரம்பமும் முடிவும்
இப்படி இருக்கும் காரணத்தால்தான், ஞானியர்
அது தேவையில்லை என்று சொல்கிறார்கள்.

மனிதர்கள் தேடும் சிற்றின்பங்களில்,
அவர்களுக்குக் கிடைக்கும் கணநேர
சந்தோஷங்களுக்கான காரணம்கூட வெளிப்
பொருட்களே அல்ல.

தன்னுள்ளே தொடர்ந்து பொங்கிக்கொண்டிருக்கும் ஆனந்தத்தின், வடிகட்டப்பட்ட சிறு சிறு துளிகளைத்தான் மனிதர்கள் கணநேர சந்தோஷமாக அனுபவிக்கிறார்கள்.

சிற்றின்பங்கள் வலை. பேரின்பம் அலை.

வலையின் இயல்பு சிக்க வைக்கும்.

அலையின் இயல்பு
அலைத்துச் சென்று
விடும்.

ஆசைக்காக உடலை அழிக்காதே!

மனிதர்கள் தன்னுள்ளே இருக்கும் ஆனந்தக் கடலில் மூழ்கிப் பருக வேண்டும் என்ற பிறவி ஆசைக்கு வழி தெரியாமல் தவிக்கிறார்கள்.

விளைவு! எங்கெங்கோ முட்டி மோதிக்கொள்கிறார்கள். பல வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். சில கூட கிடைப்பதில்லை. அப்படியே சிலருக்கு வாய்த்தாலும் அதிலிருந்து திருப்தி கிடைப்பதில்லை.

திருப்தியின்மையால்தான் மீண்டும் மீண்டும் விட்டில்பூச்சி போலவே மனிதர் சிற்றின்பங்களின் வலையில் சிக்கிக்கொள்கிறார்.

"சிற்றின்பங்களைத் தாண்டுவது எளிது. தாண்டிவிடலாம். முயற்சி செய்" என்று ஞானியர் சொல்லக் காரணம், அவை இன்பம் போன்ற ஏதோ ஒன்றைச் சிறிதாகக் கொடுத்துவிட்டு, கூடவே பெருந்துன்பத்தையும் தந்துவிடுவதுதான்.

இதற்கடுத்த கொடுமை, பலர் சிற்றின்பங்களிலேயே சிக்கி வாழ்வின் ஆச்சரியங்களைத் தொலைத்துவிடுவதுதான். எலும்பிலிருந்து இரத்தம் வருவதாக நம்பியது போல், சிற்றின்பங்கள் சுகம் தருவதாக நினைப்பதுதான் மனிதரை சிக்க வைக்கிறது.

இறைவன் நமக்குப் பரிசாகக் கொடுத்த வாழ்க்கையின் பிரம்மாண்டமான, உள்ளே இருக்கும் ஆனந்தப் பெருங்கடலுக்கு முன் - சிற்றின்பங்கள் சாதாரண கூழாங்கற்களைவிடச் சிறியவை.

பேரின்பம் இறைவன் கொடுத்த இரத்தினம். சிற்றின்பம் இறைவன் கொடுத்த கூழாங்கல்.

நாம் இரத்தினத்தை விட்டுவிட்டு கூழாங்கல்லை வைத்து, ராசிக்கல் வியாபாரம் செய்யும் சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறோம். அதில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

‘கூழாங்கல்லா? இரத்தினமா?’ எது தேவை. இரண்டுக்குமே சாத்தியமுண்டு. முடிவு செய்யுங்கள்!

அர்த்தமுள்ள சம்பவம்...

சிற்றின்பங்களை விளக்க அந்த சூஃபி ஞானி அடிக்கடி சொல்லும் கதை...

"பாலைவனத்தில் தாகத்தால் தள்ளாடியவனின் கண்ணில் ஒரு கூஜா நிறைய நீர் தென்பட்டது. மடமடவென அதைக் குடித்தவனுக்கு, இன்னும் கொஞ்சம் தாகம் அதிகமானது. காரணம், அது உப்புநீர்!"

  • உங்களின் ஆனந்த தாகம் மிக ஆழமானது. சின்னச் சின்ன சுகங்கள் தாகத்தை இன்னுங்கொஞ்சம் தூண்டவே செய்யும்!

துன்பக் கணக்கெடுப்பு - புரிந்து கொள்ளுதலின் அஸ்திவாரம்!

| தியான | | :---: | |

லோகோ

| | உளிகள் |

* நெருப்பை பெட்ரோல் ஊற்றி அணைக்க முடியுமா?

* பத்து லட்டுகளைச் சாப்பிடுவதால், இனிப்பின் மீதான வெறி குறையுமா, மறையுமா?

* நிஜத்தில் சாத்தியமில்லாத, கற்பனை காவியங்களைத் தொடர்ந்து பார்ப்பதால், படிப்பதால், பகல்கனவுகள் திருப்தி பெறுமா?

எல்லாவற்றிற்கும் பதில்: ‘ஆம்’ என்றால் வெளியுலகின் கேளிக்கைகள் உங்களுக்குத் திருப்தியையும் நிம்மதியையும் தரும். இல்லையென்றால்... திருப்தி இல்லை என்பது உறுதியாகிறது.

நீங்கள் எங்கெங்கோ செல்கிறீர்கள். ஏதேதோ செய்கிறீர்கள்.

என்ன செய்தாலும் உங்களின் நிம்மதி உங்களிடமிருந்து தூரமாக போய்க் கொண்டேயிருப்பதை கவனித்திருக்கிறீர்களா?

> துன்பம் என்பது
தூங்கும் எரிமலைக்
குழம்பு!

> துன்பத்தின் ஆழம்,
நீளம், உயரம்
அறியுங்கள்...
தூர்வார அது
வரைபடமாகும்.

அனுபவிக்கும் தன்மை அதிகமாகாமல், எவ்வளவுதான் சுக போகங்கள் அதிகமானாலும் நிம்மதியோ, ஆனந்தமோ கிடைக்காது.

மாறாக, நிம்மதியின்மையே அதிகமாகும். அதிருப்தி தீயை அணைப்பதற்காக, நீங்கள் ஊற்றும் எல்லா சிற்றின்பங்களையும் கணக்கெடுங்கள்!

வாழ்க்கையின் விளையாட்டு புரிய வரும்.

துன்பக் கணக்கெடுப்பு செய்ய சில டிப்ஸ் :

* உங்களுக்கு மிகவும் பிடித்தவை எவை?“

(இன்னும் ஒருமுறைகூட நீங்கள் அவற்றை முழுமையாகத் தாண்டி வராததால்தான் உங்களின் டாப் டென் லிஸ்ட்டில் அவை இடம் பெற்றிருக்கின்றன.

* திரும்பத் திரும்ப மனதில் நீங்கள் அசைபோடும் சந்தோஷ நிகழ்வுகள் எவை?

[மனமானது அசைபோடும் கலையை கற்றுக்கொண்டு விட்டது என்பதற்கான அறிகுறி இவையே. இன்று மனம் அசை போடுவதை சந்தோஷம் எனச் சொல்கிறீர்கள். நாளை அதே மனம் அசை போடப்போகும் வேறு சிலவற்றை துன்பம் எனச் சொல்லப்போகிறீர்கள். என்னை வாட்டும் எண்ணங்கள் இவை எனச் சொல்லப் போகிறீர்கள்.

இன்பம் இது, துன்பம் இது எனப் பிரித்துப் பார்க்க முடியாத மனதின் இந்த அசைபோடும் செயல் சரிசெய்யப்பட வேண்டும்] .

* உங்களைக் கஷ்டப்படுத்தும் நினைவுகள் எவை?

* உங்களுக்குச் சுத்தமாகப் பிடிக்காதவை எவை எவை?

இந்த நான்கு கேள்விகளுக்குள் உங்களின் துயரங்களுக்கான காரணங்கள் ஒளிந்திருக்கிறது. கேள்விகளுக்கான பதில்களை ஒரு தனிப் புத்தகத்தில் எழுதுங்கள். எழுதுவதை மிக சிரத்தையோடும் மிக நேர்மையோடும் செய்யுங்கள்.

கண்டுபிடித்த வெறி, வெறுப்புகளைப் பற்றிய விழிப்புணர்வே, உங்களைப் பற்றிய ஒரு தெளிவான வர்ணனையைத் தரும்.

உங்களைப் புரிந்துகொள்ளவும், உங்களைச் செதுக்கவும் துன்பங்களைத் தாண்டவும் இந்தக் கணக்கெடுப்புகள் உளிகள் போலச் செயல்படும்.

உங்களின் இன்றைய இந்தக் கணக்கெடுப்புகள் ஆனந்த வாழ்வின் அஸ்திவாரமாக மாறும்!