KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/அவமானம்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

அவமானம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

* அவமானம் என்பது நம் அந்தஸ்து, வயது, குலம், கோத்திரம் பொறுத்து நம் மனதால் கண்டுபிடிக்கப்படும் ஒரு புதிய கண்டுபிடிப்பு.

* பொதுவாக அந்தஸ்து, வயது, பதவியில் நம்மைவிட அதிகமாக இருப்பவர்கள் சற்று மரியாதைக் குறைவாகப் பேசினாலோ, நடந்து கொண்டாலோ அதற்கு நாம் கொடுக்கும் பெயர் - உரிமை (ஆஹா. எவ்வளவு உரிமை எடுத்துக்கிறாங்க! எல்லாம் பாசம்!)

* மாறாக, அந்தஸ்து, வயது, பதவியில் நம்மைவிடக் குறைவாக இருப்பவர்கள் சற்றே மரியாதை குறைவாகப் பேசினாலோ, நடந்து கொண்டாலோ அதற்கு நாம் கொடுக்கும் பெயர் - அவமானம் (கொஞ்சம் இடம் கொடுத்தா என்மேல எவ்வளவு உரிமை எடுத்துக்கறாங்க பார்! எல்லாம் ரொம்ப மோசம்!)

* அவமானம் - மனதின் ஒரு மாயத்தோற்றம்தான்.

பல நேரங்களில் நாம் வருத்தமடைவதற்குக் காரணம், நமக்கு ஏற்படும் அவமானங்கள்தான்!

"பார்க்கப் படிச்சவங்க மாதிரி இருக்கீங்க! பேங்க் லோன் அப்ளிகேஷன் எழுதத் தெரியாதா?"

"கல்யாணமாகி ஆறு வருஷமாச்சு... இன்னும் குழந்தை இல்லையா?"

"உன் அனுபவத்தைத் தூக்கிக் குப்பையில் போடு. அந்த சூப்பர்வைஸர் சொல்றதைக் கேளு."

இது போன்று ஒரு நாளைக்குப் பத்துப் பதினைந்து முறையாவது நம்மில் பலர் அவமானப்படுத்தப்படுகிறோம். நம்மை அவமானப்படுத்தி நமக்குத் தலைக்குனிவு ஏற்படுத்திவிட வேண்டும் என்கிற நோக்கத்தோடு நம்மைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

Nithyananda smiling

அவமானம் நிஜமா,
கற்பனையா?
பதில் -
உங்களின்
மனநிலையைப்
பொறுத்தது.

இந்தக் கொடியவர்களின்
மத்தியில்தான் நாமும் வாழ வேண்டி
இருக்கிறது. வேண்டுமென்றே நம்மை
அவமானப்படுத்த நினைப்பவர்களின்
முயற்சிகளை நாம் சீரியஸாக
எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இது
மாதிரியான ஆட்களிடம் நாம் எவ்வளவு
அசிரத்தையாக இருக்க முடியுமோ,
அவ்வளவுக்கு அசிரத்தையாக இருப்பது
நல்லது.

அசிரத்தையாக இருப்பது என்றால்
என்ன? அந்த மனநிலையை உங்களுக்கு
எடுத்துச் சொல்வதற்காக, கலீல் கிப்ரானின்
கதையொன்றைச் சொல்கிறேன்.

முதன்முதலாக ஊர் சுற்றிப் பார்க்கப்
புறப்பட்ட ஒருவர், லெபனான் நாட்டுக்குள்
திடீரெனப் புகுந்தார். அவருக்கு
லெபனானைப் பற்றி எதுவுமே தெரியாது.

அரண்மனை மாதிரி ஒரு ஓட்டல். அதற்குள் ஆட்கள் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருப்பதைக் கண்டார். "ஆஹா ! நான் வருவது தெரிந்தவுடன் என்னை வரவேற்க எவ்வளவு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்!" என்று பூரித்துப் போனார்.

ஓட்டல் உள்ளே நுழைந்தார். நான்கு பெண்கள் அவரை வரவேற்றார்கள். நாகரிகமாக அழைத்துச் சென்று பஞ்சு மெத்தையில் அமர வைத்தார்கள். அறுசுவை உணவுகளும் அவருக்குப் பரிமாறப்பட்டன.

மேலும் பூரித்துப் போனார் அந்தப் பயணி. “என் அருமை இவர்களுக்கு மட்டும்தான் தெரிகிறது!”

சாப்பிட்டு முடித்தவுடன் பில்லைக் கொடுத்தார்கள் ஓட்டல்காரர்கள், “ஆஹா ! இவ்வளவு மரியாதை கொடுத்தது போதாதென்று, அதை எழுத்து வடிவத்தில் எழுதி வேறு கொடுக்கிறார்களே!” என்று சந்தோஷப்பட்டு, அந்த பில்லை வாங்கிப் பையில் வைத்துக்கொண்டார்.

ஓட்டல்காரர்களுக்கோ அதிர்ச்சி. “பில்லைக் கொடுத்தால் பணத்தைக் கொடுக்காமல், பையில் வைத்துக்கொள்கிறாறே ! ஒன்று இவர் முட்டாளாக இருக்க வேண்டும், அல்லது நம்மை ஏமாற்றுவதற்கு இப்படி நடிக்க வேண்டும். இவரை நாம் கண்டிப்பதைவிட, நீதிமன்றம் முன் நிறுத்துவோம். நீதிபதி தண்டனை கொடுக்கட்டும்” என்று நினைத்து, காவல்துறையிடம் அவரை அழைத்துச் சென்றனர். இதைப் புரிந்துகொள்ளாத அந்தப் பயணி, “ஓ! அடுத்து நம்மை ராஜாவின் வீட்டுக்குத்தான் அழைத்துப் போகிறார்கள் போல!” என்று சந்தோஷமாகக் கிளம்பினார்.

நீதிமன்றத்தில் இவர் சொன்னதும் யாருக்கும் புரியவில்லை. நீதிபதி சொன்னதும் இவருக்குப் புரியவில்லை. ‘இவர் ஏமாற்றுக்காரரா, முட்டாளா?’ என்பது நீதிபதிக்கும் விளங்கவில்லை. முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மீது உட்கார வைத்து அவமானப்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டார்.

ஆனால், அந்தப் பயணியோ அந்த அவமானத்தை அவமானமாகவே நினைக்கவில்லை. லெபனானில் அரசு மரியாதையோடு, இப்படித்தான் சுற்றிக் காட்டுவார்கள் என்று நினைத்துச் சந்தோஷமாகி விட்டார்.

எப்படியெல்லாமோ அவமானப்படுத்தியும் அதைக் கொஞ்சம்கூடச் சட்டை செய்யவில்லை அவர். வேறு வழி இல்லாமல் குண்டுக்கட்டாகத் தூக்கி அவர்

அஅவமானம் என்பது நம் அந்தஸ்து,
ந்வயது, குலம், கோத்திரம் பொறுத்து
தநம் மனதால் கண்டுபிடிக்கப்படும்
ஸ்ஒரு புதிய கண்டுபிடிப்பு!
து

சொந்த நாட்டுக்கே கொண்டுபோய்ப் போட்ட பிறகுதான் தீர்ந்தது பிரச்சனை.

பொதுவாக அவமானத்தை மனிதர்கள் மூன்று விதமாக அணுகுவார்கள்.

முதல் வகை : இந்தப் பயணி போல மனிதர்களால், உறவுகளால் எவ்வளவுதான் அவமதிக்கப்பட்டாலும் திரும்பத் திரும்ப அதே மனிதர்களிடம் சென்று மூக்கு உடைபடுவார்கள். அதிலிருந்து வெளியே வருவதைப் பற்றி யோசிக்கக்கூட மாட்டார்கள். மந்த மனம் படைத்தவர்கள்.

இரண்டாவது வகை : தொட்டதற்கெல்லாம் கோபித்துக்கொள்வார்கள். புதிது புதிதாகக் கண்டுபிடித்து, "நீ என்னை இங்கே, இப்படி அவமானப்படுத்தினாய், என் மதிப்பென்ன..." என்று சதா மதிப்பு தேடி அலைபவர்கள், அவமானம் பற்றிய அதீதக் கற்பனையில் வாழ்பவர்கள்.

மூன்றாவது வகை : அற்புதப் பிறவிகள், பண்பட்டவர்கள். அவமானம் என்ற ஒன்றே இல்லை என்பதை உணர்ந்தவர்கள். நம் Ego விற்கு விழும் அடியைத்தான் நாம் அவமானம் என்று கருதிக்கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து தாண்டியவர்கள். Egoவைத் தொலைத்தவர்கள். அப்படியே மனிதர்கள் அவமதித்தாலும் அது இவர்களைப் பாதிக்காது.

தான் வேறு, தன் உடல் வேறு என்ற அனுபூதி பெற்றவரை யாராலும் அவமதிக்க முடியாது. அப்படியே அவமதித்தாலும் அது அவர்கள் உடல் மாத்திரமே சம்பந்தப்பட்டது. எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் உணர்வுப் பக்குவத்தைப் பெற்ற இவர்களுக்கு அவமானம் என்ற ஒன்று ஏற்படாது.

மூன்றாவது வகைக்கு ஒரு சிறந்த உதாரணம் ராம் தீர்த்.

ராம் தீர்த் என்றொரு பெரிய ஞானி அமெரிக்காவில் இருந்தார். இந்த ஞானி தம்மைப் பற்றி குறிப்பிடும் போதெல்லாம், 'நான்' என்கிற வார்த்தையைப் பயன்படுத்தவே மாட்டார். 'ராம்' என்றுதான் தம்மைக் குறிப்பிட்டுக்கொள்வார்.

ஒருமுறை ராம் தீர்த்துக்கு மிகப் பெரிய அவமானம் நேர்ந்தது. ராம் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

அ'தான் வேறு. தன் உடல் வேறு' என்ற அனுபூதி பெற்றவரை
வயாராலும் அவமதிக்க முடியாது. அப்படியே அவமதித்தாலும் அது
மாஅவர்கள் உடல் மாத்திரமே சம்பந்தப்பட்டது. எதனாலும்
னபாதிக்கப்படாமல் இருக்கும் உணர்வுப் பக்குவத்தைப் பெற்ற
ம்இவர்களுக்கு அவமானம் என்ற ஒன்று ஏற்படாது.

"இவ்வளவு பெரிய அவமானம் நடந்திருக்கிறதே! உங்களால் எப்படி நிம்மதியாக இருக்க முடிகிறது" என்று ஒருவர் கேட்டார்.

ராம் சிரித்துக்கொண்டே, "அவமானம் என்று நீங்கள் கூறும் நிகழ்ச்சி நடந்தது ராமுவுக்குதான்" என்று கூறினார்.

இது பெரியநிலை, உடல் தாண்டிய உணர்வுநிலை, அவமானம் என்பது Ego இருந்தால் மாத்திரமே சாத்தியம் என்ற உண்மையை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள் இவர்கள். இது நிம்மதிப் பெருநிலை.

இந்த நிம்மதிப் பெருநிலையை
அடைவதுதான் நம் ஒவ்வொருவரின்
இலக்கு. இந்நிலையை அடைய மூன்று
விதமாக முயற்சி செய்யலாம்.

1. அவமானத்தை அலட்சியப்படுத்துவது.

2. அவமானத்தை எதிர்கொள்வது.

3. அவமானம் என்னும் மாயையைத் தாண்டிச்செல்வது.

மூன்றில் எதைச் செய்தாலும் நீங்கள்
புத்திசாலிதான். தொடர்ந்து வாழ்க்கையில்
முன்னேறிக்கொண்டே இருங்கள்.

அவமானத்தால் பாதிக்கப்படுபவர்கள்
அதை அலட்சியப்படுத்தக் கற்றுக்
கொள்ளுங்கள்!

அவமானத்தை அலட்சியப்படுத்துபவர்கள், அதைக் தாங்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

அவமானத்தைத் தாங்கத்
தெரிந்தவர்கள், அதைத் தாண்டக் கற்றுக்
கொள்ளுங்கள்!

Nithyananda

இந்நிலையை அடைய மூன்று
விதமாக முயற்சி செய்யலாம்.
1. அவமானத்தை
அலட்சியப்படுத்துவது.
2. அவமானத்தை
எதிர்கொள்வது.
3. அவமானம் என்னும்
மாயையைத்
தாண்டிச்செல்வது.