KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/யாரையும் யாருடனும்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

யாரையும் யாருடனும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒப்பிடாதீர்கள்!

★ வெறுமனே ஒப்பிடுவது வாழ்க்கைக்கு உப்பிடாது.

★ மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டு நொந்து போவது - தாழ்வு மனப்பான்மை.

ஒப்பிட்டுக் கர்வப்படுவது - உயர்வு மனப்பான்மை.

★ மற்றவர்களோடு தினம் தினம் தன்னை ஒப்பிட்டு ஒப்பிட்டு மனத்தைச் சிறுமையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றால், அது பொறாமையாகவும் வெறுமையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றால், அது ஆதிக்கக் குணமாகவும் மாறும்.

நம்மில் பலர் ஒட்டகச்சிவிங்கியை நேரில் பார்த்திருக்கமாட்டோம். மிகச் சில பேர் மிருகக்காட்சிசாலையில் பார்த்திருப்பார்கள். ஆனால், டிஸ்கவரி னலில் பலரும் ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்திருப்பார்கள். இந்த ஒட்டகச்சிவிங்கி ஒரு நாள், "நான் ஏன் இவ்வளவு உயரமாக இருக்கிறேன். குள்ளமாக இருந்திருந்தால் முயலைப் போலத் துள்ளி ஓடலாமே" என்று நினைத்து வருந்தியது.

அப்போது நரி ஒன்று குறுக்கிட்டது. அது ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்து, "நீ ஏன் உயரமாக இருக்கிறாய்?" என்று கேட்டது, "எனது கவலையும் அதுதான்" என்றது ஒட்டகச்சிவிங்கி. அப்போது நரி கவிழ்க்கப்பட்ட ஒரு கூடையின் மேலே ஏறிக் கொண்டு பேசத் தொடங்கியது.

"மனிதன் மாட்டுக்கு வைக்கோல் வைக்கிறான். ஏன்? அது பாலைக் கறக்கும் என்பதால்தான். குதிரை, வண்டியை இழுப்பதால்தான் கொள்ளு வைக்கிறான். நாய் வீட்டைக் காக்கிறது. எனவே சோறு வைக்கிறான். தனக்குப் பயன்படாத எந்தப் பொருளையும் உயிரையும் மனிதன் போற்றுவது இல்லை. ஒட்டகச்சிவிங்கியே, நீ பாலும் கொடுக்கமாட்டாய். வண்டியும் இழுக்கமாட்டாய். வீட்டைக் காக்கவும் மாட்டாய்.

ஆகவே பூமியில் கோடை காலத்தில் புல், பூண்டு வற்றிப்போனாலும், நீ உயரமாக இருந்தால்தான் இலை, தழைகளைப் பறித்துச் சாப்பிட முடியும். எனவேதான் இறைவன் உன்னை உயரமாகப் படைத்திருக்கிறான்" என்று சொன்னது நரி. பிறகுதான், ஒட்டகச்சிவிங்கிக்கு இறைவன் தன்னை உயரமாகப் படைத்ததிலும் ஓர் அர்த்தம் இருக்கிறது என்பது தெரியவந்தது.

இன்று போட்டி, பொறாமையில் பெரியவர்களாக வளர்ந்துவிட்ட ஒவ்வொரு சிறுவர்களுக்கான, வாழ்க்கையின் அர்த்தம் பொதிந்த அருமையான கதை இது.

உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் நோக்கம் உண்டு. பயன்பாடு உண்டு. நோக்கத்தையும் பயன்பாட்டையும் புரிந்துகொண்டவர்கள் ஆனந்தமாக இருக்கிறார்கள். புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்லல்படுகிறார்கள்.

நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் 'தவிப்பு'தான் ஒப்பிடுதல், பொறாமை போன்ற எதிர்மறை உணர்வுகளை உருவாக்குகிறது.

அழகான ரோஜா. அதன் கீழே முட்கள். ஏன் இப்படிப் படைத்தான் ஆண்டவன்? அழகான ரோஜாவை ஆடு, மாடுகளிடமிருந்து காப்பாற்றத்தான். முட்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால், ரோஜாவுக்கு மரியாதையே இல்லாமல் போயிருக்கும். எனவே, இரண்டையும் வேறுபடுத்திப் பேசுவதில் அர்த்தம் இல்லை.

மூங்கில்களில் சில பாடை கட்டப் பயன்படுகின்றன. இன்னும் சில மேடை கட்டப் பயன்படுகின்றன. மிகச் சில மூங்கில்களே புல்லாங்குழலாக மாறுகின்றன. எனவே புல்லாங்குழல் செய்கிற மூங்கில்கள்தான் உயர்ந்தது. மற்றவையெல்லாம் தாழ்ந்தவை என்று சொன்னால், நம் சிந்தனை இன்னும் செம்மைப்படவில்லை என்று அர்த்தம்.

நாம் எப்படியிருந்தாலும் சரி, நாம் நாமாயிருத்தல் வேண்டும். வேறு ஒருவரைப் போலத் தோற்றம் கொள்ளக்கூடாது. புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பது பழமொழி. எப்படிப் புழக்கத்தில் இருக்கிறது?

காரணம், பூனை புலி மாதிரி இருக்கிறது.
எலிகள்தான் பூனைக்கு எதிரிகள்.
அவற்றைக் கூட பூனை எதிர் நின்று
போரிட்டு வீழ்த்தாது. எலியை ஓடவிட்டு,
ஓடவிட்டு அதன் மனவலிமையைக் குன்ற
வைத்து இறுதியாகத்தான் எலியைக்
கொல்லும். புலி அப்படியல்ல. ஆக இங்கே
புலியோடு தன்னை ஒப்பிட்டுக் கொள்கிற
பூனை அவமானச் சின்னமாகிறது.

portrait

நாம் எப்படியிருந்தாலும்
சரி, நாம் நாமாயிருத்தல்
வேண்டும். வேறு
ஒருவரைப் போலத்
தோற்றம் கொள்ளக்
கூடாது.

ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டுப்
பார்க்கிற குணம் தாழ்வுமனப்பான்மையால்
வருகிறது. படைப்பில் நாம்
குறைந்தவர்கள் என்கிற எண்ணமே
நமக்கு நிறைவாகத் தோன்றுகிற
மற்றவர்களோடு நம்மை ஒப்பிட
வைக்கிறது.

‘அவனைப் போல நான் இல்லை. என்னைப் போல அவன் இல்லை’ என்று ஒப்பிடுவதனால் சிக்கல்கள்தான் தோன்றும். சுவாதித் திருநாள் திருவிதாங்கூர் அரசராக இருந்த போது ஒரு நாடகம் நடைபெற்றது. அதில் ஸ்ரீராமர் வேடம் தாங்கி ஒருவர் நடித்துக் கொண்டிருந்தார்.

அரசர் அன்றைக்கு நாடகத்தின் இடையில் வர நேர்ந்தது. இராமர் வேடத்தில்

நடித்துக் கொண்டிருந்த அந்த நடிகர், அரசர் வந்ததும் அவரைப் பார்த்துக் கும்பிட்டார். அரசர் உடனே நாடக அரங்கினை விட்டு வெளியேறினார். அரசரின் கோபத்துக்கு என்ன காரணம்?

"இராமராகவே மாறியிருக்க வேண்டிய அந்த நடிகர், தான் ஒரு நடிகர் மாத்திரமே என்று நினைத்து என்னைக் கும்பிட்டுவிட்டார். இதன் மூலம் இராமரையே அவமதித்து விட்டார்" என்று சொன்னார் அரசர். சுவாதித் திருநாளின் இராமபக்தி, நடிகரை நடிகராகப் பார்க்க விடவில்லை.

மகான்களின் குணங்களை சராசரி மனிதர்களிடம் எதிர்பார்க்கும்போது இதுபோன்ற சிக்கல்கள் உருவாகின்றன. அரசன் மீது நடிகருக்கிருந்த உண்மையான மரியாதை அரசன் கண்ணுக்குத் தெரியவில்லை. காரணம் - ஒப்பிடும் குணம்தான். மகானை மனிதனோடு ஒப்பிட்டால் சிக்கல்தான். மனிதனை அவனுடைய முழு குறை, நிறைகளோடு ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். யாரையும் யாரோடும் ஒப்பிட்டுத் தாழ்த்திப் பார்ப்பது தவறு.

ஒப்பிடுவதால் இன்னொரு சிக்கலும் ஏற்படுவதுண்டு. பாலைவனமான ஓர் இடத்தில், ஓர் இரவு, வழிப்போக்கர் ஒருவர் வந்து ஒரு கூடாரத்தின் கதவைத் தட்டினார். வந்த அதிதிக்கு அந்தக் கூடாரத்தின் உரிமையாளர் இரவிலே உணவு சமைத்துப் போட்டார்.

சாப்பிடத் தொடங்குகிற போது கூடாரத்துக்காரர் "விருந்தாளியே, 'இறைவனுக்கு நன்றி' என்று சொல்லிவிட்டுச் சாப்பிடத் தொடங்கு" என்றார். விருந்தாளியோ, "நான் இதுவரை இறைவனின் நாமத்தைச் சொன்னதில்லை. உமக்கு நன்றி என்று வேண்டுமென்றால் சொல்கிறேன்" என்றார்.

கூடாரத்துக்காரரோ "இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டுதான் சாப்பிட வேண்டும்" என்று வற்புறுத்தினார். விருந்தாளி, "சாப்பாடே வேண்டாம்" என்று கிளம்பி விட்டார்.

ஊஒப்பிட்டு ஒப்பிட்டு நொந்துபோவதும்
க்ஒப்பிட்டு ஒப்பிட்டு ஊக்கப்படுவதும்
கஉங்கள் கையில்!
ம்

அன்று இரவில் இறைவன் கூடாரத்துக்காரரின் கனவில் வந்தார். "இத்தனை நாட்களாக என் நாமத்தை ஒருபோதும் சொல்லவில்லை என்றாலும் குழந்தையாகிய அவனுக்கு நான் சோறு போட்டிருக்கிறேன். ஒரே ஒரு நாள் உனக்கு முன்பாகச் சொல்லவில்லை என்பதற்காகப் பசியோடு அனுப்பிவிட்டாயே" என்று கூற, கூடாரத்துக்காரர் வருந்தினார்.

கூடாரத்துக்காரர் தன்னை பரிசுத்தவான்களோடு ஒப்பிட்டுத் தன்னைப் பற்றி ஒரு தவறான இமேஜ் வைத்திருந்ததால் இந்தச் சிக்கல் ஏற்பட்டது. நாம் ஒருவரிடம் குறை கண்டுபிடிப்பதே எது குறை, எது நிறை? என்று நாம் நம் மனதில் கொண்டிருக்கும் ஒப்பீட்டுக் கருத்துக்களைப் பொறுத்தது.

'எது குறை? எது நிறை?' என்பது உங்களுக்கு மாத்திரமே பொருந்தும். உங்களுக்கு மாத்திரமே பொருந்தும் கருத்துக்களைக் கொண்டு மற்றவர்களின் குறை, நிறைகளை அளக்க ஆரம்பிக்கும் போதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

இந்த ஒப்பீடுகளால் நாமும் நொந்துபோகிறோம். மற்றவர்களையும் நோகடிக்கிறோம்.

மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு நொந்துபோவதற்கு, இன்றிலிருந்து ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். மற்றவர்களின் நிறைகளையும் சாதனைகளையும் உற்சாகப்படுத்தும் காரணிகளாக, ஊக்கப்படுத்தும் விஷயங்களாகப் பார்க்க ஆரம்பியுங்கள்!

தாழ்த்திக் கொள்ளாதீர்கள்

மெரீனா கடற்கரையில் விளையாடிவிட்டு வந்த குழந்தைப் பருவ நிட்டியிடம், அவன் அம்மா கேட்டார்: "எத்தனை பெண் குழந்தைகள் உன்னோடு இன்று இருந்தார்கள்?"

"ஏன் கேட்கிறீர்கள்?" எனக் கேட்ட நிட்டியிடம், அம்மா சொன்னார்: "நேற்று மட்டும் நீ மூன்று பெண் குழந்தைகளோடு சண்டையிட்டதாக பக்கத்து வீட்டு ஆன்ட்டி சொன்னார்... அதனால்தான்! "

"என்னால் இன்று எத்தனை பெண்கள் வந்தார்கள் என்று சொல்ல முடியாது" என்றான் நிட்டி.

"ஏன்?"

"இன்று யாருமே கவுன் போட்டுக்கொண்டு வரவில்லை. எல்லோரும் ஒரே மாதிரி சுவிம்மிங் டிரஸ்தானே போட்டிருந்தோம்.

எல்லோரும் ஒரே டிரஸில் இருந்ததால், என்னைப் பொறுத்தளவிற்கு இன்று எங்களோடு ஆண்களோ, பெண்களோ விளையாட வரவில்லை. சரிதானே?" என்றான் குழந்தை நிட்டி.

* குழந்தையைப் பொறுத்தளவிற்கு ஆண், பெண் வேறுபாடு என்பது உடையளவிலானது. வளர வளர வேறுபாடுகளும் வரையறைகளும் மனதில் வளரும்.

மனிதருக்குத் தான் பார்க்கும் ஒவ்வொன்றையும் பகுத்து, பிரித்து வேவுபார்க்கும் அளவுக்கு மனம் வளர்ந்து விடுகிறது

விளைவு - ஒருவருக்குள்ளேயே பலவிதமான மனப்பான்மைகள் குடிகொள்ள ஆரம்பித்துவிடுகிறது!

portrait

நேராக உட்கார். தியானம் நிகழும் -பதஞ்சலி. • யோகப் பிதா பதஞ்சலி சொன்னது உண்மை... அந்தக் கால மனிதனுக்கு! இந்தக் கால மனித மனம் அந்தக் கால மனித மனம் போல் 'எளிமையாய்' இல்லை. நேராக உட்கார்வதே பலருக்குக் கடினம் - இதில் தியானம் நிகழ்வது...??? சிக்கி மக்கிப் போன மனம் சிக்கு அவிழ்க்கப்பட ரஸவாதம் சீக்கிரம் நிகழ வேண்டும்.

  • ★ நான் அழகு நான் அசிங்கம் நான் உயர்ந்தவன் நான் தாழ்ந்தவள் நான் அதிர்ஷ்டக்காரி நான் துரதிர்ஷ்டக்காரன்

ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்வது அல்லது தன்னைத் தாழ்த்திக் கொள்வது இரண்டுமே அகங்காரத்தின் வெளிப்பாடுகள்.

என்ன! அதிர்ச்சியாக இருக்கிறதா?

உயர்வுமனப்பான்மையை (கர்வம்) அகங்காரம் எனச் சொன்னால் எல்லோரும் எளிதாக ஏற்றுக்கொள்வோம். தாழ்த்திக் கொள்வது (தாழ்வு மனப்பான்மை ) அகங்காரம் எனச் சொன்னால் ஏற்றுக்கொள்வது கடினம்.

  • ★ கர்வம், தாழ்வுமனப்பான்மையை விடபல மடங்கு மேல். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா... கர்வத்தால் பேசிய வார்த்தைகளுக்கு இன்றோ நாளையோ சமுதாயத்திடம் கொட்டு வாங்கியே தீர வேண்டும். சமுதாயம் அடக்கிவிடும்.

* தாழ்வுமனப்பான்மையால் ஒருவர் தன்னைத் தாழ்த்திக்கொண்டால் சமுதாயம் கொட்டாது. மாறாக சமுதாயம் மதிக்க ஆரம்பித்துவிடும்.

இவற்றால் அகங்காரம் மிக மிக ஆழமாக வளர ஆரம்பித்துவிடும். அகங்காரத்தின் பாதிப்பு வெளியில் தெரியாது. ஆனால், சம்பந்தப்பட்டவரை மட்டும் பாதிக்கும். நிம்மதியைக் குலைத்துவிடும்.

* நீங்கள் யோசித்தபடி அடக்கமாக, ஒடுக்கமாக இருந்தால் நிச்சயம் தவறில்லை. ஆனால்

அடக்கிக்கொண்டும்
ஒடுக்கிக்கொண்டும்
இருந்தால் அது நிச்சயம் தவறு.
நீர் தேங்கினால் விஷமாகும்.
சக்தி தேங்கினால் துர்சக்தியாகும்.

இது பெரும் பாதகத்தையே விளைவிக்கும். அகங்காரம் என்னும் புண், புரையோட ஆரம்பித்துவிடும். மனம் கெட்டு, உள்உலக வாழ்க்கையில், தனிப்பட்ட உணர்வு சம்பந்தப்பட்ட வாழக்கையில் துர்மணம் வீச ஆரம்பிக்கும்.

* தாழ்த்திக்கொள்கிறேன், பவ்யமாக நடந்து கொள்கிறேன் என்ற பெயரில் தம்மையும் அறியாமல் உணர்வுகளை தேவைக்கு மீறி கட்டுப்படுத்தும் போதுதான் சிக்கலாகிவிடுகிறது.

| உ ண் மை | "நீங்கள் எப்படிப்பட்டவர் என நினைக்கிறபடி நீங்கள் இல்லை" எனும் உண்மை உங்களுக்குத் தெரியுமா? |

ஒரு அருமையான சம்பவம்...

தாழ்மையாக நடந்துகொண்டால் தன்னை மற்றவர்கள் நல்ல ஆன்மீகவாதி என்று ஏற்றுக்கொள்வார்கள் என்ற யோசனையில் சிக்கிக்கொண்டவர் கிலௌட்.

"நமக்கென்னங்க தெரியும்..."
"பெரியவங்களெல்லாம் இருக்கறப்போ..."
"நான் ரொம்ப சாதாரண ஆளுங்க..."
"எல்லாம் உங்கள் ஆசீர்வாதத்தோடு..."

இது போன்ற சில வரிகளை 'உண்மையாகவே எளிமையாய் இருப்பவர்களிடமிருந்து' காப்பி அடித்துச் செயல்பட ஆரம்பித்தார். சமுதாயத்தில் மதிப்பும் கிடைத்தது.

| Simplicity is the Ultimate | கிலௌட் தன்னைத் தாழ்த்திப் பேசப் பேச...

| sophistication |

| | மற்றவர்கள், "சேச்சே... அப்படியெல்லாம் | - Leonardo da Vinci. | இல்லீங்க... நீங்க எவ்வளவு பெரிய..." | | என்று அவரை உயர்த்திப் பேச | * எளிமையை எட்டிப்பிடி. | ஆரம்பித்தார்கள்.

| வரம்பில்லா சுகத்தை |

| இகத்திலேயே பெறுவாய்! | மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்று | | தங்களைத் தாங்களே உயர்த்திப் பேசியவர்கள், | | மற்றவரிடம் கொட்டு வாங்கி அடங்குவதையும் | | தான் மற்றவர்களால் மதிக்கப்பட்டு உயர்த்தப்படுவதையும் கிலௌட் ஒன்றுபடுத்தி ஆராய்ந்தார்.

வாழ்க்கைப்போக்கில் ஒரு நாள்... கிலௌட்டுக்குப் பளிச்சென்று ஒரு உண்மை புரிந்தது. மற்றவர்கள் என்னை உயர்த்திப் பேசுவதால் அடையும் கணநேர சந்தோஷத்திற்காகத்தான் நான் என்னைத் தாழ்த்திக் கொள்கிறேனோ!

என் மனதின் நோக்கம் புரிந்தால், தெரிந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்?" என்று கிலௌட் யோசித்ததும் கொஞ்சம் நடுக்கம் பிறந்தது.

| அ | சப்தமின்மை
| மை | அமைதியாகாது.
| தி | வெறும் சப்தமின்மை
| | மயான அமைதி!

“என்னை மற்றவர்கள் புகழ வேண்டும். மதிக்க வேண்டும் என நான் விரும்புவது ஏன்?” என்ற கேள்வியால் வாட்டப்பட்ட கிலௌட்க்கு, ஜருதிஸ்ட்ராவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஜருதிஸ்ட்ராவைச் சுற்றி மக்கள் கூட்டம் மிகுந்திருந்தது. கிலௌட் மெல்ல கூட்டத்தினுள் நுழைந்து ஜருதிஸ்ட்ரா பக்கத்தில் வந்து பவ்யமாக நின்று கொண்டார்.

கிலௌட் முறை வந்ததும் வெகு பவ்யத்தை வரவழைத்து, தாழ்ந்த குரலில் ஜருதிஸ்ட்ராவிடம், “என் பிரச்சனை...” எனப் பேச ஆரம்பித்தார்.

ஜருதிஸ்ட்ரா, “தொண்டையில் ஏதும் பிரச்சனையா?” என்றார்.

“இல்லை சாமி. தொண்டை நல்லாதான் இருக்கு!”

“அப்புறம் எதற்காக இவ்வளவு தாழ்ந்த குரலில் பேசுகிறீர்கள். நன்றாகப் பேச வேண்டியதுதானே?” எனச் சொன்னதும் கிலௌட்டின் பேச்சு தொனியே மாறிப்போனது. ஆனால், இன்னும் கைகட்டி குனிந்தபடியேதான் கிலௌட் நின்றிருந்தார். “என்ன, உங்களுக்குக் குளிர்கிறதா?”

“இல்லை சாமி.”

ஜருதிஸ்ட்ரா, “அப்புறம் ஏன் இவ்வளவு இறுக்கமாக கைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?” எனக் கேட்டதும் கிலௌட்டின் கைகள் விழுந்தது.

மேலும் கேட்டார் ஜருதிஸ்ட்ரா, “ஏங்க இடுப்பில் ஏதும் நோவா?”

portrait

அமைதி என்பது
மனிதன்
அனுபவிக்காதது.

அது
உயிரோட்டமுள்ள
உணர்வு மிகுந்த
ஆனந்த சக்தி நிலை.
அது கடவுள் நிலை.

"இல்லை சாமி."

ஜருதிஸ்ட்ரா, "இடுப்புதான் நல்லா இருக்கிறதே. அப்புறம் எதற்காக இடுப்பு வலிக்க குனிந்தே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?" எனக் கேட்டதும் நிமிர்ந்து கொண்டார் கிலௌட்.

portrait of a smiling man with a turban

எளிமை ஒரு கலை.
எளிமை அது இனிமை,
மனித வாழ்வின் புதுமை!
எளிமையானவர்களே வாழத்
தெரிந்தவர்கள்.
புயற்காற்றில் நிமிர்ந்து நிற்கும்
திடமான மரங்களே வேரோடு
பிடுங்கி எறியப்படுகின்றன.
எளிமையான புல்
வெறுமனே வளைகிறது.
தப்பித்துக்கொள்கிறது.
- LAO TZU

முகத்திலும் உடல்மொழியிலும்
மட்டும்தான் மிகவும் எளிமையானவன்
என்பதை மற்றவருக்குச் சொல்லும்
பவ்யத்தோடு நின்று கொண்டிருந்தார்
கிலௌட்.

ஜருதிஸ்ட்ரா, "ஏன் இந்த வேஷம்?" என்றார்.

கிலௌட், "எது சாமி?" என்றார்.

ஜருதிஸ்ட்ரா, "இந்த பவ்யம்...!

ஒரு உண்மையைத்
தெரிந்துகொள்ளுங்கள். பவ்யமாக
இருக்கும் அளவுக்கும் தாழ்மையோடு
எளிமையாக இருக்கும் அளவுக்கும் -
நீங்கள் உயர்ந்தவர் அல்ல.

உணர்வு தெளிவு பெற்றவர் அல்ல" என்றார்.

கிலௌட்டின் மூளைக்குள் ஒரு இடி இடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது

  • ஜருதிஸ்ட்ராவின் வார்த்தைகள்!

தொனி மாறி, நெஞ்சை நிமிர்த்தி,
பவ்யமற்ற பாவனையோடு கிலௌட் பேச
முயன்றார்... அது மிகவும் வினோதமான
ஒன்றாகக் கிலௌட்டுக்குத் தெரிந்தது.

பல காலமாய் பொது இடங்களில் தன்னை எளிமையானவனாய் காட்டிக் கொண்டிருந்த கிலௌட்டின் வேஷங்களை, சில நிமிடங்களிலேயே உடைத்து தூள் தூளாக்கி விட்டார் ஜருதிஸ்ட்ரா.

வேஷம் கலைந்த கிலௌட் முரட்டுக் குரலில், "என் பிரச்சனை..." எனக் கொப்பளிக்கும் கண்களோடு பேச ஆரம்பிக்க,

ஜருதிஸ்ட்ரா, "உன்னுடைய நடிப்பு கலந்த பாவனைகளும் தேவையே இல்லாமல் தாழ்ந்து பேசும் குரலும்தான் - உங்கள் அகங்காரம் உங்களை வாட்டுவதற்கான அடையாளம்.

உங்கள் பிரச்சினையின் வேர் ஆழமாக இருக்கிறது.

உங்கள் அகங்காரமானது 'புகழ்ச்சி' எனும் தீனி சாப்பிட்டு திருப்தி அடைய, தாழ்வு மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துவிட்டது.

இயல்பு நிலைக்கு முதலில் வாருங்கள், பிரச்சனையில் இருந்து எளிதில் வெளி வந்து விடலாம்..."

தன்னுடைய பல நாள் கேள்விக்கு முழுமையான விடை கிடைத்துவிட்டதாய் கிலௌட்டுக்குத் தோன்றியது.

ஜருதிஸ்ட்ரா, "என் பிரச்சனை... என் பிரச்சனை என்று ஏதோ சொல்ல வந்தீர்களே! என்ன பிரச்சனை?" எனக் கேட்டார்.

கிலௌட், "எதுவும் இல்லை... மிக மிக நன்றி சாமி..." என்று நன்றிப் பெருக்கோடு கண்ணீர் மல்கக் கூறினார்.

அதன்பின் வேஷத்தைக் கலைத்து எளிமையாக வாழ ஆரம்பித்தார். நிம்மதி பிறந்தது.

தன்னை உயர்த்திக்கொள்ளும்போது மனதிற்கு ஒருவகை போலிச் சுகம் கிடைக்கும். சில மனிதர்கள் இந்தப் போலிச் சுகத்திற்காகத்தான் கர்வத்தோடு நடந்து கொள்கிறார்கள்.

மனிதன் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் போது பலரால் உயர்த்தப்படுகிறான்.

கர்வத்தைவிட, தாழ்வுமனப்பாங்கோடு நடிப்பவருக்கு பல மடங்கு போலிச் சுகம் கிடைக்கும். அதன் விளைவுதான் தன்னை மற்றவர்களிடம் தாழ்த்திக் கொள்வது. தன்னைத்தானே தரம் குறைத்து பேசிக்கொள்வது... என்ற எல்லாமே.

| ம | வாய் மூடுவதும் உடல் ஓய்வும் அமைதியல்ல. | | ன | மனம் ஓயும்போதுதான் முதன்முதலாய்... | | ப் | அமைதியைச் சந்திக்கிறார். கடவுளாகிறார்! | | பா | ☞ மனப்பான்மைகளை மீறி மனம் ஓய உழை! | | ன் | | | மை | |

தாழ்த்திக்கொள்வது வேறு. எளிமையாக வாழ்வது வேறு.

இயல்பாக, இயற்கையாக இருப்பவர்கள் தங்களை உயர்த்தியும் சொல்ல மாட்டார்கள். தாழ்த்தியும் சொல்லமாட்டார்கள். இவர்களிடம் எளிமை நிறைந்திருப்பதைப் பார்க்க முடியும். தங்களின் எளிய நிலையை எளிமையாகவே எப்போதும் வெளிப்படுத்துவார்கள்.

எளிமை என்பது ஒருவரிடம் இயல்பாக வெளிப்படுவது.

புகழ்ச்சிக்காக, மதிப்புக்காக தன்னையும் அறியாமல், தன்னைத் தாழ்த்திக் கொண்டால்கூட அது பாதகமே. அது அகங்காரத்தை வளர்க்கும்.

யாருக்காகவும் எதற்காகவும் தாழ்த்திக்கொள்ளாதீர்கள். யாரிடமும், எந்தச் சூழலிலும் உங்களை உயர்த்திக்கொள்ளாதீர்கள்.

நீங்கள் நீங்களாகவே இருங்கள். உள்ளதை உள்ளபடியே பேசுங்கள்.

உங்களையும் அறியாமல் உங்களைக் கவ்விக்கொண்டிருக்கும் ‘தாழ்வு மனப்பான்மையும்’ ‘உயர்வு மனப்பான்மையும்’ கழண்டு விழ ஆரம்பிக்கும்.

எளிமை எளிமையாய் உங்களுக்குள்ளிருந்து வெளிப்பட ஆரம்பிப்பதைக் காண்பீர்கள். சோதனை செய்து பாருங்கள் புரியும்.

அர்த்தமுள்ள சம்பவம்...

பிடதி ஆஸ்ரமத்தில் பிரம்மச்சாரி ஒருவர் கேட்டார்: "சாமி, எளிமையாய் இருப்பது எப்படி? எளிமையாய் சொல்லுங்கள்."

"அது மிக எளிதப்பா... இந்த இரண்டைக் கடைப்பிடித்தால் எளிமையாகிவிடுவாய்.

  1. எதையும் மிகைப்படுத்தாதே!
  1. எதையும் குறைப்படுத்தாதே! நீ கேட்டதை, பார்த்ததை அப்படியே கலப்படம் செய்யாமல் பேசு. பகிர்" என்றேன்.

• சிரத்தையோடு செய்த பிரம்மச்சாரி
எளிமை நிறைந்த அருமையானவராக
சில நாட்களுள்ளேயே மாறிவிட்டார்!

துக்கமாயிருப்பதும் இறுக்கமாயிருப்பதும் மனித இயல்பு அல்ல...

என்றாவது இப்படிச் செய்தி வாசிக்கக் கேட்டிருக்கிறீர்களா? “தலைப்புச் செய்திகள்...

இன்று தமிழ்நாடு ஆனந்தமாக இருந்தது.

பெண்கள் அனைவரும் இன்று சுதந்திரமாக இருந்தனர்.

சென்னையில் தொடர்ந்து முப்பது நிமிடம் தென்றல் காற்று வீசியது!

இன்று எந்தக் குற்றங்களும் நிகழாத நகரங்கள் இவை, இவை எனக் காவல்துறை பெருமையோடு அறிவித்தது!

நல்லவர்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது!'

செய்தி என்றாலே முதலில் உங்களின் மனதில் பரபரப்பு, சண்டை, கொலை, கொள்ளை ஆகியவற்றைத் தாண்டிய எண்ணங்கள் வருவது அரிதாகவே இருக்கிறது.

மனம் விறுவிறுப்பையே தேடுகிறது.

திகிலுக்கும் சோகத்திற்கும் அதிர்ச்சிக்கும்தான் மனம் அதிக முக்கியத்துவம் தருகிறது.

மனிதனின் மனப்பான்மையே எக்குத்தப்பாகியிருக்கிறது.

நீங்கள் துக்கமாகவோ, இறுக்கமாகவோ இருந்தால் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள்.

மிகவும் நெருங்கிய சிலர் மட்டும் ஓரிரு வார்த்தைகள் கேட்கலாம்.

ஆனால், நீங்கள் சிரித்துவிட்டாலோ, அல்லது சிரித்த முகத்தோடு எதையாவது வெகுவாய் ரசித்துக்கொண்டிருந்தாலோ, "என்ன ஆயிற்று .. இவ்வளவு நேரமாக நல்லாத்தானே இருந்தாய்?" என உங்களைத் தாண்டும் மூன்றாம் நபர்கூடக் கேட்கத் தவற மாட்டார்கள்.

சும்மா சிரிப்பவரை "மறை கழண்டவர்" என்று குறிப்பிட, நீங்கள்கூடத் தவறமாட்டீர்கள்தானே.

இவையெல்லாவற்றிக்கும் காரணம், "துக்கத்தோடும் இறுக்கத்தோடும் இருப்பது இயல்பு" என ஏற்றுக்கொள்ளும் எக்குத்தப்பாகிப் போன மனப்பான்மைதான்!

"ஆனந்தமாயிருப்பதுதான் மனித இயல்பு" எனும் இயல்பு எக்குத்தப்பாகி மாறிப்போனதின் விளைவுதான் "மீள முடியா" துன்பத்தில் மனிதன் சிக்கிக் கொண்டிருக்கிறான் எனச் சொல்லப்படக் காரணம்.

உங்களின் மனப்பான்மையைப் படியுங்கள். அதில் எக்குத்தப்பாகியிருக்கும் இடங்களையெல்லாம் குறித்துக்கொள்ளுங்கள்.

எப்போதும், எல்லாச் சூழ்நிலைகளிலும் அமைதியாயிருக்கவும் ஆனந்தமாயிருக்கவும் செயல்படுங்கள். அப்படி உங்களை இருக்கவிடாமல் தடுக்கும் மனப்பான்மையைத் தடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள். லேசாவீர்கள்.

உங்களுடைய இயல்பைத் தடுமாறச் செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து உங்களைச் சுற்றி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அது இயல்பற்ற துக்கத்தையும், இறுக்கத்தையும் தொடர்ந்து உங்களுக்குள் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.

இறுக்கம் உற்பத்தியாவதை, தடை செய்ய... இயல்பாகுங்கள். லேசாகுங்கள். நீங்கள் ஆனந்தமாவீர்கள்!