பெருமை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
* பெருமை நல்லது - அது ஒருவரைச் சிறுமையில் சிக்கவிடாமல் காக்கும். அது தற்பெருமையாகவோ, வெட்டிப் பந்தாவாகவோ, அகந்தையாகவோ மாறும்போது, அதுவே அவரை அழித்துவிடும்.
* பெருமை தரும் உற்சாகம் போதைமருந்து தரும் உற்சாகத்திற்குச் சமம்.
* போதைமருந்து உடலை அடிமைப்படுத்தும். பெருமையுணர்வு மனதை அடிமைப்படுத்தும்.
* போதைமருந்தால் உடல் மட்டும் வீணாகும். பெருமை என்ற மாய உணர்வு, மனதை வீணாக்குவதின் மூலமாக உடலையும் சேர்த்து வீணாக்கும்.
நோயாளிக்கு உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. நோயாளியிடம் மருத்துவர்:
"துக்கப்படாதீர்கள். உங்கள் நிலை கவலைக்கிடமாகி இருக்கிறது. அதிகபட்சம் இன்னும் இரண்டு நாள் இந்த உடல் உங்களுக்குச் சொந்தமாயிருக்கலாம்.
கடைசிகால நடவடிக்கைகளில்
நீங்கள் பலவற்றையும் செய்ய
விரும்பலாம்.
அதோடூ, உங்களுக்கு யாரையாவது
பார்க்க வேண்டும் என்று
ஆசையிருக்கிறதா?" என்று கேட்க,
"ஆமாம்" என மெல்லிய குரலில்
மருத்துவரின் கண்களைப் பார்த்து
சொன்னார் நோயாளி.
"யார் அது?" என ஆர்வத்தோடு மருத்துவர் கேட்டதற்கு,
நோயாளி, "வேறொரு நல்ல
டாக்டரை" என்றார். மருத்துவர் இடிந்து
போனார்.
★ மனிதன், தான் இடிபட்டதாய்
உணரும் எல்லாச்
சூழ்நிலைகளிலும்
அவன் அடிபடுவது
இந்தப் பெருமையுணர்வில்தான்!
பெருமைப்பட ஆயிரம் காரணமும் சிறுமைப்பட ஆயிரம் காரணமும் சொல்வது எளிது. ஆனால், எளிமையாய் வாழ ஒரு காரணம் சொல்வதுகூட மனதுக்கு மிகக் கடினமானது.

தன் அருமை
புரியாத வரை
சிறுமையும்
பெருமையும்
மாறி மாறி
மனிதனைத்
தாக்கும்.
பெருமையடித்தல்
எனும் மனத்துளை
வழியே
சக்தி வீணாகியபடியே
இருக்கும்.
எத்தனைப் புதுப்புது வழிகள் கண்டுபிடிக்கிறான் மனிதன், பெருமை பேசித் திரிவதற்கு!
தன்னைப் பற்றித் தானே பெருமைக்காக தம்பட்டம் அடித்துக்கொள்வது ஒரு வகையென்றால், இன்னொரு வகை இன்னும் தந்திரமானது.
இந்த வகை மனிதர்கள் அவர்கள்
சம்பந்தப்பட்ட காரியங்களை நேரடியாகப்
பேசாமல், மறைமுகமாகப் பேசுவதால்தான்
பெருமையடைவதாக நினைப்பார்கள்.
ஒருவிதக் கற்பனையோடு உலகில்
வாழ்வார்கள்.
தனக்குத் தெரிந்த V.I.P. பற்றி, தன்
மதம் பற்றி, தன் ஜாதி பற்றி
பெருமையடிப்பதை தாண்டி பிள்ளைகள்,
நண்பர்கள், உறவினர்களைச் சுற்றிச்
சுற்றியே நாம் பெருமையடித்துக்
கொள்ளும்போதெல்லாம், நம் அடிமனதில்
நம் பெருமைக்காகவே அவர்களின்
பெருமையைப் பேசுகிறோம்.
இதைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம்.
சும்மா பெருமை பேசுவது தவறல்ல.
அது நல்ல உரையாடலின் ஒரு பகுதியே.
> இரு கரம் தட்டாமல் ஓசை எழுப்பாது.
> இருவரும் சம அளவில் திட்டாமல்,
> எரிச்சலாகாமல் சண்டை எழும்பாது.
> வெறும் ஒரு கையால் எவ்வளவு
> விளாசினாலும் ஓசை வர
> வாய்ப்பில்லை. வீசும் கை வலிக்கும்!
> எரிச்சலூட்ட ஒருவர்
> முயற்சிக்கையில்... தொடர்ந்து
> சாந்தமாக இருக்க, பேச, செயல்பட
> நீங்கள் கற்றுக் கொண்டால்...
> சண்டை வராது.
>
> எரிச்சலாக்க முயல்பவரே
> எரிச்சலாவார்!
>
> ஆனாலும் அவரால் நமக்கும், நம்மால்
> அவருக்கும் எந்தப் பாதிப்பும் வராது.
>
> ☞ இது ஒரு தியானம். எரிச்சல் பட
> நீங்கள் தூண்டப்படுகையில்
> விழிப்பாயிருங்கள்.
>
> தொடர்ந்து சாந்தமாயிருங்கள். தியானம்
> நிகழக் காண்பீர்கள்.
ஏதோ ஒரு வகையில் 'நான் தகுதி குறைந்தவன்' என்ற ஆழ்மன எண்ணம் தரும் தூண்டலால் மீண்டும் மீண்டும் பெருமையடிப்பதற்காக மனிதன் முனைய ஆரம்பித்ததே தவறு. இது ஒருவித சுயபாதகமே.
பெருமை பேசித் திரிவது போன்ற சிறுமை வேறில்லை. காரணம் -உள்ளிருக்கும் சிறுமைதான் வெளியே பெருமையடிக்க, வெட்டிபந்தாவில் இறங்கும் அளவுக்குக் கூட ஒருவனைத் தூண்டுகிறது.
புத்தரை ஒருமுறை ஒருவர் மிக
மோசமாகத் திட்டினார். புத்தர் அமைதி
காத்தார்.
‘இனி திட்ட என்ன இருக்கிறது’. என
அவர் ஓயும் வரை அவரைத்
திட்டவிட்டு அமைதியாயிருந்த
புத்தர்... ‘நீ ஒருவருக்கு
பரிசளிக்கிறாய்... அவர் அதை
வேண்டாம் என மறுத்தால், அப்பரிசு
யாரிடம் திரும்பி வரும்! என
திட்டியவரிடம் கேட்டார். அவர்,
‘என்னிடம்சு என்றார். புத்தர், ‘நீ
என்னைத் திட்டியதை நான்
ஏற்றுக்கொள்ளவில்லைசு என்றார் .
அவர் திண்டாடினார்!
ஊ திட்டியதால் திட்டினேன்,
அடித்ததால் அடித்தேன் எனும்
விளக்கம் மடத்தனமானது.
அவர் செய்த அதே தவறை நீயும் செய்வது சிறுபிள்ளைத்தனம்!
சித்து வேலைகள் சில கற்றுக்
கொண்டதால், ஏதோ பெரிதாகச்
சாதித்துவிட்டோம் என்றெண்ணி
பெருமை வலையில் சிக்கிக் கொண்டவர்
தாதுங்கீர்.
தன்னுடைய அமானுஷ்ய சக்திகளைப்
பற்றி மற்றவர்களிடம் பெருமை அடித்துக்
கொள்வதற்கு தாதுங்கீர் கொடுத்திருந்த
பெயர் ஆன்மீக ‘அலசல்.’
ஞானப்பாதையில், ஒரு கட்டத்தில்
அமானுஷ்ய சக்திகள் ஞானத்தைத்
தேடுபவனுக்குக் கிடைக்கும்.
இறுதி உண்மையான ஞானம்
அடைவதை விட்டுவிட்டு, அமானுஷ்ய
சக்திகளின் சித்து வேலைகளில்
இறங்கினால் கர்வம் தலைக்கேறிவிடும்.
ஞானப்பாதையிலிருந்து வழி தவற
நேரிடும்.
தான் ஏதோ பெரிய ஆன்மீகவாதி என்ற ரீதியில் எல்லோரிடமும் பேசித் திரியும் தாதுங்கீர், பெண் ஹஸிட் ஞானியான ஷலானாவைச் சந்திக்க நேர்ந்தது.
பெருமை பீடிகையோடு ஆரம்பித்த தாதுங்கீர், “உங்களைப் போன்ற ஒரு ஞானியால்தான், என்னைப் புரிந்துகொள்ள முடியும். இதுவரை நான் ஒரு புத்திசாலியைக் கூடச் சந்திக்கவில்லை. அதனால் உங்களைச் சந்திப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
சிறிதாகச் சிரித்த ஷலானா, "அப்படியென்றால் உங்களைப் பொறுத்தளவு, உங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே முட்டாள்கள். அப்படித்தானே?" என்று கேட்டார்.
ஷலானாவின் பேச்சு தாதுங்கீரின்
பெருமையடிக்கும் உணர்வை நேரடியாகத்
தாக்கியது. தாதுங்கீர் தன் உடலுக்குள்
எங்கோ அடிபட்டது போல உணர்ந்தார்.
குட்டுப்பட்டதை மறைக்க
முயன்றவராய், "இல்லை இல்லை... நான்
அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.
உங்களைப் போன்ற புத்திசாலிகள் இல்லை
என்று சொல்ல நினைத்து வாய் தவறுதலாக
அப்படிச் சொல்லிவிட்டேன்" எனச்
சமாளித்தார்.
மேலும் தாதுங்கீர், "சரி, சரி... நான்
உங்களோடு ஆன்மீகம் பற்றி அலசி ஆராய
விரும்புகிறேன்" என்றார்.

இயல்பிலேயே நீங்கள் அருமையானவர்கள்.
பெருமை பேசி
உயிர் வாழும்
அளவுக்கு
இறங்க வேண்டிய
அவசியமென்ன?
சிந்தியுங்கள்!
ஷலானா, "நானொரு சாதாரணப் பெண். நான் ஆனந்தமாகயிருக்கிறேன். அவ்வளவுதான். மேற்கொண்டு ஆன்மீகம் பற்றி எனக்கெதுவும் தெரியாது. உங்களுக்கு ஏதாவது தெரிந்திருந்தால் எனக்குச் சொல்லிக்கொடுங்கள்" என்றார் வெகு எளிமையாக.
தாதுங்கீர்க்கு குஷி தாளவில்லை. "ஒன்றுமறியா இந்தப் பெண்ணை எல்லோரும் ஞானி என்று நம்புகிறார்கள். ஆனால், என்னைப் போன்று சித்துக் கலையில் தேர்ந்தவனிடம் இவரால் நடிக்க முடியவில்லை..." என்றெண்ணிய தாதுங்கீரின் பெருமை உணர்வு நிமிடங்களில் பல மடங்காகக் கூடிவிட்டது.
தாதுங்கீர், "வாருங்கள் ஷலானா, நம் எதிரே பொங்கியோடும் நதியின் மீது குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டே ஆன்மீகத்தை அலசலாம்" என்றார் கம்பீரமான குரலில்.
தண்ணீரின் மீது நடக்கும்சித்துக்கலையை பல வருடங்கள் செலவு செய்து தான் பெற்றதாக பலரிடம் கூறுவார். கேட்பவரும் வியந்து "அப்படியா!" எனச் சொல்ல, தாதுங்கீர் தண்ணீர் மீது நடந்து காட்டுவார்.
"ஆஹா! ஓஹோ!" என்று மற்றவர்கள் புகழ்ந்து பேச, தாதுங்கீர் தனக்குள் பெருமயைடைந்து சிரிப்பார். இது எப்போதும் நடப்பது. ஆனால், ஷலானாவின் பதில் அவரைத் திடுக்கிட வைத்தது.
நதி மீது நடந்துகொண்டே பேசலாம் என்றவரிடம், ஷலானா, "ஓடும் ஆற்றின் மீது நடந்து நடந்து அது எனக்குச் சலித்துவிட்டது, தாதுங்கீர்!
வாருங்கள். வான் மேகங்களில் ஏறலாம். அங்கு மேலும் கீழும் பறந்தவாறு ஆன்மீகத்தை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுங்கள். நான் தெரிந்துகொள்கிறேன்" என்று எளிமையாகக் கூறினார்.
தாதுங்கீர் உடைந்துபோனார்.
ஷலானா மேகங்களில் பறக்க அழைத்ததில் தாதுங்கீரின் பெருமை சுக்குநூறாக உடைந்தது. தண்ணீரில் நடப்பதையே தான் இவ்வளவு பெருமை அடித்துக் கொண்டிருக்க, ஒரு சாதாரணப் பெண் போல இருந்து கொண்டு “மேகத்தில் பறக்கலாம். வா” என எளிமையாக ஷலானா அழைத்த விதம் தாதுங்கீரை என்னென்னவோ செய்தது.
பெருமை உடைந்து தாழ்ந்த குரலில், "....அம்மா... எனக்குத் தண்ணீர் மீது நடக்க மட்டும்தான் தெரியும். மேகங்கள் மீது எப்படிப் பறப்பது?" என்று வினவினார் தாதுங்கீர்.
ஷலானா, "குழந்தாய்! மேகங்கள் மீது உனக்குப் பறக்கத் தெரிந்தால் என்ன தெரியாவிட்டால் என்ன?
நிலத்தில் நடந்து பேசினாலும் ஆற்றின் மீது நடந்து பேசினாலும் மேகத்தில் பறந்து பேசினாலும் பேசப்போவது என்னவோ ஒரே பேச்சுதானே? இடத்திற்கு இடம் ஆன்மீகம் மாறுமா என்ன?" எனக் கேட்டார்.
தாதுங்கீர் "மாறாதுதான்" என்றார்.
"ஆற்றின் மீது நடப்பதின் மூலமாக, ஆன்மீகத்தில் என்ன தெரிந்து கொண்டீர்கள். என்ன வளர்ந்தீர்கள்?"
தாதுங்கீர் யோசித்தார். "ஒன்றுமில்லை" என்றார்.
ஷலானா, "இப்படித் தனிமனித வளர்ச்சிக்குப் பிரயோஜனமில்லாதப் அமானுஷ்ய சக்திகளோடு விளையாடினால் வினைதான் மிஞ்சும். பல வருடங்கள் ஒரே ஒரு சித்து வேலைக்குச் செலவழித்த நீங்கள் அத்தனை வருடங்களையும் வீணடித்து விட்டீர்கள்.
பெருமையடித்தல் புற்றுநோய் போல மனதில் வளர்ந்ததுதான் மிச்சம்.
இப்பொழுதுகூட நீங்கள் உங்கள் தவறை உணராமல், அடுத்து மேகங்களில் பறப்பது எப்படியென்றே கேட்கிறீர்கள்? புரிகிறதா?" என கூறி தாதுங்கீரின் தவறைப் புரிய வைத்தார்.
சத்யத்தை, அதி உன்னத உண்மையை உணர்வது மட்டுமே இலக்காக இருக்க வேண்டும். இது ஆன்மீகத்தின் சாரம்.
சத்யம் நோக்கிச் செல்லும் ஞானப்பாதையிலிருந்து, ஒருவரை வழி விலகச் செய்வது நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெளிப்படும் இந்தப் பெருமையடிக்கும் சுபாவம்தான்.
அர்த்தமுள்ள சம்பவம்...
நாய்களின் பொதுக்கூட்டத்தில் இப்படிப் பெருமை பேசப்பட்டதாம்.
தலைவர் சொன்னது "நமக்கும் கடவுளுக்குமுள்ள வித்தியாசம் மிக மிகச் சிறியது."
"அப்படியா!" கேட்டக் கூட்டத்திடம்,
"ஆம்! நம் பெயர் DOG. அதை திருப்பிப் போட்டால் GOD" எனப் பெருமையோடு தலைவர் சொன்னது.
- பெருமை பேசுவது எளிது. ஆனால், அது நேர விரயம்! தனிமனித வளர்ச்சிக்கு எதிரி.
பெருமையடித்தல் முன்னேற்றத்தின் தடைக்கல்...
எளிமை முன்னேற்றத்தின் படிக்கல்!
| தியான உளிகள் | ஆன்மீகவாதி, ஆத்திகவாதி, நாத்திகவாதி, அரசியல்வாதி - என்று என்ன பெயர் வேண்டுமானாலும் நீங்கள் உங்களுக்கு வைத்துக் கொள்ளுங்கள். எந்த வாதியாக நீங்கள் இருந்தாலும் சரி, உங்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கப்போவது உங்களின் பெருமையடிக்கும் சுபாவம்தான். |
| எளிமை, | ||
|---|---|---|
| பெருமை என்ற விருக்ஷம் | அது | |
| சிறுமை என்ற விதையிலிருந்து முளைத்ததுதான். | வலிமை! |
என்றோ, எப்படியோ மனிதனுக்குள் நுழைந்துவிட்ட சிறுமை உணர்வு [தன்னைப் பற்றிய குறைமதிப்பீடு] மனிதனைத் தொடர்ந்து குத்திக்கொண்டேயிருக்கும். இதை மறக்க, மறைக்க உருவாவதே பெருமையடித்தல் சுபாவம்.
பெருமையடித்தலின் பக்க விளைவு, இது சிறுமையை இன்னும் கொஞ்சம் ஆழமாக உள்ளுக்குள்ளே தள்ளிவிடும். உறுத்தல் இன்னும் கொஞ்சம் அதிகமாகும்.
நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நீங்கள் உழைத்த அளவுக்கு நீங்கள் சாதிக்கவில்லையெனில் தெரிந்துகொள்ளுங்கள்... பெருமையடிக்கும் சுபாவம்தான் சாதகப் பாதையிலிருந்து உங்களை விலக்கியிருக்கும்.
எதற்கும் உதவாத பெருமையடிக்கும் சுபாவத்தைக் கண்டுபிடித்து, தூக்கியெறியுங்கள். பெருமை கலைக்கப்பட்டால் அதன் உள்முகமான சிறுமையும் கலைந்துவிடும்.
பெருமை, சிறுமை என்ற இரு தடைக்கல்லையும் தாண்டிவிட்டால் வாழ்வை அருமையாய் வாழலாம். பெருமை, சிறுமை பேசும் காலங்களையெல்லாம் தியான காலமாக மாற்றுங்கள்!