KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/அங்கீகாரம்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

அங்கீகாரம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

* அங்கீகார உணர்வு உற்சாக மனதின் அங்கஹீனம்.

* நம்மை நாம் அங்கீகரித்துக்கொள்ள முடியாமைதான் - மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக நம்மை ஏங்க வைக்கும்.

* உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் உற்சாகமான மனிதருக்கு வெளி அங்கீகாரம் தேவையில்லை.

அங்கீகாரத்தை வெளியில் எதிர்பார்த்துக்கொண்டிருப்பவரால் உற்சாகமாக இருக்க முடியாது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இளம் தம்பதியர் என்னைத் தேடி வந்தனர். அவர்கள் கையில் அழகான குழந்தை. ஆனால் முகம் நிறைய வருத்தம். ஏன் வருத்தம்? முதலில் எனக்குப் புரியவில்லை. சில நிமிடங்கள் பேசிய பிறகு வருத்தத்திற்கான காரணம் புரிந்தது.

அந்த இளம் தம்பதியர், அடிக்கடி நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று வருவார்களாம். ஒரு நண்பரின் வீட்டுக்குப் போன போது, புதிதாக வாங்கிய ஃப்ரிட்ஜைக் காட்டி “உங்கள் வீட்டில் என்ன ஃப்ரிட்ஜ் இருக்கிறது?” என்று கேட்டவுடன் சுருங்கிப் போயிருக்கிறார்கள் அந்தத் தம்பதியினர்.

இன்னொரு வீட்டில் விசிடி & எம்பி 3-ப்ளேயரைப் பார்த்திருக்கிறார்கள். மீண்டும் அப்செட். இப்படி ஒவ்வொரு முறையும் நண்பர்களின் வீடுகளுக்கு சந்தோஷமாகக் கிளம்பிப்போவதும் மற்ற இல்லத்தைத் தங்கள் இல்லத்தோடு ஒப்பிட்டு நொந்து போவதும்தான் அவர்களின் சோகத்திற்கான காரணம். இவர்களின் நிலையை இவர்களாலேயே அங்கீகரித்துக்கொள்ள முடியவில்லை.

காரணம். மற்றவர்களின் வளர்ச்சி, இவர்களுக்குக் கொடுத்த அதிர்ச்சிதான் நம்மை நாம் அங்கீகரித்துக் கொள்ள முடியாமைதான்- மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக நம்மை ஏங்க வைக்கும்.

நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். நமது துக்கத்திற்குக் காரணமே மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்த்திக் கொள்வதுதான்.

ஜே. கிருஷ்ணமூர்த்தி ஒருமுறை இலண்டனில் பேசுகிற போது, 'Don't measure' என்றார்.

ஆனால், ஜே. கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டது உடம்பின் அளவை எடுப்பது அல்ல. ஒருவரோடு ஒருவரை மனதில் ஒப்பிட்டு நொந்து போவதைத்தான் அவ்வாறு சொன்னார்.

நாம் யார், எப்படிப்பட்டவர்கள் என்று நாம் நினைப்பதைவிட, மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதற்குத்தான் அதிக மரியாதை கொடுக்கிறோம்.

ஒரு கணவன், 'தான் ஒரு நல்ல கணவன்' என்கிற சான்றிதழை மனைவியிடம் எதிர்பார்த்து நிற்கிறான். ஒரு ஆசிரியர், 'தான் ஒரு நல்ல ஆசிரியர்' என்ற சான்றிதழையும் அபிப்பிராயங்களையும் எதிர்பார்த்து நிற்கிறார். மற்றவர்கள் தரும் "நல்லவர்" என்ற அபிப்பிராயச் சான்றிதழ்களை எதிர்பார்த்தே பலர் ஏங்கித் தவிக்கிறார்கள்.

எ"கடவுளே! என் புத்தியில்
ன்ஒரு புள்ளி மட்டும் வை.
வேரோடு போடுவது என் வேலை".
லை- தவசி கூற்று

அவ்வப்போது மாறிப்போகிற மனித அபிப்பிராயங்களுக்காக மனிதர்கள் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்கள்?

ஐரோப்பாவில் சில காலத்துக்கு முன்பு வரை ஆஸ்துமாவுக்கு மருந்து தரப்படவில்லை. ஆஸ்துமா, மனிதர்களைத் தண்டிப்பதற்காக இறைவன் அனுப்பிய கடைசித் தண்டனை என நினைத்தார்கள். இப்போது மருந்து தரவில்லையா?

அரிஸ்டாட்டில், ‘ஆண்களைவிடப்
பெண்களுக்கு அதிகமான பற்கள் உண்டு’
என்று எழுதினார். அதைக் கேள்வி
கேட்பதற்கு எத்தனையோ
நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெட்ராண்ட்
ரஸ்ஸல் வரவேண்டியிருந்தது. “தன்
மனைவியின் பற்களையாவது
அரிஸ்டாட்டில் எண்ணிவிட்டு எழுதியிருக்க
வேண்டாமா?” என்று ரஸ்ஸல் கேட்டார்.

அபிப்பிராயங்கள் எப்போதும்
மாறிவிடக்கூடியவை. அங்கீகாரங்களும்
அவ்வாறானவைதாம்.

வால்ட்விட்மன், ‘புல்லின் இதழ்கள்’
என்ற தனது கவிதைத் தொகுதியை அந்நாளில்
இலக்கிய உலகில் பிரபலமாக இருந்த
டால்ஸ்டாய்க்கு அனுப்பினார். அவரோ
விட்மனைப் பற்றித் தவறான
கருத்துகொண்டிருந்ததால், புல்லின்
இதழ்களைப் புழுதிக்குக் காணிக்கையாக்கி
விட்டார்.

அங்கீகாரத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு,
உலகத்தில் எப்போதும் இருந்தே
வந்திருக்கிறது. அங்கீகாரத்தைப் பொறுத்து
பல நிகழ்வுகளின் போக்கே மாறியிருக்கிறது.

portrait

ஏணி இருப்பது மாடிக்குப்
போகத்தான்.
ஏணியைப்
பிடித்துத் தொங்க
ஆரம்பித்தால்
மாடிக்கு எப்படிப்
போவது?

மற்றவர்களின் அங்கீகாரமே நமது வாழ்க்கையின் அடிப்படையாக பல வேளைகளில் அமைந்துவிடுகிறது. நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்கிற அடிப்படையில் நம் வாழ்க்கை உருவாகவில்லை. நம்மைப் பற்றி மற்றவர்களின் எண்ணங்களை, அபிப்பிராயங்களைக் கொள்முதல் செய்து, நமது வாழ்க்கையை உருவாக்கி வைத்திருக்கிறோம். மற்றவர்கள் நமக்குத் தந்த மதிப்பெண்களின் கூட்டல்தான் நாம்.

Nithyananda

நம்மைப் பற்றி மற்றவர்களின் எண்ணங்களை, அபிப்பிராயங்களைக் கொள்முதல் செய்து, நமது வாழ்க்கையை உருவாக்கி வைத்திருக்கிறோம். மற்றவர்கள் நமக்குத் தந்த மதிப்பெண்களின் கூட்டல் தான் நாம்.

நம்மில் ஒவ்வொருவரும் ஏறத்தாழ ஒரு
சரக்கு லாரியில் ஏற்றப்படுகிற பார்சலைப்
போல ஆகிவிட்டோம். பார்சலின் மீது
ஒவ்வொருவரும் அவரவர் முத்திரையைப்
போட்டிருக்கிறார்கள். தபால் உறையில்,
தபால் தலையின் மீது முத்திரை இருந்தால்
சரி. விலாசம் முழுவதும் அவரவர்
முத்திரையைக் குத்தினால் கடிதம் போய்ச்
சேராது. அப்படித்தான் நாம் எல்லோரும்
ஆகிவிட்டோம்.

வாஜஸ்பதி மிஸ்ரா என்பவர்
முன்னொரு காலத்தில் பிரம்மசூத்திரத்திற்கு
விளக்கம் எழுதினார். அவரை அவ்வாறு
எழுதக் கேட்டுக்கொண்ட அவர் குரு, தம்
மகளான பாமதியை அவருக்கு மணம்
செய்து கொடுத்தார்.

ஆனால் மிஸ்ரா, விளக்கத்தை எழுதுவதில் தன் காலத்தையெல்லாம் கழித்தார். பிரம்மசூத்திரம் என்பது மகா வாக்கியங்கள் அடங்கிய உலகத்தின் பேரறிவுப் பெட்டகமாகும். ஆகவே உரை எழுதுவதற்கு ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு மேலானது. அன்ன ஆகாரம் இல்லாமல், முக்கியமாக எங்கும் எழுந்து செல்லாமல், மிஸ்ரா எழுதிக் கொண்டிருந்தார்.

இதெல்லாம் சாத்தியமா என்று கேட்கக் கூடாது. ஏனென்றால் உண்மையைச் சொல்வதற்கென்றே அதுபோன்ற வரலாற்றுச் சம்பவங்கள் வருகின்றன. மனிதர்களோ உண்மையை விட்டுவிட்டுக் கதைகளைப் பிடித்துக்கொள்கிறார்கள்.

ஏணி இருப்பது மாடிக்குப் போகத்தான். ஏணியைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்தால் மாடிக்கு எப்படிப் போவது?

மிஸ்ரா இறுதியாகப் பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுதி முடித்துத் தலைநிமிர்ந்து ஏறிட்டுப் பார்த்தார். அவருக்கெதிரே வயதான மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்து “நீங்கள் யார்?” என்று கேட்டார். அவளோ, “நீங்கள் எழுதி முடித்துவிட்டீர்களா?. நீங்கள் எழுதுவதற்குப் பணிவிடை செய்வதே என் பாக்கியம்” என்றார்.

சற்று அதிர்ச்சியுற்ற மிஸ்ரா மீண்டும், “நீங்கள் யார்?” என்று கேட்டார். “நான்தான் உங்கள் மனைவி பாமதி. நீங்கள் எழுதி முடித்துவிட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர், “எழுதி முடித்துவிட்டேன். தலைப்புதான் வைக்கவில்லை” என்று சொன்னார். அந்த அம்மாவோ திரும்பவும், “உங்களுக்குப் பணிவிடை செய்வதே என் பாக்கியம்” என்று கூறினார்.

பாமதியின் எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காத சேவையை உணர்ந்த வாஜஸ்பதி மிஸ்ரா, அந்தப் புத்தகத்திற்குத் தன் மனைவியின் பெயரையே பாமதி என்று சூட்டினார். எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காத பெண்மணிக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

இந்தக் கதையிலிருந்து கணவரின் கவனத்தைக் கேட்டுப் பெறாத மனைவிகளும் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

ஆனால் இன்றோ, பத்து நிமிடத்திற்கு மேல் செய்தித்தாள் ஒன்றைக் கணவர் படித்துக்கொண்டிருந்தால், பத்திரிகையைப் பறித்துக்கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள். தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் தங்களை இழந்து போகிற மனைவிமார்களைப் பார்த்துக்கோபப்படுகிற கணவர்களும் இருக்கிறார்கள்.

இவ்வளவுக்கும் காரணம், ஒருவர் மற்றவரின் அங்கீகாரத்திற்காக ஏங்குவதுதான்.

| அ ங் கீ கா ர ம் | நீங்கள் உங்களை அங்கீகரித்துவிட்டால் - நிழல் உங்களை ஈர்க்காது. மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக ஏங்கமாட்டீர்கள். உங்கள் சந்தோஷமும் நிம்மதியும் மற்றவர்களால் குலைக்கப்படாது. |

அங்கீகாரம்தான் ஏக்கப் பெருமூச்சை உருவாக்குகிறது. மற்றவர்களின் குறைகள் அவர்களின் நிழல்களே. அவர்களின் நிறைகள்தாம் நிஜம். நிஜத்தைவிட்டு, நிழலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் ஏக்கப் பெருமூச்சுக்குக் காரணம்.

மனைவிமார் எதிர்பார்ப்பதை எதிர்பார்க்கிற விதத்தில் பூர்த்திசெய்யாத கணவன்மார்களும் அதேபோல் கணவன்மார் எதிர்பார்ப்பதை எதிர்பார்க்கிற விதத்தில் பூர்த்தி செய்யாத மனைவிமார்களும் இருக்கக் காரணம்.. நிஜத்தைவிட்டு நிழலைப் பார்த்து, நிழலை நம்பி வாழ்வதுதான்.

மற்றவர்களின் வசதி வாய்ப்புகள் மூலம், அவர்களின் நிஜவாழ்க்கையை எடை போட முடியாது. வசதி வாய்ப்புகள் வெறும் நிழல்கள்தான். அவை நிஜமாகிவிட முடியாது.

மற்றவர்களின் அபிப்ராயங்கள் உண்மையாகிவிட முடியாது. அவை உங்களைப் பற்றிய மற்றவர்களின் மேலோட்டமான கருத்துகளே. மற்றவர் உங்களைப் புகழ்வது, இகழ்வது - இரண்டுமே பாதி உண்மை.

பாதி உண்மை, பொய்யைவிட மோசமானது. நிஜத்தின் நிழல் மட்டுமே.

நிஜமான வாழ்க்கை என்பது சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்த வாழ்க்கைதான். நிஜமான வாழ்க்கை வாழ, உங்கள் மனதைத் திருப்புங்கள். நிழலைப் பார்த்துப் பொறாமைப்பட்டு வருந்த வேண்டிய அவசியமில்லை.

நீங்கள் உங்களை அங்கீகரித்துவிட்டால் - நிழல் உங்களை ஈர்க்காது. மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக ஏங்கமாட்டீர்கள். உங்கள் சந்தோஷமும் நிம்மதியும் மற்றவர்களால் குலைக்கப்படாது.