KAILASA Library/கல்பதரு/கல்பதரு தரிசன செயல்முறைக்குள் உங்களைSign in
கல்பதரு

கல்பதரு தரிசன செயல்முறைக்குள் உங்களை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வரவேற்கிறோம்

அல்லது 'நான் ஆரோக்கியம் மிக்கவனாக மாறவே கூடாது' என்ற சுய வெறுப்பாகக்கூட இருக்கலாம். அல்லது 'ஆரோக்கியத்திற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை' என்று ஆரோக்கியத்தை உங்கள் வாழ்க்கையின் பாகமாகக் கருதாத சுய மறுப்பாகக்கூட இருக்கலாம்.

3. மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு பகுதியையும் எழுதி முடித்துவிட்டு, கண்களை மூடி அமருங்கள். நீங்கள் எந்த எண்ணத்தை நிஜமாக்க விரும்புகிறீர்களோ, அது நிஜமாவதற்கான உணர்வை உருவாக்குங்கள். 'உணர்வை உருவாக்குங்கள்' என்று நான் சொல்லும்போது, நீங்கள் ஒரு கோடீஸ்வரராக வேண்டுமென்று விரும்பினீர்களென்றால், நீங்கள் ஏற்கெனவே கோடீஸ்வரராகிவிட்டதாகவே உணர வேண்டுமென்பதையும், உங்களை ஒரு கோடீஸ்வரராகவே காண வேண்டுமென்பதையுமே குறிப்பிடுகிறேன். இதற்குத் தடையாக இருக்கும் உங்கள் சுய சந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்பு மனப்பாங்குகளை நிறைவுசெய்து, அவற்றைக் கைவிடுங்கள்.

4. உங்களுக்குள் தெளிவாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளுங்கள்: "நான் என்னுடைய சுய சந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்புக்களையெல்லாம் நிறைவுசெய்து, அவற்றை முழுமையாக்கிக் கைவிடுகிறேன்."

இவ்வாறு சொல்லிவிட்டு, அடுத்த 21 நிமிடங்களுக்கு உங்கள் எண்ணத்தை நிஜமாக்கிடும் உணர்விலேயே நிலைகொள்ளுங்கள். அப்போது உங்கள் சுய சந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்பு போன்ற குறைவுணர்வுகள் அனைத்துமே வலுவிழந்துவிடும், உங்கள் மீது அவை கொண்டுள்ள பிடியும் தளர்ந்துபோகும். அதன்பின், நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் 'உணர்வு', உங்கள் குண்டலினி சக்தியாலும், குருவின் குண்டலினி சக்தியாலும் சக்தியூட்டப்பட்டு, நீங்கள் நினைத்ததை நிஜமாக்கும் சக்திக்களமாகிவிடும்.

5. நீங்கள் சிரத்தையுடன் உங்களுக்குள் 'உணர்வை' உருவாக்கும்போது, ஞானகுருவின் குண்டலினி சக்தி உங்கள் விருப்பத்தை நிஜமாக்கிடும் சக்தியைத் தரும். ஞானகுருவின் சக்தி உங்கள் 'உள் உணர்வில்' பாய்ச்சப்படும்போது, உங்கள் 'உள் உணர்வு' பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டுவிடும். இந்தக் கல்பதரு தரிசன செயல்முறையை நீங்கள் முழுமையான சிரத்தையுடன் செய்யும்போது, உங்கள் 'உணர்வு' நிஜமாகிறது.

இந்தப் பிரபஞ்ச பெரியக்கம் தொடர்ந்து உங்கள் மீது ஆசீர்வாதத்தைப் பொழிவதைக் காண்பீர்கள். நீங்கள் உருவாக்கிய 'உள் உணர்வு' தானாகவே மலர்வதையும், மணம் பரப்புவதையும், நீங்கள் நினைப்பதையெல்லாம் நிஜமாக்குவதையும் காண்பீர்கள்.