KAILASA Library/கல்பதரு/வாழ்வே ஒரு மிகப்பெரிய சாத்தியக்கூறுSign in
கல்பதரு

வாழ்வே ஒரு மிகப்பெரிய சாத்தியக்கூறு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மனிதர்களுக்கு இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மிகப்பெரிய அநீதி உங்களுக்குள் இருக்கின்ற அளப்பரிய சக்திகளை உங்கள் தினசரி வாழ்க்கையில் உபயோகித்து நீங்கள் முன்னேறுவதற்கு உங்களுக்குச் சொல்லித்தராமல், அது உங்களுக்கு சாத்தியமில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதே.

உங்கள் வாழ்க்கையில் எது நிஜமாக வேண்டுமென விரும்புகிறீர்களோ, அதனை நிஜமாக்கும் சக்தியுடனும் ஆற்றலுடனும்தான் நீங்கள் பிறந்தீர்கள். ஆனால் விழிப்புணர்வற்ற இந்தச் சமுதாயம் உங்களுள் போட்ட தவறான நம்பிக்கைகளே, 'வாழ்க்கையே சாத்தியமற்றவைகளின் தொகுப்புதான்' என்று உங்களை நினைக்கச்செய்துவிட்டன.

ஆனால் நீங்கள் சத்தியத்தைத் தெரிந்துகொண்டாக வேண்டியுள்ளது.

நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள், ஏனெனில் சுவாசித்தல் சாத்தியப்படுவதால்! அதேபோல், ஜீரணித்தல் சாத்தியப்படுவதால்தான், நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். உங்கள் உடலே ஒரு அதிசயம்தான். இந்த உடல் எனும் பரிமாணத்தில் உள்ள சாத்தியத்தினால்தான் நீங்கள் இன்னமும் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள், நினைத்ததை நிஜமாக்குகிறீர்கள்.

இதேபோன்று மனநலம், செல்வவளம், இனிமையான உறவுகள், சொந்த வாழ்க்கை, ஜீவன்முக்தி- என எந்த ஒரு பரிமாணத்திலும் நீங்கள் நினைத்ததை நிஜமாக்கலாம்.

ஆம், அது சாத்தியமே!

தன்னைத்தாண்டிய ஒன்றைத் தேடுவதுதான் வாழ்க்கையினுடைய ஆதாரம்.

அதைப் பட்டறிவு ரீதியாக, வெளியுலகத்தை ஆதாரமாக வைத்துச் செய்ய ஆரம்பிக்கும்பொழுது அது அறிவியல்.

உணர்ச்சி ரீதியாக அதைச் செய்ய ஆரம்பித்தால் அதுதான் கலை, இசையாக, நாட்டியமாக, ஓவியமாக, காவியமாக, கலையாக வெளிப்படுகின்றது. அதே உத்வேகம் உள்நோக்கித் திரும்பினால், தெய்வீக விஞ்ஞானமாக, மெய்ஞானமாக வெளிப்படுகின்றது.

உங்கள் உணர்வை உள்நோக்கித் திருப்பினால் - எல்லாப் பரிமாணங்களிலும் நீங்கள் நினைத்ததை நிஜமாக்குவீர்கள். அனைத்து சாத்தியங்களையும் அறிந்துகொள்வீர்கள்..