தீட்சை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்கள் சாத்தியங்களை அடைவதற்காக உங்களுக்கு வழங்கப்படும் தீக்ஷையே கல்பதரு தரிசனம்.
பரமஹம்ஸ நித்தியானந்தர், தம்முடைய பூரணத்துவ சக்தியை உங்களுக்குள் பாய்ச்சுவதன்மூலம் உங்கள் சுய சந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்புகளைக் கரையச்செய்கிறார். நீங்கள் நிஜமாக்க விரும்பும் எண்ணத்தை நிஜமாக்குகிறார்.
அவர், தம் சக்தியையும் ஆசீர்வாதத்தையும் மட்டுமல்ல, கல்பதரு விஞ்ஞான தீக்ஷையையும் அளிக்கிறார். அப்படியானால் மட்டுமே, இந்த விஞ்ஞானத்தை உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து பயன்படுத்தி, நீங்கள் நிஜமாக்க விரும்பும் எண்ணத்தை ‘ நீங்களாகவே’ நிஜமாக்கிக்கொள்ள முடியும்.
உங்களுக்குள் உணர்வை உருவாக்கி, அதில் ‘சாத்தியம்’ என்னும் விதையை விதைப்பதே தீக்ஷை!

என்னுடைய கண்களைக் குணப்படுத்தினார்
சுவாமிஜியின் கருணையும், மக்களுக்கு அவர் தரும் தியான சிகிச்சையும் என் கண்களைக் குணப்படுத்தின. கல்பதரு தரிசனம் பெற்ற அக்கணமே என்னுடைய பார்வையை நான் திரும்பப் பெற்றேன்-சில நிமிடங்களுக்குப் பிறகுகூட இல்லை, சில நொடிகளிலேயே என்னால் நன்றாகப் பார்க்க முடிந்தது. மேடையிலிருந்து நானாகவே கீழிறங்கி வர முடிந்தது. இன்றுவரை என்னுடைய இயல்பான வாழ்க்கையை மூக்குக்கண்ணாடியின் உதவியின்றியே வாழ்ந்துவருகிறேன்.
- ஸ்ரீ நித்ய அமிர்தானந்தா, சாஃப்ட்வேர், சார்லெட், நார்த் கரோலினா, யு.எஸ்.ஏ

முதுகெலும்பு அடர்த்திக் குறைவு
நோயிலிருந்து குணமடைந்தேன்...
- Donna Johansen
என் பெயர் டோனா ஜான்சன். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் என்கின்ற இடத்தில் சுவாமிஜியை முதன் முதலில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் வாழ்க்கையில் சுவாமிஜியினால் ஏற்பட்ட நேரடியான நன்மையினை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
பல ஆண்டுகளாக உகம் முழுவதும் உள்ள சத்திவாய்ந்த குருமார்களின் சீகிச்சைமுறைகளைப் படித்து வந்தேன். சுவாமிஜியின் தியான சிகிச்சையின் சக்திகளைப் புரிந்துகொள்ள அவர்கள் கற்றுத்தந்த பயிற்சிகளுக்காக அவர்களுக்கு என்னுடைய நன்றியினை செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
சுவாமிஜியினுடைய தியான சிகிச்சையின் பலன்களை நான் நன்றாக உணர்ந்திருக்கின்றேன். அவதாரபுருஷர் யார்? அவர் எப்படி இருப்பார்? என்பதை அறியாமல் நான் இருந்தேன். அதாரபுருஷர் என்றால் யார்? அவர் எப்படி இருப்பார் என்பதை சுவாமிஜி எனக்குப் புரியவைத்தார்.
நான் முதுகெலும்பு அடர்த்திக் குறைவு நோயினால் பாதிக்கப் பட்டு (osteoporoses) இருந்தேன். அதற்காக பல மாதங்களாக மேலை நாட்டு வர்ம சிகிச்சையாளர்களைத் (chiropractor) தேடிக் கொண்டிருந்தேன்.
சுவாமிஜியிடம் தியான சிகிச்சை பெற்ற பின்பு நான் இந்த நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்தேன். என்னைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் இந்த உலக விதிகளுக்கு முற்றிலும் மாறாக நான் குணமடைந்திருந்தேன் எனபதை என்னுடைய எக்ஸ்ரே சோதனைகள் நிருபித்தன. நன்றி சுவாமிஜி!
பிடதி ஆஸ்ரமம் - ஓர் வாழும் சக்தி சூழல்
ஆஸ்ரமத்தின் ஒவ்வொரு இடத்திலும் ஞானகுருவின் ஆனந்த சக்தியை நம்மால் உணரமுடிகின்றது.
அதுமட்டுமல்லாமல், சீடர்களும் பக்தர்களும் தொடர்ந்து பலமணி நேரம் ஆன்மிகப் பயிற்சிகள் செய்வதால், அவர்களுள் மலரும் ஆனந்த சக்தியையும் நம்மால் உணரமுடிகின்றது.
நாம் இதற்கு முன் எப்பொழுதுமே தியானம் செய்திருக்காவிட்டாலும், ஆன்மிகத் தேடுதலுடைய மனநிலை இல்லாதவராக இருந்தாலும், ஆஸ்ரமத்திற்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே அங்கிருக்கும் ஆழ்ந்த விழிப்புணர்வுடன் நீங்கள் ஒன்றிவிடுவோம்.
நித்யானந்த தியானபீட சங்கத்தின் தலைமைப் பீடமாக இது விளங்குவதால், ஆன்மிக நுட்பங்களையும் பயிற்சிகளையும் ஞான குருவிடமிருந்தே நேரடியாகக் கற்றுக்கொள்ளும் ஒரு இடமாகவும் விளங்குகிறது.
வகுப்புகளில் கலந்துகொள்வதற்காகவும், சில மணி நேரம் ஆஸ்ரமத்தில் உள்ள ஆலமரத்தின் அடியிலும், ஸ்ரீ நித்யானந்தேஸ்வரி ஸமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வரர் ஆலயத்திலும், வைத்திய ஸரோவரில் உள்ள ஆனந்த லிங்கத்தின் அருகிலும் அமர்ந்து, தங்கள் நேரத்தை ஆன்மிக உயர்விற்குப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் பலர் வருகின்றனர்.

ஆஸ்ரமம் என்றால் 'அக விழிப்பு' அடைவதற்கான ஒரு இடம் என்று பொருள். மக்கள் வகுப்புகளில் கலந்துகொள்ள வந்தாலும் சரி, ஞானகுருவின் ஸாந்நித்தியத்தில் இருப்பதற்காக வந்தாலும் சரி, அவர்களுக்குள் அக விழிப்பு உண்டாகிறது.
21 அடி உயர ஆனந்த லிங்கம் : (குணமளிக்கும் வைத்ய ஸரோவரம்)
நீங்கள் ஆஸ்ரமத்திற்குள் நுழைந்த உடன் உங்களை வரவேற்கும் விதமாக உங்கள் கண்களில் முதலில் தென்படுவது 21 அடி ஆனந்த லிங்கம்தான். மருத்துவ குணம் கொண்ட அரிய 1008 மூலிகைகளாலும், நவபாஷாணத்தாலும் இது வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நீரூற்றுகள் மூலம் ஆனந்த லிங்கத்தின் மேல் பொழியப்படும் நீரானது, குணமளிக்கும் தீர்த்தமாக லிங்கத்தைச் சுற்றி, வைத்திய ஸரோவரில் தேக்கிவைக்கப்படுகிறது. ஆனந்த லிங்கமும், வைத்யஸரோவரரும் குணமளிக்கும் ஆற்றலைப் பரப்புவதற்கென்றே வாழும் அவதார புருஷரால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன. வாழும் அவதார புருஷரால் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆனந்த லிங்கம், பிரபஞ்ச சக்தியின் செயல்படும்தன்மை மற்றும் செயலற்ற தன்மைகளுக்கு அடையாளமாகத் திகழ்கிறது.
இந்தத் தீர்த்தத்தில் புனித நீராடும்போது தீர்த்தமானது உங்கள் மனத்திற்குப் புத்துயிரூட்டி, உங்கள் உடலிலுள்ள முக்கியமான ஆற்றல்களைச் சமப்படுத்தி, உங்களுக்குள் அமைதியான ஒரு ஆன்மிக உணர்வுரூமாற்றத்தைக் கொண்டுவருகிறது.
ஆலமரம்:
பரமஹம்ஸ நித்யானந்தர் தம் அகக் காட்சியில் கண்ட அந்த ஆலமரத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு பல மாதங்கள் ஆயின. கண்டுபிடித்தபின் 2003ஆம் ஆண்டு இந்த ஆஸ்ரமம் நிறுவப்பட்டது. இப்போது இந்தப் புனிதமான ஆலமரம்தான் ஆஸ்ரமத்தின் ஆன்மிக வழிகாட்டியாக கருதப்படுகிறது.
ஒரு பெரிய குடைபோல் விரிந்து கவிழ்ந்திருக்கும் இந்த ஆலமரத்தின் நிழலில்தான் மௌனத்தின் மூலமாக தம் சீடர்களுக்கு ஆழமான ஆன்மிக சத்தியங்களைப் போதித்த ஆதிகுரு தஷிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார். ஆன்மிக அதிர்வலைகளை வெளிப்படுத்தி, ஆனந்த கீதம் இசைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு இடமாக இந்த ஆலமரம் திகழ்கிறது.
பல வருடங்களாக இந்த இடம் ஆன்மிக தியான சிகிச்சைக்காகவும், நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக் கொடுக்கும் தன்மைக்காகவும், ஒரு ஆன்மிகத் தெளிவைக் கொடுக்கும் காரணத்திற்காகவும், உலகெங்கிலுமிருந்து பல மக்களையும், ஆன்மிகத் தேடுதல் உள்ளவர்களையும் தன்னகத்தே ஈர்க்கும் இயல்பு கொண்டதாக இருக்கிறது.
இந்த இடத்தில் அதிர்வலைகள் அசாதாரணமானவையாகவும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கூடியவகையிலும் இருப்பதை முதன்முறையாக வரும் பார்வையாளர்களும் உணரமுடியும்.