KAILASA Library/வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர் வழங்கும் கல்பதரு தரிசனம்/உங்கள் சிந்தனையைப் புதுப்பியுங்கள்Sign in
வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர் வழங்கும் கல்பதரு தரிசனம்

உங்கள் சிந்தனையைப் புதுப்பியுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நல்ல செய்தி ! நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை உங்களிடமிருந்து எவராலும் பறிக்கமுடியாது! பூர்ணத்துவ கிரியாவைச் செய்வதன் மூலம் நீங்கள் SDHD லிருந்து விடுபட்டு விடலாம், இப்போதே!

இந்த SDHD மனப்பாங்கின் காரணமாக உங்களை நீங்களே தாழ்வாக மதிப்பிட்டுக்கொள்கிறீர்கள்; உங்களை நீங்களே தாழ்வாக உணர்கிறீர்கள்.

ஆனால் நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதுபோல், நீங்கள் சாதாரண மனிதர் இல்லை என்பதுதான் சத்தியம். இந்த உலகத்தைப் பற்றியும் உங்களைப் பற்றியும் நீங்கள் கொண்டுள்ள தவறான கருத்துக்கள் மற்றும் எதிர்மறை மனப்பாங்குகளிடமிருந்து நீங்கள் முழுமையாக விடுபடுவதன் மூலம் , உங்கள் எதிர்காலத்தை மாற்றி எழுதக் கற்றுக்கொள்ளலாம்; இந்த உலகத்தைப் பற்றியும் உங்களைப் பற்றியும் புதிய கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளலாம்.

சக்தியுள்ளவராகுங்கள்! SDHD க்கு ஒருபோதும் உங்கள் கதவுகளைத் திறந்துவிடாதீர்கள். அதை என்றென்றைக்குமாக மூடிவிடுங்கள். அவ்வாறு மூடிவிட்டீர்களென்றாலே போதும், உங்கள் வாழ்க்கை பந்தயத்தை நீங்கள் ஜெயித்துவிடலாம். ஏனெனில் இந்த SDHD மனப்பாங்கே உங்களை பலஹீனர்களாக்குகிறது!

பூர்ணத்துவ கிரியா வின்மூலம், நீங்கள் உங்கள் உள் உலகிலும் வெளி உலகிலும் உருவாக்கும் எந்த ஒன்றுமே நல்லதாக மட்டுமே இருக்கும்; ஆகவே நீங்கள் உங்களுடைய எண்ணங்களை மட்டுமல்ல, மற்றவர்களுடைய எண்ணங்கள் நிஜமாகவும் ஒரு காரணமாக இருப்பீர்கள்.