வாழ்க்கை – ஒரு மிகப்பெரிய சாத்தியக்கூறு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்கள் வாழ்க்கையில் எது நிஜமாக வேண்டுமென விரும்புகிறீர்களோ, அதனை நிஜமாக்கும் சக்தியுடனும் ஆற்றலுடனும்தான் நீங்கள் பிறந்தீர்கள். ஆனால் விழிப்புணர்வproperty இந்தச் சமுதாயம் உங்களுள் போட்ட தவறான நம்பிக்கைகளே, ‘வாழ்க்கையே சாத்தியமற்றவைகளின் தொகுப்புதான்’ என்று உங்களை நினைக்கச்செய்துவிட்டன.
ஆனால் நீங்கள் சத்தியத்தைத் தெரிந்துகொண்டாக வேண்டியுள்ளது. நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள், ஏனெனில் சுவாசித்தல் சாத்தியப்படுவதால்! அதேபோல், ஜீரணித்தல் சாத்தியப்படுவதால்தான், நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். உங்கள் உடலே ஒரு அதிசயம்தான். எல்லாமே சாத்தியப்படுவதால்தான் நீங்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறீர்கள்.
மனநலம், செல்வவளம், இனிமையான உறவுகள், சொந்த வாழ்க்கை, ஜீவன்முக்தி- என எந்த ஒரு பரிமாணத்திலும் நீங்கள் நினைத்ததை நிஜமாக்கலாம். ஆம், அது சாத்தியமே!
சாத்தியக்கூறுகளின் விஞ்ஞானம் - கல்பதரு தரிசனம்
நான் இரண்டு விஷயங்களை உங்களுக்கு இங்கு தரப்போகிறேன். ஒன்று, உங்கள் எண்ணத்தை நிஜமாக்கிடும் கல்பதரு தரிசன விஞ்ஞானம் இரண்டாவது, உங்களின் ஒரு எண்ணத்தை நிஜமாக்கிடும் வரம். உங்கள் எண்ணத்தை நான் நிஜமாக்கிக் காட்டுகிறேன். அப்போது மட்டுமே நீங்கள் இந்த கல்பதரு தரிசன விஞ்ஞானத்தின் சக்தியைப் புரிந்துகொள்வீர்கள்; அதனை உங்கள் வாழ்க்கை முறையாக்குவீர்கள்.
-பரமஹம்ஸ நித்தியானந்தர்