கல்பதரு தரிசன செயல்முறைக்குள் உங்களை வரவேற்கிறோம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
1. முதலில் நீங்கள் நிஜமாக்க விரும்பும் ஒரு எண்ணத்தை எழுதுங்கள். இரண்டு, மூன்று எண்ணங்களை எழுதிக்கொண்டிருக்காதீர்கள். உங்களுடைய எத்தனை எண்ணங்களை வேண்டுமானாலும் நான் நிஜமாக்க முடியும். ஆனால் ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்கள் ‘உள் உணர்வு’க்கு அதைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சக்தி இல்லை. ஒரு சமயத்தில் ஒரேயொரு எண்ணத்தை மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடிய சக்திதான் உங்களுக்கு இருக்கிறது. ஆகவே ஒரேயொரு எண்ணத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து எழுதுங்கள்.
2. அந்த விருப்பத்தைப் பற்றி உங்களுக்குள் இருக்கும் சந்தேகங்களையும் குறைவுணர்வுகளையும், ‘இது சாத்தியமே இல்லை’ என்று உங்களை நினைக்க வைக்கும் காரணங்களையும் எழுதுங்கள். உதாரணத்திற்கு, ஆரோக்கியமானவராக இருக்கவேண்டுமென்பது உங்களுடைய விருப்பம் என்று வைத்துக்கொள்வோம். அதைப் பற்றிய குறைவுணர்வுகள் என்பது, ‘என்னால் ஆரோக்கியமானாக ஆக முடியுமா?’ என்ற சுய சந்தேகமாகக்கூட இருக்கலாம். அல்லது ‘நான் ஆரோக்கியம் மிக்கவனாக மாறவே கூடாது’ என்ற சுய வெறுப்பாகக்கூட இருக்கலாம். அல்லது ‘ஆரோக்கியத்திற்கும் எனக்கும் சமபந்தமே இல்லை’ என்று ஆரோக்கியத்தை உங்கள் வாழ்க்கையின் பாகமாகக் கருதாத சுய மறுப்பாகக்கூட இருக்கலாம்.
3. மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு பகுதியையும் எழுதி முடித்துவிட்டு, கண்களை மூடி அமருங்கள். நீங்கள் எந்த எண்ணத்தை நிஜமாக்க விரும்புகிறீர்களோ, அது நிஜமாவதற்கான உணர்வை உருவாக்குங்கள். ‘உணர்வை உருவாக்குங்கள்’ என்று நான் சொல்லும்போது, நீங்கள் ஒரு கோடீஸ்வரராக வேண்டுமென்று விரும்பினீர்களென்றால், நீங்கள் ஏற்கனவே கோடீஸ்வரராகிவிட்டதாகவே உணர வேண்டுமென்பதையும், உங்களை ஒரு கோடீஸ்வரராகவே காண வேண்டுமென்பதையுமே குறிப்பிடுகிறேன். இதற்குத் தடையாக இருக்கும் உங்கள் சுய சந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்பு மனப்பாங்குகளை முழுமைசெய்து, அவற்றைக் கைவிடுங்கள்.
4. உங்களுக்குள் தெளிவாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளுங்கள்: “நான் என்னுடைய சுய சந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்புக்களையெல்லாம் நிறைவுசெய்து, அவற்றை முழுமையாகக் கைவிடுகிறேன்.”
இவ்வாறு சொல்லிவிட்டு, அடுத்த 21 நிமிடங்களுக்கு உங்கள் எண்ணத்தை நிஜமாக்கிடும் உணர்விலேயே நிலைகொள்ளுங்கள். அப்போது உங்கள் சுய சந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்பு போன்ற குறைவுணர்வுகள் அனைத்துமே வலுவிழந்துவிடும், உங்கள் மீது அவை கொண்டுள்ள பிடியும் தளர்ந்துபோகும். அதன்பின், நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் ‘உணர்வு’, உங்கள் குண்டலினி சக்தியாலும், குருவின் குண்டலினி சக்தியாலும் சக்தியூட்டப்பட்டு, நீங்கள் நினைத்ததை நிஜமாக்கும் சக்திக்களமாகிவிடும்.
5. நீங்கள் சிரத்தையுடன் உங்களுக்குள் ‘உணர்வை’ உருவாக்கும்போது, ஞானகுருவின் குண்டலினி சக்தி உங்கள் விருப்பத்தை நிஜமாக்கிடும் சக்தியைத் தரும். ஞானகுருவின் சக்தி உங்கள் ‘உள் உணர்வில்’ பாய்ச்சப்படும்போது, உங்கள் ‘உள் உணர்வு’ பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டுவிடும். இந்தக் கல்பதரு தரிசன செயல்முறையை நீங்கள் முழுமையான சி ரத்தையுடன் செய்யும்போது, உங்கள் ‘உணர்வு’ நிஜமாகிறது.
இந்தப் பிரபஞ்ச பேரியக்கம் தொடர்ந்து உங்கள் மீது ஆசீர்வாதத்தைப் பொழிவதைக் காண்பீர்கள். நீங்கள் உருவாக்கிய ‘உள் உணர்வு’ தானாகவே மலர்வதையும், மணம் பரப்புவதையும், நீங்கள் நினைப்பதையெல்லாம் நிஜமாக்குவதையும் காண்பீர்கள்.