KAILASA Library/வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர் வழங்கும் கல்பதரு தரிசனம்/கல்பதரு தரிசனம் : சாத்தியங்களுக்கான தீக்ஷைSign in
வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர் வழங்கும் கல்பதரு தரிசனம்

கல்பதரு தரிசனம் : சாத்தியங்களுக்கான தீக்ஷை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்கள் சாத்தியங்களை அடைவதற்காக உங்களுக்கு வழங்கப்படும் தீக்ஷையே கல்பதரு தரிசனம்.

பரமஹம்ஸ நித்தியானந்தர், தம்முடைய பூரணத்துவ சக்தியை உங்களுக்குள் பாய்ச்சவதன்மூலம் உங்கள் சுய சந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்புகளைக் கரையச்செய்கிறார். நீங்கள் நிஜமாக்க விரும்பும் எண்ணத்தை நிஜமாக்குகிறார்.

அவர், தம் சக்தியையும் ஆசீர்வாதத்தையும் மட்டுமல்ல, கல்பதரு விஞ்ஞான தீக்ஷையையும் அளிக்கிறார். அப்படியானால் மட்டுமே, இந்த விஞ்ஞானத்தை உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து பயன்படுத்தி, நீங்கள் நிஜமாக்க விரும்பும் எண்ணத்தை ‘ நீங்களாகவே’ நிஜமாக்கிக்கொள்ள முடியும்.

உங்களுக்குள் உணர்வை உருவாக்கி, அதில் ‘சாத்தியம்’ என்னும் விதையை விதைப்பதே தீக்ஷை

‘சாத்தியம் என்பது சாத்தியமே, ஏனெனில் அதுவே உங்கள் வாழ்க்கை’ - இந்த சத்தியத்தை, ஒரு வாழும்ஞானி கற்றுத்தருகிறார். அவர், சாத்தியம் என்னும் அக்னி ஜ்வாலையாகப் பிரகாசிக்கிறார். கல்பதரு தரிசனம் உங்களுக்குள்ளும் இந்தத் தீயைப் பற்றவைத்து, உங்களுக்குள் இருக்கும் ‘சாத்தியமில்லை’ என்ற எண்ணத்தை எரித்துவிடும். உங்களுக்குள் இருக்கும் சாத்தியங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்தும். அவரருகில் வரும் எவருமே, ‘தங்களுக்குக்கூட எல்லாம் சாத்தியமே’ என்பதை உணர்ந்துகொள்கிறார்கள்; தங்கள் வாழ்க்கையிலும் எல்லாம் சாத்தியப்படும் என்பதை உணர்ந்துகொள்கிறார்கள்.

அதன்பிறகு, நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்துவைத்திருப்பீர்கள், ஏனெனில் கல்பதருவின் வேர் உங்களுக்குள் ஆழமாக ஊடுருவிப் பரவியிருக்கிறது. கல்பதரு தரிசனத்தில் പങ്കுகொண்டு நீங்கள் விரும்பும் வரத்தை பெற்றுச் செல்வது மட்டும் போதாது, நீங்களே கல்பதருவாக மாறி, உங்களை சுற்றியிருப்பவர்களின் எண்ணங்களும் நிஜமாவதற்கு காரணமாக மாறுங்கள்!

கல்பதரு தரிசனத்தால் பயனடைந்த பக்தர்களின் அனுபவத் துளிகள்:

சுவாமிஜி, என்னுடைய கண்களைக் குணப்படுத்தினார். சுவாமிஜியின் கருணையும், மக்களுக்கு அவர் தரும் தியான சிகிச்சையும் என் கண்களைக் குணப்படுத்தின. கல்பதரு தரிசனம் பெற்ற அக்கணமே என்னுடைய பார்வையை நான் திரும்ப பெற்றேன்-சில நிமிடங்களுக்குப் பிறகுக்கூட இல்லை, சில நொடிகளிலேயே என்னால் நன்றாகப் பார்க்க முடிந்தது. மேடையிலிருந்து நானாகவே கீழிறங்கி வர முடிந்தது. இன்றுவரை என்னுடைய இயல்பான வாழ்க்கையை மூக்குக்கண்ணாடியின் உதவியின்றியே வாழ்ந்துவருகிறேன்.

-மஹந்த் ஸ்ரீ நித்ய அமிர்தானந்தா, சாஃப்டுவேர், சார்லெட், நார்த் கரோலினா, யு.எஸ்.ஏ

நான் மிகுந்த துக்கத்திலும், வெறுமையிலும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன். கல்பதரு தரிசனத்தின்போது என்னுடைய அந்த மனச்சோர்வைக் குணப்படுத்தினார்.இப்போது என் வாழ்வை நான் உற்சாகத்துடன் வாழ்ந்துவருகிறேன்.இப்போது எனக்குள் தேவையற்ற , காரணமற்ற ஒரு பதட்டம், கவலை என்று எதுவுமே இல்லை. என்னுடைய ஆஸ்துமா பிரச்சனையும் தீர்ந்தது. என்னுடைய சிறுநீரகப்பை பிரச்சனையும் சரியானது. கல்பதரு தரிசனத்தின்போது, நான் சுவாமிஜியிடம், "சுவாமிஜி, நீங்கள் எனக்கு உதவ முடியுமா?" என்று கேட்கிறபோதெல்லாம், "முடியும்," என்றுதான் சொல்லியிருக்கிறார்.அப்படி அவர் சொல்கின்ற மறுநாளே நான் எதைக்குறித்து மிகவும் கவலை கொண்டிருந்தேனோ, அந்த நோய்கள் எல்லாம் குணமாகிவிடும். சுவாமிஜி, என்னுடைய வாழ்வை எனக்கு மீட்டுக் கொடுத்துவிட்டார்.

-ஷீலா பித்திஷ் காம்பே, (Intensive Case Manager at AIDS Vancouver From Vancouver , British Coumbia)

என்னுடைய தந்தை ஒரு ஓய்வுபெற்ற பேராசிரியர். அவருடைய பண உதவியுடன் நான் என்னுடைய முதுகலைப் பட்டத்தைப் படித்துக்கொண்டிருந்தேன்.அவருக்கு நான் ஒரு பாரமாக இருக்கக்கூடாது என்று நினைத்தேன். ஆதலால் வேலைக்குச் சென்றுகொண்டே என் படிப்பைத் தொடர முடிவு செய்தேன். அதற்கேற்ற வேலையைத் தொடங்கினேன். அப்போதுதான் அதனுடைய கடினம் தெரிந்தது.ஏனென்றால் இதுநாள்வரை நான் எந்த ஒரு வேலைக்கும்போகாததால், எனக்கு முன் அனுபவம் இல்லை. ஆகவே எனக்கு ஆரம்ப நிலை பணியாளனைப் போன்று, குறைந்த சாம்பளம் கொண்ட வேலைகளே கிடைத்தன.நமக்குப் பிடித்தமான வேலை கிடைப்பதென்பது எவ்வளவு ஒரு கடினமான விஷயம் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்ததுதான்.

அதனால் இதைப் பற்றி சுவாமிஜிடம் கேட்க நினைத்தேன். 12.1.2014 அன்று நடைபெற்ற கல்பதரு தரிசனத்தின்போது, “சுவாமிஜி, என் வாழ்க்கையில் இதுவரை நீங்கள் எதுவெல்லாம் தந்தருளியிருக்கிறீர்களோ, அவற்றைக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எது எனக்கு நல்லது செய்யும் என்று நினைக்கிறீர்களோ, அதை எனக்குச் செய்யுங்கள்,” என்று கேட்டேன். உடனே சுவாமிஜியும், “அப்படியே ஆகட்டும், நான் எப்போதும் உங்களுடனேயே இருப்பேன்,” என்று ஆசீர்வதித்தார்.

இங்குதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது, சுவாமிஜியிடம் ஆசீர்வாதம் பெற்ற 30 நிமிடங்களுக்குள் ( நான் ஹைதராபாத் ஆசிரமத்திலேயே மற்ற பக்தர்களுடன்தான் பேசிக்கொண்டிருந்தே தன்) எனக்கு ஒரு நல்ல வேலைக்கான அழைப்பு வந்தது. நான் வீட்டிலிருந்தபடியே அந்த வேலையைப் பார்க்கலாம்; அலுவலகத்திற்குச் செல்லவேண்டியதில்லை; குறிப்பிட்ட வேலையைச் செய்தேயாக வேண்டுமென்ற இலக்கு நிர்ணயம் கிடையாது; சம்பளம், நான் நினைத்ததற்கும் மேல் - இப்படி அது நான் எதிர்பார்த்ததற்கும் மேலான பல நல்ல அம்சங்களுடன்கூடியதாகவே அந்த வேலை இருந்தது.

பெற்றோர்கள், வேலை, பணம், நேரம் என்று எந்தவித நிர்பந்தமும் இல்லாமல், இப்போது நான் என்னுடைய மேல் படிப்பைத் தொடர்கிறேன். பல வருடங்களாக எதற்கு நான் திட்டமிட்டுக்கொண்டிருந்தேனோ, அதை மிகச் சுலபமாக நிறைவேற்றிவிட்டார், சுவாமிஜி. அனைத்தையுமே நேர்த்தியுடன் கவனித்துக்கொண்டார். ‘வாழ்வில் எல்லாம் சாத்தியமே என்ற உணர்வின் வலிமையை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். ‘அவர் அனைத்தையுமே செய்கிறார், அதன்படி வெறுமனே நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு கருவி மட்டுமே நான்’ என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்கிறேன். ஒவ்வொருவருமே அனுபவிக்கவேண்டிய உணர்வு இது!

நம் எண்ணத்தை நிஜமாக்கும் ஓர் அரிய விஞ்ஞானமே கல்பதரு தரிசனம். அதனை எக்காரணத்திற்காகவும் தவறவிடாதீர்கள்.

  • B.V. ரவிகாந்த், சிவில் சர்வீஸஸ், ஹைதராபாத்
பெயர் (Name)
தொடர்புகொள்ள வேண்டிய எண் (Contact Number)
முகவரி (Address)
இணையதள முகவரி (e Mail Id)
படிப்பு (Education)
வேலை(Profession / Job)

நீங்கள் நிஜமாக்க விரும்பும் ஒரு எண்ணம்:

வெற்றுப் பெட்டி (Blank box)

உங்கள் விருப்பத்தைப் பற்றி உங்களுக்குள் இருக்கும் சந்தேகங்களையும் குறைவுணர்வுகளையும், 'இது சாத்தியமே இல்லை' என்று உங்களை நினைக்க வைக்கும் காரணங்களையும் எழுதுங்கள். உதாரணத்திற்கு, செல்வந்தராகவேண்டுமென்பது உங்களுடைய விருப்பம் என்று வைத்துக்கொள்வோம். 'நான் செல்வந்தனாக ஆக முடியுமா' என்ற சுய சந்தேகம். ' நான் செல்வந்தனாகிவிட்டால், ஒருவேளை அகங்காரம் பிடித்தவனாகிவிடுவேன்' என்ற சுய வெறுப்பு, 'என்னால் ஒருநாளும் செல்வந்தனாக முடியாது' என்று நினைப்பது சுய மறுப்பு வடிவில் இருக்கும் அனைத்து குறைவுணர்வுகளையும் பட்டியலிடுங்கள்.

Paramahamsa Nithyananda

Ebook ISBN: 979-8-88572-162-2

For Contact:

www.nithyananda.org
[email protected]
9500001867