நிறைவுசெய்தல் (Completion)
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நிறைவுசெய்தல், இது உங்கள் ‘உள் உணர்வை’த் தூய்மைப்படுத்தி, உங்களுள் வாழ்க்கையை நிகழ வழிவகுக்கும் ஒரு செயல்முறை.
உங்கள் ‘சுய சந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்பு’க்களை நிறைவு செய்யுங்கள்; பீனிக்ஸ் பறவை போல் எழுந்து பறக்க ஆரம்பியுங்கள். உங்கள் SDHD ஐ நீங்கள் நிறைவு செய்யும்போது, உங்கள் எதிர்காலத்தையே நீங்கள் மாற்றி எழுதிவிட முடியும்!
- பரமஹம்ஸ நித்யானந்தர்
‘நிறைவுசெய்யும்’ செயல்முறையை நடைமுறைப்படுத்தி,
பயனடைந்த பக்தர்களின் அனுபவத் துளிகள்:
டாக்டர் . ஸ்ரீலேகா (மா நித்ய தேவரூபானந்தா) குழந்தைகள் நல மருத்துவர் , பெங்களூரு
என் தந்தையுடன் நடந்த இனிமையான நிறைவுசெய்தல் அனுபவத்தை நான் உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
என் தந்தையின் இஷ்ட தெய்வம் காசி விஸ்வநாதராவார் . அவர் வருடத்துக்கு ஒரு மூன்று முறையாவது காசிக்குப் போய்வந்துவிடுவார் .அவர், இயற்கை, குழந்தைகள், விலங்குகள், மரங்கள் என எல்லாவற்றுடனும் அழகாக ஒத்துப்போய்விடுவார். ஆனால் ஏனோ ஒரு குருவுடன் மட்டும் அவரால் மனதார ஒத்திசைந்து செல்லமுடியவில்லை-அதுவும் பல அவதூறுகளுக்கு இலக்கான ஒரு குருவிடம் ஒத்திசைந்து செல்லமுடியவில்லை!
என்னுடைய குடும்பத்தினர் அனைவரும், எனக்கு எல்லா வகையிலும் உதவிகரமாக இருந்தாலும், இன்னும் சொல்லப்போனால் ஆசிரமம் சம்பந்தமாக நான் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் ஆதரவளிப்பவர்களாக இருந்தாலும், என்னுடைய தந்தை, என்னுடைய குருநாதரான பரமஹம்ஸ நித்யானந்தரை மட்டும் ஏற்றுக்கொள்ளமாட்டார் .
நான், பிப்ரவரி மாதம் நடைபெற்ற இன்னர் அவேக்கனிங் தியான முகாமில் கலந்து கொண்டேன். அப்போது சுவாமிஜி கற்றுக்கொடுத்த ‘நிறைவுசெய்தல்’ என்னும் பூர்ணத்துவ கிரியை என் தந்தையுடன் ஆரம்பிக்க விரும்பி, அவரிடம் பேசிடே னன், அவர் நான் பேசியதை முழுமையாகக் கேட்கவே இல்லை. ஆனாலும் நான், கண்ணாடியின் முன் அமர்ந்து பூர்ணத்துவ கிரியைச் செய்தேன். அதிலேயே எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட மனக்காயங்கள் பெருமளவில் குணமாகிவிட்டன .
பூர்ணத்துவ கிரியை, என் தந்தையின் பெருந்தன்மையையும், பொறுமையையும், ஆழமான அன்பையும், குழந்தைகளாகிய எங்களிடம் அவர் காட்டிய அக்கறையையும் என் கண்முன் நிறுத்தியது. இது, என் தந்தையைப் பற்றி வெகுநாளாக நான் கொண்டிருந்த அபிப்ராயத்தை முழுவதுமாக மாற்றிவிட்டது; என் மனத்திற்குள் இருந்த பாரத்தை கரையச் செய்துவிட்டது. அப்போதுதான் ஒன்று எனக்குத் தெளிவாகப் புரிந்தது: என் தந்தை என்றுமே ஒரு அருமையான மனிதர்தான் என்பதே அது!
இந்த முறை சிவராத்திரிக்கு காசிக்குச் சென்று திரும்பிய என் தந்தை என் தம்பியிடம் சொன்ன வார்த்தைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். என் தந்தை என் தம்பியிடம் சொன்னது: “என்னால் ஒன்றை நிச்சயமாகச் சொல்லமுடியும், காசியில் சிவனின் சாந்நித்தியத்தில் எனக்கு என்ன அனுபவம் கிடைத்தததோ அதே அனுபவத்தைத்தான் உன் அக்காவும் பிடதியில் பெற்றிருப்பாள். அவள் ஏன் அடிக்கடி பிடதிக்கு செல்கிறாள் என்று இப்போது எனக்குப் புரிகிறது!” என்று ‘சிவ ஆனந்தத்தில்’ மூழ்கித் திளைத்து வந்த என் தந்தை சொன்ன இந்த ஒரு வாசகம் போதும், பூர்ணத்துவ கிரியையின் மூலம் எனக்கும் அவருக்கும் இடையே நிகழ்ந்த நிறைவுத் தன்மைக்கு அத்தாட்சி.
எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட காயங்களிலிருந்து விடுபடவும், என் வாழ்க்கையில் என்னுடய பாகமாக விளங்கிய என் அருமை தந்தையின் மேன்மையைப் புரியவைக்கவும் உதவிய பூர்ணத்துவ கிரியை விஞ்ஞானத்தைத் தந்த சுவாமிக்கு என் மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன் .