நீங்கள் விரும்பும் விதத்தில் வாழ்க்கையை வடிவமைக்க...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
படைப்பும் உருவாக்கமும் பூர்ணத்துவத்திலிருந்தே தொடங்குகின்றன.
பூர்ணத்துவம் அடைய முதலில், நாம் முன்னுரிமை கொடுத்து செய்யவேண்டியது-SDHD யை நிறைவு செய்தலே.
SDHD (Self-doubt, Self-hatred, Self-denial)-என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் வார்த்தையின் தமிழ் பொருள்: 'சுயசந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்பு' என்பதாகும்.)
SDHD- இன்றைய மனிதகுலத்தைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய நோய் இதுவே!
சுய சந்தேகம் (Self-doubt)-உங்களைப் பற்றிய உறுதியான கருத்தோ அல்லது தீர்மானமோ இல்லாததிருத்தல். சுய வெறுப்பு (Self-hatred)- உங்களை எதற்குமே லாயக்கற்றவராக உணர்தல். சுய மறுப்பு (Self-denial)-உங்கள் கனவுகள் ஒருபோதும் நிவேற்றப்படமுடியாதவை என்று உணர்வது மட்டுமல்லாமல், அவை எப்போதுமே நிறைவேறப்போவதில்லை என்று உணர்வது.
SDHD ன் விளைவாக, இறுதியில் உங்களை நீங்களே கைவிட்டு விடுகிறீர்கள். இது சுய அழிவுக்கு (Self-destruction) வழிவகுக்கும். துரதிர்ஷ்டவசமாக, 'நீங்கள்' என்று எதை நீங்கள் நம்புகிறீர்களோ, அதை 'சுயசந்தேகம், சுய வெறுப்பு, சுய மறுப்பு' -இம்மூன்றும்தான் வடிவமைத்திருக்கின்றன. இம்மூன்றைக்கொண்டுதான் உங்களை நீங்கள் வடிவமைத்திருக்கிறீர்கள். ஆனால் ஒரு நல்ல செய்தி, இந்த நோய்க்கான மருந்து இருக்கிறது. அதுவே பூரணத்துவ கிரியா; அதனை தமிழில், 'நிறைவு செய்தல் அல்லது நிறைவேற்றுதல் என்கிறோம்.