KAILASA Library/வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர் வழங்கும் கல்பதரு தரிசனம்/கல்பதரு தரிசனம் தரிசனம்Sign in
வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர் வழங்கும் கல்பதரு தரிசனம்

கல்பதரு தரிசனம் தரிசனம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உடல் நலம், செல்வம், இனிமையான உறவுகள், ஆனந்தம், ஜீவன் முக்தி, மற்றும் பூர்ணத்துவமான வாழ்வு - இவையனைத்தையும் உங்களால் உருவாக்க முடியும்!

வாழ்க்கை என்பதே உங்கள் எண்ணத்தை நிஜமாக்கக்கூடிய ஆற்றல்தான்.

ஒவ்வொருவருமே உங்கள் உணர்வுக்குள், அதாவது ஹ்ருதய கர்பத்துக்குள் உங்கள் எண்ணத்தை நிஜமாக்கும் சக்தியைச் சுமந்துகொண்டுதான் இருக்கிறீர்கள்.

உங்கள் உள் உணர்வு, ஒரு தாயின் கர்ப்பபை போன்றதே. எப்படி ஒரு தாயின் வயிற்றுக்குள் ஒரு குழந்தை வளர்கிறதோ, அதேபோல் உங்கள் எண்ணங்களும் உங்கள் உள் உணர்வுக்குள் வளர்ந்து உருபெற்று, உலகில் பிறக்கிறது.

கல்பதரு தரிசனம் தரிசனத்தின்போது பரமஹம்ஸர், உங்கள் எண்ணத்தை நிஜமாக்கிடும் வரத்தை உங்களுக்கு தருவது மட்டுமல்லாமல், தம்முடைய சக்தியை உங்களுக்குள் ஆசீர்வாதமாக அளித்து உங்கள் எண்ணத்தை நிஜமாக்கவல்ல உங்களின் சொந்த சக்தியையும் விழிப்படையச் செய்கிறார்.

அவருடைய ஞான சக்தி, உங்கள் குறிக்கோளை அடைவதற்கு உங்களுக்கு அருள்புரிகிறது. உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே தலைவராக விளங்கவும், உங்கள் எதிர்காலத்தை நீங்களே படைத்துகொள்ளும் ஒரு திறமைமிகு படைப்பாளராகத் திகழவும் பரமஹம்ஸர் கற்றுத்தருகிறார்.