காற்றின்
அகவிதை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கற்கண்டாய் சுவைக்கும்
வசீகர
வார்த்தைகளின்
தொகுப்பல்ல அகவிதை.
பேச்சின் உயர்வடிவமான
சாதாரண
உரைநடை தொகுப்புமல்ல
அகவிதை
அகத்தை மலரச்செய்யும்
தியான ஞான
வார்த்தைகளின் தொகுப்பே
அகவிதை!
அக விதைகளை
அர்த்தமான வார்த்தைகளால்
அழகாக தூவித்துூவி
அகம் மலரச்செய்யும்
தியான ஞானவரிகளை
கவிதை என்றழைப்பதும்
உரைநடை என்றழைப்பதும்
நெறியாகுமோ?
அகம் மலரச்செய்யும்
அக விதைகளின் தொகுப்பை
அகவிதை என்றழைப்பதே
நெறியாகும்.
