KAILASA Library/காற்றின்/சிற்றின்பம்Sign in
காற்றின்

சிற்றின்பம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சிற்றின்பங்கள்
வலை.
பேரின்பம்
அலை.

சிக்கவைப்பது
வலையின்
இயல்பு !

அழைத்துச் செல்வது
அலையின்
இயல்பு !

பேரின்பத்தை
ஒரே ஒரு முறை
சுவைத்துவிடு

உள்ளிருக்கும்
ஆனந்தக் கடலுக்குள்
இழுத்துச் செல்லப்படுவாய்
உன்னையும் மீறி !