KAILASA Library/காற்றின்/அளப்பரியதுSign in
காற்றின்

அளப்பரியது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வாழ்க்கை - ஒரு வெகுமதி !

அணுப்பொழுதும் - அது
அள்ளித்தரும்
அனுபவங்கள்
அளப்பரியது - அதை
அனுபவிக்கத் தெரிந்தால்
நரகமும் சொர்க்கம் !

சொர்க்கமும்
நரகமும்
வெளியில் இல்லை
அனுபவித்தலில்.

இக்கணம் நீட்டும்
அனுபவத்தை
'அப்படியே' அள்ளிக்கொள்
இப்பொழுதும்
எப்பொழுதும் - சொர்க்கம்தான் !