காற்றின்
அதிர்ஷ்டத்தின் ரகசிய
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அதிர்ஷ்டம்
துரதிர்ஷ்டம் - இவை
மனம் காட்டும்
வண்ணங்கள்.
நிஜமற்ற
நிழல்கள்
ஆசைகொண்ட மனம்
அதிர்ஷ்டத்தைப் பார்த்து
சபலப்படும்,
பீதிகொண்ட மனம்
துர்அதிர்ஷ்டத்தை பார்த்து
துக்கப்படும்.
உண்மையில் இவை
நிறமற்ற
நிகழ்வுகள்.
இந்த
மின்மினிகளுக்காக
வெண்ணிலவை
இழக்காதீர்கள்!
இந்நிலவுலகின்
வெண்ணிலவு
வாய்ப்புகள் !
வாய்ப்புகளை
வலியச்சென்று பயன்படுத்திக் கொள்ளுங்கள்
எதிர்காலம்
உங்களை
அதிர்ஷ்டசாலி என்றழைத்து
மகுடஞ்சூட்டும்.
அதிர்ஷ்டத்தின் ரகசிய வழி இது !
