காற்றின்
போகி - துரோகி -
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தனக்கு மாத்திரமே வாழ்பவன்
போகி.
மற்றவர்களுக்கு
மாத்திரமே வாழ்பவன்
துரோகி ( சுய ).
தனக்காவும்
மற்றவர்களுக்காகவும்
சேர்ந்து மகிழ்ந்து, நெகிழ்ந்த
சேவை குணத்தோடு வாழ்பவனே
யோகி.

அது
நான், எனது
என்று
கணத்திருப்பது
அது
தன்னைத் தவிர
அத்தனையும் அறிந்து
இருளில் உழல்வது
அது
நாம், நமது
என்று
சுவைத்திருப்பது
அது
தன்னையறிய விடாது
தன்னுள் லயிக்கவும் விடாது
ஆனந்தமின்றி திகைப்பது!
உன்னை திகைக்க வைப்பது!
ஆதலால்
அகத்தின் காரத்தை
கரைத்துவிடுங்கள்!