KAILASA Library/காற்றின்/தியான சூத்திரம்Sign in
காற்றின்

தியான சூத்திரம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • மூடிய கண்ணுக்குள் எண்ணங்களை, மனக்காட்சிகளை,
  • நிறுத்தாதே!
  • தொடராதே!
  • உருவாக்காதே!
  • எண்ணங்களையும் காட்சிகளையும் தொடர்ந்து பார்.

பொங்கும் மனம்
அடங்க
ஆரம்பிக்கும்.

என்றோ
அடங்கிப் போய்விட்ட
ஆனந்தம்
பொங்க ஆரம்பிக்கும்
பார்... தியானித்துப் பார்!

வாழ்விற்கும்
சாவிற்கும்
இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்
நம்பிக்கை.

மனிதன் காற்றை சுவாசிப்பதால் அல்ல

மனிதன்
நம்பிக்கையை சுவாசிப்பதால் தான்
வாழ்கிறான்

மனத்தின்
போலி நம்பிக்கைகள்
காலியாகட்டும்

காரணம்
நம்பிக்கையே வாழ்வு!
நம்பிக்கையே பிரச்சினை!
நம்பிக்கையே தீர்வு!
வாழ, சுவாசிக்கும்
நம்பிக்கையை
சுத்திகரியுங்கள்...

வேலியிடப்பட்ட
வாழ்க்கை
விசாலமாகும்.
உல்லாசக்காற்று
உள்ளுக்குள்ளேயே வீச ஆரம்பிக்கும்