காற்றின்
உச்சத்தை உணருங்கள், உணத்துங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

'உலகையே நேசிக்கிறேன்' - இது எளிது
ஏனெனில்
இது வெற்று வார்த்தை.
நிஜத்தில்
பக்கத்து வீட்டுக்காரன்
பெயர் கூடத் தெரியாது
மனித உறவுகள்
மலிந்து போயின.
உண்மையில்
மனித உறவுகள்
மகத்தானவை - அவை
உணர்வுகளின் முகங்காட்டும்
கண்ணாடிகள்.
ஆனந்த வானின்
சன்னல்கள்!
உறவுகளிடம்
உச்சத்தை
உணருங்கள்.
உணர்த்துங்கள்.
