KAILASA Library/காற்றின்/வாழ்வு - சாவுSign in
காற்றின்

வாழ்வு - சாவு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வாழும்போது
சாவைப்பற்றி
தெரிந்து கொள்ளாவிட்டால்

சாகும் போதுதான்
வாழ்வைப் பற்றியே
தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும்!

வாழும்போதே
தெரிந்து கொள்வதுதான்
புத்திசாலித்தனம்

வாழ்வின் தரம்
சாவின் தரத்தால்
அறியப்படும் நிறம்.

சாவும் கலையே
அதைக் கற்றுக்கொள்ளுங்கள்
வாழ்வுக் கலை மூலம்.