KAILASA Library/காற்றின்/வாழ்க்கைப்புதிர்...Sign in
காற்றின்

வாழ்க்கைப்புதிர்...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வாழ்க்கைப் பாடம்
எளிது!
மாணவன்தான்
குழம்பியிருக்கிறான்

வாழும்போதே
வாழாதவன்
சாகும்போது
சாகமுடியாமல்
தவிப்பான்

நோகடிப்பது
முட்டாள்தனம்
நொந்துபோவது
மகா முட்டாள்தனம்!

  • மனிதனின் கண்களுக்கு தெரிவது

மனம்
பார்க்க வேண்டுமென
நினைப்பவை
விரும்புபவை
மட்டுமே.

  • தெரியுமா உங்களுக்கு? எளிமையாயிருப்பது மிக கடினமானது.

காரணம்
கடினங்களை மட்டுமே
காணும்
காட்டும்
கள்ள மனது

  • நல்ல மனதை கள்ள மனதாக்கி உள்ளே ஒளிந்து கொண்டு உன்னையே உலுக்கும் அகங்காரமது சாகட்டும்!

அது
மெல்ல சாக
பார்வையின்
போர்வை அகலட்டும்

எல்லாம் தெரியட்டும் எளிமையாகட்டும் எல்லாம்