ரஸவாதிகளாகுங்கள்.
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
10 நாட்கள் விடுமுறை வேண்டுமென அலுவலகத்திற்கு எழுதிக் கொடுத்துவிட்டு, இந்தப் பக்கத்தைத் தொடருங்கள்.
பத்தே பத்து நாட்கள் மட்டும்! இனி சொல்வதைக் கடைபிடித்து விட்டால் உங்கள் வாழ்வே மாறிப்போகும். புதிய உலகம் காணும் புது மனிதராகி விடுவீர்கள்.
மீன் தொட்டியின் மூலையிலிருக்கும் உபகரணத்திலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் காற்றுக் குமிழிகள் போல...
உங்களுக்குள் எங்கோ ஒரு மூலையிலிருந்து
எண்ணங்கள் தொடர்ந்து உற்பத்தியாகிக்
கொண்டேயிருக்கின்றன.
இந்த எண்ணங்களை எட்டிப் பிடிப்பதே இந்த தியானத்தின் இலக்கு.
இந்த தியானத்தின் ஒவ்வொரு படிகளையும், நிதானமாக ஒரு முறை செய்து அனுபவமாக மாற்றிவிட்டு, அப்புறம் அடுத்ததிற்குள் செல்லுங்கள்.
முதலில் உடல் எனும் தொட்டிக்குள் நுழையுங்கள். உங்களுக்குள் ஓர் மீன் போல் உணர்வு வழியாய் நீந்திச் செல்லுங்கள்.
அடுத்து, தூர இருந்து பாருங்கள். "நிற்காமல், உங்களின் பங்கு எதுவுமில்லாமல், தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றன - எண்ணங்கள்!" என்பதைப் பார்த்து, உணர்ந்து, உறுதி செய்யுங்கள்.
பல வண்ண எண்ண தொகுப்பே மனம்!.
அடுத்து. இந்த எண்ணங்கள் பிறக்கும்போதே.
அவற்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து
விடுங்கள்.
முதலில், வந்த எண்ணங்களைக் கவனிப்பீர்கள். விழிப்புணர்வு விரிவடைய விரிவடைய... அடுத்தபடியாக, வருகின்ற எண்ணங்களைக் கவனிப்பீர்கள்.
இன்னும் கொஞ்சம் பயிற்சியை ஷ்ரத்தையோடு செய்யச் செய்ய... இனி வரப்போகின்ற எண்ணங்களைக் கவனிப்பீர்கள்.
கையாலேயே குருவி பிடிக்கக் கற்றுக் கொண்டவன்போல, உணர்வாலே எண்ணங்களைப் பிடிக்கும் கலையைக் கற்றுக்கொண்டபின் செய்ய வேண்டிய அடுத்த கட்டதியான பயிற்சி...
எண்ணங்கள் எங்கிருந்து பிறக்கிறது எனத் தேடிச் செல்லுங்கள். எண்ணங்களின் பிறப்பிடம் செல்லுங்கள்.
நீங்கள் இதுவரை வந்துவிட்டால்... உள்ளேயிருக்கும் பாதாள அறையை தொட்டு விட்டீர்கள் என்றார்த்தம்.
காரணம், எண்ணங்களின் பிறப்பிடமே அகங்காரத்தின் இருப்பிடம்!.
இந்து மதம் சொல்லும் கார்மாக்கள், கிறிஸ்த்துவ மதம் சொல்லும் பாபங்கள், மற்றும் ஏனைய மதங்கள் மார்க்கங்கள் குறிப்பிடும் “வேதனைக்கான மூலகாரணங்கள்” ஒளிந்திருக்கும் இடம் இது தான்.
இதனை “நரகத்தின் நுழைவாயில்” என தானோ மதம் குறிப்பிடுகிறது.
இந்த பாதாள அறைக்குள் செல்லும் போது பயம் வரலாம். பயப்பட வேண்டாம் - இந்த பயத்தை மட்டும் தாண்டிவிட்டால், உணர்வு சரியான சொர்க்கத்துக்குள் இழுத்துச் செல்லப்படுவீர்கள்.
ஷ்ரத்தையோடு செய்யும் எந்தவொரு மனிதனுக்கும் இது சாத்தியமானதே.