அவர்களை திருத்த நீங்கள் யார்?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
"நான் திருந்த வேண்டும்" என்ற எண்ணம் ஒருவருக்கு உதிக்காதவரை, நீங்கள் எவ்வளவு துல்லியமாக அவரின் தவறுகளை கண்டுபிடித்துச் சொன்னாலும் அவர் திருத்திக் கொள்ள மாட்டார்.
"நான் திருந்த வேண்டும்" என்ற எண்ணம் ஒருவருக்கு உதித்த பின், நீங்கள் அவரின் தவறுகளைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது. என்னுமளவுக்கு அவரின் தவறுகளை அவரே கண்டுபிடித்துத் திருத்திக்கொள்ள ஆரம்பிப்பார்.
இது வாழ்க்கையின் சத்யம்.
எப்படி யோசித்துப் பார்த்தாலும்...
நீங்கள் மற்றவர்களிடம் கண்டுபிடித்துச் சொல்லும் தவறுகளால். உங்களுக்கோ மற்றவருக்கோ எந்தவொரு காலத்திலும் பலனில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?
மற்றவரைத் திருத்துகிறேன்,
உலகை திருத்தப் போகிறேன் என்பதெல்லாம் பைசாவுக்குப் பயன்தராத செயல் என்பது புரிகிறதா?
நீங்கள் மற்றவரிடம் தவறு கண்டுபிடிப்பதால் வரும் பலாபலன்கள்...
திருந்த விரும்பாதவரை வருந்த விடலாம்...
அவரை வருந்த விடுவதின் விளைவாக,
மற்றவரை திருத்த துடிப்பது...
நீ திருத்துவதை தள்ளிப் போடும்
ஆழ் மன தந்திரம்.
உங்கள்மீது வெறுப்புக் கொள்ள ஏதுவான சூழல்களை நீங்களே உருவாக்கித் தரலாம்.
அப்பாவிகளை நோகடிக்கலாம்.
உங்களைப் பார்த்தவுடனேயே, “ஐயய்யோ இன்று என்ன குற்றம் சொல்லப் போகிறாரோ”? எனப் பீதி கொள்ளச் செய்யலாம்...
முட்களைக் காரணங்காட்டி, ரோஜாவை இழக்கும்
அப்பாவி போல மனிதர்களையும் அவர்களின்
நெருக்கத்தையும் தொடர்ந்து இழந்து
கொண்டேயிருக்கலாம்.
எனவே சொல்கிறேன்...
வருந்துவதும், வருந்த விடுவதும் மட்டும்தான் பாவம்.
திருந்துவதும், மற்றவர் திருந்தும்போது திருந்தட்டும் எனத் திருந்த விடுவதும் புனிதம் மட்டுமல்ல. அது வாழ்வியல் தியானம். இதைச் செய்பவரே புனிதர்.
ரசவாதத்தை நிகழ்த்துபவருக்கு மட்டுமே மேலுள்ள சத்தியங்கள் சாத்தியமாகும்.
இனி நீங்கள்... வருந்தப் போகும் காலங்களையும், மற்றவர்களைத் திருந்துவதாய் நினைத்து அவர்களை வருந்த விடப் போகும் காலங்களையும் குறித்து மிக எச்சரிக்கையோடிருங்கள்.
இந்தக் காலங்களில் வருத்தத்திற்குப் பதில், திருத்தம் உங்களுக்குள் நிகழ ஏதுவான எல்லாச் செயல்களையும் செய்யுங்கள்.
பாவம் புனிதமாகட்டும். வருத்தம் திருத்தமாகட்டும்.
சோக காலங்கள் தியான காலங்களாகட்டும்.

வருந்த... வருத்த... ஒருவரை ஆண்டுவது,
- நான் புனிதன்.
- நான் புனிதன் அல்ல. எனும் இரண்டில் ஒரு எண்ணமே.


சாதனை பூக்க...
அந்த பூத உடல்
வெளியேறட்டும்
சந்திரனுக்கு விஜயம் செய்த மனிதனென்னும் சாகசக்காரன், அதுபோதாதென்று செவ்வாய் தாண்டி அண்டத்துள் செல்லத் தயாராகிறான்.
ஆனால், அருகிலுள்ள வாழ்வை இழந்து கொண்டேயிருக்கிறான், இன்னும் நெருங்கவே இல்லை.
நினைத்ததை நினைத்தபடி பேச முடியவில்லை.
காரணம் நீதிநெறிகள் குரல்வளையை நெருக்குகின்றன.
விரும்பியபோது சிரிக்க முடியவில்லை. அழ
முடியவில்லை. நியாயமான உணர்வுகளைக் கூட
அடக்குகிறான். காரணம் கேட்டால் "நாகரீகம்"
என்கிறான்.
தைரியமாய் சிரிக்க முடியாத அளவுக்கு மனிதன் பயந்து போயிருக்கிறான். என்னவிதமான வாழ்க்கை இது?
பயப்படுகிறான். தயங்குகிறான் வாழ்வின் பல அம்சங்களுக்கு!
ஆழ்மனதில் நிகழும் இவற்றால், மேல்
மனதிலிருந்து எண்ணங்களை எடுக்கும் மனிதன்
சொல்கிறான்...
"எனக்கு இந்த இந்த விஷயங்கள் பிடிக்காது... மேடையில் பேசப் பிடிக்காது... கிறூக்கர் போல வாய் பிளக்கச் சிரிப்பது பிடிக்காது...
தயக்கம் கண்டு தயங்கக் கூடாது. எப்போதும் இறங்கிப் போவது எனக்குப் பிடிக்காது..."
- இப்படி சமூக வாழ்வுக்கு எதிராகப் பேசி வாழ்க்கையை இழந்து கொண்டேயிருக்கிறான்.
இதுபோன்ற எல்லா வாக்கியங்களும் உபயத்தால், வெளியே வந்து விழும் வார்த்தைகள்தான்.
சுருங்கச் சொன்னால்...
'தயக்கம்' உங்களுக்குள் எப்படி பார்க்கும் வாழ்க்கை சம்பவம் எதுவாக இருந்தாலும், அந்த சம்பவத்திற்கு ஆழ்மனதில் நீங்கள் பயந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உங்களின் எல்லாத் தயக்கங்களையும் பட்டியலிடுங்கள். சிறிய தயக்கத்தைக் கூட விட்டுவிட வேண்டாம்.
பட்டியலிட்ட தயக்கங்களை இனி சந்திக்கப்போகும் காலங்களில் சும்மா விடாதீர்கள். ரௌவ்ரமாகுங்கள்.
பயம் நாசூக்காய் தலைக்காட்டும் அந்த நிமிடங்களில்...
'தயக்கம் இருந்தாலும், இருந்துவிட்டுப் போகட்டும்' எனச் சொல்லி தயக்கம் துறந்து சிந்தியுங்கள்.
தடைபடாமல் செயல்படுங்கள். தயக்கத்தின் தலையை பிடித்து தயக்கமில்லாமல் திருகி இழுத்தெறியுங்கள். தயக்கத்தின் புற உடலான பயம் வெளியே வந்து விழும்.
தயக்க காலங்களை தியான காலமாக்குங்கள்!.

தயக்கம் விட்டு எகிறி குதி...
ஆனந்தம் ஆடும், நல்மதி தவழும்,
அமைதி பூக்கும், ஞான சன்னதியில் விழுவாய்.
தில் இருந்தால்
சோதித்துப் பார். மனிதவ்!

