KAILASA Library/ரஸவாதம்/தூங்கும்போது நீ எங்கே போகிறாய்?Sign in
ரஸவாதம்

தூங்கும்போது நீ எங்கே போகிறாய்?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஞானிகள் மனிதனை விட பல ஆயிரம் மடங்கு விழிப்புணர்வு அதிகம் பெற்றவர்கள்.

இந்த மாயை வாழ்க்கையை நிஜமென்று நம்பி நீங்கள் படும் கஷ்டங்களைப் பார்த்தால்... ஞானிகளுக்கு கருணை பொங்கும். மனிதனின் பரிதாப நிலை புரியும்.

"நிஜத்தின் பொய்மை" அவர்களுக்கு புரிந்துவிட்ட காரணத்தால்தான் தொடர்ந்து ஞானியர் மனிதகுல சேவைக்காக வருகிறார்கள். தூங்குபவனை எழுப்பு கிறார்கள்.

நிஜவாழ்வெனும் கனவு இன்னும் ஆழமானது. ஞானிகள் எழுப்பினாலும், நீங்கள் எழ விரும்ப வேண்டுமே?

இந்த ஞானக்கருத்துக்களை ஆழமாய் தியானியுங்கள். நீங்கள் விழித்துக்கொள்வீர்கள்.

இந்த விழிப்பைத்தான் "மகா ரஸவாதம்" என்றழைக்கிறேன்.

மகா ரஸவாதத்திற்கு தயாராகுங்கள்.

Illustration of thought cloud and brain patterns

எழு! எழு! எழு! என
ஏழு முறை கூட,
எழுப்ப முடியும்.
ஆனால் எழுணுமே!

Portrait
Portrait of a person with a turban

நீங்கள் சாதாரணமானவர் அல்ல.
நீங்கள் எல்லாவற்றையும்
அறிந்தவர்

உங்களைச் சுற்றி நடக்கும் காரியங்களில் நூறில் இரண்டு சதவிகிதம் மட்டுமே உங்களின் கவனத்துக்குள் வருகிறது என்கிறார்கள் - மனநல ஆராய்ச்சியாளர்கள்.

அப்படியென்றால்... மீதமுள்ள 98% உங்கள் கவனத்திற்குள் வராததற்கு யார் பொறுப்பு?

மேற்கண்ட உண்மையைச் சொன்ன அதே மருத்துவர்கள் சொல்கிறார்கள்...

"உங்களின் உணர்வு மனதில் (Concious mind)
2% மட்டுமே பதிவானாலும், உங்களின்
உணர்வுமனதில் (Sub - Concious, Unconcious
mind) தொடர்ந்து எல்லாமே பதிவாகிக்
கொண்டேயிருக்கிறது".

அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாயிருக்கிறான்.

நொடியில் தன்னை அடித்துப் போட்டுவிட்டுப் போன காரின் நம்பரையும்; அந்தக் கார் கலர், ஸ்டிக்கர்; காரில் விழுந்திருந்த சிறு கீறல்கள் வரை அவனால் சொல்ல முடிகிறது.

ஹிப்னாடிஸத்திலிருந்து எழச்செய்து, அவன்
உணர்வு மனநிலையில் இருக்கும்போது அவனிடம்
அதே விபத்து பற்றி விசாரித்தால்...

தன்னை மோதியது எந்த மாதிரியான கார் என்று சொல்வதற்கே தடுமாறுகிறான்.

மந்தமாய் வாழ
மனம் விரும்புகிறது காரணம்
'தமஸ்'
எனும் மந்த குணம்.

எல்லாம் அறிந்தவனே, எதுவும் அறியாதவனாயிருக்கிறான்.

அவன் அறிந்து கொண்டிருப்பதை அவனே அறிந்து கொள்ளாதது போல் பேசுவது... வினோதமாய் தோன்றவில்லையா? வினோதமானாலும் உண்மையே.

அறிந்திருப்பவனையே அறியாதவன் என நம்பவைக்கும் அது எது? அப்படி நடிக்கவைக்கும் அது எது?

அது - மந்தமாகவும், சோம்பலாகவும் இருக்க விரும்பும்... மன விருப்பமே! அது அகங்காரத்தின் ஒரு பகுதியே!

இதைப் படிக்க உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் தோன்றும். ஆனாலும் உண்மையே.

உங்களின் உணர்வை 2% லிருந்து3% வரை அதிகப்படுத்தினால் கூடப்போதும்.

உங்களின் மாய விருப்பம் வெளிச்சத்துக்கு வரும். ஒருமுறை இதைக் கண்டுகொண்டால் போதும்... அறிந்தவைகளுக்கும் அறியாதவைகளுக்கும் நடுவிலிருக்கும் மாயத்திரை எளிதாக விலகி விடும். விலக்க ஆரம்பியுங்கள்.

விருப்பம் ஒரு ரஸவாத சக்தி.

அதனால் தான் விருப்பத்தை இவ்வளவு ஆழமாய் தியானிக்க சொல்கிறேன்.

விழிப்புணர்வை அதிகப்படுத்துங்கள். ரஸவாதம்

graphic illustration of energy burst over horizontal lines

> பிச்சைக்காரனாய் இருப்பதும்,
> ஒருவரின்
> சுயவிருப்பப்படியே நிகழும்
> மாயம்தான்.

Paramahamsa Nithyananda
Paramahamsa Nithyananda
Portrait of a spiritual figure

துன்பங்களையும்
இன்பங்களாக்கும்
ரஸவாதம்.

"சாலை இப்படி திடீரென வளைந்திருக்கக் கூடாது", என சைக்கிளிலிருந்து விழுந்தவன் சொன்னால் அது நியாயமானதாக இருக்குமா...?

"சில வருடங்களுக்கு முன் இது நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்" என சொல்வோம், நமக்கு நல்லது நிகழும் போதெல்லாம்.

"இவ்வளவு சீக்கிரத்திலேயே இப்படி நடந்திருக்கக் கூடாது" என நொந்துகொள்வோம் நமக்கு கெடுதி நிகழும்போதெல்லாம்.

சைக்கிள் ஓட்டுவது ஒரு கலை.

அந்தக் கலையை முறையாய் பயிலாதவனே
"சாலை கோணல்" எனச் சொல்வான். வாழ்க்கையை
நடத்துவதும் ஒரு கலையே!

வாழும் கலை பயிலாதவனே "எனக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது" என்பான்.

வாழும் கலை கற்றவன் வாழ்க்கைச் சாலையைப் பற்றிக் குறை சொல்ல மாட்டான்.

வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டுவதில் நயம் சேர்த்துக் கொண்டேயிருப்பான்.

நாம் சந்திக்கும் தோல்விகள், நம் வாழ்வுக் கலையை வளர்க்க உதவும் பயிற்சிக் களங்கள்.

ஆனந்தத்தை ருசிக்க...
தலையில் குடியிருக்கும் நீங்கள்
இதயத்துக்கு
இடம்பெயர்ந்தாக வேண்டும்.

கஷ்டப்பட்டால் கூட முழுமையாய் கஷ்டப்படுங்கள். அப்படிச் செய்தால் கஷ்டம் அதன் இஷ்டம்போல், உங்களைக் கஷ்டப்படுத்துவது தடுக்கப்படும்.

வாழ்வில் வரும் இன்பமானாலும், துன்பமானாலும் - அதை ஆழமாய் அனுபவியுங்கள்.

நயமாய் அனுபவியுங்கள். காரணம், அந்த நிமிடம் அது தவிர்க்க முடியாதது. துன்ப காலத்தைக் கூட ஆழ்ந்தனுபவித்து... அதை தியான காலமாக்குங்கள்.

துன்பத்தை நயமாய் அனுபவிப்பது நிச்சயம் ரஸவாதம்தான்.

செய்து பாருங்கள்.

"ஆம்! நீங்கள் சொல்வது நிஜம் தான்" என சொல்வீர்கள்.

Illustration of bamboo reeds against a landscape

துன்பம் கூட தியானமாகும் - அணுகுமுறையால்!

Paramahamsa Nithyananda in meditation
Portrait

எதையும் விடாதீர்கள்.
நுல்லியமாகக் கிரகியுங்கள்...
- இது ஒரு தியானம்.

கடப்பாரையை இறுக்கப்பற்றித் தூக்கும் விரல்கள், ஒரு டியூப்லைட்டைத் தூக்கும்போது தன்னை மாற்றிக் கொள்கிறது. பதமாகப் பற்றுகிறது.

கடப்பாரையை இறுக்குமளவுக்கு டியூப்லைட்டைப் பற்றினால்...

டியூப்லைட்டின் கதி என்னவாகும்!.

இந்தப் பொருளுக்கு இவ்வளவு பவுண்ட் பிரஷர்
கொடுத்து தூக்க வேண்டுமென விரல்களுக்கோ,
மூளைக்கோ, தனிப்பட்ட பாடம் எதுவும்
எடுக்கப்படவில்லை.

அப்படி இருந்தும், ஒரு பொருளைக் கையாள, அதற்குத் தேவையான அளவு தாண்டி, அழுத்தம் நாம் தருவதில்லை.

காரணம் மூளை வளர்ச்சி.

இதேபோல், விதவிதமான மனிதர்களின் குணம் கண்டு கையாளத் தெரிந்து விட்டால்.. அதுதான் குண முதிர்ச்சி, பக்குவம், ஞானம்.

மூளை ரீதியாகப் பகுத்து ஆராய்வதால் மனிதர்களின் குணத்தைப் படித்து விட முடியாது. இதற்கு இதயரீதியான, உணர்வு ரீதியான அணுகுமுறை தேவை.

இந்த குணமுதிர்ச்சியைப் பெற சில டிப்ஸ்...

இதயரீதியான, உணர்வு ரீதியான அணுகுமுறை தேவை.

முதலில் உங்களின் வார்த்தைகள், குரல் முகபாவம் போன்றவற்றை ஒவ்வொரு பேச்சின் போதும் முடிந்தளவுக்குக் கிரகியுங்கள்.

அடுத்து, உங்களின் பேச்சு மற்றும் அசைவுகளால், மற்றவர்களின் முகபாவம், கண்கள், குரல், வார்த்தைகள், எந்த அளவுக்கு மாறி வெளிப்படுகின்றன, என்பதைக் கிரகியுங்கள்.

கடைசியாக, அதே வார்த்தைகள், முகபாவணைகளை, மற்றவர்கள் உங்களை நோக்கி அனுப்பியிருந்தால், உங்களுக்குள் என்ன நிகழ்ந்திருக்கும், என ஆழமாய் உணர்ந்து பாருங்கள்.

இதை, எல்லா நல்ல, கெட்ட நிகழ்வுகளுக்கும் செய்து பாருங்கள்.

மற்றவர்களால் உங்களுக்குள்ளும், உங்களால் மற்றவர்களுக்குள்ளும், ஏற்படும் மாற்றங்களைத் துல்லியமாய் கிரகியுங்கள். இது ஒரு தியானம், ரஸவாத நிகழ்வு.

இந்தச் செயல்களை செய்யச் செய்ய நீங்கள்
கற்றுக்கொள்ளும் பாடங்களே உங்களை முதிரச்
செய்யும். குணமுதிர்ச்சி பெறுவீர்கள்.

Illustration

கிரகி... குணம் முதிரும்.

Paramahamsa Nithyananda standing on a mountain road with a walking stick
Sadhguru

நாகரிக தந்திரங்களை கூட
ரசவாதம்
கரைத்துவிடும்.

“அப்புறமாவது அசைபோட்டு ஜீரணிக்கலாம்” எனும் வாய்ப்பளிக்கப்படாத மிருகம் மனிதன்.

இருந்தும், அவன்தான், மெல்லாமல் விழுங்குகிறான். நாகரிகமாய் வயிற்றுக்குள் கிரைண்டரா இருக்கிறது? போட்டதையெல்லாம் மசித்துத் தள்ள.!

நுனி விரல்களில் சாப்பிடுவது, உதடு நனையாமல் குடிப்பது, குதிங்கால் தரையில் படாமல் நடப்பது, என்ற எல்லாமே நாகரிகங்கள்.

இயற்கையோடு கலப்பதைக் குறைக்கும் தந்திரங்கள்.

இவ்வளவு ஏன்? மூச்சு கூட மார்பளவிலேயே சிக்கிக் கொள்கிறது. நுரையீரல் முழுவதும் சுவாசக் காற்று வியாபிப்பதில்லை. நுரையீரலின் அடி வரை செல்வதில்லை.

‘ மனிதன் வாழ்வது அரைகுறையானது’ எனச் சுட்டிக்காட்ட உதவும் ஒரு சில தடையங்களே மேலே நீங்கள் படித்தது.

பல தடையங்கள் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு உங்களின் உடல், உயிர் உணர்வோடு கலந்துவிட்டது. எல்லாம் களங்கமாகிப் போனது.

களங்கப்படுத்தியது எது?

குழந்தைப் பருவத்திலிருந்தே பல சூழ்நிலைகளில்...

இயற்கையோடு கலப்பதைக் குறைக்கும் தந்திரங்கள்.

"இதுதான் சரி".

"இதுதான் தவறு", எனும் வரிகள் உங்களுக்குள் சொருகப்பட்டு விட்டன.

அவை நாகரிகம் எனும் பேரில் உங்களுக்குள் நுழைந்து விட்டன.

மனிதன் தான் செய்வது தவறானதாக இருந்தபோதும், "நான் சரியாகத்தானே செய்கிறேன்." என அவனைச் சொல்ல வைப்பவை நாகரிகம் எனும் பெயரில் நுழைந்துவிட்ட இந்த தந்திரங்களே.

இவை கண்டுபிடிக்கப்பட வேண்டும். வெளித் தள்ளப்பட வேண்டும்.

உங்கள் உடலிலும், மனதிலும் பல சச்சரவுகளை உருவாக்கிவிட்ட இந்த நாகரீக தந்திரங்களைத் தேடித் துரத்தும் மந்திர வழி... 'பூரணமாய் தந்திரங்களைச் செய்யுங்கள். அது மறையும்.'

அரைகுறையாய் வாழும் எல்லாக் காலங்களையும் கவனத்துக்குள் எடுத்துவாருங்கள்.

அரைகுறையாய் வாழ்வது ராஜதந்திரம். பூரணமாய் வாழ்வது ரஸவாதம்.

மிகச் சரியாய் அலசி ஆராய்ந்தால் மட்டுமே புலப்படக் கூடிய, மிகத் தவறான தந்திரங்களைப் போக்குங்கள். அந்த எல்லாக் காலங்களிலும் செய்யும் செயல்களைப் "பூரணமாக்குங்கள்".

நாகரீகம் பற்றி யோசிக்கக் கூட வேண்டாம்.

பூரணமாக வாழ ஆரம்பித்தால்... தந்திர காலங்கள் கூட தியான காலங்களாகும்.

நட்சத்திர அலங்காரம்

நிஜம் இதுவே நாக(ரிகம்)
நீங்களே பால் ஊற்றி
வளர்த்தது.

Photograph of Paramahamsa Nithyananda in orange robes with danda and rudraksha mala
Portrait

ரசவாதத்திற்கு
எதிரான தூண்டுல்கள்
துண்டிக்கப்பட வேண்டும்.

கிடைக்கும் முன் கடுகேயானாலும் மலையாக்கிக் காண்பித்து, கிடைத்த பின் மலையேயானாலும் கடுகாக்கிக் காண்பிக்கும்...

அது மடமண்டம்.

புகை, மது போன்றவற்றிற் கு அடிமையாயிருப்பவர்கள் அது கிடைக்கும்வரை 'அது இல்லாவிட்டால் வாழ்வே இல்லை' எனும் அளவுக்கு ஏங்குவர். அது மலை போலத் தெரியும்.

அது கிடைத்த மறுநிமிடமே, ஏக்கம் சுருங்கிப் போகும்.

இதுவரை மலைபோலத் தெரிந்தது இப்போது
கடுகடுபோல் மாறிவிடும். இது, மனிதனின் மிக
அடிப்படையான குணங்களில் ஒன்று.

எல்லா மனிதர்களும் மனிதனின் இந்தப் பண்பால் தினம் தினம் பாதிக்கப்படுபவர்கள்தான்.

ஒரு டீ, ஒரு இனிப்பு, ஒரு சுவைமிகு உணவு, ஒரு குட்டித் தூக்கம், ஒரு புது உடை, ஒரு நண்பரோடு உறவினரோடு உட்கார்ந்து பேசுவது... போன்ற பல வாழ்க்கையம்சங்கள் மனிதனை கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன.

மேற்குறிப்பிட்ட எல்லாமே அவை கிடைக்கும்வரை, மிகுந்த ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், சந்தோஷத்தைத் தரக்கூடியதாகவும்

ஆண்டலை தீண்டுவது யுக்தி.
ஆண்டலை தாண்டுவது
ஆனந்தம்

ஆனால் அவை கிடைத்தவுடனேயே அந்த ஆர்வம், சந்தோஷம் எல்லாம் மறைந்து அது மிக மிக சாதாரணமான ஒன்றாகிவிடும்.

எனவேதான் இந்தத் தூண்டல்கள் சந்தோஷ
நிகழ்வான ரஸவாதங்களுக்கு எதிரானவை எனக்
குறிப்பிடுகிறேன்.

ஏக்கப்பட்ட அளவிற்கும், கிடைத்த சந்தோஷத்திற்குமுள்ள வித்தியாசம், எப்போதும் மலைக்கும் கடுகுக்குமுள்ள வித்தியாசமாகவே இருக்கிறது.

காரணம், விரும்புவது கிடைக்கும் வரை மனிதனுள் பரபரப்பை உருவாக்கும் மனக்கருத்தானது, கிடைத்த பின் மறைந்து போவதே.

ஆசையைத் தூண்டி,
அது கிடைத்ததும்
மறைந்து கொள்ளும் தன்மை பெற்ற இந்த
மனக்கருத்து எல்லாரிடமும் இருக்கிறது.

தவறான மனக்கருத்துக்காக மனிதன் ஓடுவதும், ஆடுவதும், பரிதாபம்.!

இனி, ஆசை உங்களை ஆட்டுவிக்கும் காலங்களில் மிக கவனத்தோடு இருங்கள். காரணம், அவை ஒரு தவறான மனக்கருத்தின் தூண்டுதல்கள்.

தூண்டுவது தூண்டிக்கப்பட வேண்டும்.

தூண்டல்கள் வரும் இடம்வரை செல்லுங்கள். அப்படிச் செல்வதின் உபவிளைவாகத் தூண்டல்களையே தூண்டிக்கும் கலையைக் கற்றுக் கொள்வீர்கள்.

தூண்டல்கள் தூண்டிக்கப்பட்ட பின்தான், மனிதன் முதல் முறையாகத் தன் வாழ்வை வாழ ஆரம்பிப்பான்.

தூண்டப்படும் காலங்களையெல்லாம் தியான
காலங்களாக்குங்கள். உங்கள் வாழ்வை உங்கள்
விருப்பம் போல் வாழ ஆரம்பிப்பீர்கள்.

தூண்டலில் இருந்தது மீன். மீதி வாழ்வு உன் கையில்.

Paramahamsa Nithyananda
Paramahamsa Nithyananda
Portrait