KAILASA Library/ரஸவாதம்/முன்னுரைSign in
ரஸவாதம்

முன்னுரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இதை கேள்விப்பட்டிருப்பீர்கள்...

"சில அரிய மூலிகைகளைப் பயன் படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றிவிடுவார்களாம் சித்தர்கள். இதன் பெயர் ரஸவாதம்"

இது வெளியுலக ரஸவாதம்.

அதேபோல், இரும்பைப்போல் இருக்கும் கல்மனம் பிடித்த மனிதனைக் கூட மகானாக மாற்றிடும் ஆனந்த நிகழ்வுகளை, உள்ளுலக ரஸவாதம் என்று அழைக்கிறேன்.

ரஸவாதத்தை நிகழ அனுமதித்தால், நீங்கள் கூட மகானாக மாறலாம். அது மிக எளிதானதே.

அதனால்தான் முன்னுரையிலேயே மிக
எளிதான, ஆனால் மிக வலிமையான ஒரு
ரஸவாதத்தைத் தந்திருக்கிறேன்.

ஆழமாய், முழுமையாய் முயற்சி செய்து பாருங்கள்... வெற்றி உறுதி.

"ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் கலந்த காற்றை சுவாசிப்பதால் மட்டும் மனிதன் உயிர் வாழ வில்லை.

மூச்சிழுக்கும் காற்றுக்குள் இருக்கும் அந்த சத்து தான் மனித உயிரோட்டத்தின் மூலகாரணம்.

வில்லியம் ரீச் என்ற ஜெர்மானிய உளவியலாளர்
அந்த உயிரோட்டத்தை "ஆர்கான் எனர்ஜி" என்று
அழைக்கிறார்.

உயிரின் ஓடம் மூச்சு.

Paramahamsa Nithyananda
Paramahamsa Nithyananda

நாம் சுவாசிப்பது ஆக்சிஜனைத்தான் என்ற உண்மை கூடச் சில வருடங்களுக்கு முன்வரை விஞ்ஞானிகளுக்கே அது யூகம்தான். நிரூபிக்கப்பட்ட பின்பே, அதை உண்மை என மனிதன் நம்புகிறான்.

"மூச்சுக்காற்றின் உயிர்ச் சத்தாக ஒன்று இருக்கிறது" என, சொல்லும் அளவுக்கு விஞ்ஞானம் இன்று யூகித்திருக்கிறது. இது நிரூபிக்கப்பட பல காலங்கள் ஆகும். ஐய்யாயிரம் வருடங்களுக்கு முன்பே நம் ரிஷிகள்...

"மூச்சுக் காற்று என்பது உயிர்ச்சத்தான பிராணாவை எடுத்து வரும் ஓடம் மட்டுமே.

நீ உயிர் வாழ்வது மூச்சின் ஓட்டத்தால் அல்ல, பிராணாவின் ஓட்டத்தால்தான் சாத்தியமாகிறது" என உணர்ந்து சொல்லியிருக்கிறார்கள்.

மூச்சோட்டத்தைக் கவனித்து தியானம் செய்ய ஆரம்பித்த பின், முதலில் உங்களின் விழிப்புணர்வுக்குள் வருவது மூச்சுகாற்று எனும் ஓடம் மட்டுமே.

தொடர்ந்து கவனிக்கக் கவனிக்க, விழிப்புணர்வு அதிகமாகும். விழிப்புணர்வு அதிகமாகும் போதுதான் ஒவ்வொரு உள்மூச்சிலும் உடலுக்குள் வரும் 'பிராணசக்தியை' முழுமையாய் உணர்வீர்கள். சக்தி மயமாவீர்கள். ஆனந்தமயமாவீர்கள். கடைசியாகப் பிரபஞ்ச மயSafeவே மாறுவீர்கள்.

மூச்சின் சத்தான, பிராண சக்தியை உணரும்
வரை மூச்சோட்டத்தைக் கவனியுங்கள். சுவாச
காலத்தையெல்லாம் தியான காலமாக்குங்கள்.
ரகசியங்கள் வெளிப்படும்.

நீங்கள் செய்யும் செயல் எதுவானாலும், அந்தச் செயலைச் செய்ய உள்ளே வந்து வெளியே செல்லும் மூச்சைக் கவனித்துக் கொண்டேயிருங்கள்.

மூச்சைக் கவனித்தபடியே செயலில் ஈடுபடுங்கள். செயல்களில் ஈடுபட்டபடியே மூச்சைக் கவனியுங்கள். ரசவாதம் நிகழும். நிச்சயம் நிகழும்.

ஆனந்தமாக இருங்கள்!!!

  • பரமஹம்ஸ நித்யானந்தர்

மூச்சுப் பாதை, தியான சாலை

Portrait

மாயா மாயமல்ல - விஞ்ஞானரீதியான ரஸவாத விளக்கம்

உங்கள் மூளைக்கு எது நிஜம்? எது கனவு? எது கற்பனை? எனப் பிரித்துப் பார்க்கத் தெரியாது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

நரம்பியல் வல்லுனர்களால் உங்கள் மூளையின் செயல்பாடுகளைப் படிக்க முடியும்.

மூளையிலிருந்து பெறப்பட்ட செய்திகள் மூலம், நீங்கள் என்ன வகையான உணர்ச்சியில் அந்த நிமிடத்தில் இருந்தீர்கள் என்பது வரைத் துல்லியமாகச் சொல்ல முடியும்.

நிஜத்தில் ஒரு குழந்தையைப் பார்க்கிறீர்கள்...

இரவு கனவில், அதே குழந்தையைப் பார்க்கிறீர்கள்...

கண் விழித்திருக்கும்போது கற்பனையில் அதே குழந்தையைப் பார்க்கிறீர்கள்...

இந்த மூன்று நிகழ்வுகள் பற்றி, மூளை தரும் சமிக்ஞைகள் எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றனவாம்.

மூளையின் சமிக்ஞைகளிலிருந்து நிஜம் எது? கனவு எது? கற்பனை எது? எனப் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. மூளைக்கு மூன்றுமே ஒரேமாதிரியாகத்தான் தெரிகிறது.

கண்ணால் காண்பது பொய்.

காதால் கேட்பதும் பொய்.

தீர விசாரித்து அறிவதும் பொய்.

முடிவு உணர்ந்து அனுபூதியாக மாறுவதே மெய்!

Paramahamsa Nithyananda

அதாவது. ‘மூன்றுமே நிஜம்’ அல்லது ‘மூன்றுமே மாயை...’ என்ற ரீதியில்தான் மூளை அணுகுகிறது. மூளையால் பிரித்தறிய முடியவில்லை,

ஆனால் உங்களால் பிரித்தறிய முடிகிறது.

எது நிஜம்? எது கனவு? என்று உங்களால் பிரித்து உணர முடிவது எதனால்...

அது உங்களுடைய விழிப்புணர்வால்... இரவு கனவை விட, பகல் கற்பனைக்கு விழிப்புணர்வு அதிகம். பகல் கற்பனையை விட நிஜவாழ்வுக்கு விழிப்புணர்வு அதிகம்.

நிஜவாழ்வு வரை வந்த உங்களால் முதல் இரண்டும் மாயை எனப் பிரித்தறிய முடிகிறது.

நிஜவாழ்வு, நிஜ உலகம் என நீங்கள் நம்புவது இன்னும் கலைக்கப்படாத கனவு. இதுவும் மாயையே. இது தாண்டப்பட வேண்டிய ஒரு நீண்ட கனவு மட்டுமே.

இரவு கனவு எவ்வளவு அருமையான கனவாக இருந்தாலும் என்ன பயன் அதனால்? அது விழித்ததும் அது கலைந்து போகுமே.

அதேபோல்தான் நிஜவாழ்வு எனும் மாயையும். இதையும் தாண்டியது, இதைவிட மிகவும் நிதர்சனமான சொர்க்க உலகம் இருக்கிறது. அது நிஜம்! எல்லா ஞானியரும் சொல்லும் நிஜம்.

கனவில் ஒருவர் கயவரிடம் சிக்கிக்கொண்டு அடி உதைபட்டு கனவிலேயே அலற ஆரம்பித்தால்... அருகேயிருக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள்?

“பாவம்! கனவில் ஏதோ பயந்து போயிருக்கிறான். இந்தக் கனவு இன்னும் தொடர்ந்தால் இன்னும் அதிகமாக அவன் கஷ்டங்களை அனுபவிக்கலாம்...” என்றெண்ணி அவனை எழுப்பச் செய்வீர்கள்தானே! காரணம், தூங்குபவனை விட உங்களுக்கு விழிப்புணர்வு அதிகம்.

அதனால் அவனை எழுப்புகிறீர்கள்.