எண்ணங்களின் பிறப்பிடம் அகங்காரத்தின் இருப்பிடம்.
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கோபப்படும் எல்லா நேரங்களிலும் நாம் திட்டி விடுவதில்லை. சூழ்நிலைக் கருதி நாம் பல சமயம் பலரைத் திட்டுவதில்லை.
அப்படி, திட்ட முடியாத போது என்ன செய்கிறீர்கள்? உள்ளேயிருந்து புறப்பட்டக் கோப வார்த்தைகளை உணர்ச்சிகளை அப்போதெல்லாம் தூக்கியெறிந்து விடுகிறீர்கள்தானே?
எண்ணங்களின் பிறப்பிடம்தவரை சென்றுவிட்ட நீங்கள் அங்கிருந்து வரும் எல்லா எண்ணங்களையும் தூக்கியெறிய ஆரம்பியுங்கள்.
சூழ்நிலை கருதிக் கோபத்தில் செய்வதை, இனி வரும் எல்லா எண்ணங்களுக்கும் செய்யுங்கள்.
காமம், கவலை, சந்தோஷம் என எது வந்தாலும்
சரி, அதைத் தூக்கியெறியுங்கள். எல்லாமே
உள்ளேயிருக்கும் குப்பைகள்.
இச்செயலை நிறுத்த வேண்டாம்.
குப்பைகள் தீரும் வரை இச்செயலை நிறுத்த வேண்டாம்.
ஆனந்தம் வரும்வரை இது தொடரட்டும்.
தொடர்ந்து பத்து நாட்கள் இந்த ஒரு தியானத்திற்காக மட்டுமே செலவு செய்யுங்கள்.
வேதனைப் பதிவுகள் தீர்ந்ததும் ஆனந்தம் ஊற்றுபோல் பொங்க ஆரம்பிப்பதைக் காண்பீர்கள்.
எண்ணங்களையே எதிர் கொள்ளும்போது நீங்கள் நிச்சயம் ரஸவாதிகள்.
ரஸவாதியாகுங்கள். ராஜசுகமாம்... ஆனந்தம்! இந்தப் பிறப்பிலேயே கிடைத்துவிடும்.

உடல் உள்ளே நீந்திப் பார்.
வெளி உலகில் மிதந்து
செல்வோம்...

இங்கு வரையறையைத் தாண்டுவது தப்பல்ல. அது ரஸவாதம்.
சுற்றும் பூமி நிற்பதில்லை.
பூமி சுற்ற ஆளுமில்லை.
ஆனாலும் அது நிற்பதில்லை.
நிற்பதே இல்லை. எப்படி? ஏன்?
அதுதான் இயற்கை. உங்களின் இயற்கை என்ன...
காரணமேயில்லாமல் துக்கப்படுவது மனித இயற்கை. காரணம் இருந்தால் மட்டுமே சந்தோஷப்படுவதும் மனித இயற்கையே.
ஒன்றைக் கேட்கிறேன்... சிந்தியுங்கள்!
காரணமேயில்லாமல் உங்களால் துக்கப்பட முடியும் போது, காரணமேயில்லாமல் உங்களால் ஆனந்தப்பட முடியாதா?
இரண்டுமே இயற்கையானது.
அதனால், சும்மாயிருக்கும்போதே ஆனந்தப்படுவது சாத்தியமானதுதான்.
உங்களின் எல்லா சந்தோஷங்களையும் ஆராய்ந்தால் அதற்கொரு மூலகாரணம் இருக்கும். உங்களின் விருப்பமாகவே அது இருக்கும்.
சிட்டுக் கிளி உனை
வெட்டுக் கிளிபோல ஆக்கியது
'விருப்பம்'
எனும் மாயக்கூண்டு!

சந்தோஷத்தின் சாவி விருப்பத்தின் கையில் சிக்கிக் கொண்டுள்ளது.
விளைவு - உங்கள் விருப்பம் சம்பந்தப்பட்ட சந்தோஷ நிகழ்வுகளை மட்டுமே, ‘சந்தோஷ நிகழ்வுகள்’ என ஏற்றுக் கொள்வீர்கள்.
உண்மையிலேயே சந்தோஷமான நிகழ்வுகள் உங்களைச் சுற்றி நிகழ்ந்தாலும், அது உங்களின் விருப்பத்தோடு ஒத்துப்போகாததால், "இதுக்காகவா இவ்வளவு பெரிய சிரிப்பு... ரொம்ப சிறுபிள்ளைத் தனமா இருக்கிறார்கள்..." என ஏதாவதொரு முத்திரை குத்தி, நிகழ்வுகளை மனதில் ஏளனபடுத்தி விடுவோம். சந்தோஷத்தை அழிப்போம்.
காரண காரியங்கள் எனும் ஆட்டுவிப்பான்
இருக்கும் வரை சந்தோஷம் என்பது எப்போதாவது
பூக்கும் பூவாக மட்டுமே இருக்கும்.
விருப்பம் எனும் வரையறையைத் தாண்டுங்கள். காரணமேயில்லாமல் துக்கப்படுவது, காரணமேயில்லாமல் பொங்கும் ஆனந்தமாக மாறும்... விருப்பங்கள் எனும் வட்டத்தை விட்டு வெளியே வரும் நிமிடத்தில்.!

திடீர் என துக்கம் வர முடிந்தால்...
ஆனந்தம் வர முடியாதா?
எது பெரியது?
QMP
அதீத நினைவாற்றல் பயிற்சி
Quantum Memory Programme (QMP)
உங்கள்னி IQ,EQ,SQ அதிகரிக்கச் செய்யும் பயிற்சி இது.
Concentration capacity, கிரகிக்கும் ஆற்றல், புரிந்து கொள்ளும் தன்மை, Visualisation capacity, நினைவாற்றல் போன்றவற்றை அதிகரிக்கச்செய்யும், பல நுணுக்கமான நுட்பங்கள் கற்றுத்தரப்படும்.
படிக்கும் வேகம் அதிகரிக்கும், Presentation skills, பரீட்சை நேரத்தில் உருவாகும் மன அழுத்தம், வலி போன்றவைகளிலிருந்து விடுபடும் ஆற்றல் வாய்ந்த 30 நொடி நேர நுட்பம், பரீட்சை நேரத்தில் ஏற்படும் பயம் மற்றும் நரம்பு தளர்ச்சியை குறைத்தல் போன்ற உயர்ந்த நுட்பங்கள் கற்றுத்தரப்படும்.
மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் நுட்படம் - மூளை நரம்புகளுக்கான பயிற்சி, மூளை செல்கள் ஒருங்கிணைந்து செயல்படும் தன்மை பற்றிய நுட்படம், வலது மூளை செயல்பாடுகளை அதிகரிக்கும் நுட்பங்கள் கற்றுத்தரப்படும்.
தூக்கத்தை குறைக்கும் தியான நுட்படம்,
- தூக்கத்தின் ஆழத்தை அதிகரிக்கும் தியான நுட்படம்
- கண் சோர்வில் இருந்து விடுதலை பெறும் தியான நுட்பங்கள்
- கண்கள் உற்சாகமடையும் தியான நுட்பங்கள்
- பார்வைக் கூர்மையை அதிகரிக்கும் தியான நுட்பங்கள்
- மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் தியான நுட்பங்கள்
- இறுக்கமான நிலையிலிருந்து வெளி வரும் தியான நுட்பங்கள்
- மூளையின் செல்களை புத்துணர்வூட்டும் தியான நுட்பங்கள்
பயிற்சி நாட்களை தெரிந்து கொள்ள ஆஸ்ரமத்தோடு தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண்கள்: 080-7202084, 080-65591844.


இலவச தியான சிகிச்சை பெற...
தியானத்தை கற்றுக் கொள்ள...
உங்களுக்கான சேவையில் தியானபீடம்
பரமஹம்ஸ நித்யானந்தர் ஓர் வாழும் ஞானி. ஆன்மீக உலகில் ஓர் ஒப்பற்ற நட்சத்திரம். இவர் நிறுவிய தியானபீட சேவை நிறுவனம் தற்போது 30 நாடுகளில் 1000 கிளைகளுடன் இயங்கி வருகிறது.
மூன்றே ஆண்டுகளில் இவ்வளவு வேகமாக உலகம் முழுவதும் பரவமுடிந்ததற்கான முக்கிய காரணங்கள் இரண்டு...
1. நம்முடைய நடைமுறை பிரச்சனைகளுக்கு பரமஹம்ஸர் நித்யானந்தர் தரும் எளிய நேரடி தீர்வுகள்.
2. வலிமை மிகு தியானங்கள்.
இவை இரண்டின் மூலம் மக்களுக்குள் நிகழ்ந்த ஆனந்த ஆரோக்கிய மாற்றங்கள்தான் காரணம்
நீங்களும் வாழ்க்கையில் ஆனந்த ஆரோக்கிய மாற்றங்களைப் பெற தியானத்தை வாழ்க்கையில் சேருங்கள் மேலும் விபரங்கள் பெற அருகில் உள்ள தியானபீட அமைப்பாளர்களை அணுகவும்

| நூலின் பெயர் | : | ரசவாதம் |
|---|---|---|
| ஆசிரியர் | : | பரமஹம்ஸ நித்யானந்தர். |
| முதற்பதிப்பு | : | டிசம்பர் 2006. 10.000 பிரதிகள் |
| ஒளியச்சு, வெளியீடு | : | தியானபீடா சேரிடபிள் டிரஸ்ட் நித்யானந்தபுரி, இராமநகரம் தாலுக்கா கல்லுஹோபஹல்லி மைசூர் ரோடு, பிடதி-562 109 |
| அட்டை வடிவமைப்பு | : | தியானபீடா சேரிடபிள் டிரஸ்ட் |
| அச்சிட்டோர் | : | ஹேமமாலா சிண்டிகேட் சிவகாசி - 626 123. |
| பதிப்பகத்தார் | : | தியானபீடம், பெங்களூர் |
| பக்கம் | : | 28 |


பகிரப் பகிர
குறைவது துக்கம்...
பகிரப் பகிர
பொங்குவது ஆனந்தம்...
A.S.P
ஆனந்த ஸ்புரண தியானம்

- உடல் ஆரோக்கியம்
- மனத்தெளிவும் சிந்தனைத்திறனும்
- செய்யும் தொழிலில் உற்சாகம்
- உறவுகளில் பண்பும் முதிர்ச்சியும்
- வாழ்வில் ஆனந்தமும் அமைதியும்.
இவைகள் அனைத்தையும் பெற்று
உங்கள் வாழ்வில் ஒவ்வொரு கணமும் திருவிழாவாக கொண்டாடும் வாழும் கலை பற்றிய ஓர் அனுபவப்பூர்வமான 2 நாள் தியான பயிற்சி முகாம்.
நம் உடலில் உள்ள 7 சக்கரங்களையும் சக்தியூட்டுவதற்கான 7 வெவ்வேறு மதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 7 தியான முறைகள் மற்றும் 7 சொற்பொழிவுகளோடு கற்றுத் தரப்படும் தியான முகாம்.
நடைமுறை வாழ்க்ப் பிரச்சனைகளுக்கு நேரடித்தீர்வையும், உங்களின் உடல், மன உபாதைகளுக்கு உடனடித்தீர்வான சக்தியூட்டும் தியான முறைகளும் கற்றுக்கொடுக்கப்படும்.
ஆனந்தத்தின் ஊற்று 'நீங்கள்' அதன் திறவுகோல் - "தியானம்"
மனிதனுக்குள் ஆனந்தம் தொடர்ந்து பொங்கிக்கொண்டேயிருக்கிறது... மனிதன் தன் அறியாமையால் பொங்கும் ஆனந்தத்தை தடுத்துக் கொண்டிருக்கிறான். பொங்கும் ஆனந்தத்தை...
தடுப்பதை தடுக்க கற்றுத்தருவதே ஆனந்த ஸ்புரண தியான முகாம்.
ASP பற்றி தெரிந்து கொள்ளவும், முன்பதிவு செய்து கொள்ளவும், தாங்கள் தங்கள் ஊர் ஆர்கனைசரிடம் தொடர்பு கொள்ளலாம். அவர்களின் தொடர்பு எண்கள்... சேலம்-09894023359/09442905426, ஆத்தூர்09443340904, நாமக்கல்-09443388437/04286-263837, ராசிபுரம்9442023021/04287-224770, தர்மபுரி-04342-232762, ஓசூர்-043440- 571218/279968, தென்சென்னை-044-24816238/09444021116, மத்தியசென்னை09380272799/28514932/27232854, திருவொற்றியூர்09444179483, காஞ்சீபுரம்-044-27221041, பட்டம்-04287- 222842, திருவண்ணாமலை-09443326202/04175-223202, பாண்டிச்சேரி09443287504/0413-2274935, புதுக்கோட்டை-04322- 266735/09894050081, வாணியம்பாடி-09842492103/04174- 226798, திருப்பத்தூர்-04179-223725/09443131058/223752, திருநெல்வேலி09842767668, திருச்சி-09443835105, மதுரை-09894202536, கோயம்புத்தூர்09363123006/0422-2422783, திருச்செங்கோடு-09443515717/04288- 239220, குடியாத்தம்-09443490710, ஈரோடு-09843173535, விழுப்புரம்09443285685/09865006191, சீர்காழி-09843667565/0421- 223114, காரைக்குடி-04565-236367, வேலூர்-09443242833/0416- 2242833, ஆம்பூர்-04174-243554, மணப்பாறை-09865276321, கண்ணமங்கலம்09443964023, கூடலூர்-0426-2261316, ஆரணி-09360221289/04173- 228953, விசாகப்பட்டினம்-09849117400, இராஜபாளையம்-09842130008, டெல்லி09820304431/022-22176312, மைசூர்-09448612163/0821-2333735, பெங்களூர்-080-51211881/09895494430, ஹைதராபாத்-09391035463/040- 2354809.

உள்ளே...
- மாயா மாயமல்ல - விஞ்ஞானரீதியான ரஸவாத விளக்கம்
- நீங்கள் சாதாரணமானவர் அல்ல. நீங்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்
- துன்பங்களையும் இன்பங்களாக்கும் ரஸவாதம்.
- எதையும் விடாதீர்கள். கூர்மையாகக் கிரகியுங்கள்...
- இது ஒரு தியானம்.
- நாகரிக தந்திரங்களை கூட ரஸவாதம் கரைத்துவிடும்.
- ரஸவாதத்திற்கு எதிரான சுண்டல்கள் சுண்டிக்கப்பட வேண்டும்.
- அவர்களை திருத்த நீங்கள் யார்?
- சாதனை பூக்க... அந்த பூத உடல் வெளியேறட்டும்
- ரஸவாதிகளாகுங்கள்.
- இங்கு வரையறையைத் தாண்டுவது தப்பல்ல. அது ரஸவாதம் ஆனந்தம்.
- பிற்சேர்க்கைகள்