KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/பொய்யற்ற கடமைSign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

பொய்யற்ற கடமை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna with flute

18.7 ஒருவன், தனக்கென விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து ஒருபோதும் தவறக்கூடாது. த்யாகம் என்பதின் உள்ளார்ந்த கருத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு, எனக்குரிய கடமைகளை செய்யத் தவறுவது தாமஸம் எனப்படுகிறது.

18.8 தனக்குரிய கடமைகளை ஒருவன் தொந்தரவாகவோ அல்லது பயமாகவோ கருதி, அவற்றைத் துறப்பது என்பது ரஜோ குணத்தின் நிலை. அவன் த்யாகத்தின் பலன்களைப் பெறுவதில்லை.

18.9 ஆனால் பலன்கள் மீதான பற்றோ அல்லது எதிர்பார்ப்போ இல்லாது, இது செய்வதற்குரியதென கருதி, தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்துவருவானேயானால், அவனுடைய த்யாகம் ஸாத்விகமானதென கருதப்படுகிறது, அர்ஜூனா.

18.10. ஸத்வ குணம் மேலோங்கப்பெற்றவனும் அறிஞனும் சந்தேகங்களை விடுத்தவனுமாகிய த்யாகி, தனக்குப் பிடித்த வேலை என்ற விருப்பும், பிடிக்காத வேலை என்ற வெறுப்பும் கொள்வான்.

18.11 மனிதன், தன் கடமைகள் எதையும் தவிர்க்க முடியாது. ஆனால், தன் கடமைகளுக்கான பலன்களைத் துறந்தவன் த்யாகி எனப்படுகிறான்.

18.12 அப்படி த்யாகம் செய்யாத ஒருவரை, விரும்பத்தக்க, விரும்பத்தகாத, மற்றும் இரண்டும் கலந்த -என மூன்று விதமான கர்ம பலன்கள் மரணத்திற்குப் பின்னும் தொடர்கின்றன ஆனால், உண்மையான த்யாகிகளை அவை மூன்றுமே பாதிப்பதில்லை.

கிருஷ்ணர் சொல்கிறார், நித்ய கர்மாக்களை, அதாவது தினமும் செய்து முடித்தே ஆக வேண்டிய கடமைகளை, ஒரு ஒழுங்குமுறை தவறாமலும், தொடர்ந்தும் செய்து வர வேண்டும். அவற்றைச் செய்யாமலிருப்பது நம்மை, அறியாமையினாலும் சோம்பலினாலும் விளைகின்ற தமோ குண நிலைக்குக் கொண்டுசெல்லும்.

நித்ய கர்மா என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். ஒரு இல்லறவாசியின் கடமைகள், ஒரு துறவி அல்லது ஒரு மாணவனின் கடமைகளிலிருந்து வித்தியாசமானவை. எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பது போன்ற ஒவ்வொருவருக்குமான விதிமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

பல நேரங்களில், நம் சொந்தப் பொறுப்புகளை விட்டுவிட்டு, வேறொரு வேலையை எடுத்துச் செய்வதென்பது, அதிகக் கவர்ச்சியுள்ளதாகத் தெரியலாம். தெளிவாக இருங்கள், சரியான மனோபாவமும் விழிப்புணர்வும் இல்லையேல், நாம் எடுக்கும் எந்தப் பொறுப்பையும் சரிவர நிறைவேற்ற மாட்டோம்.

பொறுப்பெடுப்பதும், நம்மை
விரிவுபடுத்திக்கொள்வதும் வீணான
வேலையைப் போன்றும், அதற்குப்
ப பதிலாக, தொலைக்காட்சியைப்
பார்ப்பதும் கற்பனையில் மிதப்பதுமே

மிக சுகமானதாகவும் சுலபமானதாகவும்
தெரியலாம். தியானம் அல்லது பூஜைகள்
அல்லது நமக்கென விதிக்கப்பட்ட
கடமைகளைச் செய்வதற்குப் பதிலாக,
நாம் வீணாகப் பொழுதுபோக்குவதையே
விரும்புகிறோம்.

நம்முடைய ஆசிரமத்தில் ஒவ்வொருவரும், காலை 6 மணிக்குத் தவறாது குரு பூஜையில் கலந்துகொள்ள வேண்டும். இது, அங்கேயே நிரந்தரமாகத் தங்கியிருப்போர், பிரம்மச்சாரிகள், முகாம்களில் கலந்துகொள்ள வந்திருப்போர், உடல்நலம் பெறுவதற்காக தியான சிகிச்சை பெற வந்திருப்போர் என எல்லோருக்குமே பொருந்தும்.

தெளிவாக இருங்கள்,
சரியான மனோபாவமும்
விழிப்புணர்வும்
இல்லையேல், நாம்
எடுக்கும் எந்தப்
பொறுப்பையும் சரிவர
நிறைவேற்ற மாட்டோம்.

ஆனால், வெளியிலிருந்து வந்து ஆசிரமத்தில் தற்காலிகமாகத் தங்கியிருப்பவர்களில் சிலர், மிகுந்த தயக்கத்தோடு விருப்பமில்லாமல் பூஜையில் வந்து அமருங்காட்சி, நீங்கள் பார்க்க வேண்டிய ஒரு காட்சி! மற்றும் சிலர், தங்கள் அறைகளிலேயே தூங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்களையெல்லாம் கண்காணித்துத் துயிலெழுப்ப எங்களிடம் கண்காணிப்புப்படை இல்லை!

செய்ய வேண்டிய கடமைகளை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகச் 'செய்யாமல் விட்டுவிடுவது' துறவல்ல. அது ரஜஸ் குணத்திலிருந்து பிறக்கும் சௌகரியமான ஒரு 'செயலற்ற தன்மை'.

ஒரு பயிற்சி முகாமில் கலந்து கொண்டபின், பலரும், "ஸ்வாமிஜி, நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் எத்தனை தியான நுட்பங்கள் பயிற்சி செய்யலாம்," என்று கேட்பார்கள்.

அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இதுவே: "ஏதாவது ஒன்றையாவது முறையாக தினமும் செய்துவாருங்கள்!"

ஒரு வாரத்திற்குப் பின், அந்த சூடு ஆறிய பின்னர், நான் இதைப்பற்றி அவர்களிடம் கேட்டால், "ஒரு தியான முறையைக்கூட செய்ய எனக்கு நேரமேயில்லை ஸ்வாமிஜி!" என்று அப்பாவித்தனமான வெட்கத்துடன் சொல்வார்கள்.

‘நான்’, ‘எனது’ என்பதின் சுவடு இல்லாமல் இருங்கள்

நம் எல்லோருக்குமே தியானத்தைத் தவிர பாக்கி எல்லாவற்றையும் செய்ய நேரம் கிடைக்கும்; மற்றவர்களுக்காக நேரம் ஒதுக்க முடியும்; ஆனால், நமக்காக தியானம் செய்ய மட்டும் நேரம் கிடைக்காது! அதனால் யாருக்கு நஷ்டம்?

கிருஷ்ணர் சொல்கிறார், “எது செய்யப்பட வேண்டுமோ, அது, நிச்சயமாக, செய்து முடிக்கப்பட்டே ஆக வேண்டும். ஏனெனில், அதுவே பரிந்துரைக்கப்பட்ட செயல்கள். பற்றுதல் இல்லாமலும், ஆசையில்லாமலும் செயல்களைச் செய்வதே ஸாத்விக குணப்பண்பின் உச்சம்.”

பற்றுதல் இல்லாமலும்,
ஆசையில்லாமலும்
செயல்களைச் செய்வதே
ஸாத்விக குணப்பண்பின்
உச்சம்

இதைக் கிருஷ்ணர், கீதையில், பல இடங்களில் வலியுறுத்துகிறார். மீண்டும் மீண்டும் சொன்னால் மட்டுமே, இந்த ஸத்யம் நம்முள் ஊடுருவிக் கலக்கும்.

‘எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்துவாருங்கள், உங்கள் சமுதாய மற்றும் மத நம்பிக்கைகளையும் விதிமுறைகளையும் அடிப்படையாகக்கொண்ட செயல்களைச் செய்யுங்கள்; இருப்பினும், இவற்றை பலன்கருதியோ அல்லது எந்தவித எதிர்பார்ப்புகளுடனோ செய்யாதீர்கள்’. செய்யப்படுகின்ற செயல்களில், ‘நான்’, ‘எனது’ என்பதின் சுவடே இருக்கக்கூடாது.

Pரம்பரை பரம்பரையாகச் சம்பிரதாயங்களைச் செய்துவரும் ஆசாரமான வீடுகளில்கூட, மந்திரங்கள் சொல்வதையோ அல்லது பூஜைகளைச் செய்வதையோ அன்றைய நாளின் ஒரு வேலைபோல் செய்வார்கள். அவர்கள் மனம் ஒன்றிச் செய்ய நினைப்பார்கள், ஆனாலும் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு செயலாலும் பாதிக்கப்படுவார்கள்.

ஆனால், அவர்கள் செய்யும் செயல்களில் ஆழமாக மூழ்கி மனமொன்றிச் செய்வார்களேயானால், அந்த நிகழ்வுகள் அவர்களுக்குள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவர்கள், தங்களுடைய 'செய்முறை'களில் பற்று வைத்தும், தங்களுடைய வழிமுறை 'நன்றாக அமைய வேண்டுமென்பதில்' பற்று வைத்தும் செய்வதனால்தான், சுலபமாக, ஒவ்வொன்றுமே அவர்களின் கவனத்தைச் சிதறடிக்கின்றன.

ஆனால், ஒரு குழந்தை ஒரு மந்திரத்தை எப்படிச் சொல்கிறது என்று கவனித்துப் பாருங்கள். அது, மந்திரத்தோடு விளையாடி மகிழ்கிறது!

திருவண்ணாமலையில் வசித்த அண்ணாமலை சுவாமிகள், என்னுடைய பத்தாவது வயதில், எனக்கு ஒரு தியான நுடபத்தைக் கற்றுக் கொடுத்தார். அடுத்த இரண்டு வருடங்களுக்கு நான் செய்ததெல்லாம், அந்த நுட்பத்தோடு விளையாடியதுதான், அவ்வளவுதான். அந்த இரண்டு வருடங்களில் அந்த நுட்பமானது தனது வேலையைச் செய்துவிட்டது!

கிருஷ்ணர் சொல்கிறார், ஸாத்விக குணமான
அமைதியிலும், விழிப்புணர்விலும்
நிலைபெற்றுள்ள ஒரு மனிதர், வெளிப்புற
காரணங்களால் ஒருபோதும் பாதிக்கப்பட
மாட்டார். மற்றவர்கள் தங்களுடைய
செயல்களைப் பாராட்டினாலும்
நிந்தித்தாலும், அதைப் பொருட்படுத்த
மாட்டார். அவர், தாம் என்ன செய்ய
வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக
இருந்து, அதைச் செய்து முடிப்பார்.

ஸாத்விக குணத்தில்
நிலைபெற்றுள்ள
ஒரு மனிதர்,
வெளிப்புற காரணங்களால்
ஒருபோதும் பாதிக்கப்பட
மாட்டார்.

ஒரு சின்ன கதை:

ஒரு கிராமத்தில் சதாசிவ சாஸ்திரிகள் என்கிற ஒரு நிலச் சுவன்தார் இருந்தார். அவர் மிகவும் பக்தியுடையவராகவும், எப்போதும் பிறருக்கு உதவுபவராகவும் இருந்தார். உள்ளூர் கோவிலில் திருவிழா நடக்கும்போதெல்லாம், அவரே அதற்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். யாராவது நோய்வாய்ப்பட்டால், அவர்களுடைய வைத்திய செலவுகளையும், போக்குவரத்து செலவுகளையும் தாமே ஏற்று உதவி செய்தார்.

அந்தக் கிராமத்தில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு பிரபலமான பிரமுகராகவும், எல்லோருக்கும் உதவுபவராகவும் இருந்தார். ஆனாலும்

அவர் எப்போதுமே ஒரு இறுக்கத்தோடும்,
முகத்தில் மகிழ்ச்சியற்றவராகவும்
காணப்பட்டார்.

ஒருநாள் அவருடைய மகளே, "அப்பா
ஏன் நீங்கள் எப்போதுமே இறுக்கமாகவும்,
சோகமாகவுமே இருக்கிறீர்கள்? உடல் நலம்
சரியில்லையா?" என்று கேட்டாள்.

அதற்கு அவர், "அப்படியெல்லாம்
ஒன்றும் இல்லையே, நான் நன்றாகத்தானே
இருக்கிறேன்," என்றார்.

> ஒருவர், பிரதிபலன்
> எதிர்பார்ப்பதையே
> விட்டுவிடும்போது மட்டுமே,
> துறவு என்பது அதன்
> உண்மையான அர்த்தம்
> பெறுகிறது.

ஆனால், அவள் மறுபடியும் வற்புறுத்தவே, அவர், "பாரேன், நான் இந்தக் கிராம மக்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வருகிறேன். இருந்தாலும் அதற்காக எனக்கு ஒரு நன்றிகூட சொல்வதில்லையே!" என்றார்.

அவர், தான் செய்து வந்த எல்லாவற்றையுமே ஞாபகம் வைத்திருந்தார். அந்த நற்காரியங்களின் பாரத்தையும்கூட சுமந்து கொண்டிருந்தார்!

ஒருவர், பிரதிபலன் எதிர்பார்ப்பதையே விட்டுவிடும்போது மட்டுமே, துறவு என்பது அதன் உண்மையான அர்த்தம் பெறுகிறது.

ஸம்ஸார சுழற்சியிலிருந்து விடுபடும் நுட்பம்...

ஒரு மனிதரால் எந்த வேலையுமே செய்யாமல் சும்மா இருக்க முடியாது; அதுவே இயற்கை நியதி. மனிதன் என்பவன் எப்போதுமே எதையாவது ஒன்றைச் செய்துகொண்டுதானிருக்க வேண்டும். உடலளவில் இல்லாவிட்டாலும், மனதளவிலாவது எதையோ செய்துகொண்டுதான் இருக்கிறான். தூக்கத்திலும்கூட கனவுகளைக் காண்கிறான். நாம் கண்ணை மூடினால், உடனே உள்ளுக்குள் இருக்கிற தொலைக்காட்சி விழித்துக்கொள்கிறது.

காதுகளை மூடி, கண்களை மூடி, ஒரு சப்தமில்லா அறையில் அடைத்து வைக்கப்பட்டாலும்கூட, நாம் உள் மனப்பேச்சினால் நிரம்பியிருப்போம்.

ஒரு ஞானியால் மட்டுமே, மனத்தையும், உடலையும் இயங்காமல் வைத்திருக்க முடியும். ஆனால், சாதாரண மனிதன் செயல்பரியாமல் இருக்கவே முடியாது.

அப்படியானால், மனிதன் தனக்குள் தானே சுகமாக, மன அமைதியாக இருக்க வேண்டுமென்றால், அதற்கான ஒரேவழி, தம்முடைய எண்ணங்கள், பேச்சுக்கள் மற்றும் செயல்கள் அனைத்தையுமே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யவேண்டும். நம் ஒவ்வொருவராலுமே, இந்த நிலையை அடைய முடியும்.

கிருஷ்ணர் சொல்கிறார், தம் செயல்களின் பலனைப் பற்றியே கவலைப்படாத ஒருவரே, உண்மையான துறவி!

செயல்களின் மீதும், அவற்றின் விளைவுகளின் மீதும் வைக்கும் பற்றானது, மேலும் அதிக ஆசைகளைத்தான் தூண்டிவிடுகிறது. ஒரு செயலைச் செய்து முடித்து, அதற்கு விரும்பிய பலனை பெற்ற பிறகும்கூட, ஒருவர் தம் செயல்களின் மீதும், பலன்கள் மீதும் பற்று கொண்டிருக்கும்வரை, இன்னொரு ஆசை முளைத்துக் கொண்டுதான் இருக்கும். ஒரு ஆசையைப் பூர்த்திசெய்து முடிக்கும்பொழுதே, இன்னொரு நிறைவடையாத ஆசை முளைத்துவிடும். இது ஒரு நிரந்தரமான, தொடர்ச்சியான நிகழ்வுதான்.

இதைத்தான் நான் கர்மா என்று சொல்கிறேன். நிறைவேறாத ஆசைகளே கர்மா எனப்படுகிறது. ‘நான் செயல்களைச் செய்பவன்’ என்று நம்மைக் கர்த்தாவாக கருதி, அதன் மீது பற்றுதல் கொண்டிருக்கும்வரை, அது நமக்குள், பாராட்டைப் பற்றிய எதிர்பார்ப்பையோ அல்லது கண்டனத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையோ ஏற்படுத்திவிடுகிறது. விளைவு... நாம் கர்மா அல்லது ஸம்ஸார சக்ரத்தில் சிக்கிக்கொள்கிறோம்.

நாம் செய்யும் செயல்களும், அவற்றால்
விளையும் பலன்களும் நல்லதா அல்லது
கெட்டதா அல்லது இரண்டும் கலந்ததா
என்ற கவலையே நம் மரணத்திற்குப்
பின்னும் நமது மனோபாவமாக அல்லது
வாஸனாவாகத் தொடர்கிறது.

ஒரு ஞானியால் மட்டுமே,
மனத்தையும், உடலையும்
இயங்காமல் வைத்திருக்க
முடியும். ஆனால்,
சாதாரண மனிதன்
செயல்பரியாமல் இருக்கவே
முடியாது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ‘மேல் உலகத்தில்’ நமது செயல்களையும், கெட்ட நடத்தைகளையும் கணக்குவைத்துக் கொள்வதற்கென்று யாருமே கிடையாது. நம்முடையே ஆன்மாவே அந்த வேலையைச் செய்கிறது. அதனால் நாம் ஒருபோதும் தப்பிக்க முடியாது.

பாவப் பரிகாரங்கள் செய்வதாலோ அல்லது ‘மேன்மையான’ காரணங்களுக்காகத் தாராளமாகப் பொருளுதவி செய்வதாலோ, நாம் செய்த செயல்களை, நம் ஆன்மாவினுடைய கணக்குப் பேரேடிலிருந்து அழித்துவிட முடியாது.

நாம் இறக்கும்பொழுது, நமது உடல்தான் அழிகிறது, ஆனால், ஆன்மா, மற்றொரு புது உடலுக்குச் செல்கிறது. அந்த ஆன்மா, முன்னிருந்த அதே மனப்பாங்கை, வாஸனையை உடன் எடுத்துச் செல்கிறது. இந்த விதிமுறைக்கு விதிவிலக்கே கிடையாது.

ஸம்ஸ்காரங்கள் எனப்படும் நிறைவேற்றப் படாத ஆசைகளே, பிறப்பு - இறப்பு - மறு பிறப்பு என்னும் ஸம்ஸார சுழலுக்குக் காரணம்.

எப்படியிருந்தாலும், நாம், இச் செயல்களுக்கான ‘கர்த்தா நானே’ என்னும் எண்ணத்தைவிடுத்து, அச் செயல்களின்மீது நாம்கொண்டி ருக்கும் பற்றுதலைத் துறந்து விட்டு, அச்செயல்களையும், அவற்றின் விளைவுகளையும் ஒரு ஸாக்ஷியாக மட்டுமே இருந்து பார்ப்போமானால், நமக்கு நிறைவேறாத ஆசைகளோ, கர்மாக்களோ, ஸம்ஸ்காரங்களோ அல்லது வாஸனைகளோ இருக்காது.

ripples in water

இதன் பொருள், பலனைப்
பற்றிய எதிர்பார்ப்பும் பற்றுதலும்
இன்றி, நாம் செயல்களை
ஆற்ற வேண்டும் என்பதே.
அப்படிப்பட்ட ஒரு மனிதர்தான்
ஸம்ஸார சுழற்சியிலிருந்து
விடுப்படுகிறார்.

flute playing hands decoration