KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/சரணடைவதின் நுட்பம்Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

சரணடைவதின் நுட்பம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

அர்ஜூனா, ஸாங்கிய தத்துவப்படி, எல்லாச் செயல்களும் நிறைவுபெறுவதற்கு ஐந்து காரணங்கள் உள்ளன என்று என்னிடமிருந்து அறிந்துகொள்வாயாக. அவையாவன: செயல்களுக்கு அடித்தளமாயுள்ள இந்த ஸ்தூல உடல், செய்பவன் (குணங்கள்), புலன்கள், உயிர் சக்தியினுடைய செயல்கள் மற்றும் தெய்வீக சக்தி.

ஒரு மனிதன் தன் எண்ணம், சொல், செயல்களால் செய்கின்ற சரியான அல்லது தவறான செயல்களுக்கெல்லாம் இந்த ஐந்து காரணிகளே பொறுப்பு.

ஆத்மாவைச் செயல்பரிபவனாகக் கருதுபவர்கள் அறியாமையிலிருக்கிறார்கள். அவர்கள் உள்ளதை உள்ளபடியே பார்ப்பதில்லை.

நமது செயல்பாடுகளுக்கான ஐந்து காரணிகள்

பதினைந்து மற்றும் பதினாறாவது ஸ்லோகங்களில் கிருஷ்ணர், மிகச் சரியான ச்ரணாகதி நுட்பத்தைத் தருகிறார். இவ்விரு ஸ்லோகங்களை 'நுட்பங்கள்' என்றே சொல்லலாம்.

கிருஷ்ணர், நமது செயல்பாடுகளுக்கான ஐந்து காரணிகளை, ஸாங்த்ய தத்துவக் கோட்பாடுகளிலிருந்து எடுத்துத் தருகிறார். அவையாவன, உடல் - மனம் அமைப்பு, அந்த உடல் - மன அமைப்பை இயக்கும் தனி மனிதன், புலன்கள், செயல்களை நிகழச்செய்யும் வெவ்வேறு காரணிகள், மற்றும் உன்னத சக்தியான கடவுள்.

எல்லா செயல்களுமே, அது, சரியோ தவறோ அல்லது நல்லதோ கெட்டதோ, இந்த ஐந்து காரணிகளால்தான் செய்யப்படுகின்றன. இருப்பினும் செயலைச் செய்யும் அத்தனி நபர், தாமும், தம் உடல்-மன அமைப்புமே செயலுக்கான காரணிகள் என்று நினைத்தால், அவர் அறியாமையில் இருக்கிறார்.

"தன்னுடைய ஜீவனை அல்லது தன்னுடைய ஆத்மாவை, தன்னுடைய சார்பாகத் வேலை செய்பவனாகவோ அல்லது செயல்பரிபவனாகவோ உணரும் ஒருவன் உள்ளதை உள்ளபடியே பார்ப்பதில்லை, அவன் அறியாமையில் இருக்கிறான்," என்று கிருஷ்ணர் சொல்லும்போது, அவர் ஆத்மன் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்.

text banner

கிருஷ்ணர் ஒரு தனி மனிதனின் ஆத்மாவுக்கும், பிரபஞ்ச சக்திக்கும் உள்ள வேறுபாட்டை வரையறுத்துக் காண்பிக்கிறார். அவர் ஆத்மன் மற்றும் பிரம்மன் என்பதற்கும், மனிதன் மற்றும் தேவன் என்பதற்கும், நரன் மற்றும் நாராயணன் என்பதற்கும், தனிமனித சுயம் மற்றும் பராசக்தி என்பதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை எடுத்துக் காட்டுகிறார்.

தத்துவார்த்தக் கலந்துரையாடல்கள், எல்லாச் செயல்பாடுகளுக்கும் இந்த ஐந்து காரணிகளையே குறிப்பிட்டுச் சொன்னாலுங்கூட, எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவது தெய்வீக சக்தியே என்று அறுதியிட்டு முடிக்கிறார் கிருஷ்ணர்.

நாம் நம் உடல்-மனம்-ஜீவன் அமைப்புக்குள்ளேயே மூழ்கி, நம் புலனுணர்விலேயே சிக்கிக் கொண்டு, நாம் செய்யும் செயல்களுக்கெல்லாம் பின்னணி சக்தியாக நாமேதான் இருக்கிறோம் என்றே நம்பிக் கொண்டிருக்கிறோம். நம்மை மயக்கத்தில் ஆழ்த்தும் இந்த நம்பிக்கையை நாம் கொண்டிருக்கும்வரை நாம் அறியாமையில்தான் வேரோடியிருப்போம்.

உணர்ச்சி ரீதியான சரணாகதி: குருநாதரின் வழிகாட்டுதலே உங்களுடைய உணர்ச்சிகளின் வழிகாட்டுதலை விட மிகவும் புத்திசாலித்தனமானது என்று நம்பிக்கைகொள்வதே

'நீங்கள்' என்று உங்களை நீங்கள் எப்படிப் புரிந்துவைத்திருந்தாலும், உங்களின் உடல் - மன - உயிர் அமைப்பு என்பது பல விஷயங்களின் மொத்தத் தொகுப்பே! ஒவ்வொன்றும் தனித்தனியாக, ஏதாவது ஒன்றுக்கு காரணமாக இருக்கிறது. அப்படியிருந்தாலும்கூட எல்லாவற்றிற்கும் நீங்களேதான் பொறுப்பு என்று நீங்கள் நினைத்துக்கொள்கிறீர்கள். இங்குதான் பிரச்சினையே ஆரம்பமாகிறது. கிருஷ்ணர், ஆழ்நிலைகளிலான சரணாகதிக்குத் தேவையான நுட்பத்தைத் தருகிறார்.

நாம் முன்பே பார்த்ததுபோல, மூன்று நிலைகளிலான சரணாகதி உள்ளது. முதலாவது, நம் பட்டறிவை சரணாகதி செய்வது (Intellectual surrender) இதன் பொருள் என்னவென்றால், உங்கள் பட்டறிவைவிட குருவினுடைய பட்டறிவு மிகவும் கூர்மையானது என்பதை ஒப்புக்கொள்வது.

அடுத்தது, உணர்ச்சிகளை சரணாகதி செய்வது. உணர்ச்சித் தளத்தில், குருவினுடைய வழிகாட்டுதல்கள் அல்லது போதனைகளே உங்களுடைய உணர்ச்சிகளின் வழிகாட்டுதலை விட மிகவும் புத்திசாலித்தனமானது என்று நம்பிக்கைகொள்வதே உணர்ச்சி ரீதியான சரணாகதி (Emotional surrender).

மூன்றாவது, உங்கள் புலன்களை, உங்களின் புரிந்துணர்தலை அல்லது புரிந்துணர்தலின் மூலத்தையே சரணாகதி செய்துவிடுவது. நீங்கள் பல வருடங்களாகவே இந்தப் பட்டறிவினால் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதிலிருந்து எப்படியும் விடுபட வேண்டுமென்று விரும்புகிறீர்கள். அதனால் அதை எளிதாக சரணாகதி செய்துவிடுவீர்கள்.

பட்டறிவை சரணாகதி செய்வதென்பது
சுலபமே. ஏனெனில், அது உங்களைத்
தொடர்ந்து தொல்லைப்படுத்தி
வருகிறது. நீங்கள் பல வருடங்களாகவே
இந்தப் பட்டறிவினால் துன்பப்பட்டுக்க
ொண்டிருக்கிறீர்கள். அதிலிருந்து
எப்படியும் விடுபட வேண்டுமென்று
விரும்புகிறீர்கள். அதனால் அதை எளிதாக
சரணாகதி செய்துவிடுவீர்கள். நீங்கள்,
உங்களை விட அதிக புத்திசாலித்தனமும்,
தெளிவான சிந்தனைப்போக்கும் கொண்ட
ஒருவரைச் சந்திக்கும்பொழுது, நீங்கள்
சரணடைந்துவிடுவீர்கள், அவ்வளவுதான்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு ஆலோசகரை அணுகும்பொழுது அவருடைய யோசனைகளுக்குச் சரணடைகிறீர்கள். நீங்கள் ஒரு வக்கீலை அமர்த்திக் கொள்ளும்பொழுது, அவருடைய யோசனைகளுக்குச் சரணடைகிறீர்கள். ஏனெனில், அந்தத் துறையில் உங்கள் பட்டறிவை விட, அவருடைய பட்டறிவு கூர்மையானது என்று நினைக்கிறீர்கள். நீங்கள் ஒரு கணக்கரை அணுகும் பொழுதுகூட, அதேதான் நடக்கிறது.

ஆன்மிகப் பாதையில்கூட, உங்களை விட அதிகமாக அறிந்த ஒருவரைச் சந்திக்கும்பொழுது அவரிடம் உங்கள் பட்டறிவை சரணாகதி செய்கிறீர்கள். அது ஒரு பெரிய விஷயமல்ல. உங்கள் பட்டறிவை ஒருவரிடம் கொட்டிவிடுவதென்பது, உங்களை அதிலிருந்து நிம்மதியடையவே செய்கிறது.

அடுத்து வருவது, உணர்ச்சிகளைச் சரணாகதி செய்துவிடுவது. ஒருசில தியானங்கள் அல்லது ஒருசில புரிதல்கள், அனுபவங்கள் கிடைத்த பிறகு, குருவுடன் ஆழமாகத் தொடர்பு ஏற்பட்டிருப்பதாக நீங்கள் உணரும்பொழுது, இது நிகழ்கிறது. உங்களுடைய உணர்ச்சிகளை விட அதிகமாக அவருடைய உணர்ச்சிகளுக்கு நீங்கள் மரியாதை கொடுக்கிறீர்கள்.

குருவினுடைய உணர்ச்சிகள் என்பதன் பொருள், குருவினுடைய வழிகாட்டுதல்கள் என்பதே. நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று அவர் விரும்புகின்றாரோ, அந்தப் பாதையில் நீங்கள் செல்ல, அவர் உங்களுக்குக் காட்டும் வழிகாட்டுதல்களையே குருவினுடைய உணர்ச்சிகள் என்கிறேன்.

நீங்கள் 'வாழ்க்கை' என்று நினைத்துக் கொண்டிருப்பவையைக் காட்டிலும், குருவின் வழிகாட்டுதல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அவர் உங்கள் வாழ்வின் மையமாகிவிடுவார். மற்ற எல்லா உணர்ச்சி பூர்வமான பற்றுதல்களையெல்லாம்விட மேலாக, அவரை மதிப்பீர்கள்.

முக்கியத்துவங்கள் மாறுகின்றன. உங்கள் உணர்ச்சி தளத்தில், குருவே முதன்மை பெறுகிறார். உங்கள் உணர்ச்சி தளத்தில், முழுமையாக அவரோடு தொடர்புடையவராகக் கருதுவதே உணர்ச்சி ரீதியான சரணாகதி.

அடுத்தது, சரணாகதியின் இன்னும் ஆழமானதொரு நிலை, இந்தப் பதினேழு நாட்களின் உரை முழுவதையும் கேட்ட பிறகு, இப்போது உங்களால் இந்த ஆழமான நிலையிலான சரணாகதியைப் புரிந்துகொள்ள முடியும். இது, புலன்கள் ரீதியான சரணாகதி. புலன்களைச் சரணடையச் செய்வது என்றால், உங்கள் புலன்கள் குரு சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்வதையே குறிக்கிறது.

பொதுவாக, நான் பேசுவதைக் கேட்கும்போது என்ன செய்வீர்கள்? நான் சொல்வதில் எதுவெல்லாம் உங்களுக்கு ஒத்து வராத கருத்துகள் என்று உங்கள் மனம் நினைக்கிறதோ அவற்றை வடிகட்டிவிடுவீர்கள். உங்கள் மனத்திலுள்ள வடிகட்டி, நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாதவற்றை வடிகட்டிவிடும். உங்களுக்கு எதைக் கேட்க விருப்பமோ அதை மட்டுமே அனுமதிக்கும்.

இருப்பினும், நீங்கள் எப்போது உங்கள் பட்டறிவையும், உணர்ச்சிகளையும் சரணாகதி செய்துவிடுகிறீர்களோ, அப்போதே, உங்களின் இந்த அவநம்பிக்கையையும், உங்கள் புலன்களைத் தடுக்கும் தடைகளையும்கூட சரணாகதி செய்யத் தயாராகிவிடுகிறீர்கள்.

> உங்கள் மனத்திலுள்ள
> வடிகட்டி, நீங்கள்
> ஏற்றுக்கொள்ள
> விரும்பாதவற்றை
> வடிகட்டிவிடும்.
> உங்களுக்கு எது
> விருப்பமோ அதை மட்டுமே
> அனுமதிக்கும்.

‘நீங்கள் கடவுள்’ என்பதை, சட்டென உணர வேண்டுமா?

ஒரு சமயம், ஒரு சீடர் குருவிடம் கேட்டார், "ஏன் நான் சரணடைய வேண்டும்?"

குரு: உன்னைப் பற்றி உனக்கு எல்லாம் தெரியும் என்று, நீ எப்படித் தெரிந்துகொண்டாய்?

சீடர்: என் புலன்களின் மூலமாக என்னைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறேன்.

குரு: உன் புலன்கள் மூலம் உன்னைப் பற்றி நீ தெரிந்து கொண்டதன்படி, நீ யார்?

சீடர்: எனக்குத் தெரிந்தவரை, நான் இந்த உடலும், மனமும்தான்.

குரு: "நீ கடவுள், வெறுமனே இந்த உடலும், மனமும் மட்டுமே அல்ல, நீ உன் புலன்களை சரணாகதி செய்யும்போதுதான், நான் சொல்வதின் ஸத்யத்தை உணர்ந்துகொள்வாய். உன் புலன்களுக்கெல்லாம் மேலாக என்னை நீ நம்பும் கணமே, ‘நீ கடவுள்’ என்பதை உணர்ந்துகொள்வாய். பிறகு நீ தத்த்வமஸி என்பதன் முழுப்பொருளைப் புரிந்துகொள்வாய்.

(தத்த்வமஸி என்கிற சொல்லின் நேர்ப்பொருள் ‘நீ அதுவாக இருக்கிறாய்’ அதாவது ‘நீ கடவுளாக இருக்கிறாய்’ என்பதே).

குரு, திரும்பத் திரும்ப, ‘நீங்கள் கடவுளே’ என்பதை உங்களுக்குக் காட்டவே முயற்சிக்கிறார். நானும் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறேன்: ‘நான் கடவுள்’ என்பதை நிரூபிக்க நான் இங்கு வரவில்லை, ‘நீங்கள் கடவுள்’ என்பதை நிரூபிக்கவே நான் இங்கு வந்திருக்கிறேன்!

குரு, ‘நீங்கள் எல்லையற்றவர், முடிவற்றவர்’ என்னும் கருத்துக்குத் துணையாக நிற்கிறார். நீங்கள் இன்னும் ஆராய்ந்தறியாத, வெளிப்படுத்தாத, உணர்ந்துகொள்ளாத உங்கள் ஆத்மாவின் பல பரிமாணங்களை உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறார்.

குரு பல பரிமாணங்கள் கொண்ட உங்கள் இருப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அவரால் அதை உணர முடியுமென்றால், உங்களால்கூட அதை உணர முடியும் என்னும் சாத்தியத்தை உங்களுக்கு எடுத்துக்காட்ட முயலுகிறார். ஆனால், நீங்கள், உங்கள் புலன்களை நம்பிக் கொண்டிருக்கும்வரை, 'உடலும் மனமும்தான் நீங்கள்' என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.

நீங்கள், உங்களின் புலன்களைக்காட்டிலும் மேலாக, உங்கள் குருவை நம்பும்பொழுது, குருவினுடைய வார்த்தைகளே ஸத்யம், உங்கள் புலன்கள் சொல்வது அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். பிறகு நீங்கள் குரு சொல்லும் ஸத்யத்தின் பொருளை அனுபவ பூர்வமாக உணர்வீர்கள்.

குரு, 'நீங்கள் கடவுள்' என்று
சொல்லும்பொழுது, நீங்கள் சட்டென அந்த
ஸத்யத்தை உணர்ந்துகொள்வீர்கள். இது
நாள்வரை, உங்கள் புலன்கள் உங்களை
நம்பச்செய்து கொண்டிருந்ததுபோல,
உங்கள் உடலும் மனமும் நீங்கள் அல்ல
என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

> உங்கள் புலன்களிடம்
> சரணடைவதா அல்லது
> உங்கள் குருவிடம்
> சரணடைவதா என்பதை
> நீங்கள்தான் முடிவுசெய்ய
> வேண்டும்.

இருவிதமான குரல்கள், இரு நிலைகளிலிருந்து பேசிக் கொண்டிருக்கின்றன. ஒருபுறம், உங்களுடைய புலன்கள், 'நீங்கள் என்பது உங்கள் உடலும் மனமும்தான்' என்று சொல்கிறது, இன்னொருபுறம், உங்கள் குரு சொல்கிறார், "நீங்கள் கடவுள், நீங்கள் தெய்விகமானவர்கள், உங்கள் இருப்புக்குப் பல பரிமாணங்கள் இருக்கின்றன, ஒவ்வொன்றையும் ஆனந்தமாக அனுபவியுங்கள்," என்று சொல்கிறார்.

இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உங்கள் வச மே உள்ளது. நீங்கள் உங்கள் புலன்களை நம்பினால், குருவை நம்ப முடியாது. உங்களுடைய குருவை நம்பினால், உங்களின்

புலன்களை நம்ப முடியாது. உங்கள்
புலன்களிடம் சரணடைவதா அல்லது
உங்கள் குருவிடம் சரணடைவதா என்பதை
உங்கள் வாழ்க்கைமுறை முடிவுசெய்யும்.
நீங்கள் தான் அதை முடிவு செய்ய வேண்டும்.

நீங்கள், உங்கள் புலன்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் வரை, உங்கள் குரு சொல்வதை காது கொடுத்துக்கூட கேட்க மாட்டீர்கள். உங்கள் புலன்களிலிருந்து விலகி, நீங்கள் குருவிடம் வரும்பொழுது, அவர் சொல்வதைக் ‘கேட்டு’, நீங்கள் கடவுள் என்னும் ஸத்யத்தை உணர்வீர்கள்.

> நீங்கள், உங்கள்
> புலன்களிலிருந்து விலகி,
> குருவிடம் வரும்பொழுது,
> அவர் சொல்வதைக்
> ‘கேட்டு’, நீங்கள் கடவுள்
> என்னும் ஸத்யத்தை
> உணர்வீர்கள்.

உள்ளுலகில், உங்களுக்கு முதலும், இறுதியாகவுமாகத் தேவைப்படும் கருவி, முழுமையான சரணாகதியே ஆகும். அதற்குப் பிறகுதான் நீங்கள் விழித்துக்கொள்கிறீர்கள், ஸத்யத்தை உணர்ந்துகொள்கிறீர்கள்.

அர்ஜுனன், அவருடைய புலன்களை மட்டுமே நம்பிக்கொண்டிருந்திருந்தால், அதிகபட்சமாக, அவர் ஒரு வீரராகவும், நல்ல அரசராகவும் மட்டுமே இருந்திருக்க முடியும். ஆனால், அதற்குப் பதிலாக, அவர், அவருடைய புலன்களைக் காட்டிலும் மேலாக கிருஷ்ணரை நம்பியதால், ஞானமடைந்தார். கிருஷ்ணரின் ஸத்யங்களை நம்பி அனுபவமாக உணர்ந்தார்.

பட்டறிவு மற்றும் உணர்ச்சிகளை மட்டுமல்லாது, அவற்றின் மூலவேரான புலன்களையும் சேர்த்தே சரணாகதி செய்யும்பொழுது மட்டுமே, கிருஷ்ண உணர்வை நீங்கள் அனுபவிக்க முடியும். புலன்கள்தான் தகவல்களைத் தருகின்றன. அவற்றை சரணாகதி செய்யும்பொழுது, தகவல்களின் மூலத்தையே சரணாகதி செய்துவிடுகிறீர்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களையேகூட, நீங்கள் உங்கள் புலன்களின் மூலமாகத்தான் பெறுகிறீர்கள். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்களைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. மற்றவர்கள், உங்களைப் பற்றி, தங்கள் புலன்களின் மூலமாகப் பெற்ற தகவல்களை உன்னிடம் பகிர்கிறார்கள், அதன் அடிப்படையில் உங்களை நீங்களே மதித்துக்கொள்கிறீர்கள்.

உங்களின் ஆணிவேரையே அறிந்திடலாம்'

'நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்' என்று ஒருவர் உங்களிடம் சொல்லிவிட்டால் போதும், உடனே நீங்கள் உங்கள் மனத்தின் ஒரு பக்கத்தில், இன்னாரின் கருத்துப்படி, நான் அழகாக இருக்கிறேன்' என்று குறிப்பு எழுதி வைத்துக்கொள்கிறீர்கள். வேறொருவர், 'நீங்கள் அதிக புத்திசாலியாக இருக்கிறீர்கள்' என்று சொல்லி விட்டால், 'இன்னாரின் கருத்துப்படி நான் அதிக புத்திசாலி' என்றொரு குறிப்பு எழுதி வைத்துக்கொள்வீர்கள். மற்றொருவர், நீங்கள் நல்ல உயரமாக, நிறமாக, கம்பீரமாக இருக்கிறீர்கள் என்று சொன்னால், அதுவும் குறித்துக் கொள்ளப்படும்; சொன்னவருடைய பெயரும் பதிவுசெய் யப்படும். 'நீங்கள் ஒரு மூடன்' என்று யாராவது சொன்னால், உடனே அதுவும் ஒரு குறிப்பெடுக்கப்படும்!

பிறகு, அந்த நாளின் கடைசியில், இந்தக் குறிப்புகளை எல்லாம் ஒருமுறை பார்வையிட்டு, 72% மக்கள் உங்களை மிக புத்திசாலி என்றும், 20% பேர் நீங்கள் மூடன் என்றும், மீதி 8% பேர்அபிப்ராயம் எதுவும் சொல்லவில்லை என்றும் மதிப்பீடு செய்வீர்கள். இப்படிப்பட்ட புள்ளிவிபரங்களை வைத்துக் கொண்டு நீங்கள் உங்களைப் பற்றி ஒரு முடிவுசெய்கிறீர்கள்.

'72% பேர் என்னை 'புத்திசாலி' என்று சொல்லியிருப்பதால், நான் ஒரு புத்திசாலியாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவர் கள் அத்தனை பேரும் மடையர்களாக இருக்க முடியாதே. அதனால் அவர்கள் சொன்னது சரியாகத்தான் இருக்க வேண்டும்!' என்ற முடிவுக்கு வருகிறீர்கள்.

ஆகவே உங்களைப் பற்றிய மதிப்பீடு
என்பது, மற்றவர்கள் உங்களைப் பற்றிச்
சொன்ன கருத்துகளின் அடிப்படையில்
தான் இருக்கிறது.

உள்ளுலகில்,
உங்களுக்கு முதலும்,
இறுதியாகவுமாகத்
தேவைப்படும் கருவி,
முழுமையான சரணாகதியே
ஆகும்.

நாள் முழுவதும் நீங்கள் ஒரு கையெழுத்து வேட்டை நடத்துவீர்கள்.

தொடர்ந்து மக்களை, உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தைச் சொல்லுமாறு கேட்டுச் சு

Open notebook/diary

ற்றியலைவீர்கள். விளைவு... நீங்கள் யார்
என்ற கருத்தை, உங்கள் புலன்கள்தான்
முடிவுசெய்கின்றன. கிருஷ்ணர்,
இப்படிப்பட்ட புலன்களைத்தான் சரணாகதி
செய்துவிடு என்று அர்ஜுனனிடம்
கேட்கிறார்.

உங்கள் புலன்களை, உங்களைப் பற்றி நீங்களே வைத்திருக்கும் கருத்தின் 'வேரை'கூட சரணாகதிசெய்துவிடும்போது, உங்களின் உடல், மனத்துடன் நீங்கள் கொண்டிருக்கும் அடையாளத்தை இழந்துவிடுவீர்கள்.

நீங்கள் இந்த மூன்று நிலைகளிலும் சரணடையும்போது மட்டுமே, உங்களுக்கு இறுதி அனுபவம் கிடைக்கப் பெறும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

நான் சொல்கிறேன் கேளுங்கள், சரணாகதி செய்வதே ஞானமடைவது தான். தயவுசெய்து, சரணாகதி செய்த பின்பே, உங்களுக்கு ஞானம் விநியோகிக்கப்படும் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். இல்லை! அது தபால் மூலமாகப் பெறும் ஒரு பணவிடை (Pay check) அல்ல. சரணாகதி என்பதே ஞானம், அந்தக் கணத்திலேயே நீங்கள் சத்தியத்தை அனுபவமாகப் பெறுகிறீர்கள்.

பொதுவாக, நாம் எப்போதுமே வெறும் வார்த்தைகளைக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறோம். குறைந்தபட்சம் நீங்கள், அப்படி வார்த்தைகளைக் கொண்டு விளையாடும்பொழுதாவது, அதைப்பற்றிய விழிப்போடு இருங்கள்.

> சரணாகதி செய்த பின்பே,
> உங்களுக்கு ஞானம்
> விநியோகிக்கப்படும்
> என்று நினைத்துக்
> கொள்ளாதீர்கள். சரணாகதி
> செய்வதே ஞானமடைவது
> தான்.

பெரும்பாலான மக்கள் என்னிடம்
வந்து, தாங்கள் கிருஷ்ணரிடமோ,
வெங்கடேஸ்வரரிடமோ அல்லது
சிவனிடமோ முழுமையாகச் சரணாகதி
அடைந்துவிட்டதாகச் சொல்வார்கள்.
ஆனால், அடுத்த வாக்கியமாக,
எங்களுடைய ஒரே விருப்பம், 'நாங்கள்
ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதுதான்

ஸ்வாமிஜி,' என்பார்கள். அவர்கள்
உண்மையிலேயே சரணாகதி செய்திருந்தால்,
சரணாகதியே போதுமானது. அவர்கள்
வேறெதையும் கேட்க வேண்டிய அவசியம்
இல்லை.

'கடவுளிடம் சரணடைந்த பிறகும் தியானம் அவசியமா?' என்று சிலர் கேட்கிறார்கள். அவர்கள் உண்மையிலேயே சரணடைந்திருந்தால், அவர்களுக்கு இதுபோன்ற சந்தேகங்களே இருக் காது, தியானமும் தேவைப்படாது. அப்படி அவர்களுக்குச் சந்தேகம் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு தியானம் அவசியம்தான். சந்தேகங்கள் இருக்கும்வரை, சரணாகதி நிகழாது; ஏனெனில், சரணடையும் கணத்தில் 'நீங்கள்' மறைந்துவிடுவீர்கள்.

நீங்கள், உங்களுடைய 'நான்' - 'எனதை'க் கொடுக்கும்போது, பராசக்தி, அவளுடைய 'நான்', 'எனதை' உங்களுக்குத் தருவாள். இரண்டு வங்கிக் கணக்குகளும் சேர்ந்து ஒரே கணக்காகிவிடும், அது ஒரு கூட்டுக்கணக்காகிவிடும்! நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமேயில்லை!

நீங்கள், உங்களை உடலாகவும் மனமாகவும் நினைத்துக் கொள்ளும்பொழுது, உங்களுடைய சரீரம் ரோகமயமாகவும், மனம் சோகமயமாகவும் இருக்கும். அதாவது உடலானது வியாதிகளாலும், மனமானது துக்கங்களாலும், மன இறுக்கங்களாலும் நிரம்பியிருக்கும் என்று பொருள்.

நிலைமை இவ்வாறு இருக்கும்பட்சத்தில், நாம் எதை சரணாகதி செய்ய முடியும்? வியாதிகள் நிறைந்த இந்த உடலையும், துக்கங்கள் நிரம்பிய இந்த மனத்தையும் தவிர வேறொன்றுமேயில்லை, நீங்கள் இவ்விரண்டையும் இறைவனின் காலடியில் போட்டுவிடும்பொழுது, இறைவன் அவருடைய உடலையும், மனத்தையும் உங்களுக்கு வழங்குகிறார்!

அப்போது, சரீரம் தேவமயம், மனம் ஸுखமயம், ஆத்மா ஆனந்தமயம் ஆகிறது. அதாவது, தெய்விகமான உடல், சந்தோஷமான மனம், ஆனந்தமான

ஆன்மா ஆகியவற்றை நீங்கள்
பெறுகிறீர்கள்!
ஏதாவது 'ஒன்றைக் கொடுத்தால் மூன்று
இலவசங்கள்' என்னும் திட்டம்!

மாணிக்கவாசகப் பெருமான்
சிவபெருமானை நோக்கி, ஒரு அழகான
தமிழ்ப் பாடல் பாடியிருக்கிறார்.

தந்ததுன்றனைக் கொண்டதென்றனை,
சங்கரா ஆர்கொலோ சதுரர்?

அவர் சொல்வது, 'ஓ சங்கரா, உன்னை எனக்குத் தந்து, பதிலாக என்னை நீ பெற்றுக் கொண்டாய். இந்தப் பேரத்தில், அதிக லாபம்பெற்றது யார்? அதிக புத்திசாலி யார்?

சரணாகதியில், நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை, எல்லாமே உங்களுக்கு லாபம்தான். சரணாகதி செய்வது என்பது, எல்லாவற்றையும் விட்டுவிடு வது என்று அர்த்தமல்ல. உங்கள் உடைமைகளை விட்டுவிட வேண்டும் என்பதல்ல, எல்லாவற்றையும் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், எதையும் உங்கள் 'இருப்பில்' உள்வாங்கிக்கொள்ளாதீர்கள்.

அனைத்தையும் விட உயர்ந்தவர் நீங்கள்!

உங்கள் உடைமைகளை வைத்து உங்களை மதிப்பீடுசெய்து கொள்ளாதீர்கள். நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதைவிட, நீங்கள் மேலானவர். உங்களுடைய வங்கி இருப்பை வைத்து உங்களை எடைபோடாதீர்கள்; உங்கள் உறவுகளை வைத்து எடை போடாதீர்கள்; பெயர், புகழ் வைத்தும் எடை போடாதீர்கள்; உங்கள் நண்பர்கள் கூட்டத்தை வைத்தும் எடை போடாதீர்கள். அவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்தாலும்கூட, நீங்கள் அதையும் விட மிக உயர்ந்தவர்!

நீங்கள் உங்களை இவற்றின் அடிப்படையில் எடைபோட்டுக் கொண்டிருக்கும்வரை, இவற்றை உங்கள் இருத்தலில் உள்வாங்கிக் கொள்கிறீர்கள். அதற்குப் பிறகு, இவையே உங்கள் வாழ்வின் மையக் கருத்துகளாக ஆகிவிடும். இவை, எல்லாத் திசைகளிலிருந்தும் உங்களை அலைக்கழிக்கும். நீங்கள், உங்கள் இருத்தலுக்காக வாழ மாட்டீர்கள். நீங்கள், உள்ளது உள்ளபடியே உங்கள் இருத்தலுக்கு கிடைக்க மாட்டீர்கள். உங்கள் வாழ்வின் முக்கிய காரணிகளாக இவை இருக்கும்வரை, இவையே உங்களை ஆட்சி செய்யும். ஆனாலுங்கூட, இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்தாலும், அதைக்காட்டிலும் நீங்கள் உயர்ந்தவர்!

புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் இவற்றுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று. நீங்கள் இந்த ஸத்யத்திற்கு விழித்துக் கொண்டீர்களானால், பின்பு நீங்கள், வங்கியிருப்பு, உறவுகள், மனப்பாங்குகள், பெயர், புகழ் போன்றவற்றை அடிப்படையாக வைத்து உங்களை மதிப்பீடு செய்ய, உங்களையேகூட அனுமதிக்க மாட்டீர்கள். உங்களை மதிப்பீடு செய்ய இவற்றையெல்லாம் பயன்படுத்த முடியாது. இந்த ஸத்யத்திற்கு நீங்கள் விழித்துக்கொண்ட கணமே நீங்கள் சரணாகதி செய்து விட்டீர்கள்.

நான், உங்களை கேட்டுக்கொள்வதெல்லாம் இதுவே: உங்களைப் பற்றி நீங்களே கொண்டிருக்கும் சின்னச் சின்ன கருத்துகளையெல்லாம் சரணாகதி செய்துவிடுங்கள்!

பரந்த சமுத்திரத்தின் மேற்பரப்பில், சிறுசிறு நீர்க்குமிழிகள் தோன்றுகின்றன. ஒரு நீர்க்குமிழி, தன்னை நீண்டநாள் வாழப்போகும் ஒரு தனிப்பட்ட ஜீவனாக நினைக்க ஆரம்பித்துவிடுகிறது. தான் மிக பலசாலியாக மாறவேண்டும் எனவும் நினைக்கிறது. ஆனால், அது ஒருசில கணங்களுக்கே நீடிக்கிறது. இருப்பினும், அந்த ஒருசில கணங்களுக்குள் தன்னைச் சுற்றி மற்ற நீர்க் குமிழிகளையும் சேர்த்துக்கொள்கிறது. ஒரு குமிழியைத் தன்னுடைய மனைவியாகவும், இன்னொரு குமிழியை மகனாகவும், சிலவற்றை பெற்றோராகவும், உறவினராகவும் மற்றும் நண்பர்களாகவும் நினைத்துக்கொள்கிறது.

தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும்
பொருட்டு, இப்படி எல்லாப் பக்கங்களிலி
ருந்தும் பல குமிழிகளை, தன்னைச் சுற்றிச்
சேர்த்துக்கொள்கிறது.

இதோடுமட்டுமல்லாமல், கடற்கரையில்
இருக்கும் சில மணற்துகள்களைச் சேகரித்து
வைத்துக்கொண்டு, அவற்றைத் தன்

நான், உங்களை
கேட்டுக்கொள்வதெல்லாம்
இதுவே: உங்களைப் பற்றி
நீங்களே கொண்டிருக்கும்
சின்னச் சின்ன
கருத்துகளையெல்லாம்
சரணாகதி செய்துவிடுங்கள்!

STOP sign in water

உடைமைகளாகவும் நினைத்துக் கொள்கிறது. ஒரு மணற்துகளை வங்கியிருப்பாகவும், இன்னொன்றை நகையாகவும், இப்படி மற்றவற்றை, இன்னும் பிற சொத்துக்களாகவும் நினைக்கிறது. பிறகு அவற்றைப் பாதுகாப்பதற்கென ஒரு வேலியையும் போட்டுக் கொள்கிறது.

இதற்கிடையில், ஒரு பெரிய குமிழி, கடலின் ஒரு பகுதிக்கு ராஜாவாகவும் ஆகிவிடுகிறது! பிறகு அந்தக் குமிழிகளுக்குள், ‘நீ என்னைத் தாக்கக்கூடாது, நானும் உன்னைத் தாக்க மாட்டேன்; நீ என்னுடையதை எடுத்துக்கொள்ளக்கூடாது, நானும் உன்னுடையதை எடுத்துக்கொள்ள மாட்டேன்’ என்று சமரசம் நடக்கிறது. முழு விளையாட்டும் இப்படித்தான் போகிறது.

எவ்வளவு காலம் அந்த நீர்க்குமிழி, இந்த விளையாட்டை விளையாட முடியும்? ஒருசில நொடிகளுக்கு மட்டுமே! அந்த விளையாட்டை முடிக்கும முன்னரே, அது மீண்டும் அந்தக் கடலில் கலந்து மறைந்துவிடுகிறது.

அந்த நீர்க்குமிழியானது, மூன்று சமயத்திலுமே - அது உருவான போதும், வாழ்ந்த போதும், மறைந்த போதும் - அந்தக் கடலின் ஒரு பகுதியாகவேதான் இருந்தது.

நீர்க்குமிழியானது,
மூன்று சமயத்திலுமே –
அது உருவான போதும்,
வாழ்ந்த போதும்,
மறைந்த போதும் – அந்தக்
கடலின்
ஒரு பகுதியாகவேதான்
இருக்கிறது.

என்னதான் அது, தன்னை அந்தக்
கடலிலிருந்து வேறானதாகச் சொல்லிக்
கொண்டாலும், தன்னை ஒரு தனி ஜீவனாக
நினைத்துக் கொண்டாலும், பல மக்களும்,
சொத்துக்களும் தனக்கு சொந்தமென்று
நினைத்துக் கொண்டாலும், அது அந்நாளும்
அந்தக் கடலின் ஒரு பகுதியாகவேதான்
இருந்தது. மேலும், வெகு விரைவிலேயே
அதனுள் கலந்து மறைந்தும் விட்டது!

அதைப்போலவேதான், நீங்களும் ஒருசில கணங்களுக்கு, இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வில், நீங்கள் ஒரு தனி ஜீவனாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறீர்கள். அந்த ஒருசில கணங்களுக்குள் ஒருசிலரை உறவினர்களாகவும் நண்பர்களாகவும் பிடித்துவைத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் மற்றொரு நீர்க்குமிழியைத் திருமணம் செய்துகொள்கிறீர்கள். ஒருசில மணற்துகள்களை எடுத்து, உங்கள் சொத்துகளாகப் பதிவு செய்துகொள்கிறீர்கள். இவற்றைப் பதிவுசெய்பவர், இன்னொரு நீர்க்குமிழி. உங்களைச் சுற்றியிருக்கும் இப்பொருட்களால், நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறீர்கள். இந்தப் பொருட்களின் அடிப்படையில், உங்களைப் பற்றிய ஒரு கருத்தை, நீங்களே உருவாக்கிக்கொள்கிறீர்கள். நீங்களும் அந்த நீர்க்குமிழியைப்போலவே, அதே விளையாட்டை விளையாடுகிறீர்கள். திடீரென முழுவதுமே மறைந்துபோகிறது.

நீங்கள் இதைப் புரிந்துகொண்டாலும்
புரிந்துகொள்ளா விட்டாலும், அறிந்து
கொண்டாலும் அறிந்துகொள்ளாவிட்டாலும்,
உணர்ந்து கொண்டாலும்
உணர்ந்துகொள்ளாவிட்டாலும், அந்த
விளையாட்டு ஆரம்பிக்கும் முன்னரும்,
ஆடிக்கொண்டிருக்கும்பொழுதும், முடிந்த
பின்னரும், நீங்கள் அந்தக்கடலுக்குச்
சொந்தமானவர்தான். நீங்கள் கடவுள்தான்.
இந்தப் பிரபஞ்ச பேரியக்கத்துடன்
ஒன்றியவர்தான்.

நான் சரணாகதி என்று
சொல்லும்போது, நீங்கள்
கடலில்தான் இருக்கிறீர்கள்
என்னும் ஸத்யத்திற்கு
நீங்கள் விழித்துக்கொள்ள
வேண்டும் என்பதையே
குறிப்பிடுகிறேன்.

மகிழ்ச்சியா? போராட்டமா? தேர்ந்தெடுப்பது நீங்களே!

நான் சரணாகதி என்று சொல்லும்போது, நீங்கள் கடலில்தான் இருக்கிறீர்கள் என்னும் ஸத்யத்திற்கு நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என்பதையே குறிப்பிடுகிறேன். நீங்கள் பிறக்கும்பொழுதும், நீங்கள் உங்களை ஒரு தனி மனிதர் என்று நினைக்கும்பொழுதும், நீங்கள் அஞ்ஞானம் அடையும்பொழுதும், எப்பொழுதாயினும் நீங்கள் அந்தக் கடலிலேயேதான் இருக்கிறீர்கள். விழித்துக்கொள்ளுங்கள், அவ்வளவுதான்!

இந்த இறுதி ஸத்யத்திற்கு விழித்துக்கொள்வதே சரணாகதி.

உங்களைப் பற்றிய சின்ன சின்ன
கருத்துகளையெல்லாம் விட்டுவிட்டு,
உண்மைக்கு விழித்துக்கொள்ளுங்கள்.
இதன் விளைவாக, உங்களின் உள் உலகில்,
உங்களின் உள் விழிப்புணர்வில் தானாகவே
'சரண்ாகதி நிகழும். இல்லாவிடில், நீங்கள்
'சரண்ாகதி என்னும் சொல்லை வைத்துக்
கொண்டு வெறுமனே விளையாடுவீர்கள்.
வாய்ஜாலம் பேசுவீர்கள்.

> நீங்கள் கடவுள்
> என்பதைத் தவிர, நீ
> ங்்கள் உங்களைப் பற்றி
> எப்படிப்பட்ட மதிப்பீட்டை
> வைத்திருந்தாலும், அது
> உங்களைப் பற்றிய ஒரு
> குறைமதிப்பீடே!

பொதுவாக நாம், பெருமைப்ப டுத்தும் வார்த்தைகளைக்கொண்டு நம்மை விவரித்துக்கொள்கிறோம். ஆனால், நாம் இந்த விவரிப்புக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் என்பதை, நாம் அறிவதில்லை.

ஒரு நாள் பக்தரொருவர் என்முன் தன்னைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தார். அவர் அங்கிருந்து சென்ற பிறகு, நான் என் சீடரிடம், “அவர் தாழ்வுமனப்பான்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்,” என்றேன். என் சீடரோ மிகவும் குழம்பிவிட்டார். “ஸ்வாமிஜி, அவர் தன்னைப் பற்றி மிகப் பெருமையாகப் பேசுகிறார். அது எப்படித் தாழ்வு மனப்பான்மையாகும்?” என்று என்னிடம் கேட்டார். நான் சொன்னேன், “புரிந்துகொள், நாம் ஒவ்வொருவருமே கடவுள்தான். அதனால் அதைத் தவிர, நம்மைப் பற்றி என்ன சொன்னாலும், அது குறைவுதான், அதுவும் ஒரு தாழ்வுமனப்பான்மைதான்,” என்றேன்!

நீங்கள் கடவுள் என்பதைத் தவிர, நீங்கள் உங்களைப் பற்றி எப்படிப்பட்ட மதிப்பீட்டை வைத்திருந்தாலும், அது உங்களைப் பற்றிய ஒரு குறைமதிப்பீடே, நீங்கள் தாழ்வுமனப்பான்மையால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! உங்களைப் பற்றிய உங்கள் கருத்துகளையெல்லாம் விட்டுவிடுங்கள். நீங்கள் கடல்தான் என்ற உண்மைக்கு விழித்துக்கொள்ளுங்கள்.

சில மீன்கள், ஆற்றின் நீரோட்டத்தோடு நீந்தும்; சில, நீரோட்டத்தை எதிர்த்து நீந்தும். அவை ஆற்றின் போக்கில் போனாலும் அல்லது எதிர்த்துப் போனாலும், எல்லா மீன்களும் அந்த ஆற்றில்தான் இருக்கின்றன. பிரபஞ்சிருப்பின் போக்கோடு இசைந்துபோனாலும் அல்லது எதிர்த்துப் போராடினாலும், நீங்கள் அதனோடுதான் ஒன்றியிருக்கிறீர்கள்.

நீங்கள் கடவுள் என்பதை உணர்ந்திருக்கிறீர்களோ இல்லையோ, நீங்கள் கடவுள்தான். இதில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை. அங்கு இருப்பது ஒரேயொரு வாய்ப்புதான். ஒன்று, நீங்கள் கடவுள் என்பதை உணர்ந்து மகிழுங்கள், அல்லது போராடிக் கொண்டும் கஷ்டப்பட்டுக் கொண்டும் வாழ்க்கையைத் தொடருங்கள், அவ்வளவுதான்!

நீங்கள் உங்களைச் சுற்றி எவ்வளவு பலம்வாய்ந்த வேலிகளை அமைத்தாலும், அதாவது அதிகமான நீர்க்குமிழிகளை உங்களைச் சுற்றி சேர்த்துக் கொண்டாலும், நீங்கள், அலைகளை உங்கள் எல்லைக்குள் வர வேண்டாமென சொல்ல முடியுமா? நீங்கள் எதைச் செய்தாலும், அது, ஒருசில நிமிடங்களே நீடிக்கும் நாடகம்தான்!

ஒரு நிமிட சரணாகதி, வாழ்க்கையையே மாற்றிவிடும்

அடுத்த பிரச்சினை, நீங்கள் சரணடைய முடியாவிட்டால் என்ன செய்வது?

சிலர் என்னிடம், "ஸ்வாமிஜி, என்னால் சரணாகதி செய்ய முடியவில்லை? நான் என்ன செய்ய முடியும்?" எனக் கேட்பார்கள்.

நான் அவரிடம், "கவலைப்படாதீர்கள், ஏனெனில், உங்களிடம் சரணாகதி செய்வதற்கென்று ஒன்றுமில்லை. சரணாகதி செய்வதற்கு உங்களிடம் ஒன்றுமில்லை என்ற புரிதலின்மூலம் நீங்கள் முன்னமேயே சரணடைந்து விட்டீர்கள். நிம்மதியாயிருங்கள்."

நீங்கள் சரணாகதி செய்கிறீர்களோ இல்லையோ, இதுவே உண்மை. நீங்கள் சரணாகதி செய்கிறீர்களோ இல்லையோ பிரபஞ்ச இருப்பு உங்களைக் கவனித்துக் கொள்ளும். பிறகு தானாகவே வாழ்க்கை

callout box

தொடரும். நீங்கள் தளர்வான மனநிலையில் நிம்மதியாகிறீர்கள். அந்தத் தளர்வான மனநிலையே ச்ரணாகதிதான்.

வாழ்க்கையின் ஓட்டத்தில் ஓய்வாக, நிம்மதியாக இருங்கள். உங்களுடைய புலன்கள் உங்களுக்குச் சுட்டிக்காட்டுவதைப்போல, நீங்கள் உடல் - மனம் அல்ல. அவற்றை விட உயர்வானவர் என்கிற ஸத்யத்திற்கு விழித்துக்கொள்ளுங்கள்.

சமுதாயம், 'நீங்கள் வேறு ஏதோவொன்று' என்று நீங்கள் நினைக்கும் வகையில், உங்களை வழிநடத்திச் செல்கிறது. ஆனால், நீங்கள் கற்பனை செய்ய முடிந்த எல்லாவற்றையும் விட, நீங்கள் உயர்ந்தவராயிருக்கிறீர்கள் என்கிற உண்மைக்கு விழித்துக்கொள்ளுங்கள். உங்களைப் பற்றி நீங்களே செய்யும் எந்தவொரு கற்பனைக்கும் அப்பாற்பட்டவராய் இருக்கிறீர்கள்.

ச்ரணாகதி செய்வது, உங்களுக்கு ஒரு புதிய விழிப்புணர்வையே தரும். பின்பு நீங்கள் அதே மனிதராக இருக்க மாட்டீர்கள். கணநேர ச்ரணாகதிகூட, உங்கள் முழு வாழ்க்கையையே உணர்வுமாற்றம் பெறச் செய்துவிடும். பிறகு நீங்கள், ஒரு புதிய இருத்தலாக மாறிவிடுவீர்கள்.

புராதன வேத நூல்களின்படி மூன்று விதமான பிறப்பு நிலைகள், கர்ப்ப நிலைகள் இருக்கின்றன. முதலாவது பூ கர்பம். இது ஒரு ஜீவனைச் சுமந்து பெற்றெடுக்கும், ஒரு தாயின் கர்ப்பப் பையைக் குறிக்கும். இது, மனித உடலிலுள்ள ஏழு சக்கரங்களுள் மிக தாழ்நிலைச் சக்கரமான மூலாதாரச் சக்கரத்தோடு தொடர்புடையது.

நீங்கள் ச்ரணாகதி
செய்கிறீர்களோ
இல்லையோ,
பிரபஞ்ச இருப்பு
உங்களைக்
கவனித்துக் கொள்ளும்.

அடுத்தது, ஹ்ருத் கர்பம். அதாவது இருதயத்தில் சுமக்கும் கர்ப்பம். இதை, உண்மையான கலைஞர்களிடத்தில் காணலாம். உதாரணத்திற்கு, ஒரு பாடகர் பாடலை அல்லது சங்கீதத்தை, தம் இருதயத்தில் சுமந்து பின் வெளிப்படுத்துகிறார். அதைப்போல் ஒரு சிற்பி, முதலில் தம் இதயத்தில் அந்தச் சிற்பத்தை உருவாக்கிச் சுமந்து, பிறகு அதைச் சிற்பமாக வடிக்கிறார். இதைப்போலவே ஒவ்வொரு படைப்புத்திறனும் ஹ்ரு 'தயத்திலிருந்தே

பிறக்கிறது. அதனால்தான் கலைஞர்கள்,
அவர்களுடைய படைப்பின் மூலமாக
மிகுந்த திருப்திபெறுகிறார்கள்,
தொடர்ச்சியாக புதிய படைப்புகளைத்
தந்துகொண்டே இருப்பதால்,
கலைஞர்களுடைய வாழ்வே
நிறைவளிப்பதாக இருக்கிறது.

உங்களைப் பற்றி
நீங்களே செய்யும்
எந்தவொரு கற்பனைக்கும்
அப்பாற்பட்டவராய்
இருக்கிறீர்கள்.

ஒரு பெண், ஒரு குழந்தைக்குப் பிறப்புக் கொடுத்து தாயான பின்பு, மனநிறைவை உணர்கிறாள். அவளுள் திருப்தி பொங்கித் ததும்புகிறது. அதைப்போலவே ஒரு கலைஞர், ஒரு ஓவியத்தையோ, கவிதையையோ, சிலையையோ அல்லது இசையையோ படைக்கும்பொழுது பொங்கித் ததும்பும் மனநிறைவையும் திருப்தியையும் உணர்கிறார். ஒரு கலைஞரின் கர்ப்பம், அவருடைய ஹ்ருதயத்தில் இருக்கிறது.

மூன்றாவது நிலை ஜ்ஞான கர்ப்பம். இது உச்சந்தலையில் உள்ள ஸஹஸ்ரார சக்ரத்தில் நிகழ்கிறது. இந்த ஜ்ஞான கர்ப்பத்தில்தான் எல்லா ஆன்மிக கருத்துகளும் உருவாகின்றன, செயற்படுத்தப்படுகின்றன. சட்டென ஒரு கணத்தில் நீங்கள், முற்றிலும் 'புதிய உங்களை'ப் பெற்றெடுக்கிறீர்கள், ஒரு ஞானியைப் பெற்றெடுக்கிறீர்கள்.

பூ கர்ப்பம் எனப்படும் முதல் நிலை கர்ப்பம் நாமெல்லோரும் அறிந்த ஒன்றே. அடுத்த ஹ்ருதய கர்ப்பத்தை ஒருசில கலைஞர்கள் அடைகிறார்கள். ஜ்ஞான கர்ப்பமே உச்ச நிலை. குருவின் போதனைகளையும், அவருடைய ஸாந்நித்யத்தையும் ஸஹஸ்ரார சக்ரத்தில் உள்வாங்கிக் கொள்கிறீர்கள். அவற்றை ஆழமாகச் சிந்தித்து, உங்களை ஒரு ஞானியாகப் பிறப்பித்துக் கொள்கிறீர்கள்.

guru and disciples

சரணாகதியின் இந்தக் கருத்தை, இந்த
ஸத்யத்தை உள்வாங்கி, அவற்றை
ஆழமாகச் சிந்தியுங்கள். திடீரென நீங்கள்

விழித்துக்கொள்வீர்கள். உங்களுக்கு நீங்களே ஒரு ஞானப் பிறப்பைக் கொடுத்துக்கொள்வீர்கள். நீங்கள் கடலோடு தொடர்புடையவர்தான், அதிலிருந்து வந்தவர்தான், எப்போதும் அதிலேயே இருப்பவர்தான், அதில்தான் கலந்து மறையப் போகிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்ட பின்பு, உங்களுக்கு மரணமே கிடையாது என்பதை உணர்வீர்கள். ஏனெனில், நீங்கள் கடல்!

உணர்வுமாற்றம், உங்கள் வாழ்வை மாற்றிவிடும்

நீங்கள் உங்களை ஒரு நீர்க்குமிழியாக நினைத்துக் கொண்டிருக்கும்வரை, நீங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணர்வீர்கள், மரணம் உங்களைப் பயமுறுத்திக் கொண்டேயிருக்கும், நீடித்து வாழ வேண்டும் என்ற உள்ளுணர்ச்சியும், எதையுமே உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென்ற உந்துதலும், உங்களைச் சித்ரவதை செய்கின்றன.

நீங்கள் கடல்தான் என்று உணர்ந்துகொண்ட கணமே, நீடித்து உயிர் வாழ வேண்டும் என்ற உள்ளுணர்ச்சி மறைந்துவிடுகிறது. ஏனெனில், உங்களுக்கு இனி மரணம் கிடையாது. அங்கு பயப்படுவதற்கென்று ஒன்றுமேயில்லை, பாதுகாப்பற்ற தன்மை பற்றிய உணர்ச்சிக்கு இடமில்லை.

நீங்கள் கடல்தான் என்று உணர்ந்த கணமே, நீங்கள் உடைமையாக்கிக் கொள்வதற்கென்று அங்கு ஒன்றுமேயில்லை, ஏனெனில், எல்லாமே உங்களுக்குச் சொந்தமானதுதான். அங்கு இழப்பதற்கும் ஒன்றுமில்லை. புதிதாக அடைவதற்கும் ஏதும் இல்லை. அதனால் உடைமையுணர்ச்சி மறைந்துவிடுகிறது.

உரைப்படம்

நான் உங்களை, சட்ட பூர்வமாக,
உங்கள் உடைமைகளைத் தூக்கியெறியச்
சொல்லவில்லை. நீங்கள் இதுவரை
உங்களுடைய ‘நான்’, ‘எனது’
என்பவற்றிற்காக நீங்கள் சேர்த்து
வைத்திருக்கும் எதையும் தூக்கிப்போட
வேண்டாம், அவற்றை உங்களுக்குள்
உள்வாंगிக்கொள்ள வேண்டாம்
என்றுதான் சொல்கிறேன். உங்களால்

உடைமையாக்கிக்கொள்ள முடிந்த எல்லாவற்றையும் விட, நீங்கள் மிக உயர்ந்ததாக இருக்கிறீர்கள் என்பதில், நீங்கள் விழிப்புடன் இருங்கள்.

ஏழு வயதில், உங்களுடைய விளையாட்டு சாமான்கள் உங்களுக்கு முக்கியமானவையாக இருந்தன.ன்றும் அவை உங்கள் வாழ்வில் அதே முக்கியத்துவத்தைப் பெறுகிறதா? நீங்கள் அவற்றை முற்றிலுமாக துறந்துவிடவும் இல்லை, அதே சமயத்தில் அவற்றுடன் அதே பற்றுடனும் இல்லை. அந்த விளையாட்டுப் பொருட்கள் வீட்டில் இருக்கின்றன, அவ்வளவுதான். அவற்றோடு விளையாட வேண்டும், அதற்காகவே சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? இல்லையே!

அல்லது அவை உங்களுடைய வாழ்க்கைக்கு
இடைஞ்சலாக இருப்பதாகவும், அதனால்
அவற்றையெல்லாம் துறந்துவிட
வேண்டுமென்றும் உணர்கிறீர்களா?
இல்லையல்லவா! நீங்கள் அவற்றோடு
பற்றுடனும் இல்லை, பற்றண்ணாமலும்
இல்லை. நீங்கள் அவற்றுக்கெல்லாம்
அப்பாற்பட்டு வளர்ந்து விட்டீர்கள்.

ராக என்றால் பற்று. அராக என்றால் துறத்தல். விராக அல்லது வைராக்ஸ என்றால் பற்றுதலுக்கும் துறத்தலுக்கும் அப்பால் என்று பொருள்.

நீங்கள் வளர, வளர, உங்களின் விளையாட்டுப் பொருட்களைப் பற்றிய வைராக்யம், உங்களுக்குள் தானாகவே நிகழ்ந்து விட்டது.

அதைப்போலவே, நீங்கள் கடல்தான் என்று உணரும்போது, நீங்கள் சேகரித்துக்கொண்ட சில மணற்துகள்களிடமும், நீங்கள் உங்களைச் சுற்றி சேர்த்துக்கொண்ட நீர்க்குமிழிகளிடமும் வைராக்ய என்பது தானாகவே நிகழும். நீங்கள் அவற்றுக்கு அப்பாற் சென்றுவிடுவீர்கள்.

நீண்ட நாள் வாழவேண்டுமென்ற உள்ளுணர்ச்சியும், சேர்த்துக்கொண்ட உடைமைகளும் உங்களுக்கு முக்கியத்துவமற்றவையாகிவிடும். உங்கள் உடைமைகள், உடனடியாக, சட்டென உங்கள் வாழ்விலிருந்து மறைந்துவிடப் போவதில்லை. அவை அங்குதான் இருக்கப் போகின்றன. நீங்கள் அவற்றை ஆழமாக வாழ்வீர்கள். ஆழமாக அனுபவிப்பீர்கள். அவற்றை சாதா ரணமாக, அலட்சியமாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். அவை உங்களுக்கு சலிப்பை உண்டாக்குவதில்லை. 'ஐயோ அதே வீடு, அதே மனைவி, அதே வாழ்க்கை' என்று நினைக்கமாட்டீர்கள்.

இவற்றை உங்கள் உடைமைகளாகக் கருதிக் கொண்டிருக்கும்வரைதான், இவற்றைச் சாதா ரணமாக உணர்வீர்கள் உங்களிடமிருந்து இவை எந்தக் கணத்திலும் பறிக்கப்பட்டுவிடும் அல்லது எடுக்கப்பட்டுவிடும் என்ற ஸத்யத்தை உணர்ந்த அக்கணமே, இவற்றை அலட்சியப்படுத்த மாட்டீர்கள்.

உங்களிடமிருந்து
எந்தக் கணத்திலும்
பறிக்கப்பட்டுவிடும் என்ற
ஸத்யத்தை
உணர்ந்த அக்கணமே,
உங்கள் வாழ்க்கையை
அலட்சியப்படுத்த
மாட்டீர்கள்.

நீங்கள் கடல்தான் என்பதையும்,
அவர்களும் அதே கடல்தான் என்பதையும்
உணர்ந்துகொண்ட பிறகு, அவர்களை
அதிக மதிப்புடன் நடத்துவீர்கள். நீங்கள்
இதை உணர்ந்துகொண்ட பிறகு, உடல்,
மனம், விழிப்புணர்வு ஆகிய நிலைகளில்
உணர்வுமாற்றம் பெற்றுவிடுவீர்கள்.
விழிப்புணர்வு உணர்வுமாற்றம்
பெற்றவுடன், நீங்கள், ஒரு புதிய
'நீங்களை'ப் பெற்றெடுக்கிறீர்கள்.

கிருஷ்ணர் சரணாகதியின் இந்த மூன்று நிலைகளையும் தாண்டி, மேலும் ஆழமாகச் செல்கிறார். அவர், உயர்நிலை சரணாகதியின் கண நேர அனுபவத்தை அர்ஜுனனுக்குத் தருகிறார். அவர், இறுதி அனுபவத்தின் துளியைத் தருகிறார். கிருஷ்ணர் ஏற்கெனவே அர்ஜுனனுக்கு, தம்முடைய விஸ்வரூப தரிசனத்தின்போது, அந்த அனுபவத்தைக் கொடுத்துவிட்டார். இருந்தும்கூட, பயத்தின் காரணமாக அர்ஜுனால் அந்த அனுபவத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை.

பொதுவாக நீங்கள் எல்லோருமே, பயத்தின் காரணமாக உங்கள் முதல் அனுபவத்தைத் தவறவிட்டுவிடுகிறீர்கள். இப்பொழுது அர்ஜுனன் அந்த அனுபவத்தில் நிலைபெறுவதற்கான முதிர்ச்சியையும், திறமையையும் பெற்றவராக இருக்கிறார். கிருஷ்ணர், அர்ஜுனனுக்குள் எப்போதுமே நிலைத்திருக்கும்படியான, ஒரு அனுபவத்தைத் தருகிறார்.

அடுத்து வரும் சில ஸ்லோகங்களில்,
கிருஷ்ணர், அர்ஜுனனை ஜ்ஞான
அனுபவத்திற்கு எடுத்துச்செல்கிறார், இறுதி
ஸத்யத்திற்கு விழிப்பிக்கச் செய்கிறார்.

ஒரு சின்ன கதை:

ஒரு ஜென் குருவிடம் ஒருவர், புத்தராக
ஆவது எப்படி என்று கேட்டார். அந்த
குரு, அவரின் கன்னத்தில் 'பளாரென'
ஒர் அறை கொடுத்தார், அவ்வளவுதான்,
அந்தக் கணத்திலேயே அந்த மனிதர்
ஞானமடைந்தார்! அவருக்குள் புத்தத்
தன்மையை அனுபவமாக உணர்ந்தார்.

விழிப்புணர்வு
உணர்வுமாற்றம்
பெற்றவுடன், நீங்கள்,
ஒரு புதிய ‘நீங்கள்’ைப்
பெற்றெடுக்கிறீர்கள்.

குரு கொடுத்த அறையானது, அந்த மனிதருக்கு, அவர் ஏற்கெனவே புத்தராகத்தான் இருக்கிறார் என்பதை உடனே உணர்த்திவிட்டது. அவருடைய தூக்கத்திலிருந்து அவரை விழித்துக்கொள்ள செய்ய வேண்டியிருந்தது, அவ்வளவுதான்.

கிருஷ்ணர், அர்ஜுனனை ஸம்ஸாரஸாகரம் என்னும் நீண்ட தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகிறார். இந்தத் தூக்கத்தை விழிப்புணர்வற்ற நிலை அல்லது தமஸ் என்றும் சொல்லலாம். கிருஷ்ணர் அவருக்கு, இறுதி அனுபவம் என்னும் ஒரு இனிய அதிர்ச்சியைக் கொடுத்ததன்மூலம், அவரை அந்த நிலையிலேயே எப்போதும் நிலைத்திருக்கச் செய்கிறார்.

சேவை செய்வதிலும், துறப்பதிலும் காட்டப்படும் மனோதிடமே சரியான மனோதிடம்!

கேள்வி: அஹங்காரத்தைச் சரணாகதி செய்துவிடுவது உண்மையான துறவு. ஆனால், சரணாகதி செய்வதற்கே அஹங்காரம் அல்லது மனம் போன்ற ஏதோ ஒன்று தேவைப்படுகிறதே, இது முரணாக இல்லையா?

பதில்: ஆம், அது அப்படித்தான்; ஆனாலும் அப்படி இல்லை! ஒரே விஷயத்தை நம்மால் வெவ்வேறு கோணங்களில் பார்க்க முடியும்.

புத்தர் எப்போதுமே தம் போதனைகளை வலியுறுத்துபவராக

இருந்ததில்லை. அவர், 'ஒவ்வொன்றும்
சரியாகவும் இருக்கலாம், தவறாகவும்
இருக்கலாம், சரியும் தவறுமாகவும்
இருக்கலாம். சரியான அன்பு, தவறான
அன்பு, அதேபோல், சரியான கோபம்,
தவறான கோபம் என்றும் இருக்கலாம்'
என்கிறார்.

புத்தருக்கு முன்பு யாரும் இப்படி யோசித்ததில்லை. மக்கள், அன்பு என்றால், அது எப்போதும் சரியானதாகவே இருக்கும் என்றும், கோபம் என்றால், அது எப்போதும் தவறானதாகவே இருக்கும் என்றும்தான் நினைத்தார்கள். இது, ஒருவருடைய தீர்மானத்தைப் பொறுத்த விஷய மாகவே இருந்தது.

புத்தருக்கு முன்பிருந்த எல்லாக் கலாச்சாரங்களுமே, மனோதிடம்கொண்ட ஒரு மனிதருடைய தீர்மானம் எப்போதுமே சரியானதாகவே இருக்கும் என்று, மனோதிடத்தைப் புகழ்ந்து ஆதரித்து வந்தன.

மறுபுறம், ஆழ்ந்த அறிவும், நுண்ணறிவும் கொண்ட புத்தரோ, ஒவ்வொரு விஷயமும் சரியானதாகவும் இருக்க முடியும், தவறானதாகவும் இருக்க முடியும் என்று சொன்னார். எதுவுமே முற்றிலும்மாக சரியானதாக இருக்க முடியாது. அஹங்காரத்தினால் பயன்படுத்தப்பட்டால், மனோதிடம்கூட தவறானதே. அது அஹங்காரத்தை அதிகரிக்கவே செய்யும். 100-க்கு 99 விஷயங்களில் அதுவே நடக்கிறது.

மனோதிடம் சரியானதாக இருக்க முடியும். ஆனால், ஒருவர் மிகவும் எச்சரிக்கையோடும், விழிப்போடும் இருந்தாக வேண்டும். சரணாகதி செய்வதற்காகப் பயன்படுத்தும்பொழுது மட்டுமே மனோதிடம் என்பது சரியானதாக இருக்கும். இது ஒரு புரியாத புதிர்.

பொதுவாக நாம், சரணாகதியும் மனோதிடமும் எதிரெதிர் துருவங்கள் என்று எண்ணுகிறோம். ஆனால், உண்மை அதுவல்ல; மனோதிடத்திற்கான ஒரேயொரு சரியான பயன்பமுறை இருக்கிறது: 'முழுமையிடம் சரணடைவதற்காக அதைப் பயன்படுத்தும் பயன்பமுறையே!' அதை

  • கடவுள், இயற்கை, தாவோ அல்லது உங்களுக்குப் பிடித்த எந்தப் பெயரைக்கொண்டும் அழைக்கலாம்.

ஒரு மனிதருடைய சேவையில், மனோதிடம் என்பது ஆபத்தானது ஏனெனில், அந்த மனிதருடைய கருத்தே தவறானது. ஒரு மனிதரின் தனித்துவம் என்பதே ஒரு பொய்த்தோற்றம்தான். நாம் அனைவரும் தனித்தனி அடையாளங்கள் அல்ல. இந்த முழுப் பிரபஞ்சமும் பல உறுப்புகள் இணைந்த ஒரு அமைப்பு!

பல உறுப்புக்கள் ஒருங்கிணைந்த அமைப்பான நம் உடலை, ‘உடல்’ என்ற ஒரே அமைப்பாக எப்படிப் கருதுகிறோமோ, அதேபோன்றதுதான். புல்லின் ஒரு சின்ன இதழ்கூட, மிகத் தொலைவிலிருக்கும் நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றுமே, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டும் பின்னப்பட்டும் இருக்கிறது.

அது ஒருசிலந்தியின் வலையைப் போன்றதே! அதில் ஒரு இழையைத் தொட்டாலே போதும், அந்த அதிர்வை அந்த இழைப் பின்னல் முழுவதும் உணரலாம். அது மிருதுவான தொடுதலாக இருந்தாலும்கூட, அந்த அதிர்வலையை மொத்த வலைஅமைப்புக்குள்ளும் உணர முடியும். அதைப்போலத்தான் பிரபஞ்சத்தின் இயக்க அமைப்பும். நாம் ஒன்றும் தனியானவர்கள் இல்லை, தனித்தனியாக இருப்பதுபோல் தெரிகிறோம்.

நம் மனோதிடத்தை சேவையில் பயன்படுத்தினால் அது தவறான வகை மனோதிடம் ஆகும். அது மேலும் மேலும் அதிகமான துன்பங்கள், முரண்பாடுகள், வன்முறை ஆகியவற்றுக்குத்தான் வழிநடத்தும்.

கடவுளுக்காகச் சேவை செய்வதிலும்,
துறப்பதிலும் காட்டப்படும் மனோதிடமே
சரியான மனோதிடம்! அது நிகழும்பொழுது
‘நீங்கள்’ அங்கு இருப்பதில்லை. சரியான
மனோதிடம் என்பதன் பொருள், தன்
சக்தி அனைத்தையும் ஒன்றுதிரட்டி,
தன்னைத்தானே அழித்துக்கொள்ளுதலே!
ஆனால், மனோதிடம்கொண்ட ஒருவர்தான்
அதைச் செய்ய முடியும்!

> மனோதிடத்திற்கான
> ஒரேயொரு சரியான
> பயன்பாமுறை இருக்கிறது:
> ‘முழுமையிடம்
> சரணடைவதற்காக
> அதைப் பயன்படுத்தும்
> பயன்பாமுறையே!

மனோதிடம் இல்லாதவர்களும்,
எப்போதும் எதையும் சிரத்தையாக
எடுத்துக்கொள்ளாதவர்களும், அரை
மனம் படைத்தவர்களும், மனத்தடுமாற்றம்
கொண்டவர்களும் சரணாகதி செய்ய
முடியாது.

சரணாகதி செய்ய, உறுதியான தீர்மானமும் ஒருங்குவித்தலும் தேவைப்படுகிறது. உண்மையில், இதற்கு உறுதியான, உச்சபட்ச சாத்தியமான தீர்மானம் தேவைப்படுகிறது. நீங்கள் அதில் முழுமையாக இருந்தால் மட்டுமே, சரணாகதி நிகழும். அப்படியல்லாமல் நீங்கள் துளி தயக்கம் காட்டினாலும், அது சரணாகதி நிகழாது. நீங்கள் எதில் தயக்கம் காட்டுகிறீர்களோ, அதன் வழியாகவே அனைத்தும் உங்களுக்குள் திரும்ப நுழைந்துவிடும். நீங்கள் மீண்டும் அதே ஆளாகத்தான் இருப்பீர்கள்.

ஒருமுறை சரணாகதி செய்து விட்டீர்களென்றால், அது, திரும்பப் பெற முடியாததாக இருக்க வேண்டும். திரும்பியே செல்ல முடியாத வகையிலான, முழுமையான, தீர்க்கமான தீர்மானமாக அது இருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் கடந்து வந்த பாலமும் எரிக்கப்பட்டுவிடும்; ஏறிவந்த ஏணியும் தூக்கியெறியப் பட்டுவிடும்.

Clouds and stairs illustration

சரியான மனோதிடம் மட்டுமே
தன்னைத் தானே அழித்துக் கொள்ளும்
வலிமை படைத்ததாக இருக்கும். இது
ஒரு விசித்திரமான கருத்து. ஆனால்,
அப்படித்தான் நமது வாழ்க்கை இருக்கிறது.
அது ஒரு புரியாத புதிராக இருக்கிறது.

சிறையே, விடுதலையின் அருமையைப் புரியவைக்கும்

முதலில், நாம் அஹங்காரத்தை உருவாக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு, அதை நன்றாகப் பழுக்கவைத்து, பலமுள்ளதாக்கிக்கொள்ள வேண்டும். அடுத்து அதை, முழுவதுமாக விட்டுவிடவும் கற்றுக்கொள்ள வேண்டும். 'அப்படியென்றால் அதை வளர்த்துக்கொள்ளத் தேவையில்லையே' என்றுதான் நமக்குத் தர்க்க ரீதியாகத் தோன்றும்.

மேலும், விறகு கெட்டியாக இருக்குமளவுக்கே, அதை எரிக்கும்பொழுது, தீ பிரகாசமானதாக இருக்கும்! அஹங்காரம் என்று ஒன்று இல்லாமலிருந்தால், உங்களுக்கு அதை விட்டுவிடுவதில் உள்ள பேரானந்தமும், சுதந்திர உணர்வும் தெரியாமலே போய்விடும். ஒருவர் சிறையில் இருந்திருந்தால் தவிர, விடுதலையின் அருமை அவருக்குப் புரிய முடியாது. சுதந்திரத்தின் சுவை தெரிய வேண்டுமானால், சிறைவாச அனுபவம் என்பது அடிப்படை தேவையாக இருக்கிறது.

நீங்கள் கற்றதையெல்லாம் விட்டுவிடும் நாளில், நீங்கள் மறுபடியும் ஒரு குழந்தையாகி விடுகிறீர்கள்.

வாழ்க்கையே முரண்பாடுகள் நிறைந்ததுதான். ஒரு ஏழை மனிதர் தாம் ஒரு ஏழையாக இருப்பதையே அறிய மாட்டார். ஏழையல்லாத மக்கள் கண்களுக்கே அவர் ஒரு ஏழையாகத் தெரிவார். தான் ஏழையாக இருப்பது அவருக்குத் தெரியாது. ஏனெனில், தம் ஏழைமையை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதற்கு அவரிடம் ஏதும் இல்லை. உண்மையான ஏழையாக இருப்பதற்கு, முதலில் நீங்கள் செல்வந்தராக இருந்திருக்க வேண்டும். அப்போது மட்டுமே ஏழைமையின் வலியும் வேதனையும் உங்களுக்குப் புரியும்.

உண்மையான ஒரு பிச்சைக்காரனாக இருப்பதற்கு, முதலில் நீங்கள் ஒரு சக்கரவர்த்தியாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஒரு பிச்சைக்காரனாக இருப்பதென்றால் என்னவென்றே உங்களுக்குத் தெரியாது.

பிற்காலத்தில் விடப்படுவதற்காகவே, அஹங்காரம் வலுவுள்ளதாக்கப்பட வேண்டும். அஹங்காரம் வலுவுள்ளதாக்கப்பட வேண்டும் என்பது, சிதறிப்போய்க் கிடக்கும் நமது சக்திகளை ஒரே பந்தாகத் திரட்டுவதில் கவனம்செலுத்தும் செயல்முறையையே குறிக்கிறது. உண்மையில், நமது சக்திகளை இப்படி ஒன்றுதிரட்டிய பிறகு,

அத்தைக் கைவிடுவது நமக்கு ஒரு எளிதான
செயலாகிவிடுகிறது. இது, சரணடையும்
செயல்முறைக்கு உதவிகரமாக இருக்கிறது.

நீங்கள் கற்றதையெல்லாம் விட்டுவிடும் நாளில், நீங்கள் மறுபடியும் ஒரு குழந்தையாகிவிடுகிறீர்கள். பிறகு நீங்கள், இரண்டாவது முறை பிறக்கிறீர்கள். இது, முதல் குழந்தை பருவம்போன்றது அல்ல; அப்போது, அறிவுள்ளவராய் இருப்பது பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு இல்லாமலிருந்தது. ஆனால், இப்போது, 'அறிவுள்ளவராய் இருப்பது என்றால் என்ன' என்பதை நீங்கள் அறிவீர்கள். கற்றதையெல்லாம் விட் டுவிடுவதால் விளையும் சுதந்திரத்தையும், கொண்டாட்டத்தையும் ஆனந்தத்தையும் நீங்கள் உணர்வீர்கள், எதையும் பெறாமலேயே!

> பேரானந்தத்தின்
> பரிணாம வளர்ச்சி ஒன்றே,
> பரிணாம வளர்ச்சி
> என்று சொல்வதற்குத்
> தகுதிவாய்ந்த
> ஒரே பரிணாம வளர்ச்சி.

நீங்கள், முதல் குழந்தை பருவத்திலும், சுதந்திரமாகவும் கொண்டாட்டமாகவும் ஆனந்தமாகவுமே இருந்தீர்கள், ஆனால், அது பற்றி அறியாமலிருந்தீர்கள். இப்போது உங்களை விழிப்புள்ளவராக்குவதற்கு, இந்த முழுச் செயல்முறையும் தேவைப்படுகிறது. ஒரு உரையாடல் செயல்முறை மூலமாகத்தான், உங்களுக்கு விழிப்புணர்வு மலர்கிறது.

அதனால், விட்டுவிட முடியும்போது மட்டுமே, மனோதிடம் சரியானதா கவும் மற்றும் நல்லதாகவும் ஆகிறது. உங்களால் அதை விட முடியவில் லையென்றால், நீங்கள் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால், அதுவே உங்களின் வாழ்க்கைமுறையாகிவிட்டால், நீங்கள் மொத்த விஷயத்தையுமே தவறவிடுகிறீர்கள். பிறகு அது, வேதனையையும் நரகத்தையும் உண்டாக்குகிறது.

நரகத்தையோ சொர்க்கத்தையோ உருவாக்குவதற்கு, மிகத் தீர்க்கமான மனோதிடம்தான் தேவைப்படுகிறது. நீங்கள் தொடர்ந்து அதிலேயே இருந்தீர்களென்றால், அது நரகத்தையே உண்டாக்கும். நீங்கள் அதிலிருந்து குதித்து வெளியே வந்து விட்டீர்களானால், அது சொர்க்கத்தை உருவாக்கிவிடும்!

பேரானந்தத்தின் பரிணாம வளர்ச்சி ஒன்றே, பரிணாம வளர்ச்சி என்று சொல்வதற்குத் தகுதிவாய்ந்த ஒரே பரிணாம வளர்ச்சி. இந்தப் பேரானந்தம் வளரவில்லையென்றால், நீங்கள் வளர்வதில்லை, இந்தச் சமுதாயம் வளர்வதில்லை. மக்கள், பொதுவாக எதை பரிணாம வளர்ச்சி என்று புரிந்து வைத்திருக்கிறார்களோ அது வெறும் அபத்தமே.

ஞானத்திற்கான ஒரு தேடலே சரணாகதி

பரிணாம வளர்ச்சி என்பது மிகவும் சிக்கலான ஒரு நுட்பத்தைக் குறிப்பதல்ல! நீங்கள் பல கருவிகள், பல சாதனங்கள், பெரிய பெரிய இயந்திரங்கள், விதவிதமான ஆகாய விமானங்கள், நவீன இரயில்கள், அருமையான வீடுகள் என்று பலவற்றையும் பெற்றிருக்கலாம் ஆனால், நீங்கள் அதே மனிதராகத்தான் இருப்பீர்கள்.

நீங்கள் ஒரு நாள், சந்திரனையோ நட்சத்திரங்களையோ சென்றடையலாம் ஆனாலும், அங்கும் நீங்கள் இந்தப் பூமியில் செய்த செயல்களைத்தான் தொடர்ந்து செய்வீர்கள்! இங்கு நீங்கள் சிகரெட் புகைத்தால், அங்குச் சென்றும் புகைக்கத்தான் செய்வீர்கள். இங்கு உங்களுக்கு மதுப்பழக்கம் இருந்தால், நீங்கள் சந்திரனுக்குக்கூட, மது பாட்டில்களை தூக்கிக் கொண்டு போவீர்கள். அங்கு வேறென்ன செய்வீர்கள்?

மனித இனம், இப்படியே தொடர்ந்து இருந்தால், இங்கு, வளர்ச்சி ஏதும் நிகழாது. நாம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம் என்றதொரு தோற்றத்தைக் காட்டும் வேறொரு வளர்ச்சியைத்தான் நம்மால் எடுத்து வர முடியும். பல நூற்றாண்டுகளாகவே, மனித இனமானது வளர்ச்சியடையவே இல்லை. இங்கொன்றும், அங்கொன்றுமாக ஒருசிலர் மட்டுமே வளர்ச்சியடைந்தார்கள். புத்தர் போன்ற வெகுசிலரையே நாம் கேள்விப்படுகிறோம். அந்தப் பேரானந்த அமுதை ருசித்தவர்கள் மட்டுமே பரிணாம வளர்ச்சியடைந்த மனிதப் பிறவிகள்.

வெகுசிலரே இந்தப் பரிணாம வளர்ச்சி யை அனுபவமாக உணர்ந்திருக்கிறார்கள். மரத்திலிருந்து இறங்கி, நான்கு கால்களுக்குப் பதிலாக இரண்டு கால்களால் நடந்து விட்டால் மட்டும், நாம் வளர்ச்சியடைந்த

> பேரானந்தம்
> வளரவில்லையென்றால்,
> நீங்களும் வளர்வதில்லை!

ஒரு மனிதனாகிவிட முடியாது. அது
நம்மை நேராக நிமிர்ந்திருக்கச் செய்யும்,
அவ்வளவுதான்.

உண்மையான வளர்ச்சி என்பது பேரானந்தத்தைப் பொறுத்து மதிப்பீடு செய்யப்படுகிறது. பேரானந்தம் விழிப்புணர்வோடு சேர்ந்து வளர்கிறது. அவை இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். விழிப்புணர்வில் வளரும்பொழுது, நீங்கள் அதிக ஆனந்தமாய் இருப்பீர்கள் அல்லது அதிக ஆனந்தமாய் இருக்கும்பொழுது, நீங்கள் அதிக விழிப்புணர்வு உள்ளவராக இருப்பீர்கள். விழிப்புணர்விலிருந்தோ அல்லது ஆனந்தத்திலிருந்தோ எங்கிருந்து வேண்டுமானாலும் ஆரம்பித்துக்கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் வளர்வீர்கள்.

ஒருவர், ஒரு ஞானியாக மாறினால் தவிர, அவர் வளர்ச்சியடையும் சிறந்த வாய்ப்பை இழக்கிறார். மற்ற எல்லா வளர்ச்சிகளும் பொய்யானதே. சரியான பாதையில் செல்வதற்கான ஒரு முயற்சியே சரணாகதி! அது, நம் உள்ளார்ந்த சக்தியை விடுவிக்கிறது.

மனித இனமானது எண்ணிறந்த அளவற்ற ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மனிதன், மகிழ்ச்சியின் இறுதி உச்சத்தை சரணாகதியில்தான் அடைய முடியும்; உடைமைகளைச் சேர்த்துக்கொள்வதில் அல்ல.

அறிவைப் பெறுவதென்பது மிகவும் மலிவானது மற்றும் எளிதானதும்கூட. ஒருவர் நூலகத்திற்குச் சென்று தம் அறிவை வளர்த்துக்கொள்ளலாம். நமது ஞாபக சக்தி மிக மகத்தானது, அதீதமானது. ஒரு தனி மனிதருடைய ஞாபக சக்தி என்பது உலகத்திலுள்ள எல்லா நூலகங்களிலுமுள்ள எல்லா நூல்களையும் கிரகித்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு, அபரிதமான சக்தி கொண்டதாக இருக்கிறதென்று சொல்கிறார்கள்.

A library bookshelf filled with books

மனிதனின் ஞாபக சக்தியோடு போட்டியிடும் ஆற்றல்படைத்த கணினி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது, ஒரு எல்லையே அற்றதாகவும், தான் சிறந்த புத்திசாலி என்றதொரு பெரிய மாயையை உருவாக்க வல்லதாகவும் இருக்கிறது.

ஜ்ஞானம் என்பது முற்றிலும் ஒரு வித்தியாசமான கருத்து. அது அன்பின் மூலம் வருகிறது. அது இதயத்தில் வளர்கிறது, மலர்கிறது. இதயத்தின் பாதைகாளானது, தலையின் பாதைகளைப் போன்றவை அல்ல.

ஞானத்திற்கான ஒரு தேடலே சரணாகதி. உங்களுக்கு அறிவை வழங்குவதில் எனக்கு விருப்பமில்லை. நான் ஒரு ஆசிரியர் அல்ல. ஒரு ஆசிரியர் அறிவை வழங்குகிறார் ஒரு குருவானவர் தம்முடைய இருப்பை வழங்குகிறார் ஒரு குரு கற்பிப்பதில்லை. மாறாக, நீங்கள் கற்றவற்றிலிருந்து உங்களை விடுவிக்கிறார். உங்கள் பாரத்தை இறக்க உதவுகிறார். நீங்கள் தலையிலிருந்து இருதயத்துக்கு வருவதற்கு உதவி செய்கிறார்.

நீங்கள் இருதயத்தில் மையங்கொண்டு விட்டால் போதும், உங்கள் வாழ்வு, ஒரு புதிய சக்தியில் துடிப்போடு திகழும். அன்பே அந்தப் புதிய சக்தி. அது, நீங்கள் அதிக அன்பு கொண்டவராக ஆவது என்பது அல்ல; நீங்கள் அன்பாகவே மலருவது, நீங்கள் அன்பாகவே ஆவது.

அஹங்காரம் அன்பாகவே உணர்வுமாற்றம் பெறுவதே சரணாகதி. இது, உங்கள் மீது நீங்களே கொண்டுள்ள காதலை, மற்றவர்களிடமும் கொள்ளும் ஒரு உணர்வுமாற்றம். ஆம், இதை ஆரம்பிப்பதற்கு உங்களுக்கு அஹங்காரம் தேவைப்படுகிறது. அஹங்காரம் விடப்படும்பொழுது சரணாகதி நிகழ்கிறது.

சிலருக்கு, இதை ஆரம்பிப்பதற்கான அஹங்காரம் இல்லை என்றால் என்ன செய்வது? கூட்டு அடையாளத்தில் ஏற்கனவே தங்களுடைய அடையாளத்தைக் கரைத்துவிட்டவர்களின் நிலை என்ன?அஹங்காரம் அன்பாக உணர்வுமாற்றம் பெறுவதே சரணாகதி!

ஏற்கனவே கூட்டு அடையாளத்தில்
தங்களுடைய அடையாளத்தைக்
கரைத்துவிட்ட அவதாரப் புருஷர்களுக்கு,

இதை ஆரம்பிப்பதற்கான அஹங்காரம் தேவை இல்லை.

அஹங்காரமற்றவர்களாக ஒருவரும் இருக்க முடியாது. இப்படி நிகழ்வதற்கான சாத்தியம் இல்லை என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் நினைப்பது தவறு. இது ஒரு அரிதான நிகழ்வு என்பது உண்மையே. ஆனால், இது நிகழ்வதற்கான சாத்தியம் இருக்கிறது. ஏனெனில், அவதாரப் புருஷர்கள் தங்களுடைய கூட்டு அடையாளங்களைப் பற்றிய முழு விழிப்புணர்வோடு இப்பூவுலகிற்கு வருகிறார்கள். அவர்கள் ஏற்கெனவே பிரபஞ்சத்தோடு ஒத்திசைந்துதான் இருக்கிறார்கள்.

Hands playing flute