ஸ்லோகங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அதாஷ்டாதசோ’த்யாய: பதினெட்டாவது அத்தியாயம்
மோக்ஷஸந்ந்யாஸயோக: மோட்சஸந்நியாஸயோகம்
அர்ஜூந உவாச
ஸந்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்/
த்யாகஸ்ய ச ஹ்ரு’ஷீகேச’ ப்ரு’தக் கேசி’நிஷூதந // 18.1
அர்ஜூந உவாச - அர்ஜூனன் சொன்னார்; ஸந்ந்யாஸஸ்ய- ஸந்யாஸம் பற்றிய; மஹாபாஹோ - வலிமைமிகு கைகளை உடையவரே; தத்த்வம் - தத்துவத்தை; இச்சாமி - விரும்புகின்றேன்; வேதிதும் - அறிந்துகொள்ள; த்யாகஸ்ய ச - தியாகம் பற்றிய; ஹ்ரு’ஷீகேச’ - அந்தர்யாமியே; ப்ரு’தக் - தனித்தனியாக; கேசி’நிஷூதந - கேசியை வதைத்தவனே
அர்ஜூனன் சொன்னது
18.1 வலிமைமிகு தோள்களை உடையவரே ! அந்தர்யாமியே ! கேசியை வதைத்தவரே ! ஸந்யாஸம், தியாகம் இவற்றின் சாரம்சத்தை அறிந்துகொள்ள விரும்புகின்றேன்.
..........................................................................................................
ஶ்ரீபகவாநுவாச
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது: /
ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா: //.18.2
ஶ்ரீபகவாந் உவாச - ஶ்ரீபகவான் சொன்னார்; காம்யாநாம் - விரும்பிய பொருளைப் பெறுவதற்காகச் செய்யப்படும்; கர்மணாம் - காம்ய கர்மங்களை; ந்யாஸம் - துறத்தலை; ஸந்ந்யாஸம்- துறவு என்று; கவய: - சில பண்டிதர்கள்; விது: - அறிகின்றார்கள்; ஸர்வகர்மபலத்யாகம் - எல்லாக் கர்ம பயனையும் துறந்தலையே; ப்ராஹு: - சொல்கின்றார்கள்; த்யாகம் - தியாகம் என்று; விசக்ஷணா: - ஆராய்ச்சியாளர்கள்
ஸ்ரீபகவான் சொன்னது 18.2 ஆசையினால் தூண்டப்பட்டுச் செய்யப்படும் எல்லாத் தன்னலமுள்ள செயல்களையும் விட்டுவிடுவது 'துறவு' என்றும், செயல்களினால் விளையும் பலன்களின் மீது வைக்கப்படும் பற்றுகளிலிருந்து விடுதலை அடைவது தியாகம் என்றும் அறிஞர்கள் பகர்கின்றனர்.
த்யாஜ்யம் தோஷவதிக்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண: /
யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே // .18.3
த்யாஜ்யம் இதி - துறக்கப்பட வேண்டியவை என்று; தோஷவத் - குற்றமுடையவை ஆகவே; ஏகே - சில; கர்ம - கர்மங்கள் அனைத்தும்; ப்ராஹு - சொல்கின்றார்கள்; மநீஷிண: - அறிஞர்கள்; யஜ்ஞதாநதப:கர்ம - வேள்வி, தானம், தவம் என்கிற கர்மங்கள்; ந த்யாஜ்யம் - துறக்கத் தகுந்தன அல்ல; இதி - என்று; ச - மேலும்; அபரே - இன்னும் சிலர்
18.3 பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் எல்லாச் செயல்களுமே குற்றமுடையனவாதலால், அவை துறத்தலுக்குரியனவென்று சில கற்றறிந்தோர் பகர்கின்றனர். சில ஞானிகள், தொண்டு, தர்மம், ஒழுக்கம் எனப்படும் செயல்களை விட்டுவிடக் கூடாது என்கின்றனர்.
நிச்'சயம் ச்'ரு'ணு' மே தத்ர த்யாகே பரதஸத்தம /
த்யாகோ ஹி புருஷ்யாக்ர த்ரிவித: ஸம்ப்ரகீர்தித : // 18.4
நிச்'சயம் -கொள்கையை; ச்'ரு'ணு' - கேள்; மே - என்னுடைய; தத்ர - துறவு, தியாகம் இவை இரண்டிலும் முதலில்; த்யாகே - தியாகத்தைப் பற்றி நீ; பரதஸத்தம - அர்ஜூனா; த்யாக: - தியாகம்; ஹி - ஏனெனில்; புருஷ்யாக்ர - மனிதர்களில் சிறந்தவனே; த்ரிவித: - மூன்று விதமாக; ஸம்ப்ரகீர்தித: - சொல்லப்பட்டுள்ளது
18.4 பரதகுலத்தோருள் சிறந்தவனே அர்ஜூனா, ஸந்யாஸம், தியாகம் இவை இரண்டனுள் முதலில், தியாகத்தைப் பற்றிய என்னுடைய கொள்கையைக் கேள். தியாகம் மூன்று விதமாகக் கூறப்பட்டுள்ளது.
யஜ்ஞதாநதபஃகர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் /
யஜ்ஞோ தாநம் தபச்'சைவ பாவநாநி மநீஷிணாம் // 18.5
யஜ்ஞதாநதபஃகர்ம - வேள்வி, தானம், தவம் என்று கர்மங்கள்; ந த்யாஜ்யம் - துறக்கத்தக்கவையல்ல; கார்யம் ஏவ - கட்டாயம் செய்யப்பட வேண்டியவையே; தத் - அவை; யஜ்ஞ - வேள்வியும்; தாநம் - தானம்; தபஃ ச ஏவ - தவமும்; பாவநாநி - பரிசுத்தப்படுத்தக் கூடியவை; மநீஷிணாம் - அறிவுடைய மனிதர்களை
18.5 தொண்டு, தர்மம், ஒழுக்கம் இவற்றை விட்டுவிடக் கூடாது. அவற்றை செய்தே ஆக வேண்டும்; முனிவர்களும் கூட யாகம், தர்மம் மற்றும் தவத்தால் புனிதமடைகிறார்கள்.
......................................................................................................................
ஏதாந்யபி து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா பலாநி ச /
கர்தவ்யாந்தீ மே பார்த நிச்'சிதம் மதமுத்தமம் // 18.6
ஏதாநி - இந்த ; அபி - நிச்சயமாக; து - அவ்வாறே; கர்மாணி - செய்யவேண்டிய கடமைகளும்; ஸங்கம் - பற்றையும்; த்யக்த்வா
- துறந்து; பலாநி ச - பயன்களையும்; கர்தவ்யாநி - கட்டாயமாக செய்யப்பட வேண்டும்; இதி - என்பது; மே - என்னுடைய; பார்த - பார்த்தா; நிச்'சிதம் - தீர்மானமான; மதம் - கருத்து; உத்தமம் - உயர்ந்த
18.6 அர்ஜுனா, எல்லாக் கடமைகளும் பலனை எதிர்பாராது, நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.
......................................................................................................................
நியதஸ்ய து ஸந்ந்யாஸஃ கர்மணோ நோபபத்யதே /
மோஹாத்தஸ்ய பரித்யாகஸ்தாமஸஃ பரிகீர்திதஃ // 18.7
நியதஸ்ய - விதிக்கப்பட்ட; து - ஆனால்; ஸந்ந்யாஸஃ - செய்யாமல் விடுதல்; கர்மண: - கர்மத்தை; ந உபபத்யதே-பொருந்தாது; மோஹாத்அறியாமையினால்; தஸ்ய பரித்யாக: - அதைத் தியாகம் செய்தால்; தாமஸ: - தாமஸமானது; பரிகீர்தித:- சொல்லப்படுகின்றது
18.7 ஒருவன், தனக்கென விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து ஒருபோதும் தவறக் கூடாது. தியாகம் என்பதின் உள்ளார்ந்த கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு, தனக்குரிய கடமைகளை செய்யத் தவறுவது தாமஸம் எனப்படுகிறது.
துஃக்மித்யேவ யத்கர்ம காயக்லேச'பயாத்யஜேத் /
ஸ க்ரு'த்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத்//
18.8
துஃகம் - துன்பம்; இதி ஏவ- என்றே நினைத்து; யத் கர்ம - எது செய்ய வேண்டிய கர்மமோ; காயக்லேசபயாத் - உடல் நோகுமோ என்ற பயத்தினால்; த்யஜேத் - செய்யாமல் விடுவானேயானால்; ஸ - அவன்; க்ரு'த்வா - செய்து; ராஜஸம் - ராஜஸ; த்யாகம் - தியாகத்தைச் செய்து; ந ஏவ - நிச்சயமாக மாட்டான்; த்யாகபலம்- தியாகத்துக்குரிய பயனை; லபேத் - அடைய
18.8 தனக்குரிய கடமைகளை ஒருவன் தொந்தரவாகவோ அல்லது பயமாகவோ கருதி, அவற்றைத் துறப்பது என்பது இரஜோ குணத்தின் நிலை. அவன் தியாகத்தின் பலன்களைப் பெறுவதில்லை.
கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதேऽர்ஜுந /
ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ
ஸ த்யாகம் ஸாத்த்விகோ மத: // 18.9
கார்யம் இதி ஏவ - கட்டாயம் செய்யப்படத்தான் வேண்டும் என்றும்; யத் கர்ம - எந்த கர்மம்; நியதம் - சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட; க்ரியதே - செய்யப்படுகின்றதோ; அர்ஜுந - அர்ஜூனா; ஸங்கம் - பற்றையும்; த்யக்த்வா - விழுந்து; பலம் ச - பயனையும்; ஸ: ஏவ - அதுவே; த்யாக: - தியாகம் என்று; ஸாத்த்விக - ஸாத்வீகமான; மத: மதிக்கப்படுகின்றது
18.9 ஆனால் பலன்கள் மீதான பற்றோ அல்லது எதிர்பார்ப்போ இல்லாது, இது செய்வதற்குரியதெனகருதி, தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்துவருவானேயானால், அவனுடைய தியாகம் சாத்வீகமானதென கருதப்படுகிறது, அர்ஜூனா.
ந த்வேஷ்ட்யகுஶ'லம் கர்ம குஶ'லே நாநுஷஜ்ஜதே /
த்யாகீ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதாext{வ}ீ சிந்நஸம்ச'ய: //18.10
ந த்வேஷ்டி - வெறுப்பதில்லையோ; அகுஶ'லம் கர்ம - நன்மைப் பயக்காத கர்மத்தை; குஶ'லே - நன்மைப்பயக்கும் கர்மத்தில்; ந அநுஷஜ்ஜதே - பற்றுகொள்வதில்லையோ; த்யாகீ - தியாகி ஆவான்; ஸத்த்வஸமாவிஷ்ட: - சுத்தமான ஸத்வகுணம் நிறைந்தவனே; மேதாext{வ}ீ
- அறிஞன்; சிந்நஸம்ச'ய: - சந்தேகம் நீங்கப் பெற்றவன்
18.10 ஸத்வ குணம் மேலோங்கப்பெற்றவனும் அறிஞனும் சந்தேகங்களை விடுத்தவனுமாகிய தியாகி தனக்குப் பிடித்த வேலை என்ற விருப்பும், பிடிக்காத வேலை என்ற வெறுப்பும்சொள்ளான்.
.......................................................................................................
ந ஹி தேஹப்ரு'தா ச'க்யம் த்யக்தும் கர்மாண்யஶே'ஷத: /
யஸ்து கர்மபலத்யாகீ ஸ த்யாகீத்யபிீதீயதே // 18.11
ந - இல்லை; ஹி - ஏனெனில்; தேஹப்ரு'தா - உடல் பெற்ற மனிதன் யாராலும்; ச'க்யம் - சாத்தியம்; த்யக்தும் - துறந்து விடுவது; கர்மாணி
- கர்மங்கள் அனைத்தையும்; அஶே'ஷத: - முற்றிலும்; ய: - எவன்;
- கர்மபலத்யாகீ - கர்மத்தின் பயனைத் துறக்கின்றானோ; ஸ: து - அவனே; த்யாகீ - தியாகம் செய்தவன்; இதி - என்று; அபீதீயதே - சொல்லப்படுகின்றான்
18.11 மனிதன், தன் கடமைகள் எதையும் தவிர்க்க முடியாது. ஆனால் தன் கடமைகளுக்கான பலன்களைத் துறந்தவன் தியாகி எனப்படுகிறான்.
.......................................................................................................
அநிஷ்டமிஷ்டம் மிச்'ரம் ச த்ரிவிதம் கர்மண: பலம் /
பext{வ}த்யத்யாகிநாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாம் க்வசித் //18.12
அநிஷ்டம் - தீயதும்; இஷ்டம் - நல்லதும்; மிச்'ரம் ச - அவ்விரண்டும் கலந்ததுமான; த்ரிவிதம் - மூன்றுவிதமான; கர்மண: - கர்மத்தினுடைய; பலம் - பயன்; பext{வ}தி - கிடைக்கின்றது; அத்யாகிநாம் - கர்மத்தின் பயனைத் துறக்காத மனிதர்களுக்கு; ப்ரேத்ய - இறந்த பின்; ந - இல்லை; து - ஆனால்; ஸந்யாஸிநாம் - கர்மபயனைத் துறந்து மனிதர்களுக்கு; க்வசித் - ஏற்படும்
18.12 அப்படி தியாகம் செய்யாத ஒருவரை, விரும்பத்தக்க, விரும்பத் தகாத, மற்றும் இரண்டும் கலந்த - என மூன்று விதமான கர்ம பலன்கள் மரணத்திற்குப் பின்னும் தொடர்கின்றன ஆனால், உண்மையான தியாகிகளை அவை மூன்றுமே பாதிப்பதில்லை.
பஞ்சேதாநி மஹாபாஹோ காரணாநி நிபோத மே /
ஸாங்த்யே க்ரு'தாந்தே ப்ரோக்தாநி ஸித்தயே
ஸர்வகர்மணாம் // 18.13
அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச ப்ரு'தக்விதம் /
விவிதச்'ச ப்ரு'தக்சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம் //
18.14
பஞ்ச - ஐந்து; ஏதாநி - இந்த; மஹாபாஹோ - அகன்ற தோள் படைத்தவனே; காரணாநி - காரணங்கள்; நிபோத - நன்கு அறிந்துகொள்; மே - என்னிடமிருந்தே; ஸாங்த்யே - ஸாங்கிய சாஸ்திரத்தில்; க்ரு'தாந்தே - கர்மங்களின் முடிவிற்கான வழியைக் கூறும்; ப்ரோக்தாநி - சொல்லப்பட்டன; ஸித்தயே - நிறைவேறுதற்பொருட்டு; ஸர்வகர்மணாம் - எல்லாக் கர்மங்களும்
அதிஷ்டாநம் - கர்மம்செய்கின்ற உடலும்; ததா - அவ்வாறே; கர்தா - செய்கின்றவன்; கரணம் ச - இந்திரியங்களும் அதன் உபகரணங்களும்; ப்ரு'தக் விதம் - தனித்தனியான; விவிதா: - பலவிதமான; ச - மேலும்; ப்ரு'தக் - தனித்தனியான; சேஷ்டா - செயல்களும்; தைவம் சதெய்வமும்; ஏவ அத்ர - அவ்வாறே கர்மங்களின் ஸித்தியைப் பெறும் விஷயத்தில்; பஞ்சமம் - ஐந்தாவதாக
18.13,14 அர்ஜூனா, ஸாங்கிய தத்துவப்படி, எல்லாச் செயல்களும் நிறைவுபெறுவதற்கு ஐந்து காரணங்கள் உள்ளன என்று என்னிடமிருந்து அறிந்துகொள்வாயாக. அவையாவன: செயல்களுக்கு அடித்தளமாயுள்ள இந்த ஸ்தூல உடல், செய்பவன் (குணங்கள்), புலன்கள், உயிர் சக்தியினுடைய செயல்கள் மற்றும் தெய்வீக சக்தி.
ச'ரீரவாங்மனோபிர்யத் கர்ம ப்ராரபதே நர: /
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சேதே தஸ்ய ஹேதவ: // 18.15
ச'ரீர வாங் மனோபி: - மனம், மொழி, மெய்களால்; யத் கர்ம - எந்தச் செயலை; ப்ராரபதே - செய்கின்றானோ; நர: - மனிதன்; ந்யாய்யம் வா - சாஸ்திரங்களில் சொல்லப்பட்டபடியோ அல்லது; விபரீதம் வா - அதற்கு முரணாகவோ; பஞ்ச - ஐந்தும்; ஏதே - இந்த; தஸ்ய - அதற்கு; ஹேதவ: - காரணங்கள்
18.15 ஒரு மனிதன் தன் எண்ணம், சொல், செயல்களால் செய்கின்ற சரியான அல்லது தவறான செயல்களுக்கெல்லாம் இந்த ஐந்து காரணிகளே பொறுப்பு.
..........................................................................................................................................
தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மானம் கேவலம் து ய: /
பச்'யத்யக்ரு'தபுத்தித்வாந்ந ஸ பச்'யதி துர்மதி: // 18.16
தத்ர - இது; ஏவம் ஸதி - இங்ஙனம் இருக்க; கர்தாரம் - செய்பவனாக; ஆத்மாநம் - ஆத்மாவையே; கேவலம் - தூயதான; து - ஆனால்; ய: - எந்த மனிதன்; பச்'யதி - காண்கின்றானோ; அக்ரு'தபுத்தித்வாத் - புத்தித் தூய்மை இல்லாமையினால்; ஸ: - அந்த; ந பச்'யதி- உண்மையைப் பார்ப்பதில்லை; துர்மதி: - தூய்மையற்ற புத்தியுடைய அஞ்ஞானி
18.16 ஆத்மாவைச் செயல்புரிபவனாகக் கருதுபவர்கள் அறியாமையிலிருக்கிறார்கள். அவர்கள் உள்ளதை உள்ளபடியே பார்ப்பதில்லை.
..........................................................................................................................................
யஸ்ய நாஹங்க்ரு'தோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே /
ஹத்வாபி ஸ இமாंல்லோகாந்ந ஹந்தி ந நிபத்யதே // 18.17
யஸ்ய - எந்த மனிதனுடைய; ந - இல்லையோ; அஹங்க்ரு'த: - நான் செய்கின்றேன்; பாவ: - எண்ணம்; புத்தி: - புத்தி; யஸ்ய - எவனுடைய; ந லிப்யதே - உலகியல் பொருட்களிலும் செயல்களிலும் ஒட்டுவதில்லையே; ஹத்வா அபி - கொன்றாலும்; ஸ: - அவன்; இமாந் லோகாந் - இவ்வுலகங்கள் அனைத்தையும்; ந ஹந்தி - கொல்வதில்லை; ந: நிபத்யதே - பாவனத்தினால் தளைப்படுவதும் இல்லை
18.17 யார் அகங்காரமற்றிருக்கிறானோ, யாருடைய புத்தி பற்றற்று இருக்கிறதோ அப்படிப்பட்டவன் ஒரு கொலையே புரிந்தாலும். அவன் ஒரு கொலையாளி அல்ல. மேலும் அவனுடைய செயல்களால் அவன் பந்தப்படுவதில்லை!
ஜ்ஞானம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்மசோதநா /
கரணம் கர்ம கர்தேதி த்ரிவிதஃ கர்மஸங்க்ரஹஃ // 18.18
ஜ்ஞானம் - அறிவு; ஜ்ஞேயம் - அறியப்படுவது; பரிஜ்ஞாதா - அறிபவன்; த்ரிவிதா - மூன்று விதமான; கர்மசோதநா - கர்மத்தைத் தூண்டுபவன்; கரணம் - கரணம்; கர்ம - செயல்; கர்தா - செயல் புரிபவன்; இதி த்ரிவிதஃ - என்ற மூன்றும்; கர்மஸங்க்ரஹஃ - கர்மத்தின் தொகுப்பு
18.18 அறிவு, அறிபவர், அறியப்படும் பொருள் இம் மூன்றும்தான் செயலைத்தூண்டும் காரணிகள். புலன்கள், செயல், செய்பவர் இந்த மூன்றும் செயலின் மூன்று பகுதிகளாகும்.
ஜ்ஞானம் கர்ம ச கர்தா ச த்ரிதைவ குணபேததஃ /
ப்ரோச்யதே குணஸங்க்யாநே யதாவச்ச்ரு'ணு தாந்யபி // 18.19
ஜ்ஞானம் - ஞானமும்; கர்ம ச - செயலும்; கர்தா ச - செய்பவனும்; த்ரிதா ஏவ - மூன்றாகவே; குணபேததஃ - குணங்களின் வேற்றுமையினால்; ப்ரோச்யதே - சொல்லப்படுகின்றன; குணஸங்க்யாநே - குணங்களின் படி; யதாவத் - உள்ளபடி; ச்ரு'ணு - கேட்டுக்கொள்; தாநி அபி - அவற்றையும்
18.19 ஸாங்க்ய யோகாவின் குணவிதிகளின்படி, புலன்கள், செயல் மற்றும் செய்பவர், இம்மூன்றிலும் தலா மூன்று வகைகள் உள்ளன. அவற்றையும் இப்போது விளக்குகிறேன், கேள்.
ஸர்வபூதேஷு யேநைகம் பாவமவ்யயமீக்ஷதே /
அவிபக்தம் விபக்தேஷு தஜ்ஜ்ஞானம் வித்தி ஸாத்த்விகம் // 18.20
ஸர்வபூதேஷு - உயிரினங்கள் அனைத்திலும் ; யேந - எந்த ஞானத்தினால்; ஏகம் - ஒன்றேயானதும்; பாவம் - பரமாத்மாவின் இருப்பை; அவ்யயம்
- அழியாததுமான; ஈக்ஷதே - பார்க்கின்றானோ; அவிபக்தம் - எங்கும் ஒரே சீராக பிரிவற்றதாக; விபக்தேஷு - தனித்தனியான; தத் - அந்த; ஜ்ஞானம் - ஞானத்தை; வித்தி - அறிவாயாக; ஸாத்விகம் - ஸாத்வீகம் என்று
18.20 எல்லா இருப்புகளுக்குள் இருக்கும் அழிவற்ற ஸத்யத்தை, பிரிவுகளுக்குள் இருக்கும் பிரிவுபடா ஒருமைத்துவத்தைக் காணும் அறிவு ஸத்வ நிலை அறிவு எனப்படுகிறது.
.......................................................................................................
ப்ரு'தக்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபாவாந் ப்ரு'தக்விதாந் /
வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ராஜஸம் //
18.21
ப்ரு'தக்த்வேந - தனித்தனியாக; து - ஆனால்; யத் - எந்த; ஜ்ஞானம் - ஞானத்தின்மூலமாகமனிதன்;நாநாபாவாந் - விதவிதமான இருப்புகளை; ப்ரு'தக் விதாந்- தனித்தனியான; வேத்தி - அறிகின்றானோ; ஸர்வேஷு பூதேஷு - உயிரினங்கள் அனைத்திலும்; தத் - அந்த ஜ்ஞானம் - ஞானத்தை; வித்தி - அறிந்துகொள்; ராஜஸம் - ராஜஸம் என்று
18.21 ஜீவன்களின் வெவ்வேறு இயல்புகளைக் காண்பதன்மூலம், அவற்றை ஒன்றினின்று ஒன்றை வெவ்வேறாகப் பிரித்துக் காண்கிற அறிவு இரஜஸ் நிலை அறிவு எனப்படுகிறது.
.......................................................................................................
யத்து க்ரு'த்ஸ்நவதேகஸ்மிந் கார்யே ஸக்தமஹேதுகம் /
அதத்த்வார்த்தவதல்பம் ச தத்தாமஸமுதாஹ்ரு'தம் // 18.22
யத் - எந்த ஞானம்; து - ஆனால்; க்ரு'த்ஸ்நவத் - அனைத்தும் என்று; ஏகஸ்மிந் கார்யே - ப்ரக்ருதி காரியத்தின் விளைவான உடல் ஒன்றையே; ஸக்தம் - பற்றுக் கொண்டுள்ளதோ; அஹேதுகம்யுக்திக்குப்பொறந்தாது; அதத்த்வார்த்தவத் - உண்மைப் பொருளை உணர்த்தாது; அல்பம் ச - அற்பமானது; தத் - அது; தாமஸம் - தாமஸம் என்று; உதாஹ்ரு'தம் - சொல்லப்படுகின்றது
18.22 ஏதோ ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு, அது மட்டுமே உண்மையென்று சொல்லிக்கொண்டிருக்கும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத, அடித்தளமற்ற, அற்பமான அறிவு தமஸ் நிலை அறிவு எனப்படுகிறது.
நியதம் ஸங்கரஹிதமராகத்வேஷத: க்ரு’தம் /
அபலப்ரேப்ஸுனா கர்ம யத்தத்ஸாத்விகமுச்யதே // 18.23
நியதம் - சாஸ்திரங்களின் விதிக்கப்பட்டுள்ளதோ; ஸங்கரஹிதம் - நான் செய்கின்றேன் என்ற அபிமானம் இன்றி; அராகத்வேஷத: - விருப்பு வெறுப்பின்றி; க்ரு’தம் - செய்யப்படுகின்றதோ; அபலப்ரேப்ஸுனா
- பயனைக் கருதாத மனிதனால்; கர்ம - செயல்; யத் - எந்த; தத் - அச்செயல்; ஸாத்விகம் - ஸாத்வீகம்; உச்யதே - எனப்படுகின்றது.
18.23 ஒருவன், தனக்கென விதிக்கப்பட்ட கர்மங்களைக் கர்மபலனில் பற்றுவைக்காமலும், எந்தவித விருப்பு வெறுப்பின்றியும் செய்யும்போது, அது ஸாத்விக கர்மமாகிறது.
யத்து காமேப்ஸுனா கர்ம ஸாஹங்காரேண வா புந: /
க்ரியதே பஹுலாயாஸம் தத்ராஜஸமுதாஹ்ரு’தம் // 18.24
யத் - எந்த; து - ஆனால்; காமேப்ஸுனா - போகங்களை விரும்புகிறவனாலோ; கர்ம - செயல்; ஸாஹங்காரேணஅஹங்காரமுடையவனாலோ; வா - அல்லது; புந: - அப்படியே; க்ரியதே - செய்யப்படுகின்றதோ; பஹுலாயாஸம் - கடுமையான உழைப்பினால் செய்யக் கூடியதோ; தத் - அந்த செயல்; ராஜஸம் - ராஜஸம்; உதாஹ்ரு’தம் - எனப்படுகின்றது
18.24 அஹங்காரத்துடனும், சுயநல நோக்கோடும, பெருமுயற்சியுடனும் செய்யப்படும் கர்மம் இராஜஸ கர்மம் எனப்படுகிறது.
அநுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாமநவேக்ஷ்ய ச பௌருஷம்/
மோஹாதாரப்யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே // 18.25
அநுபந்தம் - விளைவையும்; க்ஷயம்- இழப்பையும்; ஹிம்ஸாம்
- துன்பத்தையும்; அநவேக்ஷ்ய - ஆராயாமல்; பௌருஷம் ச - திறமையையும்; மோஹாத் - வெறும் அஞ்ஞானத்தினால்; ஆரப்யதே - தொடங்கப்படுகின்றதோ; கர்ம - செயல்; யத் - எந்த; தத் - அந்த கர்மம்; தாமஸம் - தாமஸம்; உச்சயதே - என்று கூறப்படுகின்றது
18.25 செயலின் விளைவையும், பிறருக்கு ஏற்படும் துன்பத்தையும் நஷ்டத்தையும், தன் செயல்திறனையும் எண்ணிப்பாராது, மயக்கத்தால் எக் கர்மம் செய்யப்படுகிறதோ, அது தாமஸத்திலிருந்து விளைந்த கர்மம் எனப்படுகிறது.
.................................................................................................................
முக்தஸங்கோऽநஹம்வாதீ த்ரு’த்யுத்ஸாஹஸமந்வித: /
ஸித்த்யஸித்த்யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்சயதே //
முக்தஸங்க: - பற்றற்றவனாகவும்; அநஹம்வாதீ - நான் என்ற அஹங்காரச் சொல்லைச் சொல்லாதவனாகவும்; த்ருதி உத்ஸாஹ ஸமந்வித: - உறுதியும் ஊக்கமும் உடையவனாகவும்; ஸித்தி அஸித்த்யோ: - செயல் கைகூடுதல், கைகூடான இவற்றில்; નિર્விகார: - மகிழ்ச்சி, துயரம் முதலிய மாறுபாடற்றவனாகவும் இருக்கின்ற; கர்தா - அந்த கர்த்தா; ஸாத்த்விக: - ஸாத்வீகம்; உச்சயதே - என்று சொல்லப்படுகின்றான்
18.26 பற்றற்றவனாகவும், அஹங்காரமற்றவனாகவும், உறுதியும் ஊக்கமும் உடையவனாகவும், வெற்றிதோல்வியினால் நிலைமாறாதவனாகவும் இருக்கின்ற கர்த்தா ஸாத்விகன் எனப்படுகிறான்.
.................................................................................................................
ராகீ கர்மபலப்ரேப்ஸுர்லுப்தோ ஹிம்ஸாத்மகோऽசு'சி: /
ஹர்ஷசோ’காந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித: //
ராகீ - பற்றுடன் கூடியவன்; கர்மபலப்ரேப்ஸு: - செயலின் பயனை விரும்புபவன்; லுப்தே: - பேராசையுள்ளவன்; ஹிம்ஸாத்மக: - பிறரைத் துன்புறுத்தும் தன்மை கொண்டவன்; அசு'சி: - தூய்மையற்ற நடத்தையுள்ளவன்; ஹர்ஷசோ’காந்வித: - மகிழ்ச்சியாலும், துயரத்தாலும் பாதிக்கப்படுவான்; கர்தா - கர்த்தா; ராஜஸ: - ராஜஸன்; பரிகீர்தித: - என்று அழைக்கப்படுகின்றான்
18.27 பற்றுடன் கூடியவனும், செயலின் பயனை விரும்புபவனும், பேராசையுள்ளவனும், பிறரைத் துன்புறுத்தும் தன்மை கொண்டவனும், தூய்மையற்ற நடத்தையுள்ளவனும், மகிழ்ச்சியாலும் துயரத்தாலும் பாதிக்கப்படுபவனுமாகிய இத்தகைய கர்த்தா ராஜஸன் என்று அழைக்கப்படுகின்றான்.
அயுக்த: ப்ராக்ரு'த: ஸ்தப்த: ச'டோநைஷ்க்ரு'திகோலஸ: /
விஷாதீ தீர்கஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே // 18.28
அயுக்த: - கட்டுப்படுத்தப்படாத மனமும், புலன்களும் உடையவனும்; ப்ராக்ரு'த: - அறிவு முதிர்ச்சியடையாதவனும்; ஸ்தப்த: - கர்வமுடையவனும்; ச'ட: - வஞ்சகமுடையவனும்; நைஷ்க்ரு'திக: - பிறருடைய வாழ்க்கையைக் கெடுப்பவனும்; விஷாதீ - கவலை கொண்டவனும்; அலஸ: - சோம்பேறியும்; தீர்கஸூத்ரீ ச - காலம் கடத்துபவனுமான; கர்தா - கர்த்தா; தாமஸ: - தாமஸன்; உச்யதே - சொல்லப்படுகின்றான்
18.28 ஒழுக்கமற்றவனும், அறிவிலியும், முரட்டுத்தனமுடையோனும், கொடூரனும், வஞ்சகனும், பிறருடைய வாழ்க்கையைக் கெடுப்பவனும், கவலைகொண்டவனும், சோம்பேறியும், காலம் கடத்துபவனுமான கர்த்தா தாமஸன் என்று சொல்லப்படுகின்றான்.
புத்தேர் பேதம் த்ரு'தேச்'சைவ குணதஸ்த்ரிவிதம் ச்'ரு'ணு /
ப்ரோச்யமானமசே'ஷேண ப்ரு'தக்த்வேந தநஞ்ஜய // 18.29
புத்தே: - புத்திக்கும்; பேதம் - பாகுபாட்டை; த்ருதே: ச ஏவ - மன உறுதிக்கும்; குணத: - குணங்களுக்கேற்ப; த்ரிவிதம் - மூன்றுவிதமான; ச்'ரு'ணு - கேள்; ப்ரோச்யமானம் - சொல்லப்போவதை; அசே'ஷேண - முழுமையாகவும்; ப்ரு'தக்த்வேந- பகுதி பகுதியாகவும்; தநஞ்ஜய - அர்ஜூனா
18.29 தநஞ்ஜயா, இப்பொழுது முக்குணங்களுக்கேற்பவே புத்திக்கும் மன உறுதிக்கும் ஏற்படும் மூன்றுவிதமான பாகுபாட்டை முழுமையாகவும் தனித்தனியாகவும் நான் சொல்லப்போவதைக் கேள்.
ப்ரவ்ரு'த்திம் ச நிவ்ரு'த்திம் ச கார்யாகார்யே பயாபயே/
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி: ஸா பார்த ஸாத்விகீ // 18.30
ப்ரவ்ரு'த்திம் ச- ப்ரவிருத்தி மார்க்கத்தையும்; நிவ்ரு'த்திம் ச - நிவிருத்தி மார்க்கத்தையும்; கார்யாகார்யே - செய்யத்தகுந்தவற்றையும், செய்யத் தகாதனவற்றையும்; பய அபயே ச - பயத்தையும் , பயமின்மையும்; பந்தம் - தளையையும்; மோக்ஷம் ச- மோஷத்தையும்; யா - எந்த; வேத்தி - உண்மையாக அறிகின்றதோ; புத்தி: - புத்தி; ஸா - அந்த; பார்த - அர்ஜூனா; ஸாத்விகீ - ஸாத்வீகமானது
18.30 பார்த்தா, எந்த புத்தி, கர்மத்தின் பாதையையும் துறவின் பாதையையும், செய்யத்தகுந்ததையும் செய்யத் தகாததையும், பயத்தையும் பயமின்மையையும், பந்தத்தையும் மோக்ஷத்தையும் உண்மையாக அறிகின்றதோ அந்த புத்தி ஸாத்விகமானது.
...........................................................................................................
யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச/
அயதாவத்ப்ரஜானாதி புத்தி: ஸா பார்த ராஜஸீ // 18.31
யயா - எந்த புத்தியினால்; தர்மம் - தர்மத்தையும்; அதர்மம் ச
- அதர்மத்தையும்; கார்யம் ச அகார்யம் ஏவ - செய்யத்தகுந்த காரியத்தையும், செய்யத்தகாத கார்த்தையும் கூட; அயதாவத் - உள்ளபடியின்றி; ப்ராஜனாதி - அறிகின்றானோ; புத்தி: -புத்தி; ஸா - அந்த; பார்த - பார்த்தா; ராஜஸீ - ராஜஸம் எனப்படும்
18.31 பார்த்தா, தர்மம் மற்றும் அதர்மம், செய்யத் தகுந்தவை மற்றும் செய்யத்தகாதவை, இவற்றுக்கிடையே உள்ள வேற்றுமையை வேறுபடுத்திக் காணமுடியாத புத்தி ராஜஸம் எனப்படும்.
...........................................................................................................
அதர்மம் தர்மமிதி யா மன்யதே தமஸாவ்ரு'தா /
ஸர்வார்தாந் விபரீதாம்ச்'ச புத்தி: ஸா பார்த தாமஸீ // 18.32
அதர்மம் - அதர்மத்தை; தர்மம் இதி ச - தர்மம் என்றும்; யா - எந்த; மன்யதே - நினைக்கிறதோ; தமஸா - தமோ குணத்தினால்; ஆவ்ரு'தா
- சூழப்பட்டு; ஸர்வார்தாந் - எல்லாப் பொருட்களையும்; விபரீதாந் - அவற்றின் உண்மைத் தன்மை அறியாமல் மாறுபட்டவையாக; புத்தி: - புத்தி; ஸா - அந்த; பார்த - அர்ஜூனா; தாமஸீ - தாமஸமானது
18.32 பார்த்தா, அர்ஜூந இருளால் கவ்வப்பெற்று, அதர்மத்தை தர்மமாகவும், எல்லாப் பொருட்களையும் அவற்றின் உண்மைத் தன்மைக்கு மாறாகவும் நினைக்கிறதோ அந்த புத்தி தாமஸமானது.
த்ரு'த்யா யயா தாரயதே மந:ப்ராணேந்த்ரியக்ரியா: /
யோகேநாவ்யபிசாரின்யா த்ரு'தி: ஸா பார்த ஸாத்த்விகீ // 18.33
த்ரு'த்யா - உறுதியினால்; யயா - எந்த; தாரயதே - நிலை நிறுத்துகிறானோ; மந: ப்ராண இந்த்ரியக்ரியா: - மனம், ப்ராணன், புலன்கள் இவற்றினுடைய செயல்களை; யோகேந - தியான யோகத்தின் மூலம்; அவ்யபிசாரின்யா - பகவானைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் சிந்திக்காத; ஸா த்ரு'தி: - அந்த உறுதி; பார்த - அர்ஜூனா; ஸாத்த்விகீ - ஸாத்வீகமானது
18.33 பார்த்தா, தெய்விகத்துடன் இணைவதற்கென, தன் மனம், பிராணன், புலன்கள் இவற்றினுடைய செயல்களை உறுதியான தொடர் முயற்சியினால் கட்டுப்படுத்துகிறானோ, அவனுடைய அந்த உறுதி ஸாத்விகமானது.
யயா து தர்மகாமார்தாந்த்ரு'த்யா தாரயதேऽர்ஜூந /
ப்ரஸங்கேந பலாகாங்க்ஷீ த்ரு'தி: ஸா பார்த ராஜஸீ // 18.34
யயா - எந்த; து - ஆனால்; தர்மகா மார்தாந் - அறம், இன்பம், பொருள்களை; த்ரு'த்யா - உறுதியினால்; தாரயதே - அடைவதிலேயே உறுதியாக இருக்கின்றானோ; அர்ஜூந அர்ஜூனா; ப்ரஸங்கேந - மிகுந்த பற்றோடு; பலாகாங்க்ஷீ - பயனில் கருத்துள்ளடைய மனிதன்; ஸா த்ரு'தி: - அந்த உறுதி; பார்த - ப்ருதையின் மைந்தனே; ராஜஸீ - ராஜஸமானது.
18.34 ஆனால், ப்ருதையின் மைந்தா, பயனில் விருப்பமுடைய மனிதன் எந்த உறுதியினால் மிகுந்த பற்றோடு அறம், பொருள், இன்பம் அடைவதிலேயே உறுதியாக இருக்கிறானோ அந்த உறுதி ராஜஸமானது.
யயா ஸ்வப்நம் பயம் சோ'கம் விஷாதம் மதமேவ ச/
ந விமுஞ்சதி துர்மேதா த்ரு'தி: ஸா பார்த தாமஸீ // 18.35
யயா - எந்த; ஸ்வப்நம் - தூக்கத்தையும்; பயம் - அச்சம்; சோ'கம்
- கவலை; விஷாதம் - துயரம்; மதம் ஏவ - செருக்கையும் கூட; ச
- மேலும்; ந விமுஞ்சதி - விடாமல் உறுதியுடன் பற்றுகின்றானோ; துர்மேதா - தீய புத்தி கொண்டவன்; ஸா த்ரு'தி: - அந்த உறுதி; பார்த
- பார்த்தா; தாமஸீ - தாமஸமானது.
18.35 பார்த்தா, தாமஸ உறுதியில் இருக்கும் ஒருவனால் கனவையும், அச்சத்தையும், கவலையையும், மனக்கலக்கத்தையும், மயக்கத்தையும் கடக்க முடிவதில்லை.
ஸுகம் த்விதாநீம் த்ரிவிதம் ச்'ரு'ணு மே பரதர்ஷப /
அப்யாஸாத்ரமதே யத்ர து:காந்தம் ச நிகச்சதி // 18.36
யத்ததக்ரே விஷமிவ பரிணாமேऽம்ரு'தோபமம் /
தத்ஸுகம் ஸாத்தவிகம் ப்ரோக்தமாத்மபுத்திப்ரஸாதஜம் //18.37
ஸுகம் து - சுகம் பற்றியும்; இதாநீம் - இப்பொழுது; த்ரிவிதம்மூன்றுவிதமான; ச்'ரு'ணு - கேள்; மே - என்னிடம்; பரதர்ஷப- பரத குலச் செம்மலே; அப்யாஸாத் - பஜனை, தியானம், சேவை முதலிய பயிற்சியினால்; ரமதே - இன்புறுகின்றானோ; யத்ர - எந்த சுகத்தில்; து:காந்தம் ச - துன்பத்தின் முடிவையும்; நிகச்சதி - அடைகின்றானே; யத் - எந்தவிதமான சுகம்; தத் - அது; அக்ரே - சாதனையின் தொட க்கத்தில்; விஷம் இவ - விஷத்தைப் போலத் தோன்றினாலும்; பரிணாமே - விளைவில்; அம்ரு'தோபமம் - அமிர்த்தத்துக்கு ஒப்பாக ஆகும்; தத் ஸுகம் - அந்த சுகம்; ஸாத்தவிகம் - ஸாத்வீகம்; ப்ரோக்தம்
- எனப்படுகின்றது; தத் - அது; ஆத்மபுத்தி ப்ரஸாதஜம் - பகவான் பற்றிய தெளிவான அறிவினால் ஏற்படக்கூடியது
18.36, 37 ஓ பரதக்குல காளையே, மூன்று விதமான இன்பங்களைப்பற்றி இப்போது என்னிடம் கேட்பாயாக, ஆன்மீகப் பயிற்சிகளிலிருந்து பெறப்படும் இன்பமானது, எல்லாத் துன்பங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்து முடிவுக்குக் கொண்டுவருகிறது. முதலில் விஷமாகத் தோன்றினாலும், முடிவில் அமுதம்போன்றதாகும் இவ்வின்பம் ஸாத்விகமாம். ஆன்ம அறிவின் கருணையினால் இது தோன்றுகிறது.
விஷயேந்த்ரியஸம்யோகாத்யத்தக்ரேऽம்ரு'தோபமம் /
பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ரு'தம் // 18.38
விஷய இந்த்ரிய ஸம்யோகாத் - புலன்களும் அவற்றால் நுகரப்படும் பொருட்களும் சேர்வதால்; யத் - அந்த; தத் - அந்த; அக்ரே - தொடக்கத்தில்; அம்ரு'த உபமம் - அமுதத்துக்கு ஒப்பாகத் தோன்றினாலும்; பரிணாமே - முதலில்; விஷம் இவ - நஞ்சுக்கு ஒப்பாகும்; தத் ஸுகம் - எந்த சுகம்; ராஜஸம் - ராஜஸம் என்றும்; ஸ்ம்ரு'தம் - சொல்லப்படுகின்றது
18.38 முதலில் அமுதமாகவும், முடிவில் விஷமாக மாறும் புலனின்பங்கள் இராஜஸ தன்மையில் இருக்கின்றன.
யதக்ரே சானுபந்தே ச ஸுகம் மோஹனமாத்மன: /
நித்ராலஸ்யப்ரமாதோத்தம் தத்தாமஸமுதாஹ்ரு'தம் // 18.39
யத் - எந்த; அக்ரே ச - அனுபவிக்கும் காலத்திலும்; அனுபந்தே ச - பின் விளைவிலும்; ஸுகம் - ஸுகம்; மோஹனம் - மயக்கமடையச் செய்கின்றதோ; ஆத்மன: - ஆத்மாவை; நித்ரா ஆலஸ்ய ப்ரமாத உத்தம் - உறக்கம், சோம்பல், கவனமின்மை இவற்றிலிருந்து தோன்றும்; தத் - அந்த சுகம்; தாமஸம் - தாமஸம் என்று; உதாஹ்ரு'தம் - சொல்லப்படுகின்றது
18.39 முதலிலிருந்து இறுதி வரை மருட்சியைத் தருவதும், தூக்கத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், மாயையிலிருந்தும் தோன்றுவதான இன்பங்கள் அறியாமையின் இயல்புகள் என்று சொல்லப்படுகின்றன.
ந ததஸ்தி ப்ரு'திவ்யாம் வா திவி தேவேஷு வா புந: /
ஸத்த்வம் ப்ரக்பு'திஜைர்முக்தம் யதேபி:
ஸ்யாத்த்ரிபி'ர்குணை: // 18.40
ந - இல்லை; தத் - அந்த; அஸ்தி - ; ப்ரு'திவ்யாம் வா - நில உலகிலோ; திவி - வானிலோ; தேவேஷு வா - தேவதைகளிலோ; புந: - மீண்டும்; ஸத்த்வம் - இருப்பு இருக்குமோ; ப்ரக்ரு'திஜை: - இயற்கையில் உண்டான; முக்தம் - விடுபட்டதாக; யத் - எந்த; ஏபி்: - இந்த; ஸ்யாத்
- பிராணி இருக்குமோ; த்ரிபி்: - மூன்று; குணை: - குணங்களிலிருந்தும்
18.40 பூவுலகிலாகட்டும் அல்லது உயர் உலகங்களில் வாழும் தேவர்களாகட்டும், ஒருவருமே பொருள்சார்ந்த இம்மூன்று தன்மைகளிலிருந்து தப்பிக்க முடியாது.
ப்ராஹ்மணக்ஷத்ரியவிசா'ம் சூ'த்ராணாம் ச பரந்தப /
கர்மாணி ப்ரவிபக்தானி ஸ்வபாப்ரபவைகுணை: // 18.41
ப்ராஹ்மணக்ஷத்ரியவிசா'ம் - ப்ராஹ்மணன், க்ஷத்ரியன், வைசியன் இவர்களுடைய; சூ'த்ராணாம் ச - மற்றும் நான்காம் வர்ணத்தவர்களுடைய; பரந்தப - எதிரிகளை வாட்டுபவனே; கர்மாணி - கர்மங்கள்; ப்ரவிபக்தானி - பிரிக்கப்பட்டிருக்கின்றன; ஸ்வபாப்ரபவை:
- இயல்பிலிருந்து உண்டான; குணை: - குணங்களுக்கு ஏற்ப
18.41 எதிரிகளை வாட்டுபவனே, அவரவர்கள் இயல்புகளின் அடிப்படையில் அமைந்த வேலைகளின்படி, மனிதர்கள் பிராமணர்கள், க்ஷத்ரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்ரர்கள் எனப் பிரிக்கப்பட்டனர்.
ச'மோ தமஸ்தப: செள'சம் க்ஷாந்திரார்ஜவமேவ ச /
ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம் // 18.42
சம: - மனவடக்கம்; தம: - புலனடக்கம்; தப: - தவம்; செள'சம்
- தூய்மை; க்ஷாந்தி: - பிறர் குற்றம் பொறுத்தல்; ஆர்ஜவம் - நேர்மை; ஏவ - கூட; ச - மேலும்; ஜ்ஞாநம் - அறிவு; விஜ்ஞாநம் - அனுபவம் ஞானம்; ஆஸ்திக்யம் - கடவுள் நம்பிக்கை; ப்ரஹ்மகர்ம - ப்ராஹ்மணர்களுக்குரிய கர்மங்கள்; ஸ்வபாவஜம் - இயல்பான
18.42 அமைதி, ஒழுக்கம், எளிமை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, ஞானம் மற்றும் இறை நம்பிக்கை - இவை பிராஹ்மணர்களின் இயல்புகளாக இருக்கின்றன.
செள’ர்யம் தேஜோ த்ரு’திர்தாக்ஷ்யம் யுத்தே சாப்பலாயநம் /
தாநம்’ஈச்’வரபாவச்’ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம் // 18.43
செள’ர்யம் - சூரவீரத்தனமும், தேஜ: தேஜஸும்; த்ரு’தி: - உறுதியும்; தாக்ஷ்யம் - திறமையும்; யுத்தே ச - யுத்தத்திலும்; அபி - மேலும்; அபலாயநம் - போரில் புறங்காட்டாமையும்; தாநம் - கொடையும்; ஈச்’வரபாவ: ச - ஆளும் தன்மையும்; க்ஷாத்ரம் - க்ஷத்ரியர்களுக்குரிய; கர்ம - கர்மங்கள்; ஸ்வபாவஜம் - இயல்பான
18.43 வீரம், வேகம், திடம், திறமை, போர்த்திறம், தலைமைப் பண்பு மற்றும் பெருந்தன்மைகளால் க்ஷத்ரியன் வகைப்படுத்தப்படுகின்றான்.
க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைச்’யகர்ம ஸ்வபாவஜம் /
பரிசர்யாத்மகம் கர்ம சூ’த்ரஸ்யாபி ஸ்வபாவஜம் // 18.44
க்ருஷிகௌரக்ஷ்ய வாணிஜ்யம் - உழவு செய்தலும், பசுக்களைக் காப்பதும், பொருட்களை வாங்கி விற்பதில் சத்தியத்தைக் கடைப்பிடித்தலும்; வைச்’யகர்மஸ்வபாவஜம் - வைசியர்களுக்குரிய இயல்பான கர்மங்கள் ஆகும்; பரிசர்யாத்மகம் - மக்கள் அனைவருக்கும் சேவை புரிதல்; கர்ம - கர்மங்கள்; சூ’த்ரஸ்ய அபி - நான்காம் வர்ணத்தவர்களுக்கு; ஸ்வபாவஜம் - இயல்பான
18.44 விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் வியாபாரம் போன்றவற்றில் திறமை உடையவர்களாக இருப்பவர்கள் வைசியர்கள் எனப்படுகின்றனர். நல்லமுறையில் சேவை புரிபவர்கள் சூத்திரர்கள் எனப்படுகின்றனர்
ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர: /
ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ரு’ணு // 18.45
ஸ்வே ஸ்வே கர்மணி - தத்தம் கர்மங்களில்; அபிரத: - முழு முனைப்புடன் ஈடுபட்டிருக்கும்; ஸம்ஸித்திம் - பகவானை அடைதலாகிற ஸித்தியை; லபதே - அடைகின்றான்; நர: - மனிதன்; ஸ்வகர்மநிரத: - தன்னுடைய இயல்பான கர்மங்களில் ஈடுபடுபவன்; ஸித்திம் - பரம ஸித்தியை; யதா - எப்படி கர்மங்களைச் செய்து; விந்ததி - அடைகின்றானோ; தத்
- அந்த முறையை; ச்'ரு'ணு - கேள்
18.45 ஒருவன், தனக்கு இயல்பாக அமைந்த வேலைகளை பக்தியுடன் செய்வதன் மூலம், நிறைநிலையை அடைகிறான். தனக்கு இயல்பாக அமைந்த வேலைகளைச் செய்வதன் மூலம், ஒருவர் எவ்வாறு நிறைநிலையை அடைய முடியும் என்பதைக் கூறுகிறேன் கேள்!
.......................................................................................................................
யத: ப்ரவ்ரு'த்திர் பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம் /
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ: //18.46
யத: - எந்தப் பரம் பொருளிலிருந்து; ப்ரவ்ரு'த்தி: - உண்டாயினவோ; பூதாநாம்- ஸகல பிராணிகளும்; யேந - எந்தப் பரமாத்மாவினால்; ஸர்வம்
- உலகம் முழுமையும்; இதம் - இந்த; ததம் - வியாபிக்கப்பட்டுள்ளதோ; ஸ்வகர்மணா - தன்னுடைய இயல்பான கர்மங்களினால்; தம் - அந்த பரமாத்மாவை; அபயர்ச்ய - வழிபட்டு; ஸித்திம் - பரம ஸித்தியை; விந்ததி - அடைகின்றான்; மாநவ: - மனிதன்
18.46 யாரிடமிருந்து உயிரினங்கள் தோன்றினவோ, யாரால் இந்த முழுப் பிரபஞ்சமும் வியாபிக்கப்பட்டிருக்கிறதோ அந்த ஒப்புயர்வற்ற ஈஸ்வரனை, தன்னுடைய சுய கர்மத்தால் தொழுவதன் மூலம் ஒருவன் உன்னத நிலையை அடைகிறான்.
.......................................................................................................................
ச்'ரேயாన్స్வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத் /
ஸ்வபாபவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம் // 18.47
ச்'ரேயாந் - உயர்ந்தது; ஸ்வதர்ம: - தன்னுடைய தர்மம்; விகுண: - குணக் குறை உள்ளதாயினும்; பரதர்மாத்- பிறருடைய தர்மத்தைக் காட்டிலும்; ஸ்வநுஷ்டிதாத் - நல்லமுறையில் கடைப்பிடிக்கப்பட்ட; ஸ்வபாபவநியதம் - இயல்புக்கேற்ப விதிக்கப்பட்ட; கர்ம - தன்னுடைய கர்மங்களை; குர்வந் - செய்கிற மனிதன்; ந ஆப்நோதி - அடையமாட்டான்; கில்பிஷம் - பாவத்தை
18.47 ஒருவன், மற்றொருவனின் வேலையைச் சிறப்பானது என்று ஒப்புக்கொண்டு, அதை எடுத்துச் சிறப்பாகச் செய்வதைக் காட்டிலும், தன்னுடைய சொந்த இயல்புக்கேற்ற செயலில் ஈடுபடுவதே சாலச் சிறந்தது, அதை மிகச் சிறப்பாகச் செய்ய முடியாவிட்டாலும் கூட! அவரவருக்கு இயல்பாக விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்வது, பாவ விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.
ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத் /
ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்நிரிவாவ்ரு’தா: //
18.48
ஸஹஜம் கர்ம - தனக்குரிய இயல்பான கர்மங்களை; கௌந்தேய - குந்தியின் புதல்வனே; ஸதோஷம் அபி - குறை உள்ளதாயினும்; ந த்யஜேத் - விட்டு விடலாகாது; ஸர்வாரம்பா: - எல்லாச் செயல்களும்; ஹி - ஏனெனில்; தோஷேண - குறையினால்; தூமேந அக்நி: இவ - புகையால் சூழப்பட்ட தீ போல்; ஆவ்ரு’தா: - சூழப்பட்டுள்ளன
18.48 குந்தியின் புதல்வனே, ஒருவன் தன்னுடைய இயல்பால் விளைந்த செயல்களை, அந்தச் செயல் பல குறைகளைக் கொண்டதாயிருப்பினும் அவற்றை விட்டுவிடலாகாது. ஏனெனில் நெருப்பைப் புகை சூழ்வதுபோல, ஒவ்வொரு செயலையும் ஏதாவது ஒரு குறை சூழ்ந்துள்ளது.
அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ரு’ஹ: /
நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸந்ந்யாஸேநாதிகச்சதி //
அஸக்தபுத்தி: - பற்றற்ற புத்தியுடைய; ஸர்வத்ர - எங்கும்; ஜிதாத்மா - உள்ளத்தை அடக்கிய மனிதன்; விகதஸ்ப்ரு’ஹ: - ஆசை அற்றவனான; நைஷ்கர்ம்யஸித்திம் - கர்மத்தனையிலிருந்து முற்றும் விடுபட்ட பெருநிலையை; பரமாம் -மேலான; ஸந்ந்யாஸேந - ஸாங்க்ய யோகத்தினால்; அதிகச்சதி - அடைகிறான்.
18.49 துறவைப் பயிற்சிசெய்வதன் மூலம், யார் ஒருவனுடைய மனம் சுயநல நோக்கிலிருந்து விடுபட்டிருக்கிறதோ, யார் ஒருவன் மனத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறானோ, யார் ஒருவன் ஆசைகளிலிருந்து விடுபட்டிருக்கிறானோ அவன் கர்ம பலன்களின் மீதுள்ள பற்றிலிருந்து முழுமையாக விடுபடுகிறான்.
ஸித்திம் ப்ராப்தோ கதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே /
ஸமாஸேநைவ கௌந்தேர நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா //
18.50
ஸித்திம் - நைஷ்கார்ம்ய ஸித்தியை; ப்ராப்த: - அடைந்த மனிதன்; யதா - எப்படி; ப்ரஹ்ம - பிரஹ்மத்தை; ததா - அந்த முறையை; ஆப்நோதி - அடைகின்றானோ; நிபோத - அறிந்துகொள்; மே - என்னிடமிருந்து; ஸமாஸேந ஏவ - சுருக்கமாகவே; கௌந்தேய - குந்தியின் புதல்வனே; நிஷ்டா - நிலை; ஜ்ஞாநஸ்ய - ஞானயோகத்தினுடைய; யா - எதுவோ அந்த; பரா - உயர்ந்த நிலை
18.50 குந்தியின் புதல்வா, இனி நான் கூறப்போகும் வழியில் நடப்பதன் மூலம் ஒருவர், மேலான உண்மை நிலையை, பிரஹ்ம நிலையை எப்படி அடையமுடியும் என்பதை அறிந்துகொள்.
...........................................................................................................
புத்த்யா விஶுத்தயா யுக்தோ த்ருத்யாத்மாநம் நியம்ய ச /
ஶப்தாதீந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச //
18.51
விவிக்தஸேவீ லக்வாஶீ யதவாக்காயமாநஸ: /
த்யாநயோகபரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஶ்ரித: //
18.52
அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம் /
விமுச்ய நிர்மம: ஶாந்தோ ப்ரஹ்மபூயாய கல்பதே //
18.53
புத்த்யா யுக்த: - அறிவுடன் கூடியவனாகவும்; விஶுத்தயா - தெளிந்த; யுக்த: - அறிவுடன் கூடியவனாகவும்; த்ருத்யா - ஸாத்வீகமான உறுதியோடு; ஆத்மாநம் - உள்ளத்தையும், புலன்களையும்; நியம்ய - அடக்கி; ச - மேலும்; ஶப்தாதீந் - ஒலி முதலிய; விஷயாந் - புலன் நுகர் பொருட்களை; த்யக்த்வா - துறந்து; ராகத்வேஷௌ - விருப்பு வெறுப்புகளை; வ்யுதஸ்ய - முற்றிலும் அழித்து; ச - மேலும்; விவிக்த ஸேவீ - தனிமையான இடத்தில் இருப்பவனாகவும்; லக்வாஶீ - எளிய ஸாத்வீக அளவான உணவு அருந்துபவனாகவும் ; யதவாக்காயமாநஸ: மனம், வாக்கு, உடல், இவற்றைத் தன் வசப்படுத்தியவனாகவும்; த்யாநயோகபர: - தியான யோகத்தின் ஈடுபட்டுிருந்து; நித்யம் - எப்பொழுதும்; வைராக்யம் - திடமான வைராக்யத்தை; ஸமுபாஶ்ரித: ச - அடைந்தவனாகவும்; அஹங்காரம் - அஹங்காரத்தையும்; பலம் - வலிமை; தர்பம் - கர்வம்; காமம் - காமம்; க்ரோதம் - கோபம்; பரிக்ரஹம் - சொத்து சேர்த்தல்; விமுச்ய - நீக்கி; நிர்மம: - மமகாரமற்று; சா’ந்த: - சாந்தியோடு கூடியவனாக உள்ளவன்; ப்ரஹ்மபூயாய - பரபிரம்மத்தில் இரண்டறக் கலப்பதற்கு; கல்பதே - தகுதி பெறுகின்றான்
18.51,52,53 தூய்மைப்படுத்தப்பட்ட பட்டறிவு, உறுதியான தீர்மானத்தின் மூலம் மனத்தைக் கட்டுப்படுத்துதல், புலனின்ப பொருட்களிலிருந்து விலகியிருத்தல், விருப்பு வெறுப்புகளை விட்டுவிடுதல், ஏகாந்தமாக வாழ்தல், மித உணவு, மனம், பேச்சு, கர்மேந்திரியங்களை தன் வசப்படுத்துதல், தியானத்திலேயே கரைந்திருத்தல், பற்றின்மை மற்றும் அஹங்காரம், வன்முறை, பெருமை, காமம், கோபம், உடைமைக் குணம் ஆகியவற்றைத் துறந்திருக்கும் ஒருவர் அமைதியை, சாந்தத்தை அடைந்து ‘நான்’ மற்றும் ‘எனது’ என்னும் கருத்துக்களிலிருந்து விடுபடுகிறார். மேலும் அந்த மேலான பர பிரம்மத்துடன் ஒன்றிணைகிறார்.
ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா ந சோ’சதி ந காங்க்ஷதி /
ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்பக்திம் லபதே பராம் // 18.54
ப்ரஹ்மபூத: - பிரஹ்மத்தில் ஒன்றிய; ப்ரஸந்நாத்மா - மனத்தெளிவுடைய யோகி; ந சோ’சதி - வருந்துவதில்லை; ந காங்க்ஷதி - எதிர்பார்ப்பதில்லை; ஸம: - ஸம பாவனையோடு இருந்து கொண்டு; ஸர்வேஷு பூதேஷு
- அனைத்துப் பிராணிகளிடமும்; மத்பக்திம் - என்மீதான பக்தியை; லபதே - பெறுகின்றான்; பராம் - மேலான
18.54 பரமாத்மாவிடத்தில் கரைந்த ஒருவன், கவலையோ ஆசையோ படுவதில்லை, எல்லா உயிர்களிடத்திலும் சமபாவனை கொண்டிருக்கும் அவன் என்மீதான பக்தியைப் பெறுகின்றான்.
பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யச்’சாஸ்மி தத்தவத: /
ததோ மாம் தத்தவதோ ஜ்ஞாத்வா விச’தே ததநந்தரம் //
18.55
பக்த்யா - அந்த பராபக்தியின் மூலம்; மாம் - பரமாத்மாவான என்னை; அபிஜாநாதி - தத்வரீதியாக அறிகின்றான்; யாவாந் - அந்தளவுக்கு; ய: ச அஸ்மி - என்னை உள்ளது உள்ளபடியே; தத்தவத: - உண்மையில் ; தத: - அந்த பராபக்தியின் மூலம்; மாம் - என்னை; தத்தவத: ஜ்ஞாத்வா
- தத்வரீதியாக அறிந்து; விச’தே - என்னிடம் ஐக்கியமாகின்றான்;
ததநந்தரம் - அக்கணமே
18.55 பக்தியின் மூலம் ஒருவன், நான் எத்தன்மையன், நான் யார் மற்றும் நான் என்ன என்பவற்றின் சாரத்தை உள்ளபடியே புரிந்துகொள்கிறான். என்னுடைய சாரத்தைப் புரிந்துகொண்ட உடனேயே என்னுள் கரைந்துவிடுகிறான்.
ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மதவ்யபாச்'ரய: /
மத்ப்ரஸாதாதவாப்நோதி சா'ச்'வதம் பதமவ்யயம் // 18.56
ஸர்வகர்மாணி - எல்லாக் கர்மங்களையும்; ஸதா - எப்பொழுதும்; குர்வாண: அபி - செய்து கொண்டிருப்பினும்; மதவ்யபாச்'ரய: - என்னையே புகலாகக் கொண்ட கர்மயோகி; மத்ப்ரஸாதாத் - எனது அருளால்; அவாப்நோதி - அடைகின்றான்; சா'ச்'வதம் - என்றுமுள்ளம்; பதம் - பரமபத்ததை; அவ்யயம் - அழியாததுமான
18.56 என்மீது பக்தி செலுத்தும் என்னுடைய பக்தன், அன்றாட வாழ்க்கைச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், என்னுடைய கருணையினால், என்னுடைய பாதுகாப்புடன் அழியாத, நிலையான என்னுடைய இருப்பிடத்தையடைகிறான்.
சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர: /
புத்தியோகமுபாச்'ரித்ய மச்சித்த: ஸததம் பவ // 18.57
சேதஸா - மனப்பூர்வமாக; ஸர்வகர்மாணி - எல்லாக் கர்மங்களையும்; மயி - என்னிடம்; ஸந்ந்யஸ்ய - அர்ப்பணம் செய்து; மத்பர: - என்னையே அடைக்கலமாகக் கொண்டு; புத்தியோகம் - சமபுத்தியாகின்ற யோகத்தை; உபாச்'ரித்ய- கடைப்பிடித்து; மச்சித்த: - என்னிடம் உள்ளம் பதித்தவனாக; ஸததம் - எப்பொழுதும்; பவ - இருப்பாயாக
18.57 செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், என்மீது உன் மொத்த விழிப்புணர்வையும் வைத்து, என்னைச் சார்ந்திருந்து செயலைச்செய்து, என்னுடைய பாதுகாப்பில் இருப்பாயாக!
மச்சித்த: ஸர்வதுர்காணி மத்ப்ரஸாதாத்தரிஷ்யஸி /
அத சேத்த்வமஹங்காராந்ந ச்'ரோஷ்யாஸி விநங்க்ஷ்யஸி // 18.58
மச்சித்த: - என்னிடமே உள்ளம் பதித்தவனாக; ஸர்வதுர்காணி - எல்லா இன்னல்களையும்; மத்ப்ரஸாதாத்- எனது அருளால்; தரிஷ்யஸி - எளிதாகக் கடந்து விடுவாய்; அத - மேலும்; சேத் - இல்லையென்றால்; த்வம் - நீ; அஹங்காராத் - அஹங்காரத்தின் காரணமாக; ந ச்'ரோஷ்யஸி
- கேளாவிட்டால்; விநங்க்ஷ்யஸி - அழிந்து போவாய்
18.58 உன்னுடைய மனத்தை என்மீது நிலைத்திருக்கச் செய்யும்போது, என்னுடைய கருணையால் எல்லாவித துன்பங்களையும் கடந்துவிடுவாய். உன்னுடைய அஹங்காரத்தின் காரணமாக என்னுடைய வார்த்தைகளைக் கேளாவிட்டால், நீ அழிவிற்குள்ளாவாய்.
.........................................................................................................
யதஹங்காரமாச்'ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே /
மித்யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ரு'திஸ்த்வாம்
நியோக்ஷ்யதி // 18.59
யத் அஹங்காரம் - எந்த அஹங்காரத்தின்; ஆச்'ரித்ய - வசப்பட்டு; ந யோத்ஸ்யே - நான் யுத்தம் செய்யமாட்டேன்; இதி - என்று; மந்யஸே
- நினைக்கின்றாயோ; மித்யா - பொய்ையானது; ஏஷ: வ்யவஸாய: - இந்தத் தீர்மானம்; தே - உன்னுடைய; ப்ரக்ருதி: - இயல்பு; த்வாம் - உன்னை; நியோக்ஷ்யதி - வலுவில் போரில் ஈடுபடுத்தும்
18.59 உன்னுடைய அஹங்காரத்தின் காரணமாக, ‘நான் போர்புரியேன்’ என்று நீ தீர்மானித்தால், உன்னுடைய தீர்மானம் பயனற்றது. உன்னுடைய இயல்பான குணமே உன்னைப் போரில் ஈடுபடுத்திவிடும்.
.........................................................................................................
ஸ்வபாவஜேந கெளந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா /
கர்தும் நேச்சஸி யந்மோஹாத்ஸகரிஷ்யஸ்யவசோ'பி தத் // 18.60
ஸ்வபாவஜேந - இயல்பில் உண்டான; கெளந்தேய - குந்தியின் மைந்தனே; நிபத்த: - கட்டப்பட்டு; ஸ்வேந - உன்னுடைய; கர்மணா - கர்மவினையினால்; கர்தும் - செய்வதற்கு; ந இச்சஸி
- விரும்பவில்லையோ; யத் - எந்தச் செயலை; மோஹாத் - அறிவு மயங்கியதால் காரணமாக; கரிஷ்யஸி - செய்யப்போகின்றாய்; அவச:
- உன் வசம் இழந்து; அபி - மேலும்; தத் - அதை
18.60 குந்தி புத்திரா, உன்னுடைய இயல்பான மனப்பாங்குகளினால் கட்டுப்படுத்தப்படுபவனாய் இருக்கிறாய். செய்ய வேண்டாமென்று தீர்மானித்த செயலை, மாயையின் காரணமாக, நீ செய்தே தீருவாய், அது உன்னுடைய விருப்பத்திற்கு மாறாக இருந்தாலுங்கூட!
...........................................................................................................
ஈச்'வர: ஸர்வபூதாநாம் ஹ்ரு'த்தேஸே'ர்ஜுந திஷ்ட்டதி /
ப்ராமயந்ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா // 18.61
ஈச்'வர:- அந்தர்யாமியாகி பகவான்; ஸர்வபூதாநாம் - அனைத்து பிராணிகளுடைய; ஹ்ருத்தேஸே' - இதயத்தில்; அர்ஜுந - அர்ஜூனா; திஷ்ட்டதி - வீற்றிருக்கிறார்; ப்ராமயந் - சுழலச் செய்து கொண்டு; ஸர்வபூதாநி - அனைத்து ஜீவன்களையும்; யந்த்ராரூடாநி - உடல் என்கிற யந்திரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட; மாயயா - தன்னுடைய மாயையினால்
18.61 ஒவ்வொருவருடைய இதயத்திலும் வீற்றிருக்கின்ற பரமாத்மா எல்லா ஜீவன்களின் செயல்களையும் வழிநடத்துகிறான். அவனுடைய மாயாசக்தியின் முன் அனைத்துமே இயந்திரங்களைப் போல செயல்புரிகின்றன.
...........................................................................................................
தமேவ சரணம் கச்ச ஸர்வபாவேந பாரத /
தத்ப்ரஸாதாத்பராம் சா'ந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி
சா'ச்'வதம் // 18.62
தம் ஏவ - அந்த பரமேசுவரனையே; சரணம் கச்ச - தஞ்சம் அடையவாயாக; ஸர்வபாவேந - எல்லாவகைகளாலும்; பாரத - பாரத குலத் தோன்றலே; தத்ப்ரஸாதாத் - அந்தப் பரமாத்மாவின் அருளினால் நீ; பராம் - உயர்ந்த; சா'ந்திம் - அமைதியையும்; ஸ்தாநம் - பரமபதத்தையும்; ப்ராப்ஸ்யஸி - அடைவாய்; சா'ச்'வதம் - நிலையான
18.62 பாரத குலத்தோன்றலே, அவனிடமே முழுமையாக சரணடைந்துவிடு. அவனுடைய கருணையால் நீ மேலான அமைதியையும் அழியா வீடுபேறும் அடைவாய்.
இதி தே ஜ்ஞானமாக்யாதம் குஹ்யாத்குஹ்யதரம் மயா /
விம்ரு'ச்'யைததசே'ஷேண யதேச்சஸி ததா குரு // 18.63
இதி - இவ்வாறு; தே - உனக்கு; ஜ்ஞானம் - ஞானம்; ஆக்யாதம் - கூறப்பட்டது; குஹ்யாத் குஹ்யதரம் - மறைபொருளுக்கெல்லாம் மறைபொருளான; மயா - என்னால்; விம்ருச்'ய - நன்கு ஆராய்ந்து; ஏதத் - இந்த ஞானத்தை; அசே'ஷேண - முழுமையாக; யதா - எப்படி; இச்சஸி - விரும்புகிறாயோ; ததா - அப்படியே; குரு - செய்
18.63 இவ்வாறு மறைபொருளுக்கெல்லாம் மறைபொருளான ஞானம் என்னால் உனக்குக் கூறப்பட்டது. இப்பொழுது நீ இந்த ஞானத்தை முழுமையாக நன்கு ஆராய்ந்து, நீ எப்படி விரும்புகின்றாயோ அப்படியே செய்.
ஸர்வகுஹ்யதமம் பூய: ச்'ரு'ணு மே பரமம் வச: /
இஷ்டோடஸி மே த்ரு'டமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம் //
18.64
ஸர்வகுஹ்யதமம் - மறைபொருளுக்கெல்லாம் மறைபொருளான; பூய: - மீண்டும்; ச்'ரு'ணு - கேள்; மே - என்னுடைய; பரமம் - மேலான ரஹஸ்யமான; வச: - உரையை; இஷ்ட: - உற்ற நண்பனாக; அஸி - இருக்கின்றாய்; த்ரு'டம் - மிகவும்; மே - எனக்கு; இதி - என்ற கருத்தோடு இந்த உரையை; தத: - ஆகையால்; வக்ஷ்யாமி - சொல்கின்றேன்; தே - உனக்கு; ஹிதம் - மேலான நன்மை பயக்கும்
18.64 எனக்கு நீ மிகவும் உற்ற நண்பனாக இருப்பதால், உன் நன்மைக்காக மறைபொருளுக்கெல்லாம் மறைபொருளான என்னுடைய மேலான ரஹஸ்யத்தைக் கூறுகிறேன், மீண்டும் கேள்.
மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு /
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோடஸி மே //
18.65
மந்மநா - என்னிடமே மனத்தைச் செலுத்துபவனாக; பவ - ஆவாய்; மத்பக்த: - என்னிடமே பக்தி கொண்டிரு; மத்யாஜீ - என்னையே வழிபடு; மாம் - என்னையே; நமஸ்குரு - வணங்கு; மாம் ஏவ - என்னையே; ஏஷ்யஸி - அடைவாய்; ஸத்யம் - உண்மையில்; தே - உனக்கு; ப்ரதிஜாநே - பிரக்ஞை செய்கின்றேன்; மே - எனக்கு; ப்ரிய:
- இனியவனாக; அஸி - இருக்கின்றாய்
18.65 அர்ஜுனா நீ என்னிடமே மனத்தைச் செலுத்துவாயாக. என்னிடமே பக்தி கொண்டிருப்பாயாக; என்னையே வழிபடுவாயாக; இப்படிச் செய்வதால் நீ என்னையே அடைவாய். இவ்வுறுதிமொழியை நான் உனக்கு நல்குகின்றேன். ஏனெனில் நீ எனக்கு மிகவும் அன்புக்குரியவனாக இருக்கிறாய்.
...........................................................................................................
ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ச'ரணம் வ்ரஜ /
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி மா சு'ச: // 18.66
ஸர்வதர்மாந் - தர்மங்கள் அனைத்தையும் அதாவது செய்யவேண்டிய கர்மங்கள் அனைத்தையும்; பரித்யஜ்ய - அர்ப்பணம் செய்துவிட்டு; மாம் ஏகம் - ஸர்வவல்லமை பொருந்திய, எல்லாவற்றிற்கும் ஆதாரமான, பரமேசுவரனான என் ஒருவனையே; ச'ரணம் வ்ரஜ - சரணடைவாயாக; அஹம் - நான்; த்வா - உன்னை; ஸர்வ பாபேப்ய:
- பாவங்கள் அனைத்திலிருந்தும்; மோக்ஷயிஷ்யாமி - விடுவிப்பேன்; மாசு'ச - வருந்தாதே
18.66 நெறிமுறைகள், கருத்துக்கள், ஒழுக்க நியதிகள் அனைத்தையும் விட்டுவிட்டு, என்னிடம் சரணடைந்துவிடு; பாவகரமான விளைவுகள் அனைத்திலிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன், வருந்தாதே.
...........................................................................................................
இதம்தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந /
ந சாசு'ச்'ரூஷவே வாச்யம் ந ச மாம் யோऽப்யஸூயதி //
18.67
இதம்தே - இந்த; தே - உனக்கு; ந - இல்லை; அதபஸ்காய - தவம் இல்லாதவனுக்கு; ந - இல்லை; அபக்தாய - பக்தியில்லாதவனுக்கு; கதாசந - ஒருபோதும்; ந - இல்லை; அசு'ச்'ரூஷவே - கேட்க விரும்பாதவனுக்கு; வாச்யம் - சொல்லல்; ந - இல்லை; ச - மேலும்; மாம் - என்னிடம்; ய: - எவன்; அப்யஸூயதி - குறை காண்கின்றனோ
18.67 ஒழுக்கக் கட்டுப்பாடுகளற்ற, பக்தியற்ற, கேட்க விரும்பாத மற்றும் என்னைப் பற்றி இழிவாகப் பேசுகின்ற ஒருவனுக்கு இந்த ஞானத்தை போதிக்காதே !
ய இமம் பரமம் குஹ்யம் மத் பக்தேஷ்வபிதாஸ்யதி /
பக்திம் மயி பராம் க்ரு'த்வா மாமேவைஷ்யத்யஸம்ச'ய: //
ய: - எந்த மனிதன்; இமம் பரமம் - இந்த உயர்ந்த; குஹ்யம் - ரஹஸ்யமான; மத் - பக்தேஷு - என்னுடைய பக்தர்களுக்கு; அபிதாஸ்யதி - சொல்வானோ; பக்திம் - பிரேமை மிகுந்த பக்தியை; மயி - என்னிடம் ; பராம் - உயர்ந்த; க்ரு'த்வா - செய்து; மாம் ஏவ - என்னையே; ஏஷ்யதி - அடைகின்றான்; அஸம்ச'ய: - இதில் சந்தேகமில்லை
18.68 இந்த உன்னதமான உயர்ந்த இரகசியங்களை யாரொருவன் பக்தர்களிடம் பகிர்கிறானோ அவன் எனக்கு மிக உயர்ந்த சேவையைச் செய்தவனாகிறான். இறுதியில் அவன் என்னையே வந்தடைகிறான். இதில் சந்தேகமே இல்லை.
ந ச தஸ்மாந்மனுஷ்யேஷு கச்'சிந்மே ப்ரியக்ரு'த்தம: /
பவிதா ந ச மே தஸ்மாதந்ய: ப்ரியதரோ புவி //
ந - இல்லை; ச - மேலும்; தஸ்மாத் - அந்த பக்தனைக் காட்டிலும்; மனுஷ்யேஷு - மனிதர்களில்; கச்'சித் - வேறு எவரும்; மே - எனக்கு; ப்ரியக்ரு'த்தம: - மிகவும் ப்ரியமான காரியத்தைச் செய்யக் கூடியவன்; பவிதா ந- இருக்கப் போவதில்லை; ச - அப்படியே; மே- எனக்கு; தஸ்மாத் - அவனைக் காட்டிலும்; அந்ய: - வேறொருவன்; ப்ரியதர: - மிகப் பிரியமான; புவி - பூமி
18.69 இவனைப் போன்று மேலானதொரு இனிய சேவையை வேறொருவனும் எனக்குச் செய்யப்போவதில்லை. இவ்வுலகில் இவனைவிட வேறொருவனும் எனக்கு அன்பானவனாக இருக்கப் போவதும் இல்லை.
அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ: /
ஜ்ஞானயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: // 18.70
அத்யேஷ்யதே - கற்றறிகின்றானோ; ச - மேலும்; ய: - எந்த மனிதன்; இமம் - இந்த; தர்ம்யம் - தர்மம் நிறைந்த; ஸம்வாதம் - உரையாடல் வடிவிலுள்ள இந்த சாஸ்திரத்தை; ஆவயோ: - நம் இருவருடைய; ஜ்ஞானயஜ்ஞேந - ஞான வேள்வியினால்; தேந - அவன்; அஹம் - நான்; இஷ்ட: ஸ்யாம் - வழிபட்டவனாக ஆவேன்; இதி - என்பது; மே மதி: - என்னுடைய கருத்து
18.70 நான் விளம்புகிறேன்: இந்த மேலான உயர் உரையாடலைப் படிக்கும் ஒருவன், புத்தி யக்ஞத்தால் என்னை வழிபடுகிறான்.
.......................................................................................................................
ச்'ரத்தாவாநநஸூயச்'ச ச்'ரு'ணுயாதபி யோ நர: /
ஸோஅபி முக்த: சு'பந்லோகான்ப்ராப்நுயாத்-
புண்யகர்மணாம் // 18.71
ச்'ரத்தாவாந் - நம்பிக்கையுடனும்; அநஸூய: ச - முறை காணாதவனாகவும்; ச்'ரு'ணுயாத் அபி - கேட்கவாது செய்கின்றானோ; ய: நர: - எந்த மனிதன்; ஸ: அபி - அவனும்; முக்த: - பாவங்களிலிருந்து விடுபட்டு; சு'பந் லோகாந் - சிறந்த புண்ய உலகங்களை; ப்ராப்நுயாத் - அடைவான்; புண்யகர்மணாம் - புண்ய காரியங்கள் செய்யும் சிறந்த மனிதர்கள் அடையும்
18.71 நம்பிக்கையோடும், பொறாமையற்றும் இவற்றைக் கேட்கும் ஒருவன், பாவத்தின் விளைவுகளிலிருந்து விடுபட்டு, புண்ணியசாலிகள் வசிக்கும் உலகங்களுக்குச் செல்கிறார்.
.......................................................................................................................
கச்சிதேதச்ச்ருதம் பார்த த்வயைகாக்ரேண சேதஸா /
கச்சிதஜ்ஞானஸம்மோஹ: ப்ரநஷ்டஸ்தே தநஞ்ஜய //18.72
கச்சித் ஏதத் ச்'ருதம் - இது கேட்கப்பட்டதா?; பார்த - பார்த்தா; த்வயா - உன்னால்; ஏகாக்ரேண சேதஸா - ஒருமுகப்படுத்தப்பட்ட மனத்தோடு; கச்சித் அஜ்ஞானஸம்மோஹ: - அஞ்ஞானத்தினால் உண்டான உள்மோஹம்; ப்ரநஷ்ட: - அழிந்துவிட்டதா?; தநஞ்ஜய - அர்ஜூனா
18.72 ஓ, தனஞ்ஜயா, ஒருமித்த கவனத்துடன் இவற்றைக் கேட்டுக் கொண்டாயா? அறியாமையால் விளைந்த உன் மயக்கம், குழப்பம் முற்றிலும் அழிந்து விட்டதா?
அர்ஜுந உவாச
நஷ்டோ மோஹ: ஸ்ம்ரு'திர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத /
ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ // 18.73
அர்ஜுந உவாச - அர்ஜூனன் சொன்னார்; நஷ்ட: - அழிந்தது; மோஹ: - எனது மோஹம்; ஸ்ம்ரு'தி: - ஞான ஒளி; லப்தா - பெறப்பட்டது; த்வத் ப்ரஸாதாத் - உங்கள் அருளால்; மயா - என்னால்; அச்யுத: - அச்யுதா; ஸ்தித: அஸ்மி - உறுதியாக இருக்கிறேன்; கதஸந்தேஹ: - சந்தேகமற்றவனாக; கரிஷ்யே - நிறைவேற்றுவேன்; வசநம் - ஆணையை; தவ - உங்கள்
அர்ஜூனன் சொன்னது
18.73 ஓ இறைவனே, என்னுடைய மாயை ஒழிந்தது. உன்னுடைய கருணையால் என்னுடைய நினைவு திரும்பியது. நான் இப்போது உறுதியாக இருக்கிறேன். சந்தேகங்களில்லாமல் இருக்கிறேன். உன்னிடம் பணியவும் தயாராயிருக்கிறேன்.
ஸஞ்ஜய உவாச
இத்யஹம் வாஸுதேவஸ்ய பார்தஸ்ய ச மஹாத்மந: /
ஸம்வாதமிமமச்'ரௌஷமத்புதம் ரோமஹர்ஷணம் // 18.74
ஸஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் சொன்னார்; இதி - இவ்வாறு; அஹம்
- நான்; வாஸுதேவஸ்ய - பகவான் ஸ்ரீவாசுதேவருக்கும்; மஹாத்மந: பார்தஸ்ய ச - மஹாத்மாவான பார்த்தனுக்குமிடையே; ஸம்வாதம் - உரையாடலை; இமம் - இந்த; அச்'ரௌஷம் - கேட்டேன்; அத்புதம் - அற்புதமான உட்பொருள் கொண்ட; ரோமஹர்ஷணம் - புல்லரிக்கக்கூடிய
ஸஞ்ஜயன் சொன்னது
18.74 இரண்டு உயர்ந்த ஆத்மாக்களான கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த மயிர்க்கூச்சு உண்டுபண்ணும் அதிஅற்புதமான உரையாடல்களைக் கேட்டேன்.
வ்யாஸப்ரஸாதாச்ச்ருதவாநேதத்குஹ்யமஹம் பரம் /
யோகம் யோகேச்'வராத்த்ரு'ஷ்ணாத்ஸாக்ஷாத்தகயத:
ஸ்வயம் // 18.75
வ்யாஸப்ரஸாதாத் - ஸ்ரீவியாச பகவானுடைய அருளினால்; ச்'ருதவான் - கேட்டேன்; ஏதத் - இந்த; குஹ்யம் - ரஹஸ்யமான; அஹம் - நான்; பரம் - உயர்ந்த; யோகம் - யோகத்தை; யோகேச்'வராத் - யோகேஸ்வரனான; க்ரு'ஷ்ணாத் - பகவான் ஸ்ரீக்ருஷ்ணனிடமிருந்தே; ஸாக்ஷாத் - நேராக; கதயத: - சொல்லிக் கொண்டிருக்கும் போதே; ஸ்வயம் - ஸாக்ஷாத்
18.75 வியாசரின் கருணையால், யோக புருஷரான கிருஷ்ணர் அர்ஜுனனிடம் நேரடியாகச் சொல்லிக்கொண்டிருந்த உன்னதமான இரகசியங்களைக் கேட்டேன்.
ராஜந்ஸம்ஸ்ம்ரு'த்ய ஸம்ஸ்ம்ரு'த்ய ஸம்வாதமிமமத்புதம் /
கேச'வார்ஜுநயோ: புண்யம் ஹ்ரு'ஷ்யாமி ச
முஹுர்முஹு: // 18.76
ராஜந் - அரசே; கேச'வார்ஜுநயோ: - பகவான் ஸ்ரீக்ருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையே நடந்த; இமம் - இந்த ரஹஸ்யமான; புண்யம் - நன்மையளிக்கும்; அத்புதம் ச- அற்புதமான; ஸம்வாதம் - உரையாடலை; ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய - நினைத்து நினைத்து; முஹுர்முஹு: - மீண்டும் மீண்டும்; ஹ்ரு'ஷ்யாமி - மகிழ்கிறேன்.
18.76 அரசே, கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடந்த அந்த அற்புதமான, புனிதமான உரையாடல்களை திரும்பத் திரும்ப நினைவு கூறுவதில், ஒவ்வொரு கணமும் சிலிர்ப்படைந்து மிகவும் ஆனந்தப்படுகிறேன்.
தச்ச ஸம்ஸ்ம்ரு'த்ய ஸம்ஸ்ம்ரு'த்ய ரூபமத்யத்புதம் ஹரே: /
விஸ்மயோ மே மஹாந்ராஜந்ஹ்ரு'ஷ்யாமி ச புந: புந:// 18.77
தத் - அந்த; ச - மேலும் ; ஸம்ஸ்ம்ரு'த்ய ஸம்ஸ்ம்ரு'த்ய - நினைத்து நினைத்து; ரூபம் - திருவுரு; அதி அத்புதம் - மிகவும் அற்புதமான; ஹரே: - பகவான் ஸ்ரீஹரியின்; விஸ்மய: - வியப்பு; மே - என்னுடைய மனதில்; மஹாந் - மிகுந்த; ராஜந் - அரசே; ஹ்ரு'ஷ்யாமி - மகிழ்ச்சி அடைகிறேன்; ச - மேலும்; புந: புந: - மேலும் மேலும்
18.77 அரசே, இறைவன் கிருஷ்ணருடைய அற்புதமான ரூபத்தை நினைவுகூரும்பொழுது இன்னும் அதிகமான அதிசயத்தால் உறைந்து போயிருக்கிறேன். நான் மிகுந்த ஆனந்தத்தில் திரும்பத் திரும்ப திளைத்துக் கொண்டிருக்கிறேன்.
யத்ர யோகேச்'வர க்ரு'ஷ்ணோ யத்ர பார்தோ தநூர்தர :/
தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம // 18.78
யத்ர - எங்கு; யோகேச்'வர - யோகேசுவரனான; க்ரு'ஷ்ண - பகவான் ஸ்ரீ கிருஷ்ணனும்; யத்ர - எவ்விடத்தில்; பார்த - அர்ஜுனனும்; தநூர்தர - காண்டீபம் ஏந்திய; தத்ர - அவ்விடத்தில்; ஸ்ரீ: - மஹாலக்ஷ்மியும்; விஜய: வெற்றியும்; பூதி - ஐசுவர்யமும்; த்ருவா நீதி: - நிலைத்த நீதியும்; மதி - உறுதியான கருத்து; மம - என்னுடைய
18.78 யோகேஸ்வரரான கிருஷ்ணர் எங்கு இருக்கின்றாரோ, எங்கெல்லாம் வில் வித்தையில் மிகச் சிறந்தவரான பார்த்தன் இருக்கிறாரோ அங்கெல்லாம் நிச்சயமாக செல்வ வளமை, வெற்றி, அசாத்திய சக்தி, நியாயம், நீதிநெறி, ஒழுக்கம் ஆகிய எல்லாமே நிறைந்திருக்கும். இதுவே என் கருத்து.
ஓம் இதி ஸ்ரீமஹாபாரதே ச'தஸாஹஸ்ர்யாம் ஸம்ஹிதாயாம் வையாஸிக்யாம் பீஷ்மபர்வணி ஸ்ரீமத்பகவத்கீதாஸுபனிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே மோக்ஷஸந்யாஸயோகோ நாம அஷ்டாதசோ'த்யாய: ||
ஓம்தத்ஸத். இது, வியாஸர் இயற்றிய ஒரு லக்ஷம் ஸ்லோகங்களையுடைய ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப்புகட்டுவதும் யோகவிஞ்ஞானமுமாகிய மோட்ச ஸந்நியாஸயோகம் எனும் பெயருடைய பதினெட்டாவது அத்தியாயம்.
