KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/சரணாகதி மாத்திரமே பல அதிசயங்களைச் செய்யும்!Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

சரணாகதி மாத்திரமே பல அதிசயங்களைச் செய்யும்!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இந்தக் கதையில் ஒரு அழகான அர்த்தம் இருக்கிறது. நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது பற்றி நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. அதற்கும் முக்திக்கும் சம்பந்தமே இல்லை. நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது ஜீவன்முக்தியை நிர்ணயிப்பதில்லை. உங்களுடைய சரணாகதி தன்மையே அதை நிர்ணயிக்கிறது. சரணாகதி மாத்திரமே பல அதிசயங்களைச் செய்யும். சரணாகதிக்கு உங்களை உணர்வுமாற்றம் பெறச்செய்வதற்குத் தேவையான சக்தியும் திறமையும் இருக்கிறது.

கிருஷ்ணர் பெயரைச்
சொல்லி
பெரிய ஸம்ஸார கடலையே
கடக்கலாம்!

இராமகிருஷ்ணருடைய நீதிக்கதைகளுள் ஒன்று.

Pண்டிதர் ஒருவருக்கு, ஒரு பால்கார
அம்மா பால் கொண்டுவந்து ஊற்றுவது
வழக்கம். ஒருநாள் அவர் வருவதற்கு மிகத்
தாமதமாகிவிட்டது.

பண்டிதர் கேட்டார், "ஏன் இவ்வளவு
தாமதம்? நீ இவ்வளவு தாமதமாக
வந்தால், நான் எப்படி என்னுடைய பூஜை
வேலைகளைச் சரிவர செய்ய முடியும்?"

A river overflowing with water

அந்தப் பால்கார அம்மா அதற்கான
காரணத்தை விளக்கினார்:
"இன்று ஆற்றில் வெள்ளம்
பெருக்கெடுத்தோடுகிறது, எந்தப்
படகுக்காரரும் படகு ஓட்டத்
தயாராயில்லை. இறுதியில் ஒருவர்
மட்டுமே படகெடுக்க முன்வந்தார்.
அதுவும் மெதுவாகவே வரமுடிந்தது.
அதனால் தான் இந்தத் தாமதம்."

பண்டிதர் மிகச்ாதாரணமாக, "என்ன பெரிய வெள்ளம்? மக்கள், கிருஷ்ணர் பெயரைச் சொல்லி பெரிய ஸம்ஸாரக் கடலையே கடந்து

விடுகிறார்கள். நீ இந்த சின்ன ஆற்றைக்
கடந்து வர முடியவில்லையா?” என்று
கேட்டார்.

அந்த அம்மாவோ ஒரு கள்ளங்கபடமற்றவர்,
அவருக்குத் தர்க்கரீதியாக யோசிக்கவோ,
பட்டறிவுடன் கேள்வி கேட்கவோ
தெரியாது. அதற்குப்பின் ஒவ்வொருநாளும்
சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்.

ஒரு வாரத்துக்குப் பின்பு, பண்டிதர்
அந்த அம்மாவிடம் கேட்டார்,
‘இப்பொழுதெல்லாம் சரியான நேரத்திற்கு
வந்துவிடுகிறாயே, ஆற்றில் வெள்ளம்
தணிந்து விட்டதா?

அவர், “இல்லை ஐயா,ப்போதும் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. படகுகளும் வருவதில்லை. ஆனால், கிருஷ்ணர் பெயரைச் சொன்னாலே, நான் ஆற்றைக் கடக்க முடியும் என்றும், அந்த வகையில் நான் பிறவிக்கடலையே கடக்க முடியும் என்றும் நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்தபடி, நானும் கிருஷ்ணர் பெயரைச் சொல்லி ஆற்றைக் கடந்து வருகிறேன்,” என்று சொன்னார்.

அந்தப் பண்டிதர் திகைத்துப்போய் நின்றார். அவரால் அதைச் சிறிதும் நம்பமுடியவில்லை. அதனால் அவர், “அதெப்படி முடியும்? வா, வந்து என்முன் செய்துகாட்டு,” என்று சொல்லி, அப்பெண்மணியை அழைத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போனார்.

அப்பெண்மணியும் ஆற்றை அடைந்ததும், ‘கிருஷ்ணா, கிருஷ்ணா, கிருஷ்ணா’ என்று சொல்லிக்கொண்டே அக்கரைபோய் விட்டார்.

உடனே அந்தப் பண்டிதரும், அவளே போகும்போது, நாம் போவதற்கென்ன? நாமும் முயற்சி பண்ணலாமே என்று, நீருக்குள் இறங்கினார். அவர் உதடுகள் மட்டுமே மெதுவாக, ‘கிருஷ்ணா, கிருஷ்ணா, கிருஷ்ணா’ என்று சொல்லிக்கொண்டே இருந்தது. ஆனால், தம் வேஷ்டி நனைவதைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டே நடந்தார்! கிருஷ்ணரிடம் இவருக்குள்ள சரணாகதியின் ஆழத்தைப் பாருங்கள்.

> சரணாகதிக்கு உங்களை
> உணர்வுமாற்றம் பெறச்
> செய்வதற்குத் தேவையான
> சக்தியும் திறமையும்
> இருக்கிறது.

இறுதியில், ஆற்று வெள்ளம் அவரை அடித்துச் சென்றது.

இந்தக் கதையிலிருந்து ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாம். நீங்கள், யாரிடமிருந்து கற்றுக்கொள்வது என்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், யாரிடம் சரணாகதி செய்கிறோம் என்பதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். அந்தப் பால்கார அம்மா படிக்காத, ஒரு கள்ளங்கபடமற்ற பெண்தான். அந்த மெத்தப் படித்த பண்டிதர் சொன்ன கருத்திற்குச் சரணடைந்தார், உணர்வுமாற்றம் பெற்றார்.

முழுமையான சரணாகதிக்கு உங்களை உணர்வுமாற்றம் பெறச்செய்யக்கூடிய ஒரு மகத்தான சக்தி இருக்கிறது.

சரணாகதியும், மரணமும் ஒன்றே!

பெரும்பாலான நேரங்களில், சரணடைவதற்கு முன்பே நாம், 'சரணடைந்த பின் என்ன நடக்கும்? இப்படியிருக்குமோ, அப்படியிருக்குமோ என்றெல்லாம் நாம் தர்க்க ரீதியாகத்தான் கணக்குப் போட்டுக்கொண்டிருப்போம். ஒருபோதும் அப்படிச் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால், நாம் நம் சரணாகதியைவிட, நம்முடைய மனத்தையே முன்னிலைப் படுத்துவோம்.

உங்களுடைய மரணத்திற்குப் பின் என்ன நிகழும் என்பதை நீங்கள் அறிந்தால் மட்டுமே, சரணாகதிக்குப் பின் என்ன நிகழும் என்பதை அறிவீர்கள். சரணாகதியும் மரணமும் ஒன்றே.

உங்களுடைய மரணத்திற்குப் பின் என்ன நிகழும் என்பதை நீங்கள் அறிந்தால்தான், சரணாகதிக்குப்பின் என்ன நிகழும் என்பதை அறிவீர்கள்.

நீங்கள் சரணாகதி செய்யும்போது மனவியல் ரீதியாக நீங்கள் இறக்கிறீர்கள். நீங்கள் மறுபிறப்பு எடுக்கிறீர்கள். உங்கள் மரணத்திற்கு பின்பு என்ன நடக்கும் என்பதை உங்களால் சொல்லமுடியுமா? சொல்லமுடியாது.

அதைப்போலவே, சரணாகதிக்குப்பின் என்ன நடக்கும் என்பதை உங்களால் கற்பனையோ அல்லது பாவனையோ செய்ய முடியாது. நீங்கள் அவ்வாறு கற்பனையோ, பாவனையோ செய்து கொண்டிருந்தால், தெளிவாக இருங்கள், நீங்கள் சரணாகதி செய்யவில்லை.

ஒரு ஞானகுருவினிடம் அன்பரொருவர் கேட்டார் "குருவே, நான் சரணாகதி செய்து விட்டேனா, இல்லையா என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?"

குரு பதில் அளித்தார்: "இக் கேள்வியே உன்னிடமிருந்து மறைந்துவிடும். பிறகு, நீ சரணடைந்து விட்டாய் என்பதை நீயே அறிந்துகொள்வாய்!"

ஆம், நீங்கள் சரணடைந்துவிட்டீர்களா, இல்லையா என்ற இக்கேள்வியே மறைந்துவிடும். உங்களுக்குள் அதைப் பற்றிய எந்தச் சந்தேகமும் இருக்காது. உங்களுடைய மொத்த இருப்பும் பேரானந்த வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படும். அங்கு சரணாகதி உணர்வும், முழுமையான தளர்வான அமைதி நிலையும், பேரானந்தமும் மட்டுமே இருக்கும்.

அடுத்து நிகழப்போவதைப் பற்றிக் கவலைப்படமாட்டீர்கள். உங்களுடைய பொறுப்புகளிலிருந்தும், மன வலிகளிலிருந்தும், சுமைகளிலிருந்தும் முழுமையாக விடுபட்டு, நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள். உங்களுடைய பொறுப்புகளை எவ்வித சிரமமும் படாமல், எளிதாகச் செய்து முடிப்பீர்கள். மனத்தின் குறிக்கீடு இல்லாமலேயே, நீங்கள் சரியான செயல்களையே செய்வீர்கள்.

நீங்கள் சரணடைந்து விட்டால், மறுநாளிலிருந்து அலுவலகத்திற்குச் செல்ல மாட்டீர்கள் என்று பொருள்கொள்ளாதீர்கள். நீங்கள் போவீர்கள், உங்கள் உடல், தன் வழக்கமான அலுவல்களை நிறைவேற்றும். எல்லாமே நடக்கும். ஆனால், உங்கள் இருப்பில் முழுமையான தளர்வு நிலையையும், உங்கள் மனத்தில் முழுமையான பேரானந்தமும், உங்கள் வாழ்க்கையில் முழுமையான குதூகலமும் உயிர்ப்பும் (IS ness) இருக்கக் காண்பீர்கள்.

நீங்கள் 'நான்' என்பதை சரணாகதி
செய்யும்பொழுது, அங்கு முழுமையான
பேரானந்தம் இருக்கும்.

நீங்கள் 'எனது' என்பதை சரணாகதி
செய்யும்பொழுது, அங்கு முழுமையான
தளர்வுநிலை இருக்கும்.

நீங்கள் 'நான்', 'எனது'களை சரணாகதி
செய்யும்பொழுது, ஒரு மிக அழகான
'நிகழ்காலம்', உயிரோட்டம் (IS ness)
உங்கள் வாழ்க்கையில் நிகழும்.

இதுவே உங்களின் சரணாகதி வெறும் உதட்டளவில் செய்யப்பட்டதா அல்லது உண்மையிலேயே செய்யப்பட்டதா என்பதை அளக்கும் 'அளவுகோல்'! இந்த அளவுகோலைக்கொண்டு, நீங்கள் உண்மையிலேயே சரணடைந்து விட்டீர்களா, இல்லையா என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

உங்களுடைய புரிதல் இதுவாகவே இருக்கும்: 'என்னுடைய உடல், இந்த சூரியன், இந்த நிலவு, இந்தக் கிரகம் என எல்லாவற்றையும் இயக்கும் அந்த சக்தி, என்னுடைய வாழ்க்கையையும் ஏன் இயக்க முடியாது?

இந்தப் புரிதல் ஏற்பட்டவுடன் சரணாகதி நிகழும், சரணாகதி என்பது ஒரு மிகத் தெளிவான, உணர்வுப் பூர்வமான தீர்மானமே தவிர, வேறில்லை.

ஒவ்வொரு கணமும், உங்களுக்கு ஏதோவொன்று கற்பிக்கப்படுகிறது!

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நாம் சாப்பிடும் உணவு இரத்தமாக மாறுகிறது. இது ஒரு சாதாரண, எளிதான காரியம் அல்ல. நீங்கள் ஒரு மருத்துவராயிருந்தால், இது எவ்வளவு பெரிய செயல்முறை என்பதை அறிவீர்கள். நாம் உண்ணும் உணவை இரத்தமாக மாற்றும் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டால், உலகிலேயே மிகப்பெரிய தொழிற்சாலை வளாகமாக அதுவே இருக்கும். இன்னமும் விஞ்ஞானிகள், உணவை இரத்தமாக மாற்றும் செயல்முறை நுட்பத்தில் வெற்றிகாண முடியவில்லை. இதை வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமானால், மைல் கணக்கில் நீளும் பெரிய தொழிற்சாலையை நிறுவ வேண்டும். அவ்வளவு பெரிய மகத்தான வேலை, நம் இந்த ஆறடி உடலுக்குள், இவ்வளவு சிறிய அமைப்பினுள் நடந்துகொண்டிருக்கிறது.

காற்று உள்ளிழுக்கப்படுகிறது. அதிலிருந்து பிராண சக்தி (உயிர் சக்தி) பிரிக்கப்படுகிறது. பிறகு அந்தக் காற்றானது வெளியேறுகிறது. இந்த நிகழ்ச்சியும் நம் உடலுக்குள் நிகழ்கிறது.

தெய்விகசக்தியால், நம் உடலுக்குள்ளும், இந்தப் பிரபஞ்சத்திலும் அதுபோன்ற மகத்தான வேலைகளைத் திறமையாக நிர்வகிக்க முடியும்போது, அச்சக்தியால் நம்முடைய வாழ்க்கையையும்கூட நன்றாகவே நிர்வகிக்க முடியும்.

புரிந்துகொள்ளுங்கள்; இந்தப் பிரபஞ்சம் மிகவும் புத்திசாலி. தெய்விகம் மிகவும் புத்திசாலி..!

"ஓ கடவுளே, எனக்கு இதைக்கொடுங்கள், ஓ கடவுளே, எனக்கு அதைக் கொடுங்கள்," என்று கடவுளிடம் கேட்கும் மக்களைப் பார்த்திருக்கிறேன்.

முதலாவதாக, அவர்கள் கேட்பார்கள். அடுத்து அவர்கள், ‘எனக்கு நீங்கள் இதைக் கொடுத்தால், நான் உங்களுக்கு அதைத் தருகிறேன்’ என்று பேரம் பேசுவார்கள் நம் இந்தியாவில் அப்படி பேரம் பேசுவதற்கான பெரிய கடவுள் பாலாஜிதான். எதற்கெடுத்தாலும், அவரோடு பேரம் பேச ஆரம்பித்துவிடுவோம்.

மூன்றாவதாக, அவர்கள் கடவுளை
நிந்திக்க ஆரம்பிப்பார்கள், ‘இந்தக்
கோயிலுக்குப் பத்து தடவைக்கும் மேலாகப்
போயிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும்
நடந்தே மலை ஏறியிருக்கிறேன். ஆனால்,
என் வாழ்வில் எதுவுமே நான் நினைத்தபடி
நிகழவில்லை!

> நீங்கள்
> ‘எனது’ என்பதை
> சரணாகதி செய்யும்பொழுது,
> அங்கு முழுமையான
> தளர்வுநிலை இருக்கும்.

நீங்கள் முதலில் கேட்கிறீர்கள், பிறகு, பேரம் பேசுகிறீர்கள். அடுத்து அவரை குறைசொல்லவே ஆரம்பித்துவிடுகிறீர்கள். ஆக இந்த மூன்றுக்கும், பக்திக்கும் சம்பந்தமேயில்லை.

பலரும் என்னிடம், "ஸ்வாமிஜி, நான் கேட்பதை கடவுள் ஏன் உடனடியாக இப்போதே கொடுக்கக்கூடாது?" என்று கேட்பார்கள்.

நான் ஒன்று உங்களைக் கேட்கிறேன். 'நீங்கள் கடவுளிடம் ஏன் பிரார்த்திக்கிறீர்கள்?'

நீங்கள் கேட்பதைக் கொடுப்பதற்கான சக்தி அந்தக் கடவுளுக்கு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதனால் நீங்கள் பிரார்த்திக்கிறீர்கள். ஆனாலும், நீங்கள் கேட்பதைக் கொடுக்கும் சக்தி கடவுளுக்கு இருக்கிறது என்று நம்புகின்ற நீங்கள், அதை உங்களுக்கு எப்போது கொடுக்க வேண்டுமென்ற புத்திசாலித்தனமும் அவருக்கு இருக்கிறது என்பதை நம்பவில்லை என்பதையே இது குறிக்கிறது

நீங்கள் சரணடையும்பொழுதுதான், அவருக்கு சக்தி மட்டுமல்ல, புத்திசாலித்தனமும் இருக்கிறது என்பதை நீங்கள் நம்புவீர்கள். ஒவ்வொரு கணமும், உங்களுக்கு ஏதோவொன்று கற்பிக்கப்படுகிறது.

அர்ஜுனனுடைய தாயார் குந்தி தேவி, கிருஷ்ணரிடம் மிகுந்த பக்திகொண்டிருந்தார். அவருடைய பிரார்த்தனை இதுவாக இருந்தது: "ஓ கடவுளே எல்லாப் பக்கங்களிலிருந்தும் எனக்குத் துக்கங்கள் வரட்டும்; நீங்கள்தான் அந்தத் துக்கங்களின் மூலம் புத்தி புகட்டுகிறீர்கள்

நீங்கள்
'நான்', 'எனது' என்பதை
சரணாகதி செய்யும்பொழுது,
ஒரு மிக அழகான
'நிகழ்காலம்',
உயிரோட்டம் (IS ness)
உங்கள் வாழ்க்கையில்
நிகழும்.

என்கிற புரிதலையும், அனுபவங்களையும் அவை தரட்டும்."

ஒவ்வொரு துன்பமுமே, உங்களுக்கு
ஆழமான புத்திசாலித்தனத்தையும்
புரிதலையும் தந்து, உங்களுடைய
வாழ்க்கையின் மற்றுமொரு புதிய
பரிமாணத்தைத் திறந்துவைக்க வரும்
ஒரு ஆசிரியரே. அதற்காகத்தான் அவை
வருகின்றன.

ஆனால், நாம்தான் எதையும் திறந்த

மனத்தோடும், வரவேற்கும் உணர்வோடும்
ஏற்பதில்லை. நீங்கள் சரணடையும்போது,
நீங்கள் அனைத்தையும் ஒரு வரவேற்புணர்
வோடு ஏற்றுக்கொள்வீர்கள். நீங்கள் உங்கள்
துன்பங்களை, வலிகளை, வேதனைகளை
வரவேற்கும் மனநிலையோடு ஏற்றுக்
கொண்டீர்களானால், அவை உங்களுக்கு
ஆசிரியர்களாகிவிடும். அவை
உங்களுடைய குருமார்களாகிவிடும்.

கடோ உபநிஷத்தில், யமதர்மர் ஒரு குருவாக குறிப்பிடப்படுகிறார். துன்பங்களிலேயே மிகப் பெரிய துன்பம் மரணமே. நீங்கள் மரணத்தை ஏற்றுக் கொண்டீர்களானால், அது உங்களுக்கு சிறந்ததொரு குருவாகிவிடும். சரணாகதி மனநிலையிலிருந்து கொண்டு ஒன்றை ஏற்றுக் கொண்டால், உங்கள் வாழ்க்கையில் நிகழும் எதுவானாலும், அது உங்கள் வாழ்க்கையின் தன்மையையே மாற்றிவிடும். நீ ங்கள் எதையெல்லாம் எதிர்க்கிறீர்களோ, அதுவெல்லாம் ஒரு சா த்தானாக உணரப்படும். எதையெல்லாம் நீங்கள் வரவேற்கிறீர்களோ, அதுவெல்லாம் ஒரு தெய்விகமாக உணரப்படும்.

சாத்தானா அல்லது தெய்விகமா என முடிவுசெய்வது நீங்களே. அது, வெளியில் முடிவுசெய்யப்படுவது அல்ல: உள்ளேயே முடிவுசெய்யப்படுவது.

அதனால் நீங்கள் தளர்வான மனநிலையில் இருக்கும்போதெல்லாம், உங்கள் வாழ்க்கையை மித்ய எனப்படும் மாயையிலிருந்து நித்ய எனப்படும் பேரானந்தமாக மாற்றிக்கொள்கிறீர்கள். உங்களுடைய துயரங்களையெல்லாம் மகிழ்ச்சி வெள்ளமாக மாற்றிக்கொள்கிறீர்கள். மன அழுத்தத்திலிருந்து புத்துணர்ச்சிக்கும், கவலைகளிலிருந்து அதிசயங்களுக்கும் நகர்ந்துவிடுகிறீர்கள்.

அதனால் நீங்கள் விழிப்புணர்வுடன் முடிவெடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒருமுறை அவ்வாறு முடிவெடுத்த பின்பு எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது. அப்படி முடிவுசெய்த பின்பும் கூட, உங்களுக்குள், நீங்கள் சரணடைந்து விட்டீர்களா இல்லையா என்ற சந்தேகம் இருக்கவே செய்கிறது.

உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்கிறேன். முதலில், சரணாகதி செய்வது என்று முடிவெடுங்கள். நீங்கள் எந்தப் பெயரையோ, எந்த வடிவத்தையோகூட உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ள அவசியமில்லை. என்னுடைய பெயரையும், வடிவத்தையும்கூட வைத்துக் கொள்ள வேண்டாம்.

அடுத்த விஷயம், 'ஓ, நான் இந்தக் கடவுளிடம் சரணடைந்து விட்டேனே, அதனால் அந்தக் கடவுள் கோபித்துக்கொள்வாரோ? என்ன நடக்குமோ? என்று கவலைகொள்ள வேண்டாம். இந்த உலகை ஆளும் பராசக்தியின் காலடியில் அனைத்தையும் சரணாகதி செய்துவிடுங்கள்.

சரணாகதி செய்யும் புத்திசாலித்தனம், அந்த சரணாகதியைச் சந்தேகிக்கும் குணம் ஆகிய இந்த இரண்டுமே அந்தக் கடவுளின் பரிசுதான்.

அப்போது, எல்லோரையும் கடவுள், தெய்வீகம், பிரபஞ்ச சக்தி என்ற தலைப்புக்குள் கொண்டுவந்து விடுவீர்கள். இது, உங்கள் வாழ்க்கையை நடத்தட்டும் என்று முடிவுசெய்யுங்கள்.

அதற்குப் பிறகு, இயல்பாகவே உங்களுக்குள், நீங்கள் சரணாகதி செய்துவிட்டீர்களா, இல்லையா என்ற சந்தேகம் வரும். அப்போது இப்படிச் சொல்லிக்கொள்ளுங்கள், 'இந்தச் சந்தேகமும்கூட இவ்வுலகை நடத்தும் அதே தெய்வீகத்தின் பரிசே. சரணாகதி செய்யும் புத்திசாலித்தனம், அந்த சரணாகதியைச் சந்தேகிக்கும் குணம் ஆகிய இந்த இரண்டுமே அந்தக் கடவுளின் பரிசுதான். ஆகவே அந்தச் சந்தேகத்தைக்கூட அந்தக் கடவுளிடமே சமாப்பிக்கிறேன். அவரே என்னைப் பார்த்துக்கொள்ளட்டும்.'

பிறகு, உங்களுக்குள் நடக்கும் உணர்வுமாற்றத்தை நீங்களாக இருந்து- பாருங்கள். 'முதலில் நான் மாறிக்கொள்கின்றேன். பிறகு சரணடைகின்றேன்' என்றெல்லாம் நினைக்காதீர்கள். உங்களால் அப்படிச் செய்ய முடியாது. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே விழிப்புடனும், முழுமையாகவும் சரணாகதி செய்துவிடுங்கள். இப்பொழுது 'எனது' என்று உங்கள் கைகளில் எதையெல்லாம் வைத்திருக்கிறீர்களோ, எல்லாவற்றையும் முழுமையாக சரணாகதி செய்துவிடுங்கள்.

உங்களுடைய ஆன்மாவை ஒருவித புது உணர்வு, ஒரு புது வாழ்வு, ஒரு புது சக்தி, ஒரு புது பேரானந்தம் வெள்ளமாகப் பாய்ந்து நிரப்பும்.

நீங்கள் தெய்வத்தின் காலடியில் சரணடைவீர்களாக! நீங்கள் அந்த தெய்வித சக்தியினுள் பிரவேசிப்பீர்களாக! நீங்கள் நித்யானந்தத்தில் நிலைத்து, நித்யானந்தமாகிவிட ஆசீர்வதிக்கின்றேன்! நன்றி.

இவ்வாறு கிருஷ்ணருடைய போதனை, இறுதி உபதேசம் முடிகிறது. இங்குதான் நம்முடைய ஜீவன்முக்த வாழ்வு ஆரம்பமாகிறது. இந்த ஸத்யங்களையெல்லாம் மொத்தப் பிரபஞ்சத்தின் மீதும் ஆசீர்வாதமாகப் பொழிந்த கிருஷ்ண பரமாத்வாவிற்கு, முதலில் நம்முடைய நன்றியைச் சமர்ப்போம். பிறகு, இந்த ஸத்யங்களையெல்லாம் பரம்பரை பரம்பரையாகக் காத்துவந்த நம் முன்னோர்களுக்கு, நம் சிறப்புவாய்ந்த ஞானகுருமார்களுக்கு நம்முடைய நன்றியைச் சமர்ப்போம். அவர்கள் அவ்வாறு செய்ததனால்தான் இன்று நாம் அவற்றை அனுபவித்து ஆனந்தப்பட முடிகிறது. கண்களை மூடி, சில நிமிடங்களுக்குமௌனமாக அமைதியாக அமருங்கள்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமஹாபாரதே சதஸாஹஸ்ர்யாம் ஸம்ஹிதாயாம்
வையாஸிக்யாம் பீஷ்மபர்வணி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுனஸம்வாதே
மோக்ஷஸந்நியாஸயோகோ நாம அஷ்டாதசோ'த்யாய: ||

ஓம் தத் ஸத். இது, வியாஸர் இயற்றிய ஒரு லக்ஷம் ஸ்லோகங்களையுடைய ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப்புகட்டுவதும் யோகவிஞ்ஞானமுமாகிய மோட்ச ஸந்நியாஸயோகம் எனும் பெயருடைய பதினெட்டாவது அத்தியாயம்.

flute playing hands