KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/என்னிடம் சரணடைந்துவிடுSign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

என்னிடம் சரணடைந்துவிடு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

18.63 இவ்வாறு மறைபொருளுக்கெல்லாம் மறைபொருளான ஜ்ஞானம் என்னால் உனக்குக் கூறப்பட்டது. இப்பொழுது நீ இந்த ஜ்ஞானத்தை முழுமையாக நன்கு ஆராய்ந்து எப்படி விரும்புகிறாயோ அப்படியே செய்.

18.64 எனக்கு நீ மிகவும் உற்ற நண்பனாக இருப்பதால், உன் நன்மைக்காக மறைபொருளுக்கெல்லாம் மறைபொருளான என்னுடைய மேலான ரஹஸ்யத்தைக் கூறுகிறேன், மீண்டும் கேள்.

18.65 அர்ஜூனா நீ என்னிடமே மனத்தைச் செலுத்துவாயாக. என்னிடமே பக்தி கொண்டிருப்பாயாக; என்னையே வழிபடுவாயாக; இப்படிச் செய்வதால் நீ என்னையே அடைவாய். இவ்வுறுதிமொழியை நான் உனக்கு நல்குகின்றேன். ஏனெனில் நீ எனக்கு மிகவும் அன்புக்குரியவனாக இருக்கிறாய்.

நெறிமுறைகள், கருத்துகள், ஒழுக்க நியதிகள் அனைத்தையும் விட்டுவிட்டு, என்னிடம் சரணடைந்துவிடு; பாவகரமான விளைவுகள் அனைத்திலிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன், வருந்தாதே.

எவ்வளவு சக்திமிக்க வார்த்தைகள்! இறைவன் ஒருவரால் மட்டுமே இந்த வலிமைமிக்க வார்த்தைகளை அதிகார பூர்வமாகப் பேச முடியும்.

எப்பொழுதும் என்னைப் பற்றியே நினை, என்னுடைய பக்தனாகிவிடு, என்னை வழிபடு, எனக்கே மரியாதை செய், இதுவே நீ தவறாமல் என்னை வந்தடையும் பாதை. நீ என்னுடைய சிறந்த பக்தனாகவும், எனக்குப் பிரியமானவனாகவும் இருப்பதால், நான் இந்த வாக்குறுதிகளை உனக்கு அளிக்கிறேன்.

இந்த வார்த்தைகளைத் தவறான வகையில் பயன்படுத்தாதீர்கள்!

இப்பொழுது அவர் இறுதி உபதேசத்திற்கு வருகிறார். அவருடைய மொத்த உபதேசங்களின் சாரம் இதுவே. பகவத்கீதையின் சிறப்பம்சம் இதுவே. அவர் இந்த ஸ்லோகத்தின் மூலம் அர்ஜூனனை விழிப்புடையச் செய்து, கிருஷ்ண உணர்வு நிலைக்குள், எல்லையில்லா உன்னத விழிப்புணர்வு நிலைக்குள், ஞானத்திற்குள் ஆழச் செல்கிறார்.

கிருஷ்ணர் தம்மையே அர்ஜூனன் மீது பொழிந்து, அவரை முழுமையான அனுபவத்திற்கு விழிப்பிக்கச் செய்கிறார்.

Illustration

'மதங்கள் விதித்திருக்கும் தர்மத்தை - சட்ட திட்டங்களை மறந்துவிட்டு, நீ என் பக்கம் திரும்பு, நான் உன்னைக் காப்பேன்' என்கிறார் கிருஷ்ணர்.

அவர் சொல்கிறார்: "தர்மம் என்று நீ எதையெல்லாம் நினைத்திருக்கிறாயோ அவை அனைத்தையும் - வெளியுலக மற்றும் உள்ளுலக விதிகளையும் கட்டுப்பாடுகளையும் - விட்டுவிடு. உனக்குத் தெரிந்த யாவற்றையும் விட்டுவிட்டு, என்னிடமே சரணடைந்துவிடு. நான் உன்னை எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துக் காப்பாற்றுகிறேன், சிறிதும் பயம் வேண்டாம்," என்றருளி, கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு தம்முடைய அபயத்தை - முழுமையான பாதுகாப்பை அளிக்கிறார்.

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ |
அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சு'ச: ||

இந்த வார்த்தைகளைச் சொல்லி அர்ஜுனனை அனைத்திலிருந்தும் விடுவிக்கிறார். அவர் அர்ஜுனனுக்கு, ‘தாம் கடலே’ என்ற இறுதி விழிப்புணர்வு அனுபவத்தை வழங்கி, “நீ உன்னை ஒரு தனி நீர்த்துளியாகக் கருதிக்கொண்டிருக்கிறாய். அக்கருத்தை விட்டுவிட்டு, தளர்வாக அமைதியாக இருந்து, ஸத்யத்தை உணர்ந்துகொள்,” என்று கேட்டுக்கொள்கிறார்.

கடவுள், கடல் என்னும்
கருத்துகளெல்லாம்கூட நம்முடைய
கருத்துகளே. கிருஷ்ணர் அர்ஜுனனை,
எல்லாக் கருத்துகளையும் விட்டுவிட்டு,
எல்லையற்ற விழிப்புணர்வாகிய
கிருஷ்ண விழிப்புநிலைக்குள்
விரிவடையச் செய்கிறார். அவ்வனுபவம்
அவருக்குள் என்றென்றும் நிலைத்திருக்க
அருள்புரிகிறார்.

> கிருஷ்ணரும்,
> அர்ஜுனனுமாக
> இருந்தவரை
> இரு தனிப்பட்ட
> அடையாளங்கள் இருந்தன.
> ஆனால்,
> அந்த இருவரும்
> ஒருவராகிவிட்ட பின்பு
> இப்பொழுது அங்கே
> இருவருமே இல்லை!

நாம் இனி அவரை ‘அர்ஜுனன்’ என்று அழைக்க முடியாது. ஏனெனில், அவர் இப்போது ‘கிருஷ்ணராக’ ஆகிவிட்டார். இப்போது கிருஷ்ணர் மட்டுமே இருக்கிறார். கிருஷ்ணரும், அர்ஜுனனுமாக இருந்தவரை இரு தனிப்பட்ட அடையாளங்கள் இருந்தன. ஆனால், அந்த இருவரும் ஒருவராகிவிட்ட பின்பு இப்பொழுது அங்கே இருவருமே இல்லை! அதற்குப் பெயரே இல்லை. அது ஒரு சக்தி! அவ்வளவுதான்.

‘மதங்கள் விதித்திருக்கும் தர்மத்தை - சட்ட திட்ட விதிமுறைகளை மறந்துவிட்டு, நீ என் பக்கம் திரும்பு, நான் உன்னைக் காப்பேன்’ என்கிறார் கிருஷ்ணர்.

இந்த வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள், தவறாக மேற்கோள் காட்டாதீர்கள், தவறான வகையில் பயன்படுத்தாதீர்கள். அப்படிச் செய்யும்போது நீங்கள் உங்களுக்கே பெரும் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள்.

தெய்விகம் நீங்கள் நல்லவரா, கெட்டவரா என்றெல்லாம் பொருட்படுத்துவதில்லை. புனிதர் - பாவி, ஸந்நியாஸி - விலைமாது என்ற பாகுபாடெல்லாம் தெய்விகத்திடம் இல்லை. எல்லோருக்குமே தெய்விகத்தை அடைய சமமான வாய்ப்புக்கள் உள்ளன. இதுவே ஸத்யம்.

நீங்கள் தெய்விகத்திற்கு அருகாமையில் வரும்பொழுது, நிச்சயமாக, சக்தியானது உங்களுக்குள் உணர்வுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. எதிர்மறைத் தன்மைகளைக் கரைக்கிறது. நீங்கள் பிறந்தபோது எவ்வளவு தூய்மையாக இருந்தீர்களோ அவ்வளவு தூய்மையாகி விடுவீர்கள்!

மதம், மனிதனின் படைப்பு; ஆன்மிகம், முழுமையான விழிப்போடும் தெய்விக விழிப்புணர்வோடும் வாழ்கின்ற ஜ்ஞானகுருமார்களின் படைப்பு. கிருஷ்ணர், சிவன், புத்தர், மஹாவீரர், ஜீஸஸ் போன்ற ஜ்ஞானகுருமார்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள். அவர்களைப் பின்பற்றியவர்களே, அவரவர்கள் புரிதலின்படி, நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ பல மதங்களை உருவாக்கினார்கள்; தர்மம் என்ற பெயரில் நன்னடத்தைக் கோட்பாட்டு விதிகளை உருவாக்கினார்கள்.

நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை விவரிப்பதற்காக, எந்தக் கடவுளும், குருமாரும் அவதரிக்க விரும்புவதில்லை. அவர்கள் உங்களை விழிப்புநிலையிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளவே அவதரிக்கிறார்கள், 'விழிப்புநிலையே' உங்களைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்லும்.

> நீங்கள் தெய்விகத்திற்கு
> அருகாமையில்
> வரும்பொழுது,
> அச்சக்தியானது
> உங்களது எதிர்மறைத்
> தன்மைகளைக்
> கரைக்கிறது.

கிருஷ்ணர் திட நம்பிக்கையோடும், அதிகார
பூர்வமாகவும் இவ்வாறு சொல்கிறார்.
“எல்லா நல்லொழுக்க நெறிகளையும்
மறந்துவிடு, எல்லா மதங்களையும்
விட்டுவிடு, விழிப்புணர்வுடன் என்னிடம்
வருவாயாக. இதுவே உன்னுடைய முக்தி.”

கிருஷ்ணர், த்ரிகுண ரஹிதராக இருக்கிறார். அதாவது, இயற்கையின் குணங்களுக்கும், கர்மங்களின் ஆதிக்கங்களுக்கும்

அப்பாற்பட்டவராயிருக்கிறார். அவரிடம்
சரணடைந்துவிடுவது உங்களைக் கர்ம
பந்தங்களைக் கடந்த நிலைக்கு எடுத்துச்
செல்லும்.

நீங்கள் இந்த ஸ்லோகத்தைப் புரிந்துகொண்டு,
அதன்படி நடந்து கொண்டால், நீங்கள்
முக்தி அடைந்துவிடுவீர்கள். இதுவே
கிருஷ்ணர் அளிக்கும் வாக்குறுதி!

அர்ஜுனனின் மீது ஞானத்தைப் பொழிந்து, அவருக்கு உச்ச அனுபவத்தைத் தந்த பரப்ரம்ம கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்ய நீங்கள் சில நிமிடங்களை ஒதுக்குங்கள். அவர், அதே அனுபவத்தை, இறுதி ஸத்யத்தின் கணநேர அனுபவத்தை நம்மீதும் பொழியுமாறு வேண்டி, கண்களை மூடி, ஆழமாகப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் இப்போது இங்கில்லையே என்று நினைத்துவிடாதீர்கள். அவர், இப்பூவுலகில் ஒவ்வொரு கணமும், ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடியவராகவே இருக்கிறார்.

அவர் தம் ஸ்தூலஉடலோடு இங்கில்லை தான். ஆனால், சக்தி ரூபத்தில் இருக்கிறார். அதனால்தான், கோவில்களில் இருக்கும் விக்ரஹகத்தை அர்சாவதார என்கின்றனர். தெய்வகத்தின் அவதாரம் என்பது அதன் பொருள். நாம் எப்போது அவரை அழைத்தாலும், அவர் நமக்கு கிடைக்கக்கூடியவராகவே இருக்கிறார். இப்போது, அர்ஜுனன் மீது பொழிந்த அதே அனுபவத்தை நம் மீதும் பொழிய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள், அமைதியில் மூழ்கி கிருஷ்ணரின் வார்த்தைகளைக் கேளுங்கள்.

நீங்கள் பாரமற்றவராக வேண்டுமா? இதோ அதற்கான நுட்பம்

கேள்வி: ஸ்வாமிஜி, கீதையில் கிருஷ்ணர் குறிப்பிடும் சரணாகதி நிலையும், உங்கள் அன்கிளட்சிங் (Unclutching) என்னும் கருத்தும் ஒன்றுதானா?

ஆம். அன்கிளட்சிங் என்பது எண்ணங்களின் சரணாகதி, மனத்தின் சரணாகதி. அதுவே உச்ச சரணாகதி. அன்-க்ளட்சிங் என்பதன் முக்கிய

அம்சம், எண்ணங்களையெல்லாம்
இணைக்கும் செயல்முறையைக்
கைவிடுவதே. அச்செயல்முறையை சரணாகதி
செய்யும்போது, நீங்கள் நிகழ்காலத்தினுள்
நுழைகிறீர்கள். நிகழ்காலத்தில் உங்கள்
மனம் கரைந்துவிடுகிறது. மேலும், உங்கள்
அஹங்காரமும் மறைகிறது.

கிருஷ்ணர் நமக்கு அறிவுறுத்தும் துறவு மற்றும் சரணாகதி நிலை என்பது இதுவே.

நாம் என்றென்றும் நம் புலன்களால் கட்டுப்படுத்தப்படுபவராகவே இருக்கிறோம். நம் புலன்கள் மூலமாக கடந்தகாலத்தில் எதையெல்லாம் உணர்ந்தோமோ, இப்போது எதை உணர்கிறோமோ, அவையே நம் எதிர்காலப் பாதையை நிர்ணயிக்கின்றன. புலனுணர்வுகளே எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உருவாக்குகின்றன. எண்ணங்களும் உணர்ச்சிகளுமே நம்முடைய மன அமைப்பிற்கும் மனோபாவத்திற்கும் பிறப்பை நல்குகின்றன. எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் விளையாட்டுகளைப் புரிந்துகொள்வதே, அதை நாம் கடந்துசெல்வதற்கான முதலும், கடைசியுமான படி ஆகும்.

மனிதன் இயல்பிலேயே, ஒரு இணைப்புமற்ற, ஆனந்தமான ‘இருப்பு’ தான்.

நமக்குள் எழும் ஒவ்வொரு எண்ணமுமே, தானே உருவாகி, மேலெழுந்து, உடைந்து இறக்கும் ஒரு நீர்க்குமிழி போன்றதே. ஒவ்வொரு எண்ணமும் தனித்தனியாகவேதான் எழுகிறது. மற்றொரு எண்ணம் எழும் முன்னர் இறந்தும்தீர்கிறது. ஒரு உதாரணத்திற்கு, இப்பொழுது நீங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்கள். சிறிது நேரத்தில் எழுகிறீர்கள். நீங்கள் எழுவதற்கு முடிவுசெய்யும் அந்தக் கணமே, உட்கார்ந்திருக்க வேண்டுமென்ற எண்ணமானது உங்களைவிட்டு மறைந்துவிடுகிறது.

நீங்கள் ஒரு கணினியில் வேலைசெய்து கொண்டிருக்கும்பொழுது, ஒருசமயம் அந்தக் கணினியை நிறுத்திவிட எண்ணுகிறீர்களென்றால், அந்தக் கணமே, ‘வேலைசெய்ய வேண்டுமென்ற’ உங்கள் எண்ணம் இறந்துவிடுகிறது. அதனால், ஒவ்வொரு எண்ணமும், ஒன்றோடொன்று தொடர்பே இல்லாத, ஒன்றன் பின் ஒன்றாக நிகழும் ஒரு தொடர் நிகழ்வாகத்தான் இருக்கிறது. அடுத்த எண்ணம் எழும் முன்னர், முதல் எண்ணம் இறந்துதான் ஆக வேண்டும். இதுவே நம்முடைய இயற்கையான இயல்பு.

நம்முடைய இயற்கையான இயல்பே ஒவ்வொரு கணமும் நம் எண்ணங்களைத் துறந்துகொண்டே இருப்பதுதான். நீர்க்குமிழிபோல் ஒவ்வொரு எண்ணத்தையும் எழ அனுமதித்து, பிறகு அதை உடைத்து, பிறகு அடுத்த எண்ணம் எழ அனுமதிப்பதே நமது இயல்பு. நமது எண்ணங்கள், எழும்பி வரும் நீர்க்குமிழிகள்போல் செங்குத்தாகத்தான் நிகழ்கின்றன.

தானே ஒவ்வொன்றாக எழுந்து மறையும் அந்த எண்ணங்களை, ஒன்றோடொன்று கோர்க்காமல், அப்படியே நிகழ அனுமதிக்கும் செயல்முறையே அன்கிளட்சிங். இந்த இயற்கையான நிகழ்வை நிகழ அனுமதிக்கும்வரை, நிகழ்பவையனைத்தும் சரியாகவே நிகழும்.

இதற்கு பதிலாக, நாம் குறிப்பிட்ட எண்ணங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஒன்றோடொன்று கோர்த்து, கோர்த்து ஒரு தண்டையே உருவாக்கிக்கொள்கிறோம். அப்படிச் செய்வதன் மூலம், நாம் செங்குத்தாகவும், அன்கிளட்சிங் செயல்முறையாகவும் இருப்பதை படுக்கை வசமாகவும், ஒன்றோடொன்று தொடர்புடைய சங்கிலித் தொடர்முறையாகவும் உருவாக்கிக்கொள்கிறோம். மொத்தப் பிரச்சினையுமே இங்குதான் உருவாகிறது.

ஒவ்வொரு எண்ணமும் தனித்தனியாகவே
எழுந்து மடிந்தால், நம்மால் உடல் ரீதியான
மற்றும் மன ரீதியான பாரத்தை எந்தளவு
வேண்டுமானாலும் தாங்க முடியும்.
நம் விழிப்புணர்வு எடையற்றதாகவும்,
ஆனந்தமாகவும் இருக்கும். ஒருமுறை
எண்ணங்களை இணைக்க
ஆரம்பித்துவிட்டாலே, நமது விழிப்புணர்வு
பாதிக்கப்படுகிறது. நாம் மிகுந்த சுமையை
உணர்கிறோம். அது நமது ‘இருப்பை’ச்
சிதைக்கிறது.

> ஒவ்வொரு எண்ணமும்
> தனித்தனியாகவே எழுந்து
> மடிந்தால், நம்மால்
> உடல் மற்றும் மன
> ரீதியான பாரத்தை
> எந்தளவு
> வேண்டுமானாலும்
> தாங்க முடியும்.

வெவ்வேறு சமயங்களில் நிகழ்ந்த கவலை, காமம், திருப்தியின்மை, பொறாமை, பயம், அஹங்காரம், கவனத்தேவை போன்ற உணர்ச்சிகளைக் கோர்த்து, நாமே ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்கிறோம். பின்பு அந்தக் கருத்தோடு நம்மைத் தொடர்புபடுத்திக் கொள்ள ஆரம்பிக்கிறோம். நம் எண்ணங்களைக் கொண்டு ஒரு கற்பனைத் தண்டை உருவாக்கிவிட்டு, பின்பு அதன் காரணமாக அல்லல்படுகிறோம்.

இந்த மாதிரி உணர்ச்சியெழுச்சிகளே மதக் கலவரங்கள், சமுதாயச் சண்டைகள், அரசியல் கொந்தளிப்பு போன்ற எல்லாவிதமான வன்முறைகளையும் உருவாக்குகின்றன. இது போன்ற எல்லாவிதமான வன்முறைகளுக்குக் காரணமாக, வேராக இருப்பவை நம் உணர்ச்சிகளே. அந்த உணர்ச்சிகளுக்கு அடிப்படையாக இருப்பது, எண்ணங்களின் கற்பனைத் தண்டுகளை உருவாக்கி, அவற்றுக்குச் சக்தியூட்டி, நம்மீது வேலைசெய்ய அவற்றை அனுமதிக்கும் நம்முடைய நடவடிக்கையே.

இம்மாதிரி தண்டுகளை உருவாக்கும்பொழுது, நாம் செய்யும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நமக்கு மகிழ்ச்சி வேண்டுமா அல்லது துயரம் வேண்டுமா என்னும் நம் விருப்பத்தின் அடிப்படையிலேயே, எண்ணங்களையும் தேர்வுசெய்துகொள்கிறோம்.

மகிழ்ச்சியான எண்ணங்களையெல்லாம் தேர்வுசெய்து, அவற்றைக் கோர்த்து ஒரு மகிழ்ச்சித் தண்டை உருவாக்குகிறோம் அல்லது எதிர்மறை எண்ணங்களைத் தேர்வுசெய்து, அவற்றைக் கோர்த்து துயரத் தண்டை உருவாக்குகிறோம். இவ்வாறு இன்ப-துன்பத் தண்டுகளை

இன்ப-துன்பத் தண்டுகளை
உருவாக்குவதிலிருந்து
விடுபடுவதே,
ஆனந்த வாழ்விற்கான
முதன்மை திறவுகோல்.

நாமே உருவாக்கிக் கொண்டு, இந்த
இரண்டு உணர்ச்சிகளுக்கும் இடையே
ஊசலாடிக் கொண்டிருக்கிறோம். இந்தத்
தண்டுகளை உருவாக்குவதிலிருந்து
விடுபடுவதே, ஆனந்த வாழ்விற்கான
முதன்மை திறவுகோல்.

நாம் நம்முடைய எண்ணங்களைத்
துறப்பதற்குப் பதிலாக, அவற்றை
எப்படி ஒன்றோடு ஒன்று இணைத்துக்
கோர்த்துக்கொள்கிறோம் என்பதை சிறிது
ஆழமாக ஆராய்ந்து பார்த்தோமானால்,

நமக்கு நாமே துன்பங்களை எப்படி
உருவாக்கிக்கொள்கிறோம் என்பதைப்
புரிந்துகொள்வோம். உண்மையில் நம்
எண்ணங்களுக்கிடையே எந்தவிதத்
தொடர்பும் கிடையாது. ஆனால், நம்
மனம் தான் அந்த மாதிரி தொடர்புகளைக்
கண்டுபிடித்துக்கொள்கிறது.

வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் மூலம் வாழ்வதற்கே நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். அதனால்தான், நாம் இந்தத் தண்டுகளை உருவாக்குகிறோம். நாம் எண்ணங்களைக் கோர்த்து பார்க்கும் இந்தச் செயல்முறையை விட்டுவிடுவதற்கு அஞ்சுகிறோம். ஏனெனில், நாம் அப்படி விட்டுவிட்டால் பிறகு நாம் பிடித்துக்கொள்வதற்கென்று அங்கு ஒன்றும் இருக்கப்போவதில்லை.

நாம் ஒருபோதும் அன்கிளட்ச் மனநிலையை அனுபவித்ததில்லை. ஒரு தண்டாக அல்லாமல், நீர்க்குமிழிகள் போன்ற தனித்தனியான எண்ணங்களை மட்டுமே கொண்டிருக்கும் அன்-க்ளட்சிங் நிலையில் நாம் ஒருபோதும் வாழ்ந்ததில்லை.

ஒன்று, நாம் பயத்தின் காரணமாகச் செயல்படுகிறோம். அல்லது பேராசையின் காரணமாகச் செயல்படுகிறோம். ஆனால் அன்-க்ளட்சிங் நிலையில் பயத்திற்கோ அல்லது பேராசைக்கோ இடமேயில்லை. நீங்கள் 'இருப்பீர்கள்', அவ்வளவுதான். இப்படிப்பட்ட ஒரு பரிமாணத்தை மிக அரிதாகவே நாம் அனுபவிக்கிறோம். ஏனெனில், நமக்கு நன்குப் பழகிப்போன எண்ணத் தண்டுகளைப் பிடித்துக் கொண்டு அதன் அடிப்படையிலேயே வாழப் பழகிவிட்டோம்.

நாம், 'எண்ணத்தண்டுகளைச் சாராமல் என்னால் எப்படி வாழ முடியும்?!' என்று ஆச்சரியப்படுகிறோம். அன்-க்ளட்ச் நிலையில் நம்மால் ஆனந்தமாக வாழ முடியும் என்பதே ஸத்யம். அதை நாம் ஒரு அசாத்தியமான செயல்போன்று பார்க்கிறோம்.

மொத்த விஷயங்களுமே ஒரு கற்பனைதான் என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். நம் மனமே ஒரு கற்பனைதான். நாம்தான் அதற்குப்

பலமூட்டுகிறோம். பிறகு அதற்கே நாம்
அடிமையாகி விடுகிறோம். இதுவே மன
ரீதியான அடிமைத்தனம்.

நம் மனமே
ஒரு கற்பனைதான்.
நாம்தான் அதற்குப்
பலமூட்டுகிறோம்.
பிறகு அதற்கே நாம்
அடிமையாகிவிடுகிறோம்.

உங்களுக்குள் எழும் எண்ணங்களைக் கவனியுங்கள். ஒவ்வொரு எண்ணமும் எழுவதையும், பிறகு அது மறைவதையும், அதைத் தொடர்ந்து மற்றொரு புது எண்ணம் தோன்றுவதையும் ஆழ்ந்து கவனித்துப் பாருங்கள். நீங்கள் இந்த எண்ணங்களையெல்லாம் எப்படி எளிதாக இணைக்கிறீர்கள், அதன் அடிப்படையில் எப்படிஃ கருத்துகளை உருவாக்குகிறீர்கள், அந்தக் கருத்துகள் உங்கள் வாழ்க்கையில் எப்படி விளையாடுகின்றன என்பதையும் கவனியுங்கள். அப்போது மட்டுமே நீங்கள் மொத்தக் கற்பனையையும் எப்படி உருவாக்குகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ஆகவே, எண்ணங்களைக் கோர்த்துப் பார்ப்பதே முதல் பாவம்.

ஆனந்தமான வாழ்விற்கான, ஒரே திறவுகோல் அன்-க்ளட்சிங் முறையில் வாழ்வதே!

எண்ணங்களைக் கோர்க்கக்கூடாது என்றும், எந்தவொரு எண்ணத்தின் மீதும், எந்தவொரு ஒரு நிகழ்ச்சியின் மீதும் உங்கள் தீர்ப்பை வழங்கக்கூடாது என்றும் முடிவுசெய்து கொள்ளுங்கள். எப்பொழுதெல்லாம் மனம் கோர்த்துப் பார்க்கத் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் அன்-க்ளட்ச் செய்யுங்கள். நீங்கள் நிகழ்ச்சிகளைக் கோர்த்துப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று உணர்ந்தவுடன், அன்-க்ளட்ச் என்று சொல்லி, கோர்த்துப் பார்க்கும் செயலை நிறுத்துங்கள்.

சங்கிலி உடைந்த சித்திரம்

பிறகு உங்கள் மன அமைப்பு தானாகவே உணர்வுமாற்றம் பெற்றுவிடும். ஒரு உளவியல் ரீதியான ஒரு புரட்சியே உங்களுக்குள் நிகழும்.

நாம் நிகழ்வுகளைக் கோர்த்துப் பார்க்காமல், நம் வேலைகளைச் செய்தோமானால், நமது திறமைகளும் சக்தியும் பெருகி விரிவடைகின்றன. நாம் எந்தவொரு அழுத்தமும் இல்லாமலேயே மேலும், மேலும் பொறுப்புகளை எடுத்து, அவற்றைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். ஒரு சமயம் மன வலி, மறுநொடி மகிழ்ச்சி என்று நமது மனநிலை அங்குமிங்குமாக ஊசலாடிக் கொண்டிருக்காது. நாம் எப்பொழுதும் ஆனந்தமாக இருப்போம்.

பொதுவாக நாம், ஏதோ ஒரு காரணத்திலிருந்து விளையும் மகிழ்ச்சிக்கே பழக்கப்பட்டிருக்கிறோம். இந்தக் காரணமும், நம் எண்ணங்களால் நாம் உருவாக்கிய ஒரு தண்டே. நாம் இது போன்ற தண்டுகளை உருவாக்குவதை நிறுத்தினாலே போதும், நாம் நித்யானந்தத்தில் இருப்போம்.

அன்-க்ளட்ச் என்ற வார்த்தை, நம்மைச் சுற்றியிருக்கும் மக்களோடும, சூழ்நிலையோடும நாம் நட்பில்லாமலிருப்பதையும் அவர்களிடமிருந்து விலகியிருப்பதையும் குறிக்கவில்லை. எண்ணங்களைக் கோர்க்காதீர்கள், எண்ணத் தண்டுகளை உற்பத்தி செய்யாதீர்கள் என்பதையே குறிக்கிறது.

நீங்கள் இயல்பிலேயே, ஒரு அழகான, அன்-க்ளட்சிங் நிலையில் வாழும் ஆன்மா தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பிறகு நீங்கள் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் துயரங்களை உருவாக்குவதை நிறுத்திவிடுவீர்கள்.

illustration