நான் உன்னைவிட்டு அகலமாட்டேன்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

18.67 ஒழுக்கக் கட்டுப்பாடுகளற்ற, பக்தியற்ற, கேட்க விரும்பாத மற்றும் என்னைப் பற்றி இழிவாகப் பேசுகின்ற ஒருவனுக்கு இந்த ஜ்ஞானத்தை ஒருபோதும் போதிக்காதே!
18.68 இந்த உன்னதமான உயர்ந்த இரகசியங்களை யாரொருவன் பக்தர்களிடம் பகிர்கிறானோ அவன் எனக்கு மிக உயர்ந்த சேவையைச் செய்தவனாகிறான். இறுதியில் அவன் என்னையே வந்தடைகிறான். இதில் சந்தேகமே இல்லை.
18.69 இவனைப் போன்று மேலானதொரு இனிய சேவையை வேறொருவனும் எனக்குச் செய்யப்போவதில்லை. இவ்வுலகில் இவனை விட வேறொருவனும் எனக்கு அன்பானவனாக இருக்கப் போவதும் இல்லை.
18.70 நான் விளம்புகிறேன்: இந்த மேலான உரையாடலைப் படிக்கும் ஒருவன், புத்தி யக்ஞத்தால் என்னை வழிபடுகிறான்.
18.71 நம்பிக்கையோடும், பொறாமையற்றும் இவற்றைக் கேட்கும் ஒருவன், பாவத்தின் விளைவுகளிலிருந்து விடுபட்டு, புண்ணியசாலிகள் வசிக்கும் உலகங்களுக்குச் செல்கிறான்.
18.72 ஓ தனஞ்ஜயா, ஒருமித்த கவனத்துடன் இவற்றைக் கேட்டுக் கொண்டாயா? அறியாமையால் விளைந்த உன் மயக்கம், குழப்பம் முற்றிலும் அழிந்து விட்டதா?
அவர்களின் ஆசீர்வாதம் என்றும் நமக்குண்டு
இந்த வார்த்தைகள் வெறுமனே அர்ஜுனனுக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல; மொத்த மனித குலத்துக்குமே சொல்லப்பட்டது. நர நாராயணர்களான, அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்களை நாமனைவரும் படிக்கவும், கேட்கவும், புரிந்துகொள்ளவும் வேண்டுமென கிருஷ்ணர் இங்கு வலியுறுத்துகிறார். அதற்கு மேலாக எதையும் படிக்கவோ அல்லது கேட்கவோ அவசியமேயில்லை. நமக்குத் தேவையானது அனைத்துமே இதில் இருக்கிறது.
என்னிடம் ஆழ்ந்த பக்தியுள்ளவன் மட்டுமே இதைப் படிக்க வேண்டும். ஒருவருக்கு உயர் நன்மையைப் பயக்கக்கூடியது எது, ஒரு மனிதன் எவ்வாறு வாழ்வது, என்னை அடைவது எப்படி என்ற இரகசியங்களை இங்கே விவரித்திருக்கிறேன். இதைப் புரிந்துகொண்டு, தன்னுடைய மனத்தை விட்டுவிட்டு, தன்னுடைய மொத்த கவனத்தையும் என் மேல் ஒருமுகப்படுத்தும் ஒருவன் சந்தேகமில்லாமல் என்னை வந்தடைவான்.

இது கிருஷ்ணருடைய வாக்குறுதி.
அவர் அர்ஜுனனின் மீது ஆசீர்வாதங்களைப் பொழிந்து, தம்மோடு இணைத்துக் கொள்கிறார். அதே உணர்வு நிலையையே இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் மீதும் பொழிகிறார். இந்தப் புனித உரையாடல்களைப் படிக்கும் ஒவ்வொருவருமே கிருஷ்ணருடைய மேலான அழிவில்லா விழிப்புணர்வைப் பெறுவார்கள் என்று
பிரகடனப்படுத்துகிறார். கிருஷ்ணர் இந்த
மொத்தப் பிரபஞ்சத்தையுமே அவரது
பெருந்தன்மையாலும், கருணையாலும்
ஆசீர்வதிக்கிறார்.
மேலும், அந்த ஜ்ஞான யஜ்ஞத்தில் நம்மையே
அர்ப்பணிப்பதன் மூலம், அந்த ஜ்ஞான
வேள்வியில் நம்மை முழுமையாகத்
தூய்மைப்படுத்திக்கொள்வதன் மூலம்,
நாம் அவரை அடைய முடியும்.
அவருக்குள் கரைந்துவிட முடியும் என்றும்
உறுதியளிக்கிறார்.
தலையில் மயிலிறகும்,
கையில் புல்லாங்குழலும்
கொண்ட வாஸுதேவ
கிருஷ்ணராக மறுபடியும்
தோன்றமாட்டார்;
அவருடைய சக்திதான்
மறுபடியும் தோன்றும்.
நாம் நெருப்பினுள் எதைப் போட்டாலும், அது மறைந்துவிடுகிறது. அதைப்போலவே, இந்த கீதையைப் படிப்பதிலேயே மூழ்கிவிடும்பொழுது, நம்முடைய இப்போதைய தன்மையுடன் இருக்க மாட்டோம். நாம் அவருக்குள்ளேயே கரைந்துவிடுவோம். அவர் மட்டுமே எஞ்சுவார்.
ஸம்பவாமி யுகே யுகே - முன்பே கிருஷ்ணர் இதைச் சொல்லியிருக்கிறார். நன்மை, தீமைகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு ஏற்படும்போது, அதைச் சமன்படுத்த, தம்முடைய வருகை எப்பொழுதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் தாம் மீண்டும் தோன்றப்போவதாகச் சொல்லியிருக்கிறார். “நான் கடைசி குரு அல்ல. எனக்குப் பின்பு வேறு ஒருவரும் தோன்றமாட்டார்கள் என்பதெல்லாம் கிடையாது,” என்று பிரகடனப்படுத்துவதற்குரிய துணிவைப் பெற்ற ஒரே குரு இவரே!
தலையில் மயிலிறகும், கையில் புல்லாங்குழலும் கொண்ட வாஸுதேவ கிருஷ்ணராக மறுபடியும் தோன்றமாட்டார்; அவருடைய சக்திதான் மறுபடியும் தோன்றும். நம்முடைய யூகத்தால் இந்தத் தவற்றைத்தான் நாமெல்லோரும் செய்கிறோம். குருமார்கள் ரூபத்தில்தான் தோன்றுவார். நல்லோரைக் காத்து, தீயோரை அழித்து, சமநிலையை மீட்க அவர் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருப்பார்.
பகவத்கீதையில் இதுவே கிருஷ்ணர் பேசும் கடைசி இடம். அவர் கேட்கிறார்: “அர்ஜூனா, கவனத்தோடு எல்லாவற்றையும் கேட்டாயா? உன்னுடைய மதிமயக்கம் மறைந்துவிட்டதா?"
அவர் இறுதிவரை ஒரு ஆசிரியராகவே
இருந்தார், கருணையின் வடிவாகவே
திகழ்ந்தார், அவருடைய அக்கறை
முழுவதையும் அர்ஜுனனுக்காகவும்,
மொத்த மனித குலத்திற்காகவுமே
பொழிந்தார். "உனக்குப் புரிந்ததா?
உன்னுடைய சந்தேகங்கள்
தீர்ந்தனவா? உனக்கு வேறு ஏதாவது
தேவைப்படுகிறதா?" என்று கருணையுடன்
கேட்கிறார்.
தத்தம் சீடர்களைத்
துயரங்களிலிருந்து மீட்டு
உயர்விப்பதைத் தவிர,
குருமார்களுக்கு வேறெதுவும்
ஒரு பொருட்டல்ல.
அதற்காகவே அவர்கள்
இங்கு வருகிறார்கள்.
இதுவே குருமார்களின் சிறப்பு! தத்தம் சீடர்களைத் துயரங்களிலிருந்து மீட்டு உயர்விப்பதைத் தவிர, அவர்களுக்கு வேறெதுவும் ஒரு பொருட்டல்ல. அதற்காகவே அவர்கள் இங்கு வருகிறார்கள். இல்லையென்றால், அவர்கள் ஏன் இப்புவுலகில் தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டும்? எவ்விதத் தொந்திரவுமின்றி, தங்களுடைய ஆனந்த சக்தியிலேயே மூழ்கியிருந்திருக்கலாமே!
நான் என் சீடர்களிடம், "நான் வருத்தப்படும் ஒரே நேரம் என்னவென்றால், என்னைவிட்டு நீங்கள் பிரிவதாகச் சொல்லும் நேரம்தான்!" என்று சொல்லும்பொழுது, அவர்கள் அதன் பொருளைப் புரிந்துகொள்வார்கள். ஏனென்றால், அவருடைய ஆன்மா, அவரை ஜீவன்முக்தராக்கவே, பிறப்பு-இறப்பு சக்கரத்திலிருந்து விடுவிப்பதற்காகவே அவரை என்னிடம் கொண்டுவந்து சேர்த்தது. ஆனால் அவர்கள் அந்த அரிய வாய்ப்பை இழக்கிறார்கள் என்னும் விஷயமே என்னை வருத்தப்படச் செய்யும்.
அவருடைய உடலும்-மனமும் ஒத்துழைக்கவில்லையென்றால், ஆன்மா, அது முக்தி பெறும்வரை திரும்பத் திரும்ப பிறக்க வேண்டியதிருக்கிறது. அந்த ஆன்மா ஒவ்வொரு பிறவி எடுக்கும்பொழுதும், இறுதி அடியைத் துணிகரமாக எடுத்து வைக்க முடியவில்லையே என்று துக்கப்படுகிறது, வருத்தமுறுகிறது.
என்னுடைய ஆச்ரமத்திற்குள் வந்த எவருமே என்னைவிட்டுப் போய்விட முடியாது. அப்படியே அவர்கள் சென்றாலும், நான் அவர்களை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை. நான் அவர்களுடனேயே இருப்பேன். அவர்களை என்னிடம் கொண்டு வந்து சேர்த்த அவருடைய அந்தக் கணநேர புத்திசாலித்தனமே போதும், நான் அவர்களைப் பாதுகாப்பதற்கு! என்னுள் உறையும் அந்த வடிவமற்ற வடிவத்தைப் புரிந்துகொண்டவர்களுக்கே நான் அவர்களுடைய ஒரு பாகம் என்பது புரியும். அவர்கள் எங்கிருந்தாலும், நான் அவர்களுடைய பாகமாக இருக்கிறேன்.
இதுவே கிருஷ்ணர் அளிக்கும் வாக்குறுதி: “நான் சொல்வதைக் கேளுங்கள். என்னைப் புரிந்துகொண்டு என்னிடமே வாருங்கள். பிறகு நீங்களும் என்னில் ஒரு பாகமே.”
அஹங்காரத்தைக் கொல்ல முடியாது!
கேள்வி: சரணாகதி செய்ய ஆசைப்படுவதே அஹங்காரத்தின் வெளிப்பாடாக இருக்கும்பொழுது, நாம் எப்படி அஹங்காரத்தை சரணாகதி செய்ய முடியும்?
பதில்: ‘அஹங்காரமே இல்லை’ எனும்போது, நீங்கள் எப்படி அதை சரணாகதி செய்ய முடியும்? நீங்கள் இப்போது ஒரு இருண்ட அறையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்றும், அந்த இருள் நீங்கிவிட வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இருளை, உங்கள் கைகளால் தள்ளி வெளியேற்றிவிட முடியுமா? இருளோடு போராடி, அறையைவிட்டு வெளியேறும்படி அதைக் கட்டாயப்படுத்தத்தான் உங்களால் முடியுமா? முடியாது! நீங்கள் எவ்வளவு நேரம் முயல்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல; இறுதியில் நீங்கள் தோல்வியையே அடைவீர்கள்? அதுவும் ‘இருப்பு’ இல்லாத ஒன்றுடன்!
அந்த இருளைப் போன்றதுதான் உங்கள்
அஹங்காரம். அதற்கு ஒரு நேர்மறை
இருப்பே இல்லை. வெளிச்சம் இல்லா
நிலையே இருள் என்பதைப்போல,
விழிப்புணர்வு இல்லாததே அஹங்காரம்.
அதனால், அஹங்காரத்தைக் கொல்லப்
> என்னுள் உறையும் அந்த வடிவமற்ற வடிவத்தைப் புரிந்துகொண்டவர்களுக்கே நான் அவர்களுடைய ஒரு பாகம் என்பது புரியும்.
போராடுவது என்பது, இருளை அறையிலிருந்து விரட்ட முயலுவதைப்போலத்தான். இருளை வெளியேற்ற வேண்டுமானால், நீங்கள் இருளோடு போர்புரிய வேண்டுமென்பதை மறந்துவிட வேண்டும். அதற்குப் பதிலாக, ஒளியைக் கொண்டுவருவதில் உங்கள் சக்தியைக் குவிக்க வேண்டும். அறையினுள் ஒரு சிறு விளக்கைக் கொண்டு வாருங்கள். இருள், தானே பறந்துவிடும்! அதனால், அஹங்காரத்தைப் பற்றி மறந்துவிடுங்கள். விழிப்புணர்வு என்னும் விளக்கை உங்கள் இருத்தலுக்குள் கொண்டுவருவதில் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய மொத்த விழிப்புணர்வும் தீ ஜ்வாலை ஆகிவிட்டால், இனி அங்கு அஹங்காரம் இருக்கப்போவதில்லை.
அஹங்காரம் ஒரு மாயையே. அதை நீங்கள் அறியாமல் இருக்கும்பொழுது, நீங்கள் அதை சரணாகதி செய்ய முடியாது. ஏனெனில், அதை எப்படிச் செய்வதென்பது உங்களுக்குத் தெரியாது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அஹங்காரத்தைப் பற்றிய விழிப்புணர்வு வந்தாலுங்கூட, உங்களால் அதை சரணாகதி செய்ய முடியாது. ஏனெனில், அங்கு சரணாகதி செய்வதற்கென்று ஒன்றும் மிச்சம் இல்லை என்பதை உணர்ந்துகொள்வீர்கள்!
‘உங்களை அறிய வேண்டுமானால் அஹங்காரத்தை சரணாகதி செய்யுங்கள்’ என்று இதுநாள்வரை நீங்கள் கேட்ட, படித்த, கற்றுக்கொண்டவையெல்லாம் வேலைசெய்யாது. அது வேறு வழியில்தான் வேலைசெய்யும்; ‘தன்னை அறிதல்’ உதயமாகும்பொழுது, சட்டென அஹங்காரம் காணாமல் மறைந்துபோகும். இனியும் உங்களால் அஹங்காரத்தைக் காண முடியாது. சரணாகதி அந்த கணமே நிகழ்ந்திருக்கும்.
இன்னொரு வகையில், உங்கள் இருத்தலிலிருந்து இந்தக் கேள்வி எழுந்திருப்பதைக் கண்டு எனக்கு மகிழ்ச்சியே. உங்களுடைய எல்லாப் பதற்றங்களுக்கும், துயரங்களுக்கும், மன அழுத்தங்களுக்கும் మూலகாரணம் உங்கள் அஹங்காரமே. உங்களுடைய நரகத்திற்கான வழி அதுவே. அந்த அஹங்காரத்தை விட்டுவிட வேண்டுமென்று உணர்வதும், அந்தச் சுமையிலிருந்து விடுபட்டேயாக வேண்டும் எனும் தேவையை உணர்வதும், நீங்கள் விழிப்புணர்வை நோக்கி எடுத்து வைக்கும் ஒரு அடியே ஆகும். நீங்கள் தூக்கத்திலிருந்து எழுவதற்கு, இப்போதுதான் நெளிய ஆரம்பித்திருக்கிறீர்கள்.

