KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/சக்தி தரிசனம்Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

சக்தி தரிசனம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Krishna illustration

18.62 பரத குலத்தோன்றலே, அவனிடத்தே முழுமையாக சரணடைந்துவிடு. அவனுடைய கருணையால் நீ மேலான அமைதியையும் அழியா வீடுபேறும் அடைவாய்.

கிருஷ்ணர் இப்பொழுது தம் வழிமுறையை மாற்றி, அர்ஜூனனுக்கு அனுபவத்தைத் தர ஆரம்பிக்கிறார். அவர், என்றென்றும் அழியா அந்த விழிப்புணர்வை வெளிப்படுத்தி, அர்ஜூனனை விழிப்புணர்வு நிலையிலும் ஜ்ஞான அனுபவத்திலும் ஆழ்த்துகிறார்.

நீங்கள் இப்பொழுது ஒருசில நிமிடங்களுக்கு, உங்கள் தலைக்குள் ஓடும் எண்ணங்களில் இருந்தும், கருத்துகளில் இருந்தும் விலகி, தளர்வாக, நிம்மதியாக அமைதியாக இருங்கள். கிருஷ்ணருடைய கருணையால் அர்ஜூனனுக்கு கிடைத்ததைப்போல், கணநேர அனுபவத்துளி உங்களுக்கும் கிடைக்கும் சாத்தியம் இருக்கிறது. வாழ்ந்தாக வேண்டுமென்கிற உள்ளுணர்ச்சியினாலும், உடைமைகளைச் சேர்க்க வேண்டும் என்ற உள்ளுணர்ச்சியினாலும்தான் அதைத் தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

சக்தி தரிசனம் பெறத் தயாராய் இருங்கள்!

ஒருசில நிமிடங்களுக்காவது உங்களின் எண்ண ஓட்டங்களிலிருந்து விடுப்படுங்கள். பிறகுகூட நீங்கள் அவற்றை மீண்டும் பொறுக்கி எடுத்துக்கொள்ளலாம். அதில் எந்தப் பிரச்சினையும் வராது. ஒருசில நிமிடங்களுக்கு உங்கள் விழிப்புணர்விலிருந்தும் உள்உலகத்திலிருந்தும் அவற்றைத் தள்ளி வைத்துவிடுங்கள். அப்படியானால் மட்டுமே, அந்த விழிப்புணர்வின் ஒரு ஒளிக்கீற்றைத் தரிசிக்கலாம்.

கிருஷ்ணரின் கருணையால் அர்ஜூனன் அனுபவித்த அதே அனுபவத்தை, நீங்களும் அனுபவிப்பதற்கான ஒரு சிறப்பு சாத்தியக்கூறு இருக்கிறது.

இந்தப் பகவத்கீதை முழுவதிலும், கிருஷ்ணர், "என்னிடம் சரணடைந்துவிடு," என்று சொல்லிக்கொண்டே வந்திருக்கிறார். அவர், 'நான்', 'எனது' என்று சொல்லும்பொழுதெல்லாம், தாம் தெய்வகத்தின் உருவகம், பிரதிநிதி என்ற பொருளில்தான் சொல்கிறார்.

இப்பொழுது திடீரென்று, அவர் அதை மாற்றிக் கொண்டு, "அவனிடத்தே சரணடைந்துவிடு," என்று படர்க்கை நிலையாகச் சொல்கிறார். முதன்முறையாக, அவர் தெய்விகத்தை இந்த விதத்தில் குறிப்பிடுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால், அவர் தம் உடலைத் தாண்டி அப்பாலும், விரிவடைந்த நிலையில் இருக்கிறார். அவர் இப்பொழுது பரப்ராஹ்ம கிருஷ்ணாவாக, அதாவது, பிரபஞ்ச கிருஷ்ணராக பேச ஆரம்பித்திருக்கிறார் என்பதுதான்.

avர் அழிவற்ற, எல்லையற்ற விழிப்புணர்வு நிலையிலிருந்து பேசுகிறார். 'என்னிடத்தில்

> ஒருசில நிமிடங்களுக்காவது
> உங்களின் எண்ண
> ஓட்டங்களிலிருந்து
> விடுப்படுங்கள்.
> அப்படியானால் மட்டுமே,
> அந்த விழிப்புணர்வின் ஒரு
> ஒளிக்கீற்றைத் தரிசிக்கலாம்.

சரணடைந்துவிடு' என்று சொல்லாமல்,
'அவனிடத்தில் சரணடைந்துவிடு' என்று
சொல்வதின் காரணம் இதுவே.

இதற்கு முன்பாக அவர், 'நான்', 'எனது'
என்ற வார்த்தைகளையே பயன்படுத்தி
வந்திருக்கிறார். இந்த மாற்றத்தின்
அர்த்தம், அவர் இப்போது, அர்ஜூனனை
அனுபவத்தினுள் ஆழ்த்துவதற்காக ஒரு
விரிவடைந்த நிலையில் இருக்கிறார். இந்த
விதமான ஒரு அனுபவத்தை ஒரு சீடருக்குக்
கொடுப்பதற்கு, குருநாதரும் அதே நிலையில்
இருந்தாக வேண்டும். அதனாலேயே
கிருஷ்ணர் அந்த விரிவடைந்த நிலைக்குள்
சென்றார்.

> கிருஷ்ணரின்
> கருணையால் அர்ஜூனன்
> அனுபவித்த அதே
> அனுபவத்தை, நீங்களும்
> அனுபவிப்பதற்கான ஒரு
> சிறப்பு சாத்தியக்கூறு
> இருக்கிறது.

ஒரு பூஜைக்கு முன்னர், அங்கந்யாஸ கரந்யாஸ மந்திர - அங்குஷ்டப்யாம் தச'தீப்யாம்'- என்னும் மந்திரங்களைப் புரோகிதர்கள் உச்சாடனம் செய்வார்கள். இந்த மந்திரங்கள், நாம் விரிவடைந்து, உடல் உணர்வுக்கு அப்பால் செல்வதற்காகவே உச்சரிக்கப்படுகின்றன. இது, நம் உடலைச் சுத்தமாக்கி, உடற்கடந்த நிலைக்குச் செல்வதற்கு நமக்கு உதவுகிறது. உண்மையில், சுத்தம் செய்வது மற்றும் கடந்த நிலைக்குச் செல்வது - என்ற இரண்டும் ஒன்றையே குறிக்கிறது.

அதனால் இப்போது கிருஷ்ணர் சொல்கிறார்: "அவனிடத்தே சரணடைந்துவிடு!" ஏனெனில், அவர் இப்பொழுது விரிவடைந்த நிலையில் இருப்பதால், அவர், 'நான்' என்னும் வார்த்தையை பயன்படுத்த முடியாது.

அவர் சொல்கிறார்: "பார்த்தா, முழுமையாக அவனிடத்தே சரணடைந்துவிடு. அவனுடைய கருணையினால், எல்லையற்ற விழிப்புணர்வையும், மிக உன்னதமான அமைதியையும் அடையப் பெறுவாய்!

அவர், பிரபஞ்ச விழிப்புணர்வாக, எல்லையற்று விரிவடைந்திருக்கிறார். அவர் இப்பொழுது, சக்தி தரிசனம் தரத் தயாராய் இருக்கிறார். அவருடைய சக்தியை அர்ஜூனனின் மேல் பொழியத் தயாராய் இருக்கிறார்.

சக்தி தரிசனம், உங்கள் இருப்பு நிலையில் ஓர் உணர்வுமாற்றத்தைக் கொண்டுவந்துவிடும்!

கேள்வி: ஸ்வாமிஜி, கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கொடுக்கும் சக்தி தரிசனத்தைப் பற்றிச் குறிப்பிட்டீர்கள். நீங்கள்கூட சக்தி தரிசனம் தருகிறீர்கள். அதன் முக்கியத்துவம் என்னவென்பதை விளக்குங்கள்?

ஆம், ஜ்ஞானகுருமார்கள், தங்களின் சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் தரும் தரிசனம், கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத் தரும் சக்தி தர்ச'னம் போன்றதே. அந்த தரிசனம், பிரபஞ்ச சக்தியினுடையது, தேவி பராசக்தியினுடையது, உங்கள் முன்னாலிருக்கும் குரு வடிவினுடையது அல்ல.

நான் உங்களுக்கு ஆனந்த தரிசனம் தருவதைப் பற்றிப் பேசும்போது, நான் ஒரு கவனிப்பாளனாக மட்டுமே இருக்க வேண்டும். ஏனெனில், அதை நடத்துபவள் தேவி பராசக்தி!

தரிசனம் என்ற சொல் தர்ச'னம் என்ற ஸம்ஸ்க்ரு'த சொல்லிலிருந்து வந்ததே. தர்ச'னம் என்றால் அனுபவத்தைக் குறிக்கிறது; உங்கள் கண்களால் காணும் காட்சியை அல்ல. தர்ச'னம் என்பது நம் புறக்கண்களுக்குப் புலப்படாத மூன்றாவது கண் தொடர்புடையது.

குருவானவர், ஆனந்த தரிசனம் கொடுப்பதின் நோக்கம், உங்களின் மூன்றாவது கண்ணைத் திறந்துவிடுவதன் மூலமாக, உங்களுக்குள் உறைையும் புத்திசாலித்தனத்தையும் விழிப்புணர்வையும் விழிப்பிக்கச் செய்வதே. தர்ச'னம் என்பது உடல் ரீதியான ஓர் அனுபவம் அல்ல. அது, இருப்பு நிலையில் நிகழும் ஓர் அனுபவம்.

சக்தி தரிசனத்தின்போது அல்லது ஆனந்த தரிசனம் என்று நான் குறிப்பிடும் நிகழ்ச்சியின்போது, குருவானவர், பிரபஞ்ச சக்தியுடன் ஒருங்கிணைந்து, ஒன்றாகிவிடுகிறார். அவர் வடிவமற்ற வடிவமாக, இறைசக்தியாகவே இருக்கிறார்.

DARSHAN MEANS AN EXPERIENCE; NOT A VISUAL SEEING WITH YOUR EYES. IT HAS TO DO WITH THE UNSEEN THIRD EYE. குருவானவர், அவருடைய ஆழமான அன்பு மற்றும் கருணையின் காரணமாக, ஆனந்த தரிசனத்தின் வாயிலாக, அவரை முழுமையாகத் திறந்து வைக்கிறார். அதன் காரணமாக, ஒவ்வொருவரும் அவர் மூலமாக, அந்தப் பிரபஞ்ச உணர்வை அனுபவமாகப் பெறுகிறார்கள்.

அதைப் பெற்றுக்கொள்பவரும், குருவின் கருணையை மிக ஆழமாக உணர்கிறார். தரிசனத்தின்பொழுது, குரு, பிரபஞ்ச இருப்பு சக்தியை வெளிப்படுத்துகிறார், ஒவ்வொருவருக்குள்ளும் இறைசக்தியை நிலைக்கச் செய்வதற்காக, அவரை ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடியவராக ஆக்கிக்கொள்கிறார், அவருடைய மணத்தையும், பிரபஞ்ச இருப்பின் மணத்தையும் பரப்பக்கூடிய மலர்களைத் தரக்கூடிய விதைகளை ஒவ்வொருவருக்குள்ளும் விதைக்கிறார்.

> குருவானவர்,
> ஆனந்த தரிசனம்
> கொடுப்பதின் நோக்கம்,
> உங்களின்
> மூன்றாவது கண்ணைத்
> திறந்துவிடுவதன் மூலமாக,
> உங்களுக்குள் உறையும்
> புத்திசாலித்தனத்தையும்
> விழிப்புணர்வையும்
> விழிப்பிக்கச் செய்வதே.

அந்தச் சக்தியை உள்வாங்க நீங்கள்
தயாராயிருந்தால், அது உங்களுக்குள்
ஊடுருவி, உங்கள் இருப்பு நிலையில் ஓர்
உணர்வுமாற்றத்தைக் கொண்டுவந்துவிடும்.
நீங்கள், உங்களுக்குள் பூரண அமைதியோடு
இருந்தால், உலகியல் ரீதியான தர்க்கத்தின்
பிடியிலிருந்து விடுபட்டிருந்தால்,
எண்ணங்களும் வார்த்தைகளும்
இல்லாமலிருந்தால், உங்களைச் சூழ்ந்துள்ள
ஆனந்தக் கடலின் ஒரு துளியாக நீங்கள்
மாறிவிட முடியும்.

பக்தர்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஒரேயொரு விஷயம், ஒரு நம்பிக்கை மிகுந்த, ஏற்புத்தன்மை மிகுந்த அணுகுமுறையைத்தான். ஒருசில நிமிடங்களேனும், உங்கள் மனத்தை நிறுத்தி, அந்தச் சூழலில் உருவாக்கப்பட்ட மனோநிலையுடன் ஒன்றியிருந்தால், குரு பிரதிநிதித்துவம் வகிக்கும் அந்தப் பிரபஞ்சம் முழுமைக்கும், நீங்கள் உங்கள் ஆழமான நன்றியுணர்வை செலுத்துவீர்கள்.

தரிசனத்தின்போது உருவாக்கப்படும் மகிழ்ச்சி, அங்கு இசைக்கப்படும் பக்திபாடல்களாலும், பொதுவான பக்தி வெளிப்பாட்டினாலும் மேலும் பெருகிறது. பொங்கித் ததும்புகின்ற அம்மகிழ்ச்சி, ஒருவரின் மனத்தைக் கரைத்து, அவரை முழுமையுடன் ஒன்றியிருக்கச் செய்கிறது. மனம், விடுப்பில் சென்று, தனது இடத்தைக் காலிசெய்து, இருப்பை, அதன் சுமைகளிலிருந்து விடுவிக்கிறது. காலங்காலமாக, தனிமனித இருப்பு அனுபவிக்க ஏங்கிக்கொண்டிருந்த அனுபவத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது.

இருப்பு, உண்மையில் தான் யார் என்பதை உணர்கிறது. பிரபஞ்ச இருப்பின் ஒரு அங்கமாக மனம் மறைந்து, அவ்விடத்தை வெற்றிடமாக்குகிறது. அவ்வெற்றிடத்தில், வாழ்க்கைக்கான பொங்கித் ததும்புகின்ற அன்பு நிரம்புகிறது.

ஆனந்த தரிசனம் எனும் நேரம் சமுதாயம், பொருளாதாரம் போன்ற மற்ற தடைகளையெல்லாம் உடைக்கின்ற ஒரு நேரம். அவர், ஒவ்வொருவரிடத்திலும், ஒவ்வொன்றிலும் தெய்விகத்தைக் காண்கிறார், இந்த உணர்வினால் ஊற்றெடுத்த சுதந்திரத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார். அவருடைய சொந்த அடையாளமும், மற்றவர்களுடைய அடையாளமும் மறைந்துவிடுகிறது. ஒவ்வொருவரையும், ஒவ்வொன்றையும் பேரானந்தத்துடன் ஏற்றுக்கொள்கிறார். ஒவ்வொரு இருப்பும், தன்னுடைய புத்திசாலித்தனத்தில் பிரகாசிக்கிறது, தனக்குள்ளிருக்கும் தெய்விகத்தை வெளிப்படுத்துகிறது.

நீங்கள், மற்ற நேரங்களில் குருவின் வார்த்தைகளைக் கேட்க முடியும். ஆனால், ஆனந்த தரிசனத்தின்போது, குரு பேசுவதில்லை. அவர், அவனையே தம்மகத்தே கொண்டிருக்கிறார். அவர், அவனாகவே இருக்கிறார். இது ஒவ்வொருவருக்கும் குருவிடமிருந்து நேரடியாகக் கிடைக்கும் மிகச் சிறந்த பரிசு.

சக்தி தரிசனத்தின்போது,
குருவானவர்,
பிரபஞ்ச சக்தியுடன்
ஒருங்கிணைந்து,
ஒன்றாகிவிடுகிறார். அவர்
வடிவமற்ற வடிவமாக,
இறைசக்தியாகவே
இருக்கிறார்.

நீங்கள் அமைதியாகவும், விழிப்புணர்வோடும் இருந்தால், நீங்கள் அதைக் காணமுடியும். நீங்கள் சிந்தனையிலும் பேச்சிலும் ஈடுபட்டிருந்தால், நீங்கள் அதைத் தவறவிட்டுவிடுவீர்கள்.

நீங்கள் அந்தச் சூழ்நிலையை ஆராய்ந்து
கொண்டும், தரிசனக் காட்சியை
ஏற்றுக்கொள்ளலாமா அல்லது வேண்டாமா
என்று தீர்மானித்துக் கொண்டும் இருந்தால்,

அந்தப் பரிசை நழுவவிட்டுவிடுவீர்கள்.
அதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது
நிராகரிக்கவோ செய்யாமல்,
வார்த்தைகளால் விளக்க முயலாமல்,
நேர்மறை உணர்வோ அல்லது எதிர்மறை
உணர்வோ கொள்ளாமல், அதைப்
பற்றித் தீர்ப்பளித்துக் கொண்டிருக்காமல்,
வெறுமனே உங்களால் இருக்க முடிந்தால்,
நீங்கள் சரியான நூலிழையைப் பிடித்து
விட்டீர்கள்!

தரிசனம்,
பிரபஞ்ச சக்தியினுடையது,
தேவி பராசக்தியினுடையது,
உங்்கள் முன்னாலிருக்கும்
குரு வடிவினுடையது
அல்ல.

தத்துவங்கள் மீது காதல் கொள்ளாமல், ‘சுய-உணர்தல்’ மீது காதல் கொண்டிருந்தீர்களானால், நீங்கள் அதை உணர்வீர்கள். வார்த்தைகள் பரிமாற்றமின்றியே, உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று பதிலளிக்கத் துவங்கும். தர்ச்'ந் ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஒரு உணர்வுமாற்ற அனுபவமாக இருந்திருக்கிறது.

பிரபஞ்ச இருப்புத்தன்மை, நமக்கு வேண்டியதை அறியும் எனும்

சிறு நம்பிக்கையே போதும்...

உலகெங்கிலுமுள்ள மக்கள் பலரும், ஆனந்த தரிசனத்தின்போது, பற்பல அற்புதமான அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆழமான ஆன்மிக அனுபவங்கள், நோய்களிலிருந்து விடுபட்ட அனுபவங்கள், அகக் காட்சிகள் என, இந்தச் சக்தியை பலரும் பலவிதமாக உணர்ந்திருக்கின்றனர்.

தரிசனத்தின்பொழுது நமக்கும் ஏதாவது அனுபவம் ஏற்படவேண்டும் என நீங்கள் பேராசைபட வேண்டியதில்லை. ‘எது நிகழ வேண்டுமோ, அது நிகழட்டும்’ என அனுமதியுங்கள். பின்பு, அந்தத் தரிசனத்தை ஏற்பதற்குரிய ஒரு உணர்வு தளத்தை உங்களுக்குள் உருவாக்குவீர்கள்.

சக்தி, புத்திசாலியே. மேலும், என்ன செய்ய வேண்டுமென்பதை அது அறியும். எவ்விதமான எதிர்பார்ப்புகளோடும் - ஒளியையோ அல்லது வெறுமையையோ அல்லது ஒருவித சக்தியையோ உணரும் அனுபவத்திற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

பிரார்த்தனை மனோபாவத்துடன் இருந்தாலே போதுமானது. இது வார்த்தைகளைவிட, உங்களின் உணர்வுமாற்றத்திற்கு உதவும். பிரார்த்தனை மனநிலை என்றால், 'பொருட்களை வேண்டுவது' என்பதைக் குறிக்கவில்லை; எல்லாவற்றைக் குறித்தும் ஆழ்ந்த நன்றி உணர்வுடன் இருப்பது. ஆயினும் நீங்கள் விரும்புவதைக் கேட்க, குரு அனுமதிக்கிறார். உங்களுடைய எந்தப் பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வு கேட்கலாம்.

உங்களின் மனத்தின் மூலமாக

ஆனால், நமக்குப்பேசுவதுகூட கடினமாகிவிடும் அளவுக்கு, அத்தருணத்தில், ஆனந்தம் பொங்கித் ததும் புகிறது. நீங்கள் எதையாவது கேட்கும் மனநிலையில் இருக்கும்பொழுது, உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அனுபவத்தைத் தவறவிடுகிறீர்கள். கேட்க வேண்டுமானால், மனம் உள்ளே நுழைந்தாக வேண்டியுள்ளது. அப்படி மனம் உள்ளே நுழையும்பொழுது, நீங்கள் அனுபவத்தைத் தவறவிடுகிறீர்கள்.

தரிசனத்தின்போது, நீங்கள் கேட்கும்போது, குரு கனிவோடும், அக்கறையோடும் பதிலளிக்கிறார். பலர் ஒரே மாதிரி கேள்விகள் கேட்ட போதிலும், அவரவர்களுக்கு ஏற்ற தகுந்த பதிலைச் சொல்கிறார்.

ஒவ்வொரு இருத்தலும் வேறானவை. ஒவ்வொருவருடைய வழியும் தனித்துவம் மிக்கது. ஒவ்வொருவரும் குருவுடன் தத்தம் தனிப்பட்ட வழியில் தொடர்புகொள்கின்றனர். குரு, கேட்பவருடைய இருப்புக்குள் ஊடுருவி நோக்கி, ‘கேட்டவருக்கே’ பதிலளிக்கிறார், ‘கேள்விக்கு’ அல்ல.

முழுமையான நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு மட்டும், “நான் பார்த்துக்கொள்கிறேன்,” என்று சொல்கிறார். அவர்களும், குருவிடமிருந்து வரும் அந்த உறுதிமொழியினால், தங்கள் கவலைகளையும் மன அழுத்தங்களையும் உதறிவிடுகிறார்கள்.

அந்தச் சில கணங்களுக்கு, நாம் நம்முடைய
பிரார்த்தனைகளை மறந்துவிட்டு, பிரபஞ்ச
இருப்புத்தன்மையின் மீது நம்பிக்கை
வைக்க முடியுமானால், நாம் அனுபவத்தை
அடை முடியும். பிரபஞ்ச இருப்புத்தன்மை,
நமக்கு எது சிறப்பைத் தரும் என்பதை
அறியும் எனும் சிறு நம்பிக்கையே
போதும். நாம் இந்த மனோபாவத்துடன்
அணுகினோமானால், குருவானவர் நமக்கு
என்ன கொடுக்க முயலுகிறாரோ, அதைப்
பெறுவோம். வேறெதுவும் அவசியமில்லை.

நீங்கள் கேட்கும்
மனநிலையில்
இருக்கும்பொழுது,
உங்களுக்குக் கிடைக்க
வேண்டிய அனுபவத்தைத்
தவறவிடுகிறீர்கள்.

தரிசன நேரம் என்பது குருவுடன், வார்த்தைகள்மூலம் தொடர்பு கொள்ளும் நிலையிலிருந்து, குருவின் பிரபஞ்ச இருப்போடு சங்கமிக்கும் நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடிய ஓர் அற்புதமான வாய்ப்பு.

அவருடைய சொற்பொழிவுகளின்போது, நாம் அறிவுப் பூர்வமான தெளிவைப் பெறவேண்டி, பல கேள்விகளைக் கேட்கிறோம். அப்போது நாம், நம் மனத்தின்மூலமாகத் தொடர்புகொள்ள முயலுகிறோம், ஒவ்வொரு சொற்பொழிவின் இறுதியிலும், வார்த்தைகளுக்குமேல் வார்த்தைகளாக சேகரித்து வைத்துக்கொள்கிறோம். மேலும் பல வார்த்தைகளோடும் சந்தேகங்களோடும் வீடு திரும்புகிறோம்!

Nithyananda

தரிசனம் என்பது இருப்பு மட்டத்தில் தொடர்பு கொள்ளும் நேரம். அந்த நேரத்திலாவது, உங்கள் மனத்தை விட்டுவிட்டு, இதய பூர்வமாக இருங்கள், உங்களுக்குள்ளே சில அனுபவங்கள் நிகழ அனுமதியுங்கள்.

உங்கள் மனத்தின் மூலமாக, நீங்கள் பிரபஞ்சத்துடன் ஒன்றிணைய முடியாது. அது உங்கள் இதயத்தின் மூலமாக அல்லது இருப்பு மூலமாகவே நிகழ முடியும். எந்தவிதமான இணைத்தலுமே நமது இதயத்தின் மூலமாக அல்லது இருப்பு மூலமாகவே நிகழ முடியும்.

தரிசனத்தின்போது குரு, உங்கள் கண்களுக்குள்ளே ஊடுருவிப் பார்க்கும் பொழுது, நீங்கள் அவருக்குள் உங்கள் பிரதிபலிப்பைக் காணமுடியும். அவர், தம் பார்வையாலும், தொடுதலாலும், அரவணைப்பினாலும் உங்களைக் குணப்படுத்துகிறார். ஒவ்வொரு தரிசனத்தின் பின்பும் நீங்கள், மேலும் சிறிது மலர்ந்து (வளர்ச்சிபெற்று) வேறு மனிதராகத் திரும்புவீர்கள்.

முயற்சிகளைக் கைவிடுங்கள், அதுவே போதுமானது!

ஒவ்வொரு தரிசனமும் வித்தியாசமானவையே. பிரபஞ்ச இருப்புத்தன்மை அல்லது இயற்கையின் அழகே, அது ஒருபோதும், மீண்டும் அதேபோல் நிகழ்வதில்லை என்பதே. அதனால்தான், கடவுள் ஒரு கலைஞர், அவர் ஒரு பொறியாளர் அல்ல என சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு தரிசனமும் வித்தியாசமான முறையில், ஒரு புதிய பரிமாணத்துடன், புதிய உத்வேகத்துடன், புதிய தெரியாத ஊக்கத்துடன் வெளிப்படுகிறது. ஒவ்வொரு தரிசனமும், இதுவே சிறப்பானது எனத் தோன்றும், அடுத்த தரிசனம்வரை!

ஆனந்த தரிசன நேரத்தில் குருவிடமிருந்து பெற்ற சக்தியானது, நம்மை ஆசைகளற்ற நிலைக்குக் கொண்டுசென்றுவிட முடியும். நாம் அன்புடனும், திறந்த மனத்துடனும் இருந்தால், நம்மை அது பல சிறந்த வழிகளில் உணர்வுமாற்றம் பெறச்செய்துவிட முடியும்.

உறுதியான பட்டறிவு ரீதியான புரிதல் மற்றும் தியானத்தின் மூலமாக முயற்சி செய்து, ஆசைகளற்ற மனநிலையை அடைய முடியும். ஆனால், தரிசன நேரத்தில், குருவின் கருணை மட்டுமே, உங்களை நேரடியாக ஆசைகளற்ற நிலைக்கு எடுத்துச்சென்றுவிட முடியும்.

நீங்கள் முழுமையாக, மகிழ்ச்சியாலும் நன்றி உணர்வாலும் நிரம்பப் பெற்று, நிகழ்காலத்தில் இருக்க முடியுமானால், சக்தி உங்களுக்குள் ஊடுருவிச் செல்ல முடியும். உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக்

> குரு,
> கேட்பவருடைய
> இருப்புக்குள்
> ஊடுருவி நோக்கி,
> ‘கேட்டவருக்கே’
> பதிலளிக்கிறார்,
> ‘கேள்விக்கு’ அல்ல.

கொள்ள உதவுவது மட்டுமல்லாமல், உங்களை, அதையும் கடந்து, ஆசைகளற்ற நிலைக்குக் கொண்டுசெல்லும். முழுமையான மகிழ்ச்சியில் இருப்பது என்பது குறிப்பாக எதன்மீதும் அல்லாமல், ஒரு தீவிரமான விருப்ப நிலையில் இருப்பதே!

அது, குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதைக் குறித்தும் அல்லாத தீவிர ஆசை. இந்நிலையில், நீங்கள் உள்வாங்கும் தன்மையுடனும், திறந்தமனத்துடனும் குருவினிடுத்து இருப்பீர்கள். நீங்கள் இதற்காக எந்தவிதமான முயற்சியையும் செய்ய வேண்டாம், உங்களுடைய முயற்சிகளைக் கைவிட வேண்டும், அவ்வளவுதான்! பின்பு, மற்ற அனைத்தையும் பிரபஞ்ச சக்தியே கவனித்துக் கொள்ளும். சக்தி நுண்ணறிவுள்ளது. நீங்கள் அனுமதித்தால் போதும், பிரபஞ்ச இருப்பு சக்தி உங்களுக்குள் பாய்ந்து, தேவையானவற்றைச் செய்துவிடும்.

தார்ச்'ந் என்பது ஒரு தெளிவான காட்சியைப் பெறுதல், 'பளீரென' தெளிவைப் பெறுதல். அது, மங்கலாக அல்லாமல் தெளிவாகப் பார்ப்பது. தரிசனத்தின்போது வெளிப்படும் சக்தியானது, இருப்பு நிலையில் அரிய அற்புதங்களை நிகழ்த்த வல்லது.

> பிரபஞ்ச இருப்புத்தன்மை
> அல்லது
> இயற்கையின் அழகே,
> அது ஒருபோதும், மீண்டும்
> அதேபோல் நிகழ்வதில்லை
> என்பதே.

தரிசனத்தின்பொழுது தேவையான விழிப்புணர்வை உங்களுக்குள் கொண்டு வந்தீர்களானால், பிரபஞ்சக் கடலின் பிரமாண்டத்தினுடைய ஒரு காட்சியைப் பெறலாம்: உருவாக்கப்பட்ட உற்சாகம், பாடல்கள் மற்றும் நடனங்களுக்கு இடையினிலும், அமைதிக் குளத்தில் மூழ்கியிருப்பதை உணரலாம். இந்த மொத்த நிகழ்விலும், நம்மைச் சூழ்ந்திருக்கும் பலத்த சத்தங்களுக்கு இடையிலும், அதிர்வுள்ள மௌனத்தின் மைய இழையை உணரலாம்.

பின்பு நீங்கள், ‘மையத்தில் நிலைகொள்வது’ மற்றும் ‘அனைத்தையும் உள்ளடக்கியிருப்பது’ என்பவற்றின் மையக் கருத்தினைப் புரிந்துகொள்வீர்கள், எதையும் ஒதுக்கித் தள்ளாமலேயே அல்லது துறக்காமலேயே அனைத்தையும் அரவணைத்துக் கொண்டு, ஆனால் அதே சமயத்தில், மையத்தில் நிலைகொண்டு, மொத்தக் காட்சியையும்

ஒரு ஆனந்தமயமான பார்வையாளராக
இருந்து ரசிப்பது எவ்வாறு என்பதைப்
புரிந்துகொள்வீர்கள்!

தரிசனத்திற்குப் பிறகும், ஒவ்வொரு
தீக்ஷைக்குப் பிறகும், ஒருவருடைய
புத்திசாலித்தனம் அதிகரிக்கிறது; ஆசைகள்,
தெளிவு பெறுகின்றன, ஒன்று, அவை
நிறைவடைகின்றன அல்லது உங்கள்
அமைப்பிலிருந்து மறைந்துவிடுகின்றன.

குருவிடம்
நீங்கள் எதையும்
கேட்க அவசியமில்லை.
சரணாகதியே
அனைத்தையும்
நிறைவேற்றிடும்!

குருவிடம் உங்களை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்கிறீர்கள். அவர் எப்போதுமே உங்கள் இருப்பு நிலையைத்தான் பார்க்கிறார். நீங்கள் அவரிடம் எதைக் கேட்க முயற்சி செய்தாலும், அது நேரத்தை வீணாக்குவதாகும். ஏனெனில், அந்த நேரத்தில் நீங்கள் உங்களுடைய ஆழமான குழப்பத்தையும் அறியாமையையுமே வெளிப்படுத்துவீர்கள். உங்களுக்கு என்ன தேவை என்பது பற்றி உங்களுக்கே தெரியாது.

உங்களை இன்னும் மேலான நிலைக்கு எடுத்துச்செல்ல, என்ன செய்ய வேண்டுமென்பது குரு அறிவார். நீங்கள் எதையும் அவரிடம் கேட்க அவசியமில்லை. சரணாகதியே அனைத்தையும் நிறைவேற்றிடும்!

அனுபவம் உங்களுக்குள் ஊடுருவவும், அது தன்னை மகிழ்ச்சியான வழிகளில் வெளிப்படுத்தவும் நீங்கள் அனுமதித்தால், நீங்கள் முழுமையாகவும், பரவசமாகவும் இருக்க முடியுமானால், நீங்கள் சக்தியுடன் இசைந்து இருக்க முடியுமானால், அப்போது நீங்கள், தானாகவே, இதுவரை சேர்த்து வைத்திருந்த வார்த்தைகளும் எண்ணங்களும் இன்றி வெறுமை ஆகிவிடுவீர்கள். அதன்பின்பு தரிசனத்திற்கு குரு அருகில் செல்லும்பொழுது, உங்களுள் வெற்றிடமும் மகிழ்ச்சியும் மட்டுமே இருக்கும்.

அந்த மனநிலையில், நீங்கள் உங்களுக்குள் அமைதியாக இருப்பீர்கள். நீங்கள் வரவேற்கும் தன்மையடனும், அன்படனும் இருப்பீர்கள். நீங்கள் ஆனந்தம்பொங்கும் உள் அமைதியுடன் இருப்பீர்கள்.

அந்த சமயத்தில்தான், சக்தியானது ஒரு ஒளிக்கற்றையைப்போல், ஒரு மின்னலைப்போல் உங்களுக்குள் நுழைய முடியும், அது ஆழமாகச்சென்று விதைநிலையில் தொட்டு, நீங்கள் அறியாத வழிகளிலும் உங்களை உணர்வுமாற்றம் பெறச்செய்துவிடும்.

குரு வடிவின் ஒவ்வொரு அங்குலத்தின் மூலமாகவும், பிரபஞ்ச இருப்பு சக்தி தன்னை வெளிப்படுத்தி, பொங்கிப் பிரவகிக்கிறது. அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதே, தெய்விகத்தன்மையின் கண நேர அனுபவத்தைத் தரும்.

நீங்கள் இந்த அனுபவத்தில் உங்களை எந்தளவுக்குக் கரைய அனுமதிக்கிறீர்களோ, அந்தளவுக்கு நீங்கள் அதனோடு இயைந்து பிரதிபலிப்பீர்கள்; பிரபஞ்ச சக்தியின் பிரவாகத்தாலும் தொடுதலாலும், நீங்கள் மேலும் விழிப்படைவீர்கள்.

நாற்காலியில் சாய்ந்தமர்ந்து ஓய்வெடுக்கும் நேரமல்ல இது!

உங்களுடைய போலியான அடையாளங்களையும், சமுதாய கட்டுறு மனப்பாங்குகளையும் உடைத்தெறிந்துவிட்டு கொண்டாடுவதற்கு ஏற்ற தருணம் இது. இது, உங்களுடைய இருக்கை கயிறுகளை இறுகக் கட்டிக்கொண்டு, நாற்காலியில் சாய்ந்தமர்ந்து ஓய்வெடுக்கும் நேரமல்ல. சக்தி வந்து உங்களைத் தொடும், ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள நீங்கள் திறந்த மனத்தினராக இருக்க மாட்டீர்கள்.

தரிசனநேரத்தில் குருவின் அருகில் இருப்பதே, அவனோடு (பிரபஞ்ச விழிப்புணர்வோடு) நீங்கள் இணைந்துவிட உதவிடும். இது, பிரபஞ்ச விழிப்புணர்வையும் உங்கள் தனிமனித விழிப்புணர்வையும் சந்திக்க வைக்கும். ஒரு ஆறு எப்படி ஓடிக் கடலில் சங்கமமாகிறதோ, அதுபோல பிரபஞ்ச சமுத்திரமானவரும், வடிவமில்லாததின் வடிவமாக இருப்பவரும், பிரபஞ்ச விழிப்புணர்வானவருமான குருவுள் நீங்கள் கரைந்து சங்கமித்துவிடுகிறீர்கள்.

அதனால்தான் தர்சங் பெற்ற பிறகு நீங்கள் தளர்வகவும், புத்துணர்ச்சி பெற்றவர்களாகவும் உணர்கிறீர்கள். சில சமயங்களில் சத்சங் நீண்டநேரத்திற்கு இரவு முழுவதும் நடக்கும். ஆனாலும், நீங்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறீர்கள். விழிப்புணர்வில் ஏற்படும் மாற்றம், உங்களை ஓர் உயர் தளத்திற்கு எடுத்துச் செல்லும்.

தரிசன நேரத்தில், ஒருவர் குருவின் அருகில் இருக்கும்போது, விழிப்பற்ற தளத்திலுள்ள பயங்கள், குற்றவுணர்ச்சிகள், ஆசைகள், ஆழ்ந்த அமைதி, ஆனந்தக் கண்ணீர் போன்றவை மேலெழுந்து வரும். எதனால் இப்படி நேருகின்றன என்று ஒருவர் அறியாமல் இருக்கலாம், ஒருவர் குருவின் ஸாந்நித்யத்தில் இருப்பதனாலேயே, இவை ஆழமான விழிப்பற்ற அடுக்குகளிலிருந்து மேலெழுந்து வருகின்றன.

அந்த உணர்ச்சிகளை அடக்கவோ அல்லது உள்ளேயே அழுத்தி வைக்கவோ வேண்டிய அவசியமில்லை. குருவின் ஸாந்நித்யத்தில் அவை சுதந்திரமாக வெளிவர அனுமதித்துவிட வேண்டும். அவை முழுமையாக வெளிவரட்டும்.

உங்களால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதனவெல்லாம் உணர்ச்சிகளாக வெளிவருகின்றன. அவையனைத்தும், நீங்களே அறியாத, ஆயினும் உங்களுக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கும், உங்களுக்குள் ஆழமாகப் பதிந்துள்ள விழிப்புணர்வற் நினைவுகளே. இப்படிப்பட்ட நினைவுப்பதிவுகளிலிருந்து விடுபட்டு வெளியே வருவதற்கான, மிக அரியதொரு சந்தர்ப்பம் இது.

உணர்ச்சிகளை அடக்கவோ அல்லது உள்ளே அழுத்தி வைக்கவோ வேண்டிய அவசியமில்லை. குருவின் ஸாந்நித்யத்தில் அவை சுதந்திரமாக வெளிவர அனுமதித்துவிட வேண்டும்.

அந்த எல்லா உணர்ச்சிகளும் வேரோடு களையப்படுகின்றன. குருவின் பொங்குகிற கருணை அவற்றை முழுமையாக அழித்துவிடுகிறது. நீங்கள் வாய்ப்பளித்தால்தான், நீங்கள் பல வருடங்களாகக் கட்டி வைத்திருக்கின்ற, அடக்கப்பட்ட கட்டமைப்பை உடைத்தெறிய முடியும்.

தரிசன நேரத்தில் எது நிகழ்ந்தாலும், அது முழுமையிலிருந்து நிகழ்கிறது. நீங்கள்

கைகளைத் தட்டுவீர்கள், நடனமாடுவீர்கள்,
எந்தக் காரணமுமின்றி அழவோ சிரிக்கவோ
செய்வீர்கள். இது, உங்களுக்குள்
பொங்கிப்பெருகும் உணர்ச்சிகளின்
முழுமையான வெளிப்பாட்டால்
நிகழ்கிறது. சிரிப்போ கண்ணீரோ, அவை
குறிப்பிட்ட எந்த மகிழ்ச்சியினாலோ
அல்லது துக்கத்தினாலோ வருவதல்ல.
அவை உள்ளிருந்து பொங்கி வெளிவரும்
உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளே.

இருப்பு, தன்னைத்தானே சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்வதற்கு, மனம் ஒருபோதும் வாய்ப்பளிப்பதில்லை. மனம், அதை அடக்கியாள்கிறது. இருப்பு, தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும் நேரம் இதுவே. அவ்வாறு நிகழும்போது, உணர்ச்சி வெளிப்பாடுகளை, தர்க்கத்தின் எல்லைக்குள் கொண்டுவர முடியாது. தூய்மையான முழுமை, தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்கிறது; அவ்வளவுதான்.

இருப்பு,
தன்னைத்தானே
சுதந்திரமாக வெளிப்படுத்திக்
கொள்வதற்கு,
மனம் ஒருபோதும்
வாய்ப்பளிப்பதில்லை.

பொதுவாக நீங்கள் நினைப்பதுபோல், நீங்கள் ஒருங்கிணைக்கப்பட்டவர் அல்ல. உங்களுக்குள்ளேயே, ஒன்றொடொன்று போராடிக் கொண்டிருக்கும் பற்பல பகுதிகளின் தொகுப்பே நீங்கள். நீங்கள், இக்கணம் ஒன்றை விரும்புவீர்கள். அடுத்த கணமே, வேறொன்றை விரும்புவீர்கள். ஒரு கணம், ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி உங்களுக்குள்ளிருந்து வெளிப்படும், அடுத்த கணமே, அதற்கு நேரெதிரிடையான உணர்ச்சி மேலோங்கும். நீங்கள், உள்ளே குழப்பத்தின் உச்சியில் இருந்தாலும், வெளியே, அமைதியாக இருப்பது போல் காட்டிக்கொள்வீர்கள்.

Figure

அந்த உள்மனப் போராட்டங்களை விட்டுவிட்டு, என்ன தேவையோ அதைச் செய்ய குருவை அனுமதிக்கும் நேரம் இதுவே. அவர் உங்களை அறிவார். நீங்கள், தளர்வாக, அமைதியாக நிகழ்வதை அனுமதித்தாலே போதும், குரு உங்களுக்கு எது தேவையோ அதைச் செய்துவிடுவார். நீங்கள், இதுவரை கற்றதை, ஏற்கனவே சேர்த்துவைத்திருக்கும் தீர்ப்புகளை, உங்களைப் பற்றி நீங்களே கொண்டிருக்கும் அபிப்பிராயங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, குருவின் உணர்வுமாற்ற அன்பிற்கு, உங்களைத் திறந்து வைத்திருக்கும் நேரம் தர்ஷு ஆகும்.

சக்த தரிசனம், எதுவெல்லாம் ‘நீங்கள்’ அல்லவோ, அதையெல்லாம் அழித்துவிடும்!

ஒவ்வொரு தரிசனத்தின் போதும், குரு உங்களது இருப்புக்கு ஒளியேற்றுகிறார். அவனது (தெய்விகத்தின்) ஒளியையே உங்களுக்குத் தருகிறார். உங்களுக்கு, அவனிடமிருந்து (தெய்விகத்திடமிருந்து) உண்மையான மாற்றப்படுதல் இந்தச் சமயத்தில்தான் நிகழ்கிறது! குரு உங்களுக்கு இறுதி நிலையைத் தருகிறார்.

ஒருமுறை உங்களுக்குள் ஒளியேற்றப்பட்டுவிட்டால், நீங்கள் எங்குச் சென்றாலும், எங்கிருந்தாலும், எதைச் செய்தாலும் அதை உங்கள் தீபமாக எடுத்துச்செல்ல முடியும். ஒரேயொரு தொடுதலே போதுமானது. எந்தவிதமான அறிவும், அனுபவமும், விளக்கமும் இல்லாமலேயே அதை அறிந்துகொள்வதற்கு இது ஒரு அருமையான வாய்ப்பு.

ஒவ்வொரு
தரிசனத்தின்போதும்,
குரு
உங்களது இருப்புக்கு
ஒளியேற்றுகிறார்.
அவனது
(தெய்விகத்தின்)
ஒளியையே
உங்களுக்குத் தருகிறார்.

சக்தியானது, உங்களை ஆழமாகத் தொட்டிருந்தால், உங்கள் வாழ்க்கையே என்றென்றைக்கும் உணர்வுமாற்றம் பெற்றுவிடும். உங்களுக்குள் உருவாக்கப்பட்ட ‘வெளி’யுள் விழிப்புணர்வு நுழைந்து, உங்களுடைய கேள்விகளையெல்லாம் கரைத்துவிடுகிறது.

தெய்விகத்தை அடைவதற்குப் பல
வழிகள் உள்ளன. உள்ளே நுழைந்தபின்,
அனுபவம் ஒரே மாதிரியானதாகவே
இருக்கும். தர்ஷு, சாத்தியமான எல்லாக்
கதவுகளையும் திறந்துவிடுகிறது. இது ஒரு
உன்னதமான அனுபவத்திற்கான அழைப்பு.

ஒவ்வொருவருடைய கதவும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும். ஆனால், எந்தக் கதவு என்பது ஒரு பொருட்டல்ல, நீங்கள் ஒன்றைக் கண்டுபிடிக்கும்வரை.

தரிசனத்தின்போது வெளிப்படும் சக்தியானது மிகவும் ஆழமானதாக இருக்கும். அது உங்களுடைய புத்திசாலித்தனத்தைத் தூண்டி, உங்களை பட்டறிவு நிலையிலிருந்து உள்ளுணர்வு நிலைக்கு எடுத்துச்செல்லும். பெரும்பாலும் நீங்கள், உங்கள் மனத்தின் ஆழமான விழிப்பற்ற அமைப்புகளில் சிக்கியுள்ளீர்கள். அது மீண்டும் மீண்டும் உங்களை, துக்கம் மற்றும் விழிப்பற்ற நிலையில் முடிவுகள் எடுப்பது போன்ற வழக்கமான பாதை நோக்கியே இழுக்கிறது.

ஸ்ரீகிருஷ்ணர், தேர்ந்தெடுப்பதில் வல்லவர். அவரைச் சுற்றியிருந்தவர்களில் அர்ஜுனனை மட்டுமே, தம்முடைய சக்தியை அளிப்பதற்குத் தேர்ந்தெடுத்தார்.

தரிசனத்தின்போது கிடைக்கும் சக்தியானது, உங்களுக்குள் உள்ளுணர்வு ஆற்றலைத் திறந்துவிடக் கூடியது. இந்த உள்ளுணர்வின் ஆற்றலினால், உங்களது இருப்பின் சக்தியைத் தட்டியெழுப்பி, உங்களது வாழ்வின் எந்தச் சூழலிலும் சரியான முடிவுகள் எடுப்பதற்கு அதை உபயோகிக்கலாம்.

தரிசன சமயத்தில், உங்களுக்குள் நிகழ்ந்ததின் ஆழத்தையும், உங்களுக்குக் கிடைத்த பரிசின் மதிப்பையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். இருப்பினும், திறந்த மனத்துடன் இருக்க முயற்சிசெய்யுங்கள், அதை ஏற்று, அனுபவித்து, மகிழ்வதற்கு முடிவுசெய்யுங்கள். மற்றது தானே நிகழும்.

ஆனந்த தர்சந் என்பது குருவின் அருகாமையில் இருக்கும் சமயம், அவனிடமிருந்து சக்தி உங்களுக்குள் நேரிடையாகப் பாய்வதை உணர்வதாகும். தர்சந், எதுவெல்லாம் 'நீங்கள்' அல்லவோ, அதை அழித்துவிடும்: உங்களுக்குள் மாயையை, மதிமயக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் அனைத்தையும் மற்றும் உங்களுக்குள் துக்கம் தோன்றுவதற்குக் காரணியான, பிறரிடமிருந்து கடன்வாங்கப்பட்ட ஆசைகளையும் ஆனந்த தர்சந் அழித்துவிடும். தரிசன நேரம் என்பது நீங்கள் பிரபஞ்ச விழிப்புணர்வுடன் ஒன்றி, ஆனந்தக் கடலில் கரைந்துவிடுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பு.

ஆனந்த தர்ச'நம் என்னும் சக்தி விளையாட்டு, குருவினிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒரு தூய பரிசு. அது, ஆழமான கருணையிலிருந்து மலரும் ஒரு நிபந்தனையற்ற பரிசு.

ஸ்ரீகிருஷ்ணர், தேர்ந்தெடுப்பதில் வல்லவர். அவரைச் சுற்றியிருந்தவர்களில் அர்ஜூனனை மட்டுமே, தம்முடைய சக்தியை அளிப்பதற்குத் தேர்ந்தெடுத்தார்.

நான் அப்படியல்ல. அனைவரையும் வரவேற்கிறேன். காலம் இப்போது வேறுவிதமாக இருக்கிறது. தேவைகளும் வித்தியாசமாகவே இருக்கின்றன.

ஒருவர், எவ்வளவு அதிகமான மக்களை, பராசக்தியை நோக்கி வழிநடத்துகிறாரோ, பிரபஞ்ச இருப்பு சக்தியின் கணநேரக் காட்சியைக் காண்பதற்குச் சக்தியூட்டுகிறாரோ, அந்தளவுக்கு, இப்பூவுலகிற்கு அதிகமான அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அதுவே என்னுடைய நோக்கம். பராசக்தி, அதை நோக்கியே என்னை வழிநடத்துகிறாள்.

Flute playing hands