KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/ஸம்ஸ்காரங்களே உங்களை இயக்குகின்றனSign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

ஸம்ஸ்காரங்களே உங்களை இயக்குகின்றன

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

18.59 உன்னுடைய அஹங்காரத்தின் காரணமாக, 'நான் போர்புரியேன்'
என்று நீ தீர்மானித்தால், உன்னுடைய தீர்மானம் பயனற்றது.
உன்னுடைய இயல்பான குணமே உன்னைப் போரில்
ஈடுபடுத்திவிடும்.

18.60 குந்தி புத்திரா, உன்னுடைய இயல்பான மனப்பாங்குகளினால்
கட்டுப்படுத்தப்படுபவனாய் இருக்கிறாய். மதிமயக்கத்தின்
காரணமாக நீ செய்ய வேண்டாமென்று தீர்மானித்த செயலை,
அது உன்னுடைய விருப்பத்திற்கு மாறாக இருந்தாலுங்கூட,
செய்தே தீருவாய்!

18.61 ஒவ்வொருவருடைய இதயத்திலும் வீற்றிருக்கின்ற பரமாத்மா
எல்லா ஜீவன்களின் செயல்களையும் வழிநடத்துகிறான்.
அவனுடைய மாயா சக்தியின் முன் அனைத்துமே
இயந்திரங்களைப்போல செயல்படுகின்றன.

இருப்பு சக்தியின் கைகளில், நீங்கள் ஒரு பொம்மையே!

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இறுதி தீர்மானத்தைப் பகர்கிறார்.

அவர் சொல்கிறார்: "உனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அர்ஜுனா, நீ போரிடத்தான் போகிறாய். உன்னுடைய மேலோட்டமான புத்திசாலித்தனத்தின் காரணமாக, 'நீ போரிடக்கூடாது' என்று உன்னுடைய அஹங்காரம் சொல்கிறது. உன்னுடைய ஆழமற்ற அறிவு உருவாக்கிய மாயை, உன் நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் ஆகிய இவர்களை எதிர்த்துப் போரிடக்கூடாது என்று உனக்கு அறிவுறுத்துகின்றது, அதன் கட்டுப்பாட்டில் நீ இருக்கிறாய். ஆனால், உன்னுடைய இயல்பும், உன்னுடைய க்ஷத்ரிய கட்டுறு மனப்பாங்கும் உன்னைப் போரிடத்தான் தூண்டும் என்பதை மறந்துவிட்டாய். இருப்பு சக்தியின் கைகளில், நீ ஒரு பொம்மையே! நீ போரிடத்தான் போகிறாய்!

இவை மிக அசாதாரணமான வார்த்தைகள், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நம் புத்திசாலித்தனம் எந்த அளவிற்கு இருந்தாலும், நம் விருப்பம் எதுவாக இருந்தாலும், நாம் நம் ஸம்ஸ்காரங்களால்தான் இயக்கப்படுவோம். தெய்விக சக்திதான் கர்மச் சக்கரம் என்னும் இயந்திரத்தை இயக்குகிறது. அதிலிருந்து தப்புவதற்கான வழி கிடையாது.

கேள்வி: இதுவரை கிருஷ்ணர், 'என்னிடம் சரணடைந்துவிடு, நான் உன்னை கவனித்துக்கொள்கிறேன் என்று சொல்லி வந்தார். ஆனால், உன்னுடைய கடந்தகால கட்டுறு மனப்பாங்கிலிருந்து தப்ப வழியே கிடையாது என்று இப்போது அவரே சொல்கிறார். இது என் நம்பிக்கையையே குலையச் செய்கிறதே?

தொடர்ந்து உங்களைக்
கட்டுப்படுத்தி வரும்
ஸம்ஸ்காரங்களை
ஏற்றுக்கொள்ளாமல்,
நீங்கள் அவற்றுக்கு
உங்கள் மறுப்பைத்
தெரிவிக்க முடியும்.

இது ஒரு அருமையான சந்தேகம்! கிருஷ்ணர், இந்தப் பதினெட்டு அத்தியாயங்களின் மூலமாக, அர்ஜுனனிடம் பேசி வந்ததெல்லாம், உங்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதற்குத்தான்!

ஆம், ஸம்ஸ்காரங்கள்தான் உங்களை இயக்குகின்றன. ப்ருஹதாரண்யக உபநிஷத் தெளிவாகக் கூறுவது இதுவே: உங்கள் ஆசைகள் எப்படியோ, அப்படித்தான் உங்கள் எண்ணங்களும் இருக்கும். உங்கள் எண்ணங்கள் எப்படியோ, அப்படித்தான் உங்கள் தீர்மானங்களும் இருக்கும். உங்கள் தீர்மானங்கள் எப்படியோ அப்படித்தான் உங்கள் செயல்கள் இருக்கும். உங்கள் செயல்கள் எப்படியோ, அப்படியே நீங்கள் உருவாகுகிறீர்கள்.

இயற்கையின் விதி, நம் நிறைவேறாத ஆசைகளைப் பூர்த்திசெய்வதற்காகவே நம்மை இயக்கும். நம் கடந்தகால கட்டுறு மனப்பாங்கே இந்த ஆசைகளை உயிர்ப்பிக்கிறது. அவை நம் விழிப்பற்ற மனத்தில் இருந்தாலும், நம்மால் அணுக முடியாததாக இருந்தாலும், அவையே, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவுசெய்கின்றன. நம்மால் இதைக்காண முடியாது, ஆனால், குருவானவர் இதைக் கண்டுபிடித்துவிடுகிறார். அதனால்தான் கிருஷ்ணர் இந்தத் துணிச்சலான அறிக்கையை விடுக்கிறார்.

இவையெல்லாமே உங்கள் மனத்திலிருந்துதான் துவங்குகின்றன. மனம்தான் ஆசைகளையே உருவாக்குகிறது. மனம்தான் ஸம்ஸ்காரங்களையே உருவாக்கி, அவற்றைச் சேமித்தும் வைத்துக்கொள்கிறது. நீங்கள், உங்கள் மனத்திற்குத் தலைவணங்க மறுக்க முடியும். தொடர்ந்து உங்களைக் கட்டுப்படுத்தி வரும் ஸம்ஸ்காரங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல், அவற்றுக்கு உங்கள் மறுப்பைத் தெரிவிக்க முடியும்.

அந்த ஸம்ஸ்காரங்களையே கரைத்துவிடவும் முடியும்! நமது முதல் நிலையாகிய ஆனந்த ஸ்பூரண தியான முகாமிலும், அடுத்து, நித்யானந்த ஸ்பூரண தியான முகாமிலும் முறையே அந்த ஸம்ஸ்காரங்களைப் பெருமளவில் குறைப்பதற்கும், அவற்றை நீக்கிவிடுவதற்குமான, தியான நுட்பங்களைக் கற்றுத்தருகிறோம். அதற்குடுத்த தியான முகாமான நித்ய தியான சிகிச்சையாளர் வகுப்பில், ஸம்ஸ்காரங்களை, தொடர்ந்து கரைப்பதற்கான நுட்பங்களைக் கற்றுத்தருகிறோம். கிருஷ்ணர், கீதையில் பேசியுள்ளவற்றின் அங்கமே, விரிவே இந்தத் தியான நுட்பங்கள்.

எல்லா தியான நுட்பங்களுமே உங்களை நிகழ்காலத்துக்குக் கொண்டுவந்து விடுகின்றன. நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய கற்பனைகளின் மேல் கொண்டுள்ள பற்றுதலைத் துறந்துவிடுகிறீர்கள். உங்களுடைய செயல்களின் விளைவுகளிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்கிறீர்கள். இது மட்டுமே, உங்களை ஸம்ஸ்கார தளைகளிலிருந்து விடுவிக்கும் பாதையில் வழிநடத்திச் செல்கிறது.

> நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய கற்பனைகளின் மேல் கொண்டுள்ள பற்றுதலைத் துறந்துவிடுகிறீர்கள்.

குருவிடம் சரணடைவதும், பிரபஞ்சத்தினிடம் சரணடைவதும், உங்கள் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால கர்மங்கள், வாசனைகள் மற்றும் ஸம்ஸ்கார தளைகளிலிருந்து உங்களை விடுவிக்கும் இறுதி நுட்பம்.

நான், எனது நித்ய தியான சிகிச்சையாளர்களிடம் சொல்வது இதுவே: ஒரு நபருக்கு தியான சிகிச்சை அளிக்கும்போது, நீங்கள், அந்த நபர் குணமடைந்துவிட வேண்டும் என்று பிரார்த்தனை செய்யக்கூடாது, அப்படிச் செய்யவும் முடியாது.

சிகிச்சைபெறும் நபருக்கு நேர்மறையான ஊக்கமூட்டும் வார்த்தைகள் தேவைப்பட்டால், நீங்கள் சொல்ல வேண்டியதெல்லாம் இதுவே: ‘எது நல்லதோ அது நடக்கட்டும்!’ அதுவே போதுமானது.

பிரபஞ்சத்திற்கு, தன்னுடைய சக்தியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிப்பதற்குரிய புத்திசாலித்தனமும் இருக்கிறது, சிகிச்சையளிப்பவருக்கு அது இல்லை. சிகிச்சையளிப்பவர் என்பவர் நோயாளியை, அந்தக் குணமளிக்கும் சக்தியுடன் இணைக்கும் ஒரு கருவியாக மட்டுமே இருக்கிறார்.

உதவி கோரி என்னிடம் வரும் மக்களிடம், நான் பொதுவாக இரண்டு செய்திகளில் ஒன்றைச் சொல்வேன். வெறும் பொருளுதவி, ஆரோக்கியம், செல்வம் இவற்றைக் கோரி வருகிறவர்களிடம், நான் சொல்வது: “ஆனந்தேஸ்வரரிடம் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்!” உண்மையான தேடலுடன் என்னிடம் வருகின்றவர்களிடத்திலும், மற்றும் இருப்பு நிலையில் என்னுடன் தொடர்பு கொண்டிருக்கும் எனது சீடர்களிடமும் பக்தர்களிடமும் நான் சொல்வது: "நான் பார்த்துக்கொள்கிறேன்!"

என்னுடைய சீடர்களிடம் இந்த வார்த்தைகளின் சக்தியைப் பற்றி கேட்டுப் பாருங்கள்.

முழுமையாக சரணடையும் மனோநிலையுடன் வருகின்றவர்களிடம் மட்டுமே நான் இதைச் சொல்கிறேன். அவர்கள் என்னிடம், "அருள்கூர்ந்து, என்னைப் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லுங்கள் ஸ்வாமிஜி," என்று சொல்லுமளவுக்கு எல்லையற்ற நம்பிக்கையை என்மீது கொண்டுள்ளனர்.

அவர்களுடைய பிரச்சினைகளையும் மன வலிகளையும் என்னிடம் இறக்கிவைத்துவிட்டால், அதற்குப் பிறகு அது அவர்களுடைய பாரம் அல்ல, அது என்னுடையதாகிவிடுகிறது என்பதை அவர்கள் தங்கள் இருப்புநிலையில் உணர்வார்கள். அந்தப் பிரச்சினைகள் முழுவதும் மறைந்தேவிட்டன என்பதில் ஒரு எள்ளளவு சந்தேகம்கூட அவர்கள் மனத்தில் இல்லை என்பதை ஆழமாக அறிந்திருக்கிறார்கள். உண்மையில், பலருக்கு, அவர்கள் என் சாந்நித்தியத்திலேயே இருந்தாக வேண்டுமென்ற உணர்வுகூட மறைந்துவிடுகிறது. அவர்களுடைய சரணாகதியும், அதிலிருந்து பிறந்த நம்பிக்கையும் அவ்வளவு ஆழமாக இருக்கிறது.

அவர்களுக்காக என்று நான் எதுவும் செய்வதில்லை. நான் செய்வதெல்லாம் ஒன்றே, பிரபஞ்சத்தினுடைய பெண்மை சக்தியாகிய தேவி பராசக்தியிடம் அவர்களுடைய பிரச்சினைகளையெல்லாம் சமர்ப்பித்து விடுகிறேன். அவ்வளவேதான். அவளுடைய கட்டளையில்லாமல் என்னால் ஒரு விரலைக்கூட அசைக்க முடியாது. அதனால் என்னால் என்ன செய்துவிட முடியும்? ஆனாலும் அவள் ஒவ்வொரு முறையும் உதவிக் கொண்டேதான் இருக்கிறாள். அவளுடைய கருணை அவ்வளவு ஆழமானது. இருப்புணர்வு

சரணாகதி,
உங்கள் கடந்தகால,
நிகழ்கால மற்றும்
எதிர்கால கர்மாக்கள்,
வாசனைகள் மற்றும்
ஸம்ஸ்கார துகள்களிலிருந்து
உங்களை விடுவிக்கும்
இறுதி நுட்பம்.

சரணடையும்பொழுது, அஹங்காரமும் மனமும் சரணடையும்பொழுது, அதன்பிறகு நிகழவேண்டியதை அவளே பார்த்துக்கொள்வாள். ஆனால், நீங்கள் அஹங்காரத்தால் நிறைந்திருந்தீர்களானால் அங்கே அவளுக்கு இடமில்லை.

அதனால், நான் என் தியான சிகிச்சையாளர்களிடம் சொல்வதெல்லாம், நீங்கள் சிகிச்சையை ஆரம்பிக்கும்பொழுது, உங்களுடைய ஆனந்தகந்த சக்கரத்தில் முழு கவனத்தையும் செலுத்தி, நீங்கள் பாதையை விட்டு விலகி எனக்கு வழிவிடுங்கள். அப்பொழுதுதான் நான் உள்ளே வர முடியும்.

பரமகுருவாகிய, ஜகத்குருவாகிய கிருஷ்ண பரமாத்மா, தம் கீதை முழுவதும் திரும்பத் திரும்பச் சொன்னது இதுவே. அவர், அவரிடம் உங்களைச் சரணடையச் சொல்வது அஹங்காரத்தினால் அல்ல, ஆழமான அவருடைய கருணையினால்தான்! அவரிடம் இல்லாத எதை நீங்கள் அவருக்குக் கொடுத்துவிட முடியும்?

உங்களுக்குத் தேவையானவற்றையெல்லாமே அவரால் மட்டுமே கொடுக்கமுடியும் என்றிருக்கும்பொழுது, வேறெங்கு போக விரும்புகிறீர்கள்? மிக முக்கியமாக, உங்களுடைய எல்லா துயரங்களிலிருந்தும் நீங்கள் மீள்வதற்கு, உங்களுக்கு என்னென்ன தேவையோ, அவை எல்லாவற்றையுமே அவரால் மட்டுமே கொடுக்க முடியும். உங்களுக்காக இதை வேறு யார் செய்ய முடியும்? வேறு யாருமே செய்ய முடியாது.

நம்பிக்கையை இழக்காதீர்கள். அப்படிச் செய்வதற்கு அவசியமேயில்லை. கிருஷ்ணர் ஓர் வழிகாட்டும் தீப்பந்தம், கலங்கரை விளக்கம். உங்களுக்குத் தேவையானதெல்லாம் அவரிடம் ஆழ்ந்த நம்பிக்கை மட்டுமே.

illustration