அஹங்காரத்தைக் கீழேபோடுங்கள், ஆன்மிகத்தில் மேலே உயருங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நாம் இரு விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலாவது, உங்கள் மனம் சொல்வதைப் பின்பற்றுவது. இரண்டாவது, குரு சொல்வதைப் பின்பற்றாமலிருப்பது.
மற்றொரு மனிதரை, தம்மைவிட உயர்ந்தவர் என்று ஒப்புக்கொள்வதென்பது பலருக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. அது, தங்களுடைய சுய மரியாதைக்கு இழுக்கு என்றும், அது நாகரிகமற்ற செயல் என்றும் நினைக்கிறார்கள். குரு எப்போதும் தங்களை எதிர்ப்பவராகவே இருக்கிறார் என்று நினைத்துவிடுவதால், அங்கே சரணடைவதைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை.
> நீங்கள் சரணடையும்
> தருணத்தில்தான்,
> நான் மற்றும் எனது என்கிற
> உள்ளுணர்ச்சிகளின்
> ஆளுமை இல்லாமலேயே
> வாழ முடியும் என்பதைப்
> புரிந்துகொள்வீர்கள்.
காலில் வலி உள்ள ஒருவருக்கு நான்
தியான சிகிச்சை கொடுக்க நேர்ந்தால்,
நான் குனிந்து அவருடைய காலைத்
தொட்டுத்தான் சிகிச்சை அளிப்பேன்.
அதற்கு யாரோ ஒருவர் என்னைக் கேட்டார்:
ஸ்வாமிஜி, உங்களால் எப்படி இன்னொருவர்
காலைத் தொட முடிகிறது? உங்களை
நீங்களே தாழ்த்திக்கொள்கிறீர்களே?
நான் சொன்னேன்: “நான் ஒருவருடைய காலைத் தொடும்பொழுது அவரை என் நிலைக்கு உயர்த்துகிறேன். ஆனால், நீங்கள் என் காலில் விழும்போது, உங்கள் அஹங்காரத்தை சரணாகதி செய்கிறீர்கள்.”
நீங்கள் மற்றவர் காலில் விழும்போது, உங்களுடைய அஹங்காரத்தைச் சரண் செய்கிறீர்கள். அது உங்களுக்கு மிகவும் நல்லதே. நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது முக்கியம் அல்ல. ஒரு கல்லிடமோ ஒரு மனிதரிடமோ உங்கள் அஹங்காரத்தை சரணாகதி செய்யும்போது, அது உங்களை ஆன்மிகத்தில் உயரச் செய்கிறது. இது, ஒரு முழுமையான ஸத்யம். ஒரு ஜ்ஞானகுருவினிடம்தான் சரணடைய வேண்டுமென நினைத்து, நீங்கள் அப்படி ஒரு நபரைத் தேடுவதற்கும், தேர்வுசெய்வதற்கும் உங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலவிட வேண்டிய தேவையே இல்லை.
ஒருவர் என்னிடம் கேட்டார்: சரணாகதி என்று சொல்லும்போது நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்?
எந்தவொரு நிபந்தனையுமின்றி, உங்களால் அன்புசெலுத்த முடிந்த ஒரு நபரைக் காணும்போது, அந்த நபரை நீங்கள் அன்புசெலுத்துவது வெளிப்படையாகத் தெரிந்தாலும், அதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையெனும் நிலையையே சரணாகதி என்கிறேன். அப்பொழுது உங்களுடைய தனிப்பட்ட அடையாளம் அவரிடம் கரைந்து கலந்துவிடுகிறது.
நான் அவர்களிடம் சொல்வதுண்டு: கடவுள் உங்களிடம், 'இந்த உலகம் முழுவதும் அழியப்போகிறது. நீயும் இன்னும் ஒரு நபரும் மட்டுமே உயிரோடு இருக்க முடியும். அந்த இன்னொரு நபரை நீயே தேர்வுசெய்துகொள்ளலாம்' என்று சொன்னால், நீங்கள் யாரைத் தேர்ந் தெடுப்பீர்கள்? யாருடன் இருக்க விரும்புவீர்கள்? அந்த நபரிடம்தான் நீங்கள் சரணடைந்திருக்கிறீர்கள்!
வேத மந்திரங்கள், நமஹ என்னும் சொல்லோடு முடிகின்றன. அதன் அர்த்தம் என்ன? நான் உம்மிடம் சரணடைகிறேன் என்பதே அதன் அர்த்தம்.
ஒவ்வொரு முறை வேத பாராயணம் செய்யும்பொழுதும், 'நான் உம்மிடம் சரணடைகிறேன், என் இறைவனே' என்றுதான் நீங்கள் சொல்கிறீர்கள். இந்த அளவுக்கு, உங்கள் அஹங்காரத்தை முழுமையாக அழிக்கக்கூடிய பிரார்த்தனை முறை வேறொன்று இருக்கிறதா?

குரு, ஒரு மனிதப் பிறவியாகவும், இஷ்ட தெய்வம், ஒரு கல்லாகவும் இருப்பதனால், நீங்கள் இவர்களிடத்தில் சரணடைய மறுக்கிறீர்கள். நீங்களே ஒரு தனிப்பட்ட சுதந்திரமான குரு என்று உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் குருவிடமோ, இஷ்ட தெய்வத்திடமோ சரணடையவில்லையென்றால், நீங்கள் வேறு யாரோ ஒருவரிடம் பணத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ அல்லது காமத்திற்காகவோ சரணடைவீர்கள். இவற்றுள் ஏதாவதுஒன்று நிச்சயம் நிகழும்.
மக்கள், யாராவது ஒருவர் பின்னேயே
எப்பொழுதும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்;
ஏனெனில், அந்த நபர் தம்மிடம்
அவர்களுக்குத் தேவையான ஏதோ
ஒன்றைக் கொண்டுள்ளார்.
ஒரு நபர் உயர் விழிப்புணர்வு நிலையிலிருக்கிறார், அவரால் அதே விழிப்புணர்வு நிலைக்கு உங்களையும் அழைத்துச்செல்ல முடியும் என்ற, புத்திசாலித்தனமான புரிதலின் காரணமாக, அந்த நபரைப் பின்பற்றுவதும், அவரிடம் சரணடைவதும் எவ்வளவு அறிவார்த்தமான செயல்!
நாம் ஏன் மற்றொருவரிடம் சரணடையத் தயங்குகிறோம்? ஏனெனில், நாம் நம் மனதாலும் புலன்களாலும் சிறை வைக்கப்பட்டிருக்கிறோம். நாம் இப்போது, சிறைக்கைதிகளாக இருக்கிறோம்.

நம் மனமும் புலன்களும், நமக்காக உருவாக்கிக்கொடுத்த நம்முடைய தனிப்பட்ட அடையாளத்தை இழந்துவிடுவோமா என்று அஞ்சுகிறோம். அந்த அடையாளத்தைத் துறக்க அஞ்சுகிறோம். அந்த அடையாளத்திடமும் அஹங்காரத்திடமும் நாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை, விசுவாசத்தை, பக்தியை வேறு ஒருவரிடம் செலுத்துவதற்கு, நம் மனம் விடுவதில்லை; அதை எதிர்த்து அது போராடுகிறது.
நீங்கள், உங்கள் புலன்களின் அடிமைதானே தவிர, நீங்கள் கற்பனைசெய்வதுபோல், உங்களுடைய விதியை நிர்ணயிக்கும் தலைவனல்ல என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள்தான் உங்களின் விதியை நிர்ணயிக்கும் தலைவர் என்கின்ற உங்களின் தவறான நம்பிக்கையிலிருந்தே, உங்கள் வலிகளும் துயரங்களும் தோன்றுகின்றன
என்பதைப் புரிந்துகொண்டு, எச்சரிக்கையாக
இருங்கள். ஏனென்றால், நீங்கள்
உங்கள் புலன்களின் அடிமையாகத்தான்
இருக்கிறீர்கள் என்பதை ஒருமுறை
உணர்ந்து கொண்டுவிட்டால், உடனே
ஒரு மாற்றுவழியைத் தேடிச் செல்வீர்கள்.
நீங்கள் பின்பு, இதுவரை எல்லாச் சிறந்த குருமார்களும் சொன்னதைப் புரிந்துகொள்கிறீர்கள்: "நான் சொல்வதை நீங்கள் பின்பற்றினால், என்ன நிகழ்ந்தாலும், நான் உங்களைப் பாதுகாப்பேன். நீங்கள் அப்படி செய்யாது, உங்கள் மனத்தைப் பின்பற்றினால், நீங்கள் அழிவிற்குள்ளாவீர்கள்."
ீீ கீதையின் ஒரு ஸ்லோகத்தையாவது, கிருஷ்ணருடைய ஒரு வாசகத்தையாவது நன்கு, முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள்!
பக்தியும், ஞானமும் வேறு வேறு அல்ல
கேள்வி: ஸ்வாமிஜி, என் சாரத்தை நன்கு புரிந்துகொண்ட ஒருவர் என்னுடன் ஐக்கியமாகிவிடுகிறார். அதுவே பக்தி, என்று கிருஷ்ணர் சொல்கிறார். ஞானம் எப்படி பக்தியாக முடியும்?
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், பக்தியும், ஞானமும் வேறு வேறு அல்ல. பக்தி எங்கிருக்கிறதோ, அங்கு ஞானமும் இருக்கும். உண்மையான ஞானம் எங்கிருக்கிறதோ அங்கு பக்தியும் இருக்கும்.
கிருஷ்ணர், ஞானம் என்று சொல்லும்போது, வெறும் பயனற்ற பட்டறிவைப் பற்றிக் குறிப்பிடவில்லை; அது வேத நூலறிவாக இருந்தாலுமே, வறட்டு பட்டறிவாக இருக்குமேயானால், அது ஞானம் அல்ல.
ஆயிரக்கணக்கான நூலறிஞர்களும், தத்துவவாதிகளும், பகவத் கீதையை வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ச்சி செய்துகொண்டும், அதை மற்ற வேதங்களோடு ஒப்பிட்டுக் கொண்டும், தங்களுடைய நேரத்தையும் மற்றவர்களின் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் என்ன பயன்? இது, ஒரு நோக்கமும் அற்ற, முட்டாள்தனமான ஒரு செய்கையாகும். இது ஒருவருடைய அஹங்காரத்தை அதிகப்படுத்துவதற்கே உதவுகிறது. கீதையினுடைய மொத்த நோக்கமே, உங்கள் அஹங்காரத்தை விட்டுவிட, உங்களுக்கு உதவுவது தான்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கீதையின் ஒரு ஸ்லோகத்தையாவது, கிருஷ்ணருடைய ஒரு வாசகத்தையாவது நன்கு, முழுமையாகப் புரிந்துகொள்வதுதான். உங்களை ஞானமடையச் செய்ய அது போதும். ஒரு கைப்பிடியளவுள்ள மண்ணைப் பற்றிய படிப்பு, இந்தப் பூவுலகில் உள்ள எல்லா மண்ணைப் பற்றியும் உங்களுக்குக் கற்பித்துவிடும் என்று சுவாமி விவேகானந்தர் சொல்வதன் பொருள் இதுவே. ஆகவே, உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஞானத்தின் ஆழம் தான், அகலம் அல்ல.
கீதையினுடைய ஒவ்வொரு சொல்லும், கிருஷ்ணருடைய ஒவ்வொரு சொல்லுமே சக்திதான். இந்த அறிவைத்தான்நீங்கள் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த சக்தியைத்தான் நீங்கள் அனுபவமாக்கிக்கொள்ள வேண்டும். இதையே கிருஷ்ணர் ‘அறிதல்’ என்று குறிப்பிடுகிறார். இந்த சக்தியைப் பற்றி நீங்கள் ‘அறிந்து கொள்ளும்’ தருணம், நீங்கள் சக்தியை அடையப் பெறுவீர்கள்; கிருஷ்ணராகவே ஆகிவிடுவீர்கள். நீங்கள் கிருஷ்ணருடைய பக்தராக மட்டும் அல்ல, கிருஷ்ணராகவே ஆகிவிடுவீர்கள்.
ஸத்யத்தைத் தெளிவாக ‘அறிந்துகொள்ள’ இரண்டு பாதைகள் உள்ளன. அதில் ஒரு பாதை, குருவினிடம் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையில் உங்களுக்கு எந்தவித சந்தேகமுமில்லாமலிருப்பது. நீங்களும் குருவைப் போலவே அதே விழிப்புணர்வுதான் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. நீங்கள் இதை அறிந்துகொண்ட கணமே அங்கு இரண்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. நீங்களும் குருவும் ஒன்றே. இதுவே பக்தியின் உச்சம்.
வேத நூலறிவாக
இருந்தாலுமே,
வறட்டு பட்டறிவாக
இருக்குமேயானால்,
அது ஞானம் அல்ல.
மற்றொரு பாதை, உங்களுக்குள் நிகழும்
ஆழமான சரணாகதி, உங்களுக்குள்ளே
உதயமாரும் அப்பழுக்கற்ற அன்பு
மூலமாக குருவோடு இணைந்துவிடுவது.
இந்த இணைப்பின் மூலமாக, நீங்கள்
வேறானவர் அல்ல என்னும் ஞானம்
வருகிறது. தெளிவான பக்தியிலிருந்து
ஞானம் பிறக்கிறது.
ஸத்யம் என்னவென்றால், இரண்டுமே ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. மீராவுக்கு, தாம் கிருஷ்ணரோடு ஒன்றாகக் கலந்திருப்பது தெரியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தாம் எதை அருந்தினாலும், அது, தம்முடைய இறைவனும், குருவுமாகிய கிருஷ்ணராலுமே அருந்தப்பட்டதாகும் என்பதை அறியாமலா அவர் அந்த விஷத்தை அருந்தியிருப்பார்?
தேவியைத் தரிசித்து, ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகங்களைப் பாடிய சங்கரர் வெறும் வறட்டு தத்துவவாதி என்று நினைக்கிறீர்களா? இதுவரை உலகம் கண்டறியா சிறந்த தத்துவவாதியான சங்கரர், தேவியின் முன் பக்தியினால் உருகிக் கரைந்தார்.
> கீதையினுடைய மொத்த
> நோக்கமே, உங்கள்
> அஹங்காரத்தை விட்டுவிட,
> உங்களுக்கு
> உதவுவது தான்.
தெய்விகத்தை அணுகுவதற்கு உதவும்
த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம்
என்னும் மூன்று வழிமுறைகளைப் பற்றிய
வாதங்களை தத்துவவாதிகளிடமே
விட்டுவிடலாம்.
நீங்கள் அந்தப் பிரபஞ்ச சக்திக்கு உங்களைத் திறந்துவைத்திருந்தாலும், இன்னமும் உங்களை அதனினும் வேறானவர் என்று உணர்ந்துகொண்டிருக்கும்போது த்வைதம்
- இருமை நிகழ்கிறது. நீங்கள் உங்களை மூடிக் கொள்ளும்பொழுது, மாபெரும் கடலின் ஒரு துளிதான் நீங்கள் என்பதை ஒப்புக்கொள்வதில்லை. கடலினின்று வேறானவர் என்றே நீங்கள் உங் களை உணர்கிறீர்கள். இந்த நிலையை அடைவதற்கு, நீங்கள் திறந்த மனத்தவராய் இருக்க வேண்டும். இந்த துவைதமே முதல் படி.
அடுத்த நிலையில், நீங்கள் திறந்த மனத்துடன் இருப்பதுடன், அணுகக் கூடியவராயும் மாறுகிறீர்கள். அதாவது உங்களைச் சுற்றி ஒரு மாபெரும் சக்திக் களம் சூழ்ந்துள்ளது என்பதையும், நீங்கள் அதன் ஒரு சிறு பகுதிதான் என்பதையும் உணர்கிறீர்கள். நீங்கள் முழுமையின் ஒரு பகுதியே என்பதையும், நீங்கள், ஒரு நீர்த்துளி என்ற முறையில், நீங்கள் கடலின் ஒரு பகுதியே என்பதையும் அறிந்துகொள்கிறீர்கள். இதுவே விசிஷ்டாத்வைதம் எனப்படுகிறது. பிறகு சட்டென ஒருநாள், ‘அந்தக் கடலே நீங்கள்நதான்’ என்பதை நீங்கள் உணர்ந்துகொள்கிறீர்கள். உங்களுக்கும், அந்த சக்திக்கும் நடுவில் எந்தவித வித்தியாசமோ, தடையோ இல்லை. நீங்கள்நதான் அந்த சக்தி. நீங்களே கடவுள். இதுவே அத்வைதம் - இரண்டற்ற தன்மை. அங்கு ‘நீங்கள் இருக்கிறீர்கள்’, அவ்வளவு தான்.
திறந்த மனத்தினராயிருப்பதிலிருந்து, அணுகக் கூடியவராய் மாறி, பிறகு ‘நீங்கள் இருக்கிறீர்கள்’ என்ற நிலைக்குப் படிப்படியாக உயர்கிறீர்கள்.
நீங்கள் கிருஷ்ணரை அறிந்துகொண்டால், இனி அறிந்துகொள்வதற்கு ஒன்றுமே இல்லை, பின்பு, நீங்களே கிருஷ்ணராகிவிடுகிறீர்கள்.

