KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/எனக்குள் இருங்கள்Sign in
பகவத் கீதை விளக்கவுரை

எனக்குள் இருங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna playing the flute

என்னால் ஊடுருவிப் பரவப்பட்டுள்ள இந்த மொத்தப் பிரபஞ்சமும் எனது உருவமில்லா இருப்பில் நிலைத்திருக்கிறது. எல்லா இருப்பும் என்னையே சார்ந்துள்ளது. நான் அவற்றைச் சார்ந்திருக்கவில்லை.

என்னிடம் உள்ள ஈச்வர தன்மைகளை, யோக சக்தியைப் பார். நானே எல்லா உயிருள்ளவற்றையும் படைத்து, அவற்றைத் தாங்கியும் நிற்கிறேன். நான் அவற்றைச் சார்ந்தும் இல்லை, அவை என்னைச் சார்ந்தும் இல்லை.

எங்கும் சஞ்சரிக்கிற எல்லாம் வல்ல பெருங்காற்று எப்பொழுதும் நிலையான பெருவெளியில் இருப்பதுபோல், எல்லா இருப்பும் என்னிலேயே இருக்கின்றன.

குந்தியின் மகனே! ஒவ்வொரு யுக முடிவிலும் எல்லாம் என்னிலேயே கலக்கின்றன. ஒவ்வொரு புது யுகத்திலும் நானே அவற்றை மீண்டும் படைக்கிறேன்.

9. 8 எனது பொருள் சார்ந்த இயல்பு இந்த உயிர்களையெல்லாம் மீண்டும் மீண்டும் படைக்கிறது; எனது பொருள் சார்ந்த இயல்பினால் அவை கட்டுப்படுத்தவும் படுகின்றன.

ஒவ்வொரு கணமும் பிரபஞ்சம் உங்களுக்குப் பதிலளிக்கிறது

ரகசியங்களை வெளிப்படுத்த இதுவே தருணம்.

கிருஷ்ணர் ஆரம்பிக்கிறார்;

மயா ததமிதம் ஸர்வம் ஜகதவ்யக்தமூர்தினா /
மதஸ்தானி ஸர்வபூதானி ந சாஹம் தேஷ்வவஸ்தித: // 9.4

"என்னால், எனது உருவமற்ற இருப்பால், மொத்தப் பிரபஞ்சமும் நிரப்பப்படுகிறது. எல்லா இருப்பும் என்னில் உள்ளன. நான் அவற்றில் இல்லை."

இது புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்த ஸ்லோகங்களுக்குள் நுழையும் முன்பு இந்த வரிகளின் பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நோபல் பரிசு பெற்ற சார்லஸ் டௌன்ஸ் என்பவரை நான் சந்தித்தது பற்றி உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர் மிகப்பெரிய விஞ்ஞானி. அவர் ‘லேசர்’ (Laser) மற்றும் ‘மாசர்’ (Maser) தொடர்பானவற்றைக் கண்டுபிடித்துள்ளார். அவர் அவற்றை பற்றிய சில ரகசியங்களை, சில உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளார்.

"நீங்கள் இவற்றை எவ்வாறு கண்டுபிடித்தீர்கள்? இந்த ஸத்யம் உங்கள் இருப்புக்குள் எவ்வாறு நிகழ்ந்தது?" என்று கேட்டேன்.

அவர் அருமையாகப் பதிலளித்தார்.

"ஸ்வாமிஜி, உங்களுக்கு நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால், நான் வாஷிங்டனில் உள்ள ஒரு பூங்காவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அது அதிகாலை சுமார் 6 மணி இருக்கும். அன்று காலை 9 மணி அளவில் அங்கு வரவிருக்கும் ஒரு குழுவினருக்கு லேசர் சம்பந்தமான வகுப்பு எடுப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டிருந்தேன். நான்

மிகவும் ஏமாற்றம் அடைந்தேன், ஏனென்றால்
என்னால் முழுவதுமாக நினைவுபடுத்த
முடியவில்லை. திடீரென ஒரு வெளிப்பாடு,
ஒரு உள்ளுணர்வாக, ஒரு தீர்க்கமான
முடிவாக என்னிடம் வெளிப்பட்டது.

மொத்த ஸத்யம்மும் எனது விழிப்புணர்வுக்குப் புலப்பட்டது. நான் அதைக் கண்டு பிடித்தேன்! நான் அடைந்ததை உடனே பேனாவை எடுத்து குறித்துக் கொண்டேன்.''

அவர் மேலும் சொன்னார்.

அதற்குப் பிறகுதான், இதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். ஏனென்றால் எனக்கு முடிவு தெரிகிறது; எனக்கு ஸத்யம் தெரிகிறது, ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியவில்லை. அந்த முடிவை அடைவதற்கான அறிவு ரீதியான வழிமுறைகள் எனக்குத் தெரியவில்லை!

வழிமுறைகள் தெரியாததால் இந்த முடிவுகளை என்னால் வெளியிட முடியவில்லை. அதனால் அதற்குப் பிறகு, தர்க்க ரீதியான வழிமுறைகளைக் கண்டறிவதற்காகச் சிந்தனை செய்யவேண்டி இருந்தது.

அதற்குப் பிறகுதான் மற்றவர்களுக்கும் இதை என்னால் வழங்க முடிந்தது. திடீரென உதித்த உள்ளுணர்வால் இது நிகழ்ந்தது, எனக்குள் வெளிப்பட்டது.

சார்லஸ் டௌன் மட்டுமல்ல, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்கூட, "தமது சார்பியக்கக் கொள்கை, தம்முடைய ஆழ் நிலை த்யானத்தில் வெளிப்பட்டது என்றும், விண்வெளியில், தாம் ஒரு ஒளித்துகளின் விளிம்பில் அமர்ந்து பயணம் செய்வதுபோல் இருந்தது என்றும், இது உள்ளுணர்வாகவே வெளிப்பட்டது என்றும் சொல்கிறார்.

Albert Einstein

உண்மையில், இப்படிப்பட்ட
அனுபவம் பெரிய விஷயமே அல்ல.
முக்கியமான ஸத்யம் என்னவென்றால்,
நான் சார்லஸ் டௌன்ஸியிடம்,
"இது உங்களுக்குள் நிகழ்ந்தபோது,
உங்களிடம் வெளிப்பட்டபோது
நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்?''

என்று கேட்ட போது, அதற்கு அவர் அளித்த விடைதான். ஏனென்றால் அவருக்குள் நிகழ்ந்த அந்த உள்ளுணர்வு அனுபவம், நம்முடைய ரிஷிகள் அனுபவித்த அனுபவம் போன்றே இருந்தது.

இனி எந்தக்குழப்பமும் வாழ்க்கையில் தேவையில்லை

யார் ஒருவர் ஸத்யங்களை மந்திரமாக அனுபவித்திருக்கிறாரோ, அவர் ரிஷி என்றழைக்கப்படுகிறார். புனிதமான, ஆழ்ந்த உட்பொருள்கொண்ட வார்த்தைகளைத்தான் மந்திரங்கள் என்கிறோம். நம் முன்னோர்களான ரிஷிகள் இந்த மந்திரங்களைப் பார்த்திருக்கிறார்கள் - மந்த்ர த்ரயதே இதி ரிஷி: மந்த்ரத்தை பாவனை செய்து, அதனை அனுபவப்பூர்வமாக அனுபவித்தவர் யாரோ, அவரே ரிஷி.

இறுதி ஸத்யங்கள் , ரிஷிகளின் விழிப்புணர்வில் 'பளிச்'ஸென வெளிப்படுகின்றன. அவர்கள் உள் உலகில் அக்காட்சியை அனுபவமாக உணர்கின்றனர். பிறகு அவர்கள் தங்கள் அனுபவத்தை வார்த்தைகளாக, மந்திரங்களாக, வெளிப்படுத்துகின்றனர்.

இதேபோல்தான் இந்த விஞ்ஞானி, சார்லஸ் டௌன்கூட ரிஷிதான்.

அவர் வெளி உலக இரகசியங்களின் வெளிப்பாட்டை பெற்றிருந்தார். அவரது உள்ளுணர்வு இந்த உண்மையை அவருக்கு வெளிப்படுத்தியது. "இந்த உள்ளுணர்வு உங்களிடம் தோன்றியபோது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள், உங்கள் உணர்வு எப்படி இருந்தது?" என்று அவரிடம் கேட்டேன்.

இந்த மொத்தப் பிரபஞ்சமும் நுண்ணறிவால் ஆனதுதான். நமது எண்ணங்களுக்கு அதனால் பதில் அளிக்க முடியும்.

அவர், "ஸ்வாமிஜி அந்த நிகழ்வுகளை
என்னால் சரியாக வெளிப்படுத்தத்
தெரியவில்லை. ஆனாலும் ஒன்று நிச்சயம்.
அந்த நொடிப்பொழுதில் இந்த மொத்தப்
பிரபஞ்சமும் நுண்ணறிவால் ஆனதுதான்
என்பதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டேன்!"
என்றார்.

இதுவே ஸத்யம்! மொத்தப் பிரபஞ்சமும் தூய
நுண்ணறிவால் ஆனது. மொத்தப் பிரபஞ்சமும்
இறந்து போன பொருள் அல்ல. இது விபத்து

இல்லை. பிரபஞ்சம், ஒரு விபத்தால்
உருவானதல்ல. இது சுத்த நுண்ணறிவால்
ஆனது. நமது எண்ணங்களுக்கு அதனால்
பதில் அளிக்க முடியும்.

தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்,
மொத்தப் பிரபஞ்சமும், கிரகங்கள், காற்று,
பெருங்கடல்கள், ஆறுகள், பூமி, நெருப்பு,
ஆகாசம், சூரியன், நிலவு ஆகிய இந்த
மொத்தப் பிரபஞ்சமும் நுண்ணறிவால்
ஆனதுதான். அதனால் பதிலளிக்க முடியும்.
பதிலுக்குச் செயல்பட முடியும். நமது
எண்ணங்களுக்கு ஏற்றபடி எதிர்ச்செயல்
செய்யவும் முடியும்.

நுண்ணறிவின்
சக்திகுக்குள்தான்
நாம் இருக்கிறோம்
என்று புரிந்துகொண்ட
அந்தக்கணமே,
உடனடியாக ஆழ்ந்த
தளர்வான நிலைக்கு
சென்று விடுகிறோம்.

இதுவே முக்கியமாக, அடிப்படையாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியது.

நாமும் இந்த நுண்ணறிவே என்று புரிந்துகொண்ட அந்தக் கணமே, இந்த நுண்ணறிவின் சக்திக்குள்தான் நாம் இருக்கிறோம் என்று புரிந்துகொண்ட அந்தக் கணமே, உடனடியாக ஆழ்ந்த தளர்வான நிலைக்கு சென்றுவிடுகிறோம்.

இந்த அனுபவம் நமக்குள் நிகழ்ந்த அந்தக் கணமே, நமக்குள் பலவிதமான புரிதல்கள் நிகழ்கின்றன: புத்திசாலித்தனமான சக்தியின் வழிகாட்டுதலின்படியே நாம் இருக்கிறோம், புத்திசாலித்தனமான சக்தியே நம்மைக் கவனித்துக்கொள்கிறது.

மிகப்பரந்த பிரபஞ்ச நுண்ணறிவின் பாகமாகவே நாம் இருக்கிறோம், அதனோடு நாம் சண்டையிடத் தேவையில்லை. நம்மை நாமே மனச்சோர்விற்குள் ஆழ்த்திக்கொள்ளத் தேவையில்லை.

நாம் மன இறுக்கம்கொள்ளத் தேவையில்லை, தேவையில்லாத பிரச்சினைகளாலும், தேவையில்லாத கவலைகளாலும் நம்மை நாமே வருத்திக்கொள்ளத் தேவையில்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.

உண்மையில், நமக்கிருக்கும் பிரச்சினைகள், மன இறுக்கங்கள், மனக்குழப்பங்கள் எல்லாமே, ஒவ்வொரு செயலையும் நாமே செய்கிறோம் என்று நினைத்துக்கொள்வதாலேயே ஏற்படுகின்றன.

நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நாமே பொறுப்பு என்று நினைத்துக்கொள்கிறோம். மொத்தப் பிரபஞ்சமும் நம்மால் இயங்குகிறது என்று நினைத்துக்கொள்கிறோம்.

பிரபஞ்சம் நம்மால் இயங்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்! பிரபஞ்சம் புத்திசாலித்தனமானது, நமது எண்ணங்களுக்கு ஏற்ப செயல்புரிகிறது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பிரபஞ்ச சக்தியை நம்பும்போதுதான், நாம் எவ்வளவு இலகுவானவர்கள் என்பது அனுபவப்பூர்வமாகத் தெரியவரும்.

நாம் நம்முடைய எல்லாப் பிரச்சினைகளையும், நாம் செய்கிற செயல் ஒவ்வொன்றுக்கும் நாமே பொறுப்பு என்று நினைப்பது உட்பட, எல்லாக் கஷ்டங்களையும் நாம் கீழே இறக்கிவைத்துவிட முடியும்.

பிரபஞ்சம் நம்மால்
இயங்கவில்லை
என்பதைப்
புரிந்துகொள்ளுங்கள்!

உடனே நாம் வெறுமனே உட்கார்ந்துகொண்டு
ஓய்வாக, "சரி, இந்தப் பிரபஞ்சம்
நுண்ணறிவால், புத்திசாலித்தனத்தால் ஆனது
தான். அது எல்லாவற்றையும் கவனித்து
க்கொள்ளும்," என்று நாம் சொல்லிக்
கொண்டிருக்கக் கூடாது. அந்த அர்த்தத்தில்
இது சொல்லப்படவில்லை.

இப்படிப் பேசுவது நமது சோம்பேறித்தனத்தையும் செயல்பாட்டிலிருந்து நாம் தப்பிக்க முயற்சி செய்வதையுமே குறிக்கிறது. நாம் செய்ய வேண்டிய செயல்களை, முயற்சியுடன் செய்துகொண்டுதான் இருக்க வேண்டும்.

நாம் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படித் தொடர்ந்து வேலை செய்தாலும், நம்மால் இந்தச் செயல்முறைகளை அனுபவித்து மகிழ முடியும்.

illustration

பிரபஞ்சமே உங்களைப் பாராட்டும்

நீங்கள் ஆழ்ந்து பார்த்தீர்கள் என்றால், நாம் எல்லாக் காலங்களிலும், விளைவுகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதை உணர முடியும். பேராசை மற்றும் பயத்தின் காரணமாகவே நமக்குள் எண்ணங்கள் தோன்றும்; நாம் செய்கிற செயல் நல்ல பலனைத் தருமோ தராதோ என்கிற அச்சம் அல்லது விரும்பியதை மேலும் மேலும் பெற வேண்டும் என்கிற பேராசையின் காரணமாகவே நமக்குள் எண்ணங்கள் எழுகின்றன.

ஆனால் வேலை செய்யும் முறையை, அந்தச் செயல்முறையை நாம் ஒருபோதும் ஆனந்தத்துடன் அனுபவிப்பதே இல்லை. இந்தச் செயல்முறையை நாம் அனுபவிக்கும்போது, பிரபஞ்ச சக்தி புத்திசாலித்தனத்தால் ஆனது என்று நம்பும்போது, அச்சம் மற்றும் பேராசையால் தோன்றிய எண்ணங்கள் மறைந்து விடுகின்றன.

வெளி உலகங்கள் மீது நமக்கிருக்கும் சந்தேகங்கள் தான், நம்மை உள் உலக தேடுதலுக்கு அழைத்துச் செல்கின்றன.

நாம் செயல்முறையை ஆனந்தமாக அனுபவிக்கும்போது, அந்தச் செயலுக்கான பலன்களைப் பற்றிக் கவலைப்படாமல், அதை அந்தப் பிரபஞ்ச சக்தியின் பொறுப்பிலேயே விட்டு விடுகிறோம்; முடிவுகளை எடுக்க பிரபஞ்ச சக்தியை அனுமதிக்கிறோம்.

கிருஷ்ணர் வேறு ஒரு இடத்தில், "எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய். அதன் பலன்களை என்னிடம் அர்ப்பித்து விடு," என்று சொல்கிறார். அவர் 'என்னை', என்று குறிப்பிடுவது, பிரபஞ்ச விழிப்புணர்வைத்தான், பிரபஞ்ச புத்திசாலித்தனத்தைத்தான்.

இதத்தான் அடுத்த ஸ்லோகத்தில் "அவை என்னைச் சார்ந்திருக்கவும் இல்லை, நான் அவற்றைச் சார்ந்திருக்கவும் இல்லை," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

நிச்சயமாக, தெளிவாக நம்மால் ஒன்றைச் சொல்ல முடியும். அது, இந்தப் பிரபஞ்சம் நம்மைச் சார்ந்திருக்கவில்லை. இது வெளிப்படையாகத் தெரிகிற ஒரு ஸத்யம்தான். ஆனால் பிரபஞ்சத்தால் படைக்கப்பட்டு, அதனால் தாங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாம், இந்த உயிர்கள் அதைச் சார்ந்திருக்கவில்லை என்று கிருஷ்ணரால் எப்படிச் சொல்ல முடியும்?

அவர் அப்படிச் சொல்வதன் பொருள்: நாம் ஒன்றும் செய்யாமல், மந்தமாக இருந்துகொண்டு, எது நடக்கிறதோ அது நடக்கட்டும் என்று வெறுமனே உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடாது. நாம், செயலாற்றும் திறமையுடன்கூடிய புத்திசாலித்தனத்துடன் இருக்க வேண்டும் என்பதையே குறிக்கிறது.

ஒருவர் தம் வாழ்க்கை நடைமுறையின் பாகமாக எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். ஆனால் அவற்றின் மீது பற்றோ அல்லது அவற்றை உரிமை கொண்டாடும் மனப்பாங்கோ இல்லாமல் செய்ய வேண்டும். எந்தப்பாதையில் நாம் சென்றாலும் சரி, எந்த வழியில் நாம் இருந்தாலும் சரி நாம் பிரபஞ்சத்திற்குள்தான் இருக்கிறோம். மொத்தப் பிரபஞ்சமும் புத்திசாலித்தனத்தால் ஆனது. நமது எண்ணங்களுக்கு ஏற்ப அது பதிலளிக்கிறது. நமது எண்ணங்களுக்கு ஏற்ப செயல்களை அதுவே நிகழ்த்துகிறது.

பிரபஞ்சத்தின் பாகமாக இருக்கிற காரணத்தால், பிரபஞ்ச சக்தியுடன் சேர்ந்து பாய்ந்தோளுங்கள். அதை எதிர்க்காதீர்கள். இந்தப் புரிந்துகொள்ளல், நமது வாழ்வில் ஊடுருவினால் அதுவே போதுமானது!

பிரபஞ்சம் புத்திசாலித்தனமானது என்பதை நாம் தெரிந்துகொண்டால், ‘வாழ்க்கை எப்படி நடக்கும், அது எவ்வாறு வெளிப்படும்’ என்பது போன்ற கேள்விகளை ஒருபோதும் கேட்க மாட்டோம். "நான் நேர்மையுடனும்

> நாம்
> செயல்முறையை
> ஆனந்தமாக
> அனுபவிக்கும்போது,
> அந்தச் செயலுக்கான
> பலன்களைப்
> பற்றிக் கவலைப்படாமல்,
> பிரபஞ்ச சக்தியை
> முடிவுகளை எடுக்க
> அனுமதிக்கிறோம்.

ஸத்யத்துடனும் வாழ்கிறேன். இருந்தும் நான் எப்போதும் துன்புறுகிறேன் ஆனால் தர்மத்திற்குக் கட்டுப்படாமல் இருப்பவர்கள்தான் சௌகரியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதை நான் பார்க்கிறேன்!” என்று சொல்ல மாட்டோம்.

நாம் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கவும் மாட்டோம், ஏமாற்றமடையவும் மாட்டோம். ஏனென்றால் பிரபஞ்ச சக்தியின் புத்திசாலித்தனம் இறுதியாக எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும் என்பதை நாம் தெரிந்துகொள்கிறோம். ஒருவர் தர்மத்திற்குப் புறம்பாக நடந்தாலோ, தர்மத்தை மீறி மற்றவர்களைத் துன்புறுத்தினாலோ, இயற்கையாகவே அவர் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில் பிரபஞ்ச நுண்ணறிவு அதைக் கவனித்துக்கொள்ளும்.

இதேபோல, நாம் நேர்மையான, ஒருமுகப்படுத்தப்பட்ட ஆன்மீக வாழ்வை வாழ்ந்தோமானால், நாம் அழகான வாழ்வு வாழ்வோம். நாம் பாராட்டப்படுவோம், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகிறோம். ஏனென்றால் புத்திசாலித்தனத்தால் வழிநடத்தப்படுகிற இந்தப் பிரபஞ்சம், நமது செயல்களுக்கு பதில் அளிக்கிறது, பிரதிச்செயல்புரிகிறது.

> ஒருவர்
> தம் வாழ்க்கை
> நடைமுறையின் பாகமாக
> எதைச் செய்ய வேண்டுமோ
> அதைச் செய்ய வேண்டும்.
> ஆனால் அவற்றை
> உரிமை கொண்டாடும்
> மனப்பாங்கு இல்லாமல்
> செய்ய வேண்டும்.

பொருளால் ஆனதல்ல, அருளால் ஆனதே பிரபஞ்சம்

பரந்த பிரபஞ்சம் பொருளால் ஆனது என்று நினைத்துவிடாதீர்கள். நாம் அவ்வாறு நினைத்தால், பொருள் சார்ந்தவர்களாக, உலோகாயதவாதிகளாகி விடுகிறோம். பிரபஞ்சம் நுண்ணறிவு கொண்டது, புத்திசாலித்தனமானது என்பதைப் புரிந்துகொண்டால், நாம் ஆன்மீகவாதியாகி விடுவோம். அவ்வளவுதான்.

பொருளைச் சார்ந்தவருக்கும் அதாவது ஒரு உலோகாயதவாதிக்கும், ஒரு ஆன்மீகவாதிக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், பொருளைச் சார்ந்தவர் மொத்த உலகும் பொருள் மயமானது என நினைக்கிறார். மேலும் மேலும் நிலத்தைச் சேர்க்க வேண்டும், மேலும் மேலும் பொருட்களை அடைய வேண்டும் என நினைக்கிறார்.

ஆன்மீகவாதி, இருக்கிற அனைத்துப் பொருளுமே ஆன்மாவாலும், சக்தியாலும் ஆனது என்பதைப் புரிந்துகொள்கிறார். இருக்கிற மொத்தமும் ஆன்மாவாலும், சக்தியாலும், புத்திசாலித்தனத்தாலும் ஆக்கப்பட்டுள்ளன என்பதை நாம் புரிந்துகொண்டால், அளவற்ற, நிலையான அமைதி நம்முள் நிகழ ஆரம்பிக்கும்; ஆனந்த உணர்வு நம்முள் பொங்க ஆரம்பித்துவிடும்.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், ஆனந்தம் என்பது வெறும் ஒரு மனநிலை மட்டும் அல்ல. அது நம் விழிப்புணர்வையே குறிக்கிறது.

அது நமது மனநிலையைப் போல் வருவதூம், போவதுமாக இருந்தால், நாம் ஒன்று அல்லது இரண்டு அனுபவங்களை மட்டுமே பெறுவோம். ஒரு பக்தர் என்னிடம், "ஆனந்தம், அது வருகிறது, பிறகு போய்விடுகிறது, நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.

நாம் அவரிடம், "நீங்கள் ஆனந்தத்தின் ஆரம்ப துளிகளை அனுபவித்து இருக்கிறீர்கள். உங்கள் மனத்தின் மூலம் ஆனந்தத்தைத் தொட முயற்சி செய்கிறீர்கள், வேறு ஒன்றும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை. அமைதியாக இருங்கள், அதுவே போதும்.

எது எப்படியானாலும், இந்த ரகசியத்தைப் புரிந்துகொண்டவுடன், ஒரு ஆழ்ந்த அமைதி நம்மிடம் உருவாகிறது.

இப்படிப்பட்ட ஆழ்ந்த அமைதியில், நாம் நேரடியாக ஆனந்த உணர்வை அனுபவிக்கிறோம். அந்த ஆனந்தத்தை அனுபவமாக ஒருமுறை பெற்றாலே போதும், அது நிரந்தரமாக நம்முள் தங்கிவிடுகிறது.

ஆனந்தமான மனநிலை வந்து தங்கிவிடுகிறது. ஆனந்த உணர்வு நிரந்தரமாகிவிடுகிறது. கிருஷ்ணர் சொல்கிறார், "என்னுடைய உருவமில்லா இருப்பால், மொத்தப் பிரபஞ்சத்தையும் ஊடுருவியுள்ளேன். எல்லா உயிர்த்திரள்களும் என்னிலேயே இருக்கின்றன," என்று சொல்கிறார். அவர் பிரபஞ்ச சக்தியின் நுண்ணறிவைப் பற்றிச் சொல்கிறார்.

side callout text

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், மொத்தப் பிரபஞ்சமும் நகர்ந்துகொண்டும், நிகழ்வாக நிகழ்ந்துகொண்டும் இருக்கிறது. எல்லா க்ரஹங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.

nநமது சூரிய குடும்பத்தில், புளூட்டோவுக்கு அப்பால் 'செட்னா' (Sedna) என்ற க்ரஹத்தையும் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால் இப்போது நவக்ரஹங்கள் என்று நம்மால் சொல்ல முடியாது. தசக்ரஹங்கள் என்று சொல்லலாம்.

சூரிய மண்டலத்திற்கு அருகில் 'சைக்னஸ்'

எந்தப்பாதையில்
நாம்
சென்றாலும் சரி,
எந்த வழியில்
நாம் இருந்தாலும் சரி
நாம்
பிரபஞ்சத்திற்குள்தான்
இருக்கிறோம்.

(Cygnus) என்ற மற்றொரு சூரிய மண்டலம் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். இது மூன்று சூரியன்களைப் பெற்றுள்ளது. ஒரு சூரியன் அல்ல; மூன்று சூரியன்கள். ஒரு சூரிய குடும்பத்தை மூன்று சூரியன்கள் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு சூரிய குடும்பமும் அதற்கான நிலவுகளைப் பெற்றுள்ளது.

பிரபஞ்சத்தில் நிறைய சூரியன்கள் உள்ளன, நிறைய நிலவுகள் உள்ளன, நிறைய க்ரஹங்களும் உள்ளன. இருந்தாலும் ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் சரியாகப் பயணம் செய்கிறது. ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் சரியாகச் செல்கிறது. அங்கே போக்குவரத்து போலீஸ் இல்லை! விபத்துக்களும் அரிது!

ஆனந்தம் என்பது
வெறும் ஒரு
மனநிலை
மட்டும் அல்ல.
அது நம்
விழிப்புணர்வையே
குறிக்கிறது.

மொத்த இயக்கமும் புத்திசாலித்தனத்தால் இயக்கப்படவில்லை யென்றால், இவையெல்லாம் இத்தனை ஆழமாக, அருமையாக நிகழ முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இந்தப்பூமி க்ரஹத்தில்கூட அனைத்தும் எவ்வளவு அருமையாக உள்ளது என்று பாருங்கள்! மொத்தமும் தெளிவான பாதையிலேயே நிகழ்கிறது. அனைத்தும் ஒரு வரிசைக்கிரமமாகவே உள்ளது. மக்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கே மட்டும்தான் குழப்பம் நிலவுகிறது.

மனிதர்களைத் தவிர, மற்றவை எதுவுமே குழப்பங்களை உருவாக்குவதில்லை. குழப்பங்களில்கூட, தெய்வீக தன்மை ஒரு ஒழுங்குமுறையை உருவாக்குகிறது. மனிதர்களே குழப்பங்களைக் கொண்டு வருகிறார்கள். மொத்தப் பிரபஞ்சமும் புத்திசாலித்தனத்தால் ஆனது, புத்திசாலித்தனத்தாலேயே இயங்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது நமது எண்ணங்களுக்குப் பதிலளிக்கிறது, நாம் அந்தப் புத்திசாலித்தனத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

இதனை நாம் ஆழமாக உள்வாங்கிக்கொண்டோமானால், இயற்கையாகவே, ஒரு ஆழ்ந்த அமைதியான அனுபவத்தை நம்மால் உணர முடியும். சாந்தம், ஒரு உண்மையான சாந்தம், உச்சபட்சமான சாந்தம் மற்றும் வாழ்வதற்கான ஒரு திடமான நம்பிக்கை இந்த இரண்டும் நம்முள் நிகழ்கிறது. இந்த உலகம் பொருளால் ஆனது என்று நாம் நினைக்கும்வரை, நாம் வாழ்வதில் ஒரு பயனும் இல்லை, நாம் அடைவதற்கும் ஒன்றும் இல்லை.

ஏனென்றால் நாம் ஒரு நாட்டின்
ஜனாதிபதியாக ஆனால்கூட, மற்ற நாடுகள்
நம் கட்டுப்பாட்டில் இருக்காது.

ஒருபோதும் நம்மால் இந்த மொத்த
உலகுக்கும் ஜனாதிபதியாக முடியாது.
அதனால் இயற்கையாகவே, நாம் ஒருபோதும்
எல்லாவற்றையும் அடைந்துவிட முடியாது.

பிரபஞ்சத்தில் நிறைய
சூரியன்கள்,
நிறைய நிலவுகள்,
நிறைய க்ரஹங்களும்
உள்ளன. இருந்தாலும்
ஒவ்வொன்றும் அதனதன்
பாதையில் சரியாகப்
பயணம் செய்கிறது. *
அங்கே போக்குவரத்து
போலீஸ் இல்லை!

உலகம் பொருள்மயமானது என்று நம்பும் வரை நாம் மேலும் மேலும் வன்முறையையே உருவாக்குகிறோம். ஏனென்றால் நாம் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருக்கிறோம். மற்றவர்களின் பொருட்களைப் பறித்துக்கொள்வதையே, பொருள்மயமானது என்கிறேன்.

ஒருவகையில் இல்லாவிட்டாலும், மற்றொருவகையில் அங்கு வன்முறையே எஞ்சியிருக்கும்.

மொத்த விஷயமும் சக்தியே, புத்திசாலித்தனமே என்பதை யார் புரிந்துகொள்கிறார்களோ, அனுபவமாக உணர்கிறார்களோ, அவர்களே அமைதியாகவும் தளர்வாகவும் இருக்க முடியும்

எண்ணங்கள், ஆகασத்தையே மாசுபடுத்துகின்றன

அடுத்த ஸ்லோகத்தை நான் மீண்டும் சொல்கிறேன்.

யதா காஸ்த்திதோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ மஹாந் /
ததா ஸர்வாணி பூதாநி மதஸ்தானீத்யுபதாரயா //

கிருஷ்ணர், "எல்லா இடங்களிலும் வீசக்கூடிய பலம் வாய்ந்த காற்றானது ஆகασத்தில் நிலைபெற்றிருப்பதைப் போல, எல்லாப் படைப்புகளும் என்னில் நிலைபெற்றிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்," என்று சொல்கிறார்.

தயவுசெய்து இந்தக் கருத்தைப் புரிந்துகொள்ளுங்கள். "காற்று, ஆகாச சக்தியில் நிலைபெற்றிருப்பதுபோல," என்று கிருஷ்ணர் சொல்கிறார், பூமியே சக்திமயம் என்பது நமக்குத் தெரியும்.

ஒரு கல்லை எடுத்துக்கொள்ளுங்கள். கல் நம் மீது எறியப்பட்டாலோ அல்லது நாம் கல்லை எறிந்தாலோ, அந்தக் கல்லுக்குப் பின்னால் இருக்கும் சக்தியை நம்மால் உணர முடியும். அடுத்து தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். நீருக்கு உள்ள சக்தியும் நமக்குத் தெரியும்.

நியூ ஆர்லியன்ஸ் பிரதேசத்தையே உருக்குலைத்த வெள்ளத்தைப் பற்றி அறிந்தவர்களுக்கு நீருக்கு உள்ள சக்தி பற்றி புரிந்திருக்கும். நீர், வெள்ளமாக மாறும்போது நாம் அதன் செயல்பாட்டைப் பற்றி அதாவது நீரினால் எதைச் செய்ய முடியும் என்பதைப் பற்றிப் புரிந்துகொள்கிறோம்.

நீர் சக்திமயமானது. நாம் இதைப் புரிந்துகொள்ள முடியும்.

அடுத்ததாக நெருப்பு - அக்னி. நெருப்பின் சக்தி நம் எல்லோருக்கும் தெரியும். அடுத்ததாக, காற்று; சூறாவளி, புயல், சுழல் காற்று என்று இவை எல்லாமே காற்றின் அம்சங்கள்தான். காற்றின் சக்தியும் நமக்குத் தெரியும்.

இதேபோன்று, ஆகாசம்கூட ஒரு சக்தியே. அதன் சக்தி பற்றி நமக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் இது நம் வாழ்க்கையில் எந்தவிதமான நேரடியான தாக்கத்தையும் விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அது நம் கூட்டு எதிர்மறை எண்ணங்களால் பாதிப்பிற்கு உள்ளாகிறது.

பிரபஞ்சத்தின் கூட்டு சக்தியே ஆகாசம்.
கூட்டு எதிர்மறை தன்மை, கூட்டு விஷத்
தன்மைகளோடு தொடர்புடையதாக
இருக்கிறது ஆகாசம்.

பூமியின் மூலக்கூறு பாதிக்கப்பட்டாலோ
அல்லது விஷமாக்கப்பட்டாலோ, ஒரே
ஒருவர்தான் பாதிக்கப்படுவார். உதாரணமாக,
நமது உணவு விஷமாகிவிட்டால்,
நாம் மட்டுமே பாதிக்கப்படுவோம்.
அவ்வளவுதான்.

மனிதர்களைத்தவிர,
மற்றவை
எதுவுமே
குழப்பங்களை
உருவாக்குவதில்லை.

தண்ணீர் விஷமாக மாறினால், அந்தப் பகுதி முழுவதும் பாதிக்கப்படும். யார் யாரெல்லாம் அந்த நீரைப் பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள். நமக்குள் அக்னியை வளர்க்கவும், நம் உடம்பு சூட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவும் பொருட்கள் மாசுபடும்போது, அதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

உதாரணத்திற்கு, நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை எடுத்துக்கொள்வோம். ஏனென்றால் மருந்துகள், நம் உள்ளே இருக்கும் அக்னியை உயிரோட்டத்தோடு வைக்கின்றன.

A tornado touching down over a highway

நாம் ஆரோக்கியமாக இருக்க, உடல்
ரீதியாக நன்றாக இருக்க மருந்துகள்
தேவைப்படுகின்றன. மருந்துகளில்
கலப்படம் இருந்தால், அதை
உட்கொள்பவர்பாதிக்கப்படுகிறார்கள்.

வேதிப்பொருட்கள் காற்றை
மாசுபடுத்தினால், மொத்த நாடும்
பாதிக்கப்படுகிறது.

காற்று மாசுபடுத்தப்பட்டால், களங்கப்படுத்தப்பட்டால் மொத்த நாடும் அந்தச் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. ஆனால் ஆகாசம் மாசுபடுத்தப்பட்டால் மொத்த உலகமும் பாதிக்கப்படுகிறது.

சக்தியின் உயர்ந்த அம்சங்கள் அசுத்தம் அடைந்தால், அது அநேக மக்களைப் பாதிக்கிறது.

மொத்த விஷயமும்
சக்தியே, என்பதை
யார் அனுபவமாக
உணர்கிறார்களோ,
அவர்களே அமைதியாகவும்
தளர்வாகவும்
இருக்க முடியும்.

உயர் நிலை சக்திகள் மாசுபடுத்தப்படும்போது, அது மேலும் மேலும் அதிக மக்களைப் பாதிக்கிறது. எந்த அளவுக்கு உயர் நிலை சக்தி களங்கமாகிறதோ, அந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நமது எண்ணங்கள் ஆகாசத்தைக் களங்கப்படுத்துகின்றன. ஆகாசம் சக்திமயமானது.

ஏனென்றால் ஆகாசம் மிகவும் ஸூக்ஷ்மமானதாகவும் மிகவும் நுட்பமானதாகவும் இருப்பதால், அதில் நடக்கும் நிகழ்வுகளை நாம் உணர முடிவதில்லை.

மற்ற நான்கு இடங்களில் அதாவது பூமி, நீர்,
நெருப்பு மற்றும் காற்று ஆகிய நிலைகளில்
நடப்பவற்றை நாம் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால் ஆகாசம் சக்திமயமானது, வலிமையானது
என்பதை நாம் புரிந்துகொள்ளத்
தவறிவிடுகிறோம்.
இது நுட்பமானது,
வலிமையானது.
ஏனென்றால் நுட்பமாக மாறுகிற
அளவிற்குத்தான், அது மேலும் வலிமை
அடைகிறது, மேலும் சக்திமயமாக மாறுகிறது.

> ஒவ்வொரு
> எண்ணத்திற்கும்
> சக்தி உண்டு.

எண்ணங்களைச் சரிசெய்தால் பிரபஞ்சத்தையும் குணப்படுத்தலாம்

நாம் மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று, ஆகாசங்களில் மூன்று வகைகள் இருக்கின்றன.

முதல் நிலை, நாம் இந்த உடலின் எல்லைக்குள் கட்டுப்பட்டிருக்கும் நிலை. இதைத்தான் கடாகாசம் என்கிறோம், அதாவது நம் உடலுக்குள் இருப்பது.

நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் நமது உடல் மட்ட அளவிலேயே புரிந்துகொள்கிறோம். இந்த உடல் ஒன்றுதான் இறுதியான எல்லை என்று நினைத்துக்கொள்கிறோம். இந்த உடல் எவ்வாறு காட்சியளிக்க வேண்டும், எப்படிப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதிலேயே நமது உணர்வு முழுவதையும் செலுத்துகிறோம்.

'இந்த உடல்தான் நாம்; நாம் இந்த உடலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை' என்று நினைக்கிறோம். இது ஒரு அடிமட்ட நிலை.

அடுத்த நிலை சிதாகாசம் ஆகும். நமது மனம் இந்த உலகத்தை எதுவாகப் பார்க்கிறதோ, அதனை சிதாகாசம் என்கிறோம். உதாரணத்திற்கு, நாம் இங்கே உட்கார்ந்திருக்கிறோம், ஆனால் நமது மனம் லாஸ் ஏஞ்சலீஸில் இருக்கிறதென்றால், அதுவே நமது மனத்தால் உணரப்படுகிற ஆகாசமாக அதாவது சிதாகாசமாக மாறுகிறது. அடுத்த கணம் நம் மனம் பெங்களூருவுக்குச் செல்கிறது. பிறகு அது நமது சிதாகாசமாக மாறுகிறது. நம் மனம் இயங்குகிற தளமே, அதாவது ஆகாசமே சிதாகாசம் எனப்படுகிறது.

மூன்றாவதும், இறுதியான வகையுமான ஆகாசம், மஹாகாசம். மொத்தப் பிரபஞ்சத்திற்கு உள்ளும் புறமும் நிறைந்துள்ள ‘வெளி’யே மஹாகாசம் எனப்படும்.

இதுவே இறுதியான நிலை; நாம்
வெவ்வேறாகப் பார்க்கிற எல்லாமே ஒரே
பொருளாக மாறி விடுகிற நிலை.

மூன்று ஆகாசங்களைப் பற்றியும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

நமது தோலுக்குள் இருக்கக்கூடிய, நம் உடலுக்குள் இருக்கக்கூடிய எல்லாம் கடாகாசம். அடுத்தது நம் மனத்தாலும், எண்ணங்களாலும் ஆளப்படும் ஆகாசம் சிதாகாசம். இறுதியாக இந்த மொத்த உலகமும், இந்த மொத்தப் பிரபஞ்சமும், மஹாகாசம் எனப்படுகிறது.

இப்பொழுது நமது உடலுக்குள் ஏதாவது நிகழ்ந்தால் நாம் உடனே உணர்ந்துகொள்கிறோம். நமக்குப்பாதிப்பு ஏற்பட்டால், அதை நாம் தெளிவாகப் பார்க்கிறோம், இரத்தம் ஓடுவதைப் பார்க்கிறோம். கட்டிகளையும் காயங்களையும் வெட்டுக்களையும் பார்க்கிறோம்.

கடாகாசத்தில் ஏற்படும் தொந்தரவையோ, நிகழ்வையோ நாம் தெளிவாகப் பார்க்கிறோம். தெளிவாக உணர்கிறோம். கடாகாசத்தில் நிகழ்கிற இந்த நிகழ்வு ஸ்தூல அளவில், வெளிப்படையாக நிகழ்கிறது.

அடுத்து நாம் இரண்டாம் நிலையான சிதாகாசத்திற்குச் செல்வோம். இந்த ஆகாசத்தைப் பாதிக்கக்கூடிய மற்றும் மாற்றியமைக்கக்கூடிய நிகழ்வுகள் மிக நுண்ணியனவாகவும் நுட்பமானவையாகவும் இருக்கின்றன. நமது எண்ணங்கள் சிதாகாசத்தைப் பாதிக்கின்றன.

நன்கு தெரிந்துகொள்ளுங்கள், நாம் நம்பினாலும் சரி, நம்பாவிட் டாலும் சரி, நமது எண்ணங்கள் வெளி உலகில் பெரும் பாதிப்பை உருவாக்கக்கூடியவையாக இருக்கின்றன என்பதுதான் ஸத்யம். என்ன

நுட்பமாக மாறுகிற
அளவிற்குத்தான்,
ஒரு பொருள் மேலும்
வலிமை அடைகிறது,
மேலும் சக்தீமயமாக
மாறுகிறது.

மாதிரியான எண்ணம் வந்தாலும், அது சாதாரணமாக வந்துபோகும் எண்ணம் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்.

ஒவ்வொரு எண்ணத்திற்குமே. சஃக்தி உண்டு. அது வெளி உலகில் ஏதோ ஒன்றை தெளிவாக வெளிப்படுத்துகிறது. இந்த விளைவை நாம் விழிப்புணர்வோடு கவனிப்பதில்லை என்பதே பிரச்சினை.

நமது எண்ணங்களை நாமே ஊக்குவிப்பதால், அதனால் விளையும் பாதிப்புகளை நம்மால் உணர முடிவதில்லை. அதோடு மட்டுமல்லாமல் இந்தப் பாதிப்பு நுண்ணியதாக இருப்பதால் நம் மனத்தால் அதைக் காண முடிவதில்லை.

நமது மனம் ஏதோ ஒன்றை நினைத்துக்கொண்டே இருக்கிறது. அது இந்த ஆகாசத்தைப் பாதிக்கிறது. இதனால் ஏற்படும் மாற்றங்கள் வெளி உலகிற்குள் செலுத்தப்படுகின்றன. ஆனாலும் நம் மனத்தால் இவற்றை அடையாளம் കണ്ടுகொள்ள முடிவதில்லை. நாம் பார்க்கிற இந்த பாதிப்புகள் எல்லாமே நம்முடைய எண்ணங்களினால் விளைந்தவைதான் என்பதை நாம் புரிந்துகொள்வதும் இல்லை, உணர்ந்துகொள்வதும் இல்லை.

அதனால் நாம் ஒரு நிலையிலிருந்து மற்றொரு உயர்ந்த நிலைக்கு செல்கிறோம். அவ்வாறு முன்னோக்கிச் செல்லும்போது இந்த மாற்றங்கள் மேலும் நுட்பமானவையாக இருக்கின்றன. ஆனால் அதன் விளைவுகள் சஃக்திவாய்ந்தனவாக இருக்கின்றன.

கடாகாசத்தில், ஏற்படுகிற விளைவு நம் உடலில் வரையறைக்கு உட்பட்டே இருக்கிறது. சிதாகாசத்தில், நம் எண்ணங்கள் நம்மைச் சுற்றியுள்ள இடத்தைப் பாதிக்கிறது. இதன் விளைவுகளை அதிகமான இடத்தில் பார்க்கலாம். இதன் விளைவுகள் அதிக தூரம் பரவியிருக்கும்.

அடுத்ததாக, உயர்ந்தபட்ச நிலையான மஹாகாசம் சிதாகாசத்தைவிட நுட்பமானது. இங்கு நடக்கும் ஒவ்வொரு மாற்றமும் மொத்தப் பிரபஞ்சத்தையும் பாதிக்கிறது. இந்த வெளியில் ஏதாவது நிகழ்ந்தால், மொத்தப் பிரபஞ்சமும் அதனைப் பிரதிபலிக்கிறது. அதற்கு எதிர்ச்செயல் புரிகிறது.

sidebar text

மஹாஸாஸத்திற்குள் நாம் நுழையும்போது, இறுதியான, நிலையான ஸத்யத்தை உணர்ந்துகொள்கிறோம். நாம் எல்லாவற்றுடன் கலந்து விடுகிறோம். மொத்தப் பிரபஞ்சத்துடனும் கலந்து விடுகிறோம்.

feather

## வாஸ்துவிற்கும் அர்த்தமுண்டு

பஞ்ச பூதங்களுள் ஐந்தாவது பூதமான ஈதர் தான் மூன்றாவது ஆகாச'மான மஹாஸாஸம் எனப்படுகிறது, உண்மையில் இவை எல்லாமே ஒன்றுதான். ஆகாஸம் எல்லா இடத்திலும் இருக்கிறது.

பிரச்சினை என்னவென்றால் இதைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். மஹாஸாஸம் எல்லாப் பொருட்களிலும் கலந்து, ஊடுருவி பரவியிருக்கிறது. இதைப் பற்றிய விழிப்புக்கூட நமக்கு இல்லை. இந்த ‘வெளி’ எந்த வடிவத்தையும் உருவத்தையும் எடுக்கக்கூடியதாக இருக்கிறது. வெற்றிடத்திலும்கூட அது இருக்கிறது.

இந்த உதாரணத்தை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், நீரைக் கம்ப்ரெஸரால் அழுத்தும்போது, அது சக்தியாக மாறுகிறது. காற்றைக் காற்றழுத்தியால் அழுத்தும்போது அதனால் ஒரு ரயிலைக்கூட நகர்த்த முடியும். காற்று, சக்தியாக மாறுகிறது. இதைப்போலவே ஈதரை ஒரு குறிப்பிட்ட வெளியில், குறிப்பிட்ட வடிவத்தில் அழுத்தினால் மீண்டும் சக்தியாக மாறுகிறது.

ஒரு இரும்புத் துண்டு ஒரு சதுர வடிவ துண்டாய் இருக்கும்போது, மாறுபட்டதாய் இருக்கிறது. இதுவே 'I' வடிவத்தில் இருக்கும்போது முற்றிலும் மாறுபட்டதாய் இருப்பதோடு இதனை பல தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும். ஒருகிலோ இரும்பு, சதுர வடிவ சட்டமாக இருக்கும்போது இதனுடைய வலிமை முற்றிலும் மாறுபட்டதாய் இருக்கும். இதுவே 'I' வடிவச் சட்டமாக இருந்தால் முற்றிலும் மாறுபட்டு இருக்கும்.

எண்ணம், அது வெளி
உலகில்
ஏதோ ஒன்றைத் தெளிவாக
வெளிப்படுத்துகிறது.
அதைச் சாதாரணமாக
வந்துபோகும்
எண்ணம் என்று மட்டும்
நினைத்துவிடாதீர்கள்.

நீங்கள் புரிந்துகொள்ள முடிகிறதா? இது
ஒரு நுட்பமான கருத்து. ஆனால் இந்த
நுண்ணிய கருத்தை நாம் புரிந்துகொண்டால்,
நமது ஜ்ஞான குருமார்கள் செய்த மிகப்பெரிய
ஆராய்ச்சியைப் பற்றிப் புரிந்துகொள்ள
முடியும். அவர்கள் நமக்கு வழங்கியுள்ள

கொடையை உணர முடியும்.

அவர்கள் மிகப்பெரிய தியாகங்கள்
செய்து இந்த ஆராய்ச்சியை நடத்தி, இந்த
எல்லா ஞானத்தையும் உருவாக்கி, நமக்கு
வழங்கியிருக்கிறார்கள்.

பூமியைப் போலவே, ஆகாசத்தையும் கையாள முடியும். அதைப் பல வகைகளிலும், பல வடிவங்களிலும் பயன்படுத்த முடியும். சில குறிப்பிட்ட நுட்பங்கள், ஆகாசத்தின் சக்தியை அதிகபட்சமாகப் பயன்படுத்த உதவுகின்றன.

மஹாகாசத்திற்குள்
நாம் நுழையும்போது,
இறுதியான, நிலையான
ஸத்யத்தை
உணர்ந்துகொள்கிறோம்.

ஒரு அறைக்குள்ளேயோ அல்லது ஒரு 'வெளி'க்குள்ளேயோ ஒரு குறிப்பிட்ட அளவில் ஆகாசம் வைக்கப்படும்போது, அங்கு வசிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஆகாசத்தால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்; அந்த ஆகாசமும் அவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவர்களது எண்ணங்கள் ஆகாசத்தைப் பாதிக்கின்றன. ஆகாசம் அவர்களது எண்ணங்களைப் பாதிக்கிறது.

ஆகாசம் அல்லது ஈதரின் சக்தியைப் பயன்படுத்துவது பற்றிய கருத்துதான் வாஸ்து சாஸ்த்ரத்திற்கே அடிப்படையாக இருக்கிறது. கட்டிடக்கலை பற்றி விஞ்ஞானப்பூர்வமாக விளக்கக்கூடிய பழமையான வேத கால அறிவியலையே வாஸ்து சாஸ்த்ரம் என்கிறோம்.

பரந்து விரிந்திருக்கும் பிரபஞ்ச சக்திக்குப் பொருந்துகிறவகையில், அதற்கு இணக்கமான முறையில், நாம் குடியிருக்கும் வீட்டையும் மற்ற கட்டுமானப் பணிகளையும் கட்டுவதன் மூலம் பிரபஞ்ச சக்தியோடு ஒருங்கிணைந்து நம்மால் வாழ முடியும்.

கட்டிடத்தில் எந்தெந்த இடங்களில் எந்ததெந்த செயலுக்குரிய அறைகள் அமைய வேண்டுமென்பதோடு மட்டுமல்லாமல், அவை எந்ததெந்த dிசைகளை நோக்கி அமைய வேண்டும் என்பதையும் வாஸ்து சாஸ்த்ரம் வகுத்துக் கொடுத்திருக்கிறது.

வீட்டின் எந்த இடத்தில் சமையலறை இருக்கவேண்டும். எந்த இடத்தில் நெருப்பு அமையவேண்டும். வியாபார சம்பந்தமான நடவடிக்கைகள் வீட்டின் எந்தப் பகுதியில் அமைய வேண்டும். வீட்டின் எந்தப் பாகத்தில் படுத்தால் நன்றாக ஓய்வெடுக்க முடியும் என்பது மாதிரியான பல விஷயங்களைச் சொல்கிறது. வாஸ்து சாஸ்த்ரம், இடத்தைப் பற்றிச் சொல்லும் ஒரு பழமையான வேத அறிவியல்.

Feather illustration

கடவுளுக்கே அறிவுரை சொல்லும் மாய மனம்

கிருஷ்ணர் சொல்கிறார்,

"காற்று, ஆகாசத்தில் நிலைபெற்றிருப்பதைப் போல, பிரபஞ்சமும் என்னில் நிலைபெற்றிருக்கிறது."

ஆகாசம் வெற்றிடமே என நினைத்துவிடாதீர்கள். அது வெற்றிடம் மட்டும் இல்லை. அது சக்திமயமானது. நம்மால் அதைப் பார்க்க முடியாததால், 'அது வெற்றிடம்தான்' என்று நம்மால் சொல்லிவிட முடியாது. அது சக்திமயமானது.

காாற்று ஆகாசத்தில் நிலைபெற்றிருப்பதைப் போல, நமது இருப்பு உள்பட மொத்தப் பிரபஞ்சமும் கடவுளிடம் நிலைபெற்றிருக்கிறது. கிருஷ்ணர் சொல்கிறார். "எல்லா இருப்பும் என்னில் நிலைபெற்றிருக்கிறது."

கிருஷ்ணர் ஏன் அவர் பேசும் எல்லாவற்றையும் ஒரு இரகசியம் என்று அழைக்கிறார் என்று உங்களால் சொல்ல முடியுமா?

நம்பகமான அறிவையோ அல்லது ரகசியத்தையோ யாரிடம் சொல்ல வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார். இவை அனைத்தையும் ஒரு தகுதியானவருக்கு சொல்ல வேண்டும் என விரும்புகிறார்.

கட்டிடக்கலை பற்றி விஞ்ஞானப்பூர்வமாக விளக்கக்கூடிய பழமையான வேத கால அறிவியலையே வாஸ்து சாஸ்த்ரம் என்கிறோம்.

குந்தியின் மகனும் காண்டீபன் என அழைக்கப்படுபவருமான அர்ஜுனன் ஒரு நண்பராகவும் சீடராகவும் இருக்கிறார். இரகசியங்களை உள்வாங்கிக்கொள்வதற்கு அர்ஜுனன் இப்போது தயாராக இருக்கிறார் என்பதைக் கிருஷ்ணர் தெரிந்துகொள்கிறார்.

உண்மையில் இதுவரை இந்த ரகசியத்தைப் புரிந்துகொள்ள அர்ஜுனனைக் கிருஷ்ணர் மெதுவாகத் தயார் படுத்திக்கொண்டிருந்தார்.

சில ஸத்யங்களை, பிரபஞ்சத்தின் சில

ரகசியங்களை உள்வாங்கிக்கொள்ள
அர்ஜுனன் தயாராக இருக்கிறார் என்பதைக்
கிருஷ்ணர் இப்போது தெரிந்துகொள்கிறார்.
இந்த வலிமையான ஸத்யங்களை கீதையின்
தொடக்கத்தில் கிருஷ்ணர் சொல்லியிருந்தால்,
அர்ஜுனன் இதைப் புரிந்துகொண்டிருக்க
மாட்டார். ஆரம்பத்தில் அர்ஜுனன் நிறைய
சந்தேகங்களைக் கொண்டிருந்தார்.

கீதையின் முதல் அத்தியாயத்தில் அர்ஜுனன்
பேசுவதையும், கிருஷ்ணர் அதைக் கேட்டுக்
கொண்டிருப்பதையும் மட்டுமே நாம் காண
முடியும். அத்தியாயம் இரண்டிலிருந்து
கிருஷ்ணர் பேசுகிறார்.

நம்பகமான அறிவையோ
அல்லது
ரகசியத்தையோ
யாரிடம் சொல்ல
வேண்டும் என்பதில்
மிகக் கவனமாக
இருங்கள்.

அர்ஜுனனுடைய கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் விடை கொடுக்கிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு அர்ஜுனன் அமைதி ஆகி விடுகிறார். அவர் அதற்குமேல் கேள்வி கேட்கவில்லை. கிருஷ்ணர் வழங்கிய இறுதியான அறிவை அவர் உள்வாங்கிக்கொள்கிறார்.

இந்த இரண்டு ஸ்லோகங்களிலும், கிருஷ்ணர் இந்தப் பிரபஞ்சம் உருவாவதைப் பற்றியும் அழிவதைப் பற்றியும் சொல்லுகிறார். அவர் தெளிவான, துணிச்சலான வாக்குமூலங்களைத் தருகிறார்.

ஒரு ஜ்ஞான குருவால் மட்டுமே இப்படிப்பட்ட தெளிவான, துணிச்சலான வாக்குமூலங்களைத் தர முடியும். ஏனென்றால் அவற்றை அவர் அனுபவங்களில் இருந்து சொல்கிறார். நாம் குறிப்பிடுவதைச் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் தாங்கள் புரிந்துகொண்டவையே சரியானவை என்று நினைக்கிறார்கள். அவர்கள் என்னிடம் சொல்லும்போது,

"ஸ்வாமிஜி, நீங்கள் எப்படி அப்படிச் சொல்ல முடியும்? நிறைய புத்தகங்களில் இதுமாதிரிதான் எழுதப்பட்டிருக்கிறது," என்கிறார்கள். நான் அவர்களிடம் அதற்கு மேல் எதுவும் சொல்வதில்லை. ஒன்றும் பேசாமல் சிரித்துவிட்டு விட்டுவிடுவேன்.

உண்மையில், வேத நூல்களில் என்ன எழுதப்பட்டிருக்கின்றன என்பதை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் அப்படி இருப்பதோடு மட்டுமல்லாமல், நான்தான் தவறாக சொல்கிறேன் என்றும் சொல்கிறார்கள். என்ன செய்ய முடியும்? நான் வாதிட்டால்கூட அவர்கள் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே மாட்டார்கள். எல்லா வயதானவர்களும் அபாயகரமானவர்களே!

நாம் ஸத்ஸங்கத்திற்குச் செல்லும்
இடங்களில் எல்லாம் வயதானவர்களைப்
பார்க்கிறேன். அவர்கள் எல்லாவற்றையும்
பார்த்து இருக்கிறோம் என்று
நினைக்கிறார்கள். நான் என்ன சொல்கிறேன்
என்பதைக் கவனிக்கவும் விரும்புவதில்லை.

நவீன விஞ்ஞானமும் வேதாகாலத்திற்குத் திருப்புகிறது.

கிருஷ்ணர், துணிச்சலான வாக்குமூலங்களையும் ஸத்யங்களையும் தருகிறார்.

இந்த ஸத்யங்களை உள்வாंगிக்கொள்ள அர்ஜூனன் தயாராக இருப்பதையும் தெரிந்துகொள்கிறார். அவர் பிரபஞ்சத்தின் படைப்பு பற்றிக் குறிப்பிடுகிறார்.

இந்து புராணங்களின்படி, படைப்புக்கடவுளாகிய ப்ரிஹ்மா கண் சிமிட்டும் ஒவ்வொரு முறையும் புது உலகம் உருவாக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

முதல் ஸ்லோகத்தில் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்,

‘பிரபஞ்சம் அழியும்போது, உலகில் உள்ள பொருட்கள் எல்லாம் அவருக்குள் நுழைகின்றன. அவர் அவற்றை மீண்டும் வெளிப்படுத்தி பிரபஞ்சத்தைப் படைக்கிறார். ’

“பிரபஞ்சம் என்னுள் நுழைகிறது,” என்று கிருஷ்ணர் குறிப்பிடுவதைப் புரிந்துகொள்ளுங்கள். அவர் ‘என்னுள்’ என்று குறிப்பிடுவது பிரபஞ்ச கிருஷ்ணரை, பிரபஞ்ச விழிப்புணர்வை, மனித உருவில் நாம் பார்க்கும் கிருஷ்ணரை இல்லை. இதை மிக ஆழமாகப் புரிந்துகொள்ள நாம் முயற்சிக்க வேண்டும்.

நெடுநாளாகவே, பிரபஞ்சம் உருவானதை விளக்கப் ‘பேரண்ட வெடிப்புக்கொள்கையே’ பயன்படுத்தப்பட்டது. ஒரு மிகப்பெரிய நெருப்புப் பந்து இருந்ததாகவும், அது வெடித்ததாகவும் இக்கொள்கை சொல்கிறது. இந்த வெடிப்பிற்குப் பின் சில சிறிய பாகங்கள் குளிர்ச்சியாகி கோள்களாகவும் வால்நட்சத்திரங்களாகவும் எரிகற்களாகவும் மாறின. பெரிய பாகங்கள் நட்சத்திரங்களாகவும் சூரியன்களாகவும் மாறின.

டார்வின், பூமியில், நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியைப் பற்றியகொள்கையில், 'உயிர் தோன்றிய விதம்' பற்றி குறிப்பிடுகிறார்.

ஆனால், தற்கால அறிவியல் இக்கொள்கைகளை மறுக்கின்றன. தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் பழங்கால இந்திய வேத நூல்களில் சொல்லப்பட்டுள்ளவற்றை நோக்கிச் செல்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உபநிஷதங்கள் சொன்னதை நோக்கிச் செல்கின்றன.

தைத்ரேய உபநிஷதத்தில், முதலில் ஆகாசம் இருந்தது. ஆகாசத்திலிருந்து காற்று உருவானது. காற்றில் இருந்து நெருப்பு உருவானது. பிறகு நீர் தோன்றியது, இறுதியாக பூமி தோன்றியது. பூமியில் இருந்து மற்ற உயிரினங்கள் தோன்றின என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையாகவே இந்த வரிசை, ஆழமான பொருள் கொண்டது.

இது ஸூக்ஷ்ம சக்தியைக் கொண்ட ஆகாசம், ஸ்தூல பூமியாக உருவான பரிணாம முறையைக் காட்டுகிறது. இவ்வாறு ஸ்தூலமாக உள்ளவற்றை நம்மால் புலன்கள் மூலம் உணர முடியும்.

ஆனாலும், இது ஸூக்ஷ்ம சக்திகளாக மாற மாற அதை நாம் அனுபவப்பூர்வமாகத்தான் உணர முடியும். பூமியைக் கையில் பிடிப்பதுபோல, தண்ணீரை நம் கைகளால் பிடிக்க முடியுமா?

நீரை உணர்வதைப் போல, நெருப்பை நம்மால் உணர முடியுமா? நெருப்பைப் பார்ப்பது போல, காற்றை நம்மால் பார்க்க முடியுமா? முடியாது.

சக்தியானது, ஸ்தூல வடிவில் இருந்து ஸூக்ஷ்ம வடிவிற்குச் செல்லும்போது, அதை நாம் அனுபவிக்கும் முறையும் மாறுகின்றது. பூமியானது தெளிவாகத் தெரிகிற பொருள். ஆகாசம் தெளிவாகத் தெரியாத, கண்ணுக்குப் புலப்படாத சக்தி. சக்தியிலேயே மிகவும் நுட்பமானது ஆகாசம். அதை த்யானம் செய்வதால் மட்டுமே அனுபவமாக நம்மால் உணர முடியும்.

இந்து புராணங்களின்படி, படைப்புக் கடவுளாகிய ப்ரம்மா கண் சிமிட்டும் ஒவ்வொரு முறையும் புது உலகம் உருவாக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

கிருஷ்ணர் சொல்கிறார்.

கல்பம் என ஸம்ஸ்க்ருத்தில் அழைக்கப்படும் ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும், பொருள் ரீதியாகத் தெளிவாகத் தெரிகிற பிரபஞ்சத்தின் எல்லாப் படைப்புகளும் அவரிடம் ஒன்றாகக் கலக்கின்றன.

'பேரண்ட வெடிப்புக்கொள்கையை' (Big Bang Theory) ஆராய்ந்தோம் என்றால், நாம் கேட்கும் முதல் கேள்வி, "இந்த நெருப்புக் கோளம் எங்கிருந்து வந்தது என்பதாகத்தான் இருக்கும். பேரண்ட வெடிப்புக்கொள்கையால் இந்த அடிப்படை கேள்விக்குப் பதிலளிக்க முடியவில்லை.

> மொத்தப் பிரபஞ்சமும் ஆகாசத்தால் உருவாக்கப்பட்டு, அது மீண்டும் ஆகாசத்திற்கே திரும்புகிறது.

பிரபலமான விஞ்ஞானிகள் என்று அழைக்கப்படுபவர்கள்கூட இந்தக் கேள்விக்கு இதுவரை பதிலளிக்க முடியாததை நீங்கள் பார்க்கலாம்.

ஆனாலும் கிருஷ்ணர், உள் உலக விஞ்ஞானி, இந்தக் கேள்விக்கு இந்த ஸ்லோகங்கள் மூலம் பதிலளிக்கிறார். வெற்றிடத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று அறிவியல் இப்போது நிரூபித்திருக்கிறது. ஸூக்ஷ்ம வடிவமான ஆகாசம்தான் அந்த வெற்றிடத்தில் இருக்கிறது என்பதை அறிவியல் இப்போது நிரூபித்திருக்கிறது. அறிவியல் எப்படி ஆன்மீகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பாருங்கள்.

Cosmic light explosion

பார்ப்பவை எல்லாம் சக்தியின் வடிவமே

மொத்தப் பிரபஞ்சமும் ஆகாசத்திலிருந்து உருவாக்கப்பட்டு, அது மீண்டும் ஆகாசத்திற்கே திரும்புகிறது. வெளியில் நாம் பார்க்கக்கூடிய, இந்தப் பொருள் சார்ந்த உலகம், அந்த ஸூக்ஷ்ம சக்தியின் ஸ்தூல வெளிப்பாடே. நம்மால் பார்க்க முடிகிற பொருள் சார்ந்த உலகம் சக்தியின் ஸ்தூல வடிவமே. சக்தியின் ஸ்தூல வடிவத்தையே நம்மால் பார்க்க முடியும்.

"பொருட்களாகத் தெரிபவை எல்லாம் என்னையே அடைகின்றன," என்று கிருஷ்ணர் சொல்லும்போது, பிரபஞ்ச உணர்வை அடைகின்றன என்ற பொருளில் குறிப்பிடுகிறார்.

உலகமாக அல்லது ஸ்தூல வடிவமாக நாம் பார்க்கிற இந்தப் பிரபஞ்சம், நுட்பமான சக்தியின் வெளிப்பாடே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் நமது புலன்களால் பார்க்கிற, உணர்கிற ஒவ்வொன்றும் பிரபஞ்ச உணர்வின் பாகமே. ஆனால் பிரச்சினை என்னவென்றால் நாம் இதப் பொருள் வடிவமாக மட்டுமே பார்க்கிறோம்.

எல்லாவற்றையும் பொருள்வடிவமாகவே நாம் பார்த்தோமானால், அந்த நிலையிலேயேதான் சிக்கிக்கொள்வோம். இவையெல்லாம் பொருட்களே என்று நாம் நினைக்கும்வரை பொருள் சார்ந்த உலகிலேயே நாம் இருக்கும்வரை நாம் அவற்றின் பின்னாலேயே ஓடுகிறோம்.

நம் மனம் இயங்கத் தொடங்கிவிடுகிறது; "இந்தப் பொருட்கள்தான் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதனால் அவற்றைப் பெறுங்கள்," என்று சொல்லவும் தொடங்கி விடுகின்றன.

தவறான புரிந்துகொள்ளுதலின்படி நம் மனம் எப்படியெல்லாம் வேலை செய்கிறது என்பதை நீங்கள் பார்க்க முடியும். இந்த எண்ணம் நம்முள் எழுந்த அடுத்த கணமே, நம்முடைய அஹங்காரத்தைப் பூர்த்தி செய்வதற்காகவே ஓடக்கூடிய எலி ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்கிறது. நம் துக்கங்களும் ஆரம்பிக்கின்றன.

சக்தியானது, ஸ்தூல வடிவில் இருந்து ஸூக்ஷ்ம வடிவிற்குச் செல்லும்போது, அதை நாம் அனுபவிக்கும் முறையும் மாறுகின்றது.

நாம் பார்ப்பது, உணர்வது, எவற்றின்
பின்னால் எல்லாம் ஓடுகிறோமோ அவை
அனைத்துமே ஸூக்ஷ்ம சக்தியினுடைய பொருள்
சார்ந்த ஸ்தூல வெளிப்பாடே என்பதைப்
புரிந்துகொள்ளும்போது, ஒரு மாறுபட்ட
தளத்தில் இயங்குவோம். நாம் ஓடும் எலி
ஓட்டப்பந்தயத்தால் எந்தவித பயனும்
ஏற்படப் போவதில்லை என்பதைப் பார்க்க
முடியும்.

ஒவ்வொன்றையும் மாறுபட்ட கோணங்களில்
நாம் பார்க்கிறோம். இவையெல்லாம் நமது
சொந்த இருப்புத் தன்மையின் வெளிப்பாடே

என்பதையும் நாம் உணர்கிறோம்.

தயவுசெய்து தெளிவாக இருங்கள்; நாம் பார்க்கிற பொருட்கள் எல்லாம் நமது சொந்த இருப்புத் தன்மையின் வெளிப்பாடுகளே.

நமது ஆசைகளும், எண்ணங்களுமே நாம் பார்க்கும் பொருட்களாக வெளிப்படுகின்றன. எப்படியிருந்தாலும், உண்மையில் இப்படிப்பட்ட தனியான, சுதந்திரமான பொருட்களே இல்லை. அனைத்தும் ஒன்றே; அனைத்தும் சக்தியே!

எல்லாவற்றையும்
பொருள்வடிவமாகவே
நாம்
பார்த்தோமானால்,
அந்த
நிலையிலேயேதான்
சிக்கிக்கொள்வோம்.

கிருஷ்ணர் இதைத்தான், "நான் என்னுடைய சொந்த விருப்பத்தால் மட்டுமே இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கவும் அழிக்கவும் முடியும்," என்று சொல்கிறார். இந்த மொத்தப் பிரபஞ்சமும் நம்முடைய சொந்த வெளிப்பாடுதான்.

ஒவ்வொருவரும் அவரவர் உலகையே காண்கின்றனர்

சிலர், "நமது சொந்த உலகை நாமே உருவாக்குகிறோம்," என்று சொல்கிறார்கள். இந்த வரிகள் ஆழமான பொருள் கொண்டவை.

நாம் இந்த உலகமாக, பிரபஞ்சமாகப் பார்க்கிற எல்லாமே நாமே உருவாக்கியவைதான்.

நமது எல்லா உறவுகளும்கூட, நமது பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் நமது ஆசைகளின் வெளிப்பாடுகள் தான். யாரோ ஒருவரை நாம் தந்தை அல்லது தாய் என்று அழைக்கிறோம். ஏனென்றால் நாம் சிறு குழந்தையாக இருக்கும்போது நம்மைக் கவனித்துக்கொள்ள ஒருவர் வேண்டியுள்ளது.

நாம் வளர்ந்தவுடன் நம்மைக் கவனித்துக்கொள்ள ஒரு வாழ்க்கைத் துணை தேவையாக இருக்கிறது. நமக்கு வயதான பிறகு, நம்மைக் கவனித்துக் கொள்ள நம் குழந்தைகள் தேவைப்படுகிறார்கள்.

நமது தேவைகள் அல்லது ஆசைகளின் அடிப்படையிலேயே நமது உலகத்தை உருவாக்குகிறோம். ஞானமடைந்த ஒருவர் மட்டுமே உண்மையான ஸத்யத்தை உள்ளது உள்ளபடியே பார்க்கிறார். நம்முன் பார்க்கிற ஒவ்வொன்றுமே, கண்ணாடியில் பிரதிபலிக்கிற பிரதிபிம்பம்போல, நம்முடைய சொந்த பிரதிபலிப்புதான் என்பதைப் புரிந்துகொண்ட உடனே, நாம் ஞானமடைந்து விடுகிறோம்.

நாமும், நம்மைச் சுற்றியுள்ள எல்லாமுமே அந்த ஒரே சக்தியின் அல்லது ஒரே விழிப்புணர்வின் பாகங்கள்தான் என்பதை உணர்ந்தவுடன், நாம் ஞானமடைந்து விடுகிறோம்.

இந்த இரண்டு ஸ்லோகங்களிலும், கிருஷ்ணர் இந்த ஸத்யத்தைத் தெளிவாகச் சொல்கிறார். வெளிப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே அவராலேயே உருவாக்கப்படுகின்றன. அவரிடமே திரும்ப போய்ச் சேர்கின்றன.

ஒவ்வொன்றுமே அந்த ஒரே சக்தி அமைப்பின், அதாவது பிரபஞ்ச விழிப்புணர்வின் பாகமாக இருக்கிறது. கிருஷ்ணர், அவரது சொந்த விருப்பத்தினால் மட்டுமே படைக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்கிறார்.

இதன் பொருள் என்னவென்றால், ‘நாம் பார்க்கும் இந்த உலகம், நாம் உணரக்கூடிய இந்தப் பிரபஞ்சம், நம்முடைய சொந்த வெளிப்பாடே’ என்பதுதான்.

கேள்வி: ஸ்வாமிஜி, நீங்கள் சொல்லும்போது, பொருள் சார்ந்த உலகைப் புறக்கணித்து, பொருளுக்குப் பின்னால் இருக்கும் சக்தியின்மீது கவனம் செலுத்துமாறு சொல்கிறீர்கள். இது கஷ்டமாக உள்ளது. நாங்கள் பார்ப்பதெல்லாம் பொருள் வடிவமாகவே இருக்கிறது. அதற்குப் பின்னால் உள்ள சக்தியைப் பார்ப்பதற்கான நுட்பமான உணர்வுத்திறனை நாங்கள் பெறவில்லை. வெளிப்படையாகத் தெரிகிற பொருட்களைத் தாண்டி எப்படிச் செல்வது?

நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்களோ,
அந்த நிலையில் உள்ள உங்கள்
பட்டறிவையும் புத்திசாலித்தனத்தையும்
தர்க்க அறிவையும்நுகொண்டு உங்களைச்
சுற்றி இருக்கிற ஒவ்வொன்றுமே,
நீங்கள் பார்க்கக்கூடிய ஒவ்வொன்றுமே
அழியக்கூடியதுதான், நிரந்தரமில்லாததுதான்
என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

நாம் பார்க்கிற பொருட்கள் எல்லாம் நமது சொந்த இருப்புத் தன்மையின் வெளிப்பாடுகளே.

இப்போதைய நிலையில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். அது உங்கள் பட்டறிவைப் பயன்படுத்துவதுதான், ஆகவே அதனைப் பயன்படுத்துங்கள்.

ஆனால் உங்கள் பட்டறிவை இந்த ஸத்யத்தைப் புறக்கணிப்பதற்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, புரிந்துகொள்வதற்குப் பயன்படுத்துங்கள்.

உலகில் நாம் பார்க்கிற, பொருளாக வெளிப்பட்டிருக்கிற எல்லாப் பொருட்களுமே காலாவதி தேதியுடன் தான் வருகின்றன. இதை நீங்கள் உங்கள் சொந்த அனுபவத்திலிருந்தும், மற்றவர்களின் அனுபவங்களிலிருந்தும் தெரிந்துகொள்ள முடியும்.

சில பொருட்கள் உங்கள் வாழ்நாளைக் காட்டிலும் அதிக நாட்கள் நீடித்து இருக்க முடியும். ஆனால் நீண்டநாட்களுக்கு இருக்க முடியாது.

மலைகள்கூட உடைந்துபோகலாம், ஆறுகள் வற்றிப் போகலாம், கடல்கள் உள்வாங்கலாம் அல்லது கொந்தளிக்கலாம். எந்தப் பொருளும் அது எந்த நிலையில் இருக்கிறதோ, அதே நிலையிலேயே நிரந்தரமாக தங்கியிருப்பதில்லை.

பொருட்கள் வாயிலாக நீங்கள் அடைந்த மகிழ்ச்சியும்கூட குறிப்பிட்ட கால வரையறைக்குட்பட்ட ஒரு அனுபவமே என்பதை நீங்கள் உங்கள் அனுபவங்கள் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம். எதுவும் எப்போதும் நீடித்து இருப்பதில்லை; அது உணவாகட்டும், அல்லது புலனின்பமாகட்டும், ஒரு சம்பவமாகட்டும் அல்லது நீங்கள் நேசிக்கும் ஒரு அனுபவமாகட்டும், எதுவும் நீடித்து நிலைத்திருப்பதில்லை. நீங்கள் அனுபவிக்கிற மகிழ்ச்சி களும் துக்கங்களும் அதிகரித்தும் குறைந்தும் வருவதை நீங்கள் அனுபவமாக உணர முடியும். எதுவுமே நிரந்தரமானது இல்லை.

நம்முன்
பார்க்கிற ஒவ்வொன்றுமே,
நம்முடைய சொந்த
பிரதிாளிப்புதான் என்பதைப்
புரிந்துகொண்ட உடனே,
நாம் ஞானமடைந்து
விடுகிறோம்.

மாயா என்றால் ‘பொய்த்தோற்றம்’ என்று
பொருள். ஆனால் மாயா என்றால்
நாம் பெரும்பாலும் ‘பொய்’ என்றே’
பொருள்கொள்கிறோம். மாயா என்றால் நீங்கள்
வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையே
பொய்யானது, அது உண்மை இல்லை
என்று பொருள்கொள்ளக் கூடாது.‘இது
நிரந்தரமற்றது’ என்பதே இதன் பொருள்.
‘இது இறுதியான ஸத்யம் இல்லை’ என்பதுதான்

இதன் பொருள். 'இதற்கப்பால் ஒன்று
இருக்கிறது; அதுவே நிரந்தரமானது' என்பதே
இதன் பொருள்.

இந்தக் குழப்பத்தினால்தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடையும் துக்கமும், அதனால் உங்களுக்கு ஏற்படும் அனுபவமும் ஏற்படுகிறது. பொருட்கள், மாறாமல் நிரந்தரமாக அப்படியே இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்; மகிழ்ச்சியானது நிரந்தரமாகத் தொடரவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

நம்மால் நேசிக்கப்படுபவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம். இது எதுவுமே எப்போதும் நடக்கப் போவதும் இல்லை; நடக்கவும் முடியாது. முதலில் நீங்கள் இந்தக் கருத்தை உங்கள் தர்க்க அறிவு அமைப்பிற்குள் ஆழமாக ஊடுருவச் செய்து பதிக்க வேண்டும். ஏனென்றால் இந்தக் கருத்து மட்டுமே தர்க்கப்பூர்வமானது. இதனோடு மட்டுமே நம் புத்திசாலித்தனம் வாதிட முடியாது.

பொருட்களின் நிலையற்ற தன்மையை மட்டுமல்லாமல், அந்தப் பொருள் சார்ந்த அனுபவங்களின் நிலையற்ற தன்மையையும் நம் தர்க்க அறிவு ஏற்றுக்கொண்ட உடனேயே, அது, காலாவதி தேதி குறிக்கப்படாத பொருள் அதாவது காலத்தால் அழியாத பொருள் என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா என்பதையும், நிரந்தரமற்ற பொருட்களுக்கு நடுவிலே நிரந்தரமான பொருள் என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா எனத் தெரிந்துகொள்வதற்கும் ஆவலுடன் தேட ஆரம்பிக்கிறது.

இந்தத் தேடுதல் வலிமையாக இருந்தால் போதும், இதைப் பற்றிய புரிந்துகொள்ளலும் தானாக நிகழ்ந்துவிடும்.

இது 'நிகழ்கிறது'; ஏனென்றால் இது உங்களுக்குள்ளேயே இருக்கிற ஸத்யம்; அதனால் அது தானாக நிகழ்கிறது. இதைப் புரிந்துகொள்வதற்கென்று நீங்கள் தனியாக எந்தவித முயற்சியும் செய்ய வேண்டிய தேவையில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், ஸத்யத்தை மூடியிருக்கும் ஒருசில அறியாமை அடுக்குகளை அகற்றுவதுதான்.

நமக்குள் இருக்கும் சக்தியும், நம்மைச் சுற்றி இருக்கிற சக்தியும் மட்டுமே காலாவதி தேதி குறிக்கப்படாமல் வருபவை என்கிற புரிதலும், இவை

நிரந்தரமாய் இருக்கிற எல்லாமும் சக்தியே!

இரண்டும் ஒன்றே என்கிற விழிப்புணர்வுமே ‘ஞானமடைதல்.

இதைப் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்குள் ஒருமுறை நிகழ்ந்துவிட்டாலும் போதும், அதற்குப்பிறகு, ‘ஸ்தூலமாக வெளிப்படுகிற பொருட்கள் எல்லாமே அழியக்கூடியவைதான்’ என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க தர்க்க அறிவு தேவைப்படுவதில்லை. சக்தி ஒன்றுதான் நிரந்தரமானது, இருப்பது சக்தி ஒன்றுதான் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.

இதற்கு நீங்கள் கடவுள், புத்தர், கிருஷ்ணரின் விழிப்புணர்வு, கிறிஸ்து, அல்லாஹ் அல்லது நித்யானந்தர் என்று என்ன பெயர் கொடுத்தாலும் சரி, அது நிலையான சக்தியே என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.

Illustration of hands playing a flute